எச்சரிக்கை சகோதரர்களே!
(தங்கள் சுவனப்பாதை எளிதாக்க முயளுங்கள்)
”என்னுடைய சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் நரகத்திற்கு செல்வர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒருசாரார் தங்களின் கைகளில் (அதிகாரம் எனும்) மாட்டுவால் போன்ற சாட்டையை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் அரைகுறை ஆடை அணிந்த நிர்வாணமான பெண்கள். அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள். பிறரையும் அவர்களின்பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்றிருக்கும். இவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் இவ்வளவு தூரத்திற்கு வீசும்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழுநிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள், முக்குச்சளி சிந்த மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவாகளுடைய குணங்கள் (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது, காலை மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி))
ஜும்-ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
ஜும்ஆ தினத்தன்று இமாம் குத்பா ஓதிக்கொண்டிருக்கும் போது உம்முடன்இருப்பவரை வாய்பொத்தி இரு(ம்) என நீர் கூறினால் நிச்சயமாக (ஜும்ஆவை)வீணடித்து விட்டீர். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் – சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 419 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி)
ஜும்ஆ நாளன்று யார் குத்பாவை செவியுற்று வாய்பொத்தி இருந்தாரோ அவரதுசிறப்பு பற்றிய பாடம்
யார் குளித்துவிட்டு அதன்பிறகு ஜும்ஆ-விற்கு வந்து (அல்லாஹ்வினால்)அவருக்கு ஏற்படுத்தப்பட்டைதை தொழுதுவிட்டு அவர் குத்பா பிரசங்கத்தைமுடிக்கும்வரை வாய்பொத்தி இருந்து(விட்டு) அவரோடு தொழுதம் விட்டால்,அவருக்கும் அடுத்த ஜும்ஆ-விற்கும் இடையில் (அதற்கு) மேலும் அதிகமாகமூன்று நாட்களுக்கும் (அவறில் ஏற்படும் சிறிய பாவங்கள்) அவருக்குமன்னிக்கப்படுகிறது.
ஆதாரம் – சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 420 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி)
இறைநம்பிக்கையை சுவைத்தவர் நம்மில் யார்?
‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடையதூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர்மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதைவெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.Volume:1 Book:2 : Verse 16
******************************************************************
******************************************************************
இராணுவ பயிற்சியை மிஞ்சும் ரமலான் பயிற்சிகள்! (அல்ஹம்துலில்லாஹ்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்புள்ள நோன்பாளிகளே! சகோதர! சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு!
நாம் எல்லோரும் இன்று ரமலான் மாத்தில் இருக்கிறோம் இக்காலகட்டத்தில் நாம் ரமலானின் மகத்ததுவத்தை அறிந்துக்கொண்டு நோன்பிருந்தால் நாம்
வெற்றிபெறுவது (இன்ஷா அல்லாஹ்) நிச்சயம்! அல்ஹம்துலில்லாஹ்!
சகோதரர்களே! இங்கு சுட்டிக்காட்டப்படுபவைகள் நமக்காக பனியிலும் வெயிலிலும் வாடி வதங்கும் ராணுவ வீரர்களை கேலி செய்யும் விதமாக அல்ல மாறாக ராணுவத்தில் அளிக்கக்கூடிய பயிற்சிகளைத்தான் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது! ராணுவபலம் நாட்டுக்கு இன்றியமையாததுதான் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!
இங்கு ராணுவப்பயிற்சியை மிஞ்சும் ரமலான் பயிற்சிகள் என்ற தலைப்பு ஏன் கொடுக்கப்பட்தன்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட பயிற்சிகளிலேயே மிக உயர்ந்த
பயிற்சியாக கருத்ப்படவது ராணுவப்பயிற்சிதான்! அதைவிட சிறந்த பயிற்சிகள் என்று எதையும் கருதமுடியாது காரணம் அதுதான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது! ராணுவம் இல்லையென்றால் ஒரு நாட்டை ஆல்வது சிரமமான காரியம்!
மேலும் ராணுவபலம் இல்லாத நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் பிறரை அண்டி பயந்து ஒடுங்கிதான் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்! எனவேதான் ஒவ்வொரு நாடும் தத்தமது இராணவ பலத்தை பெறுக்கிக்கொள்ள இந்தப் பயிற்சிகளுக்கு
முக்கியத்துவம் அளித்து அதிகமதிகம் பொருளாதாரத்தை செலவிடுகிறது!
சரி! ராணுவப்பயிற்சியை பற்றி பார்த்தோம் இனி நம்முடைய இஸ்லாமிய பயிற்சிகளிலேயே சிறந்த பயிற்சியாக கருதப்படும் ரமலான் பயிற்சியை பார்ப்போமா?
நோன்புக்காலங்களில் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து சஹ்ரு உணவை உண்டு பிறகு அந்திப்பொழுது முதல் சூரியன் மறையும் மாலைவேலை வரை வெரும் வயிற்றில் எந்த ஆகாரமும் ஏன் தண்ணீர் கூட அருந்தாமல் பசியோடு இருந்து 5 வேளை தொழுகைகள் மேற்கொண்டு அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுதான் ரமலான் நோன்பு என்று பெருவாரியான மாற்று மத மக்களிடமும் என் நம் சமுதாயத்தில் ஒரு சிலரும் எண்ணுகின்றனர் ஆனால் இந்த மாதம் அப்படிப்பட்டது அல்ல மாறாக இதன் நோக்கமே வேறு! அதை ஆராய்ந்து சிந்தித்து பார்த்தால்தான் இந்த மாதத்தின் மகத்துவம் விளங்கும் மேலும் ஒவ்வொன்றும் விளங்கிச் செய்தால்தான் நாம் நன்மையை அதிகமதிகம் பெற்று சுவனம் செல்ல இயலும்!
அல்லாஹ்வின் அறிவுரை
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا
كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது
கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)
இராணுவ பயிற்சி மற்றும் ரமலான் பயிற்சியின் வேறுபாடுகளை காண்போமா!
ராணுவத்திற்கு ஒரு நாடு இருக்க வேண்டும்
ரமலானுக்கு ஒரே ஒரு மார்க்கம் போதும் அது இஸ்லாம்
ராணுவத்தில் பயிற்சிக்கு தலைமைதாங்குபவர் ராணுவத்தளபதி
ரமலான் பயிற்சிக்கு தலைவன் அல்லாஹ் (சுப்ஹானல்லாஹ்)
“நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்” (அல்-குர்ஆன் 3:120)
ராணுவத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள்
துப்பாக்கி சுடுதல், எதிரியை எவ்வாறு தாக்குவது, எவ்வாறு விமானத்தில் பற்நதது குண்டு வீசி எதிரிநாட்டு மக்களை கொல்வது, எவ்வாறு அந்த எதிரி
நாட்டை பிடிப்பது என்ற கோரமான பயிற்சிகள்
ரமலானில் அளிக்கப்படும் பயிற்சிகள்
எந்த மனிதனுக்கும் தீங்கிழைக்காமல் இருப்பது!
பொய், புறம், களவாடுதல்,விபச்சாரம், கேளிக்கூத்துக்களில் ஈடுபடாமல் இருப்பது! பொதுமக்களுக்கு
மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்தல்!
நன்மையே பேசுதல்! உண்மையே பேசுதல்!
ராணுவப்பயிற்சிக்குரிய தகுதிகள்
இவ்வளவு உயரம், எடை என்று இருக்க வேண்டும்! உடலில் எந்த சிறு குறைபாடுகள் இருக்கக்கூடாது!
ராமலான் பயிற்சிக்குரிய தகுதிகள்
முஸ்லிம் என்ற தகுதியே போதும் அவன் பருவவயதை அடைந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடல் குறையுள்ளவராக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் எல்லோருக்கும் பயிற்சிகள் உண்டு.
ராணுவ பயிற்சிக்கு இவர்களுக்கு சலுகைகள் இல்லை
முதியவர், சிறு பிள்ளைகள், ஒள்ளியானவர், குண்டானவர், பெண்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள், மற்றும் நோய் நொடியுள்ளவர்கள்
ரமலான் பயிற்சிக்கு இவர்களுக்கு சலுகைகள் உண்டு
நோயாளி, பிரயாணி, .மாதவிடாய் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள்
மேற்குறிப்பிட்ட ஆறு விதமான நபர்களுக்கு ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியுள்ளது. எனினும் இவர்கள், விட்ட நோன்பை அவர்களுக்கு ஏதுவான மற்ற நாட்களில் வைத்தாக வேண்டும். எப்போழுதுமே நோன்பு வைக்க
இயலாதவர்கள் அதற்கு பரிகாரமாய் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையிலும் இவர் நோன்பின் பயிற்சி எடுக்கலாம்! சலுகை காட்டப் படுவார்கள்!
ராணுவ பயிற்சியால் என்ன லாபம்?
தாய்நாட்டை காப்பது! எதிரிநாட்டை சூரையாடுவது, பொதுமக்களுக்கு அரணாக இருப்பது! போரின்போது எதிரிநாட்டு மக்களை அழிப்பது! (அமெரிக்காவின் கூட்டுப்படையும் இராக் நாட்டு மக்களுமே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்)
ரமலான் பயிற்சியால் என்ன லாபம்?
அமைதி! அமைதி! அமைதி!
எங்கும் சமாதானம்! எங்கும் சந்தோசம்! எங்கும் பாசம், நேசம்! எங்கும் சகோதரத்துவம்!
ராணுவ பயிற்சியில் வெற்றிபெற்றால் பரிசு
அடுக்கடுக்கான பதவி உயர்வுகள்! இறுதியாக ராணுவ தளபதி என்ற அந்தஸ்து கூட (இன்ஷா அல்லாஹ் கிடைக்கலாம்) அவ்வளவுதான்! நாட்டுக்காக போரில் வீர மரணம் எய்தால் தியாகி என்ற பட்டம் கிடைக்கும்!
ரமலான் பயிற்சியில் வெற்றிபெற்றால் பரிசு –”ரய்யான்”
‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ராணுவ பயிற்சி நிறைவு பெற்றால்
ராணுவ வீரர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சீட்டியடிப்பது, கேளிக்கை விருந்துகள் இருதியாக சாம்பியன் என்ற போதைதரும் மதுபாணம்! இறுதியில் ஹராமான விருந்து!
ராமலான் பயிற்சி நிறைவு பெற்றால்
ஈத் முபாரக்!
குடும்பத்துடனோ நண்பர்களுடனோ ஈகைப் பெருநாள் கொண்டாட்டம்! செல்லுமிடங்களிளெல்லாம் அஸ்ஸலாமு அலைக்கும் – ஈத்முபாரக் என்ற அழகிய வாழ்துக்கள்! புத்தாடைகள், ஏழைகளுக்கு ஜகாத், பித்ரா தானங்கள் வழங்கி
அவர்களும் பெருநாள் கொண்டாட வழிவகை செய்வது! இறுதியில் வயிறார சுவையான ஹலாலான விருந்து!
மனிதனை சீர்திருத்தவேண்டும் அவன் சுயக்கட்டுபாடு கொள்ள வேண்டும் என்பதே நோன்பின் நோக்கமாகும்!
சகோதரர்களே வீணான காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு நோன்புகளை வீணாக்கிவிடாதீர்கள்! இந்த நோன்பு நமக்கு இறுதியாகக்கூட இருக்கலாம்! அடுத்த நோன்புகள் நமக்கு கிடைக்காமல் கூட போகலாம் ஏனெனில் யாருடைய
மரணமும் எவர் கையிலும் இல்லை அல்லாஹ்வே தீர்மாணிக்கிறான்! சிந்தியுங்கள் பொறுமை மேற்கொள்ளுங்கள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை அதிகமதிகம் படித்து சுவனப்பாதையை எளதிதாக்கிக்கொள்ளுங்கள்!
சகோதரர்களே சிந்தியுங்கள்
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186
எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி
சமாதானம் உண்டாக்க வேண்டும்
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10
அல்லாஹ்வின் மீது பயம் இருக்க வேண்டும்
“நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 9:36)
அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்பவர்களுடைய கூலி
“அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது” (அல்-குர்ஆன் 3:136)
“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்;
எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்’ (என்று அவர்களிடம் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 39:73)
“நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்த வர்களாகயிருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். (அவர்களுக்குக் கூறப்படும்:) ‘நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.’ அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்” (அல்-குர்ஆன் 52:17-20)
நோன்பாளிகளே சற்று இவர்களுக்காகவும் துவா கேட்டுக் கொள்ளுங்களேன் அல்லாஹ் மகிழ்வான்!
பெற்றோருக்காக!
பிள்ளைகளுக்காக!
உங்கள் கணவர் மற்றும் மனைவிமார்களுக்காக!
உடன்பிறந்த மற்றும் உடன்பிறவா சகோதர சகோதரிகளுக்காக!
உற்றார் – உறவினர்களுக்காக!
பெற்றோர் இல்லாத அநாதைகளுக்காக!
பெற்றோர் இருந்தும் கவனிப்பாரற்று திரியும் குழந்தைகளுக்காக!
பிள்ளைகள் இருந்தும் கவனிப்பாரற்று திரியும் பெற்றோருக்காக!
பிள்ளைகள் இல்லாமல் அவதிப்படும் முதியவர்களுக்காக!
கைம்பெண்களுக்காக, அவர்களின் மறுவாழ்வுக்காக!
உடல் குறைபாடுள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்காக!
வறிய நிலையில் உள்ள ஏழை மக்களுக்காக!
குடும்பத்ததை விட்டுப் பிறிந்து அயல்நாடுகளில் வாழும் நம்
அன்புச்சகோதரர்களுக்காக!
அயல் நாடுகளில் வாழும் சகோதரர்களை பிறிந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்காக!
அநியாயமாக சிறைகளில் அவதிப்படும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களுக்காக!
அடுத்த வேலை உணவின்றி தவிக்கும் ஆப்ரிக்க மக்களுக்காக!
இராக் போன்ற நாடுகளில் அவதிப்படும் முஸ்லிம்களுக்காக!
இலங்கை போன்ற நாடுகளில் அவதிப்படும் முஸ்லிம் அல்லாதவர்களுக்காக!
தாய்நாட்டில் மதக்கலவரங்கள் நிகழாமல் இருக்க!
அயல்நாடுகளிலும் அமைதி நிலவ!
தொலைக்காட்சிகளில் இணைதளங்களில் வரும் கேவலமான ஆபாச நிகழ்ச்சிகள் அறவே ஒழிய! இந்த நிகழ்ச்சிகளை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் வெறுக்க!
இறுதியாக நம் குலத்து ஆண்கள் மற்றும் பெண்கள் காதலித்து மார்க்த்தை விட்டு ஓடாமலிருக்க!
எல்லோருக்கும் நேர்வழி கிடைக்க! மார்க்கத்தில் உள்ள குழப்பங்கள் நீங்க!
நோன்பாளிகளே! அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்! இவ்வாறு நமக்காகவும் பிறருக்காகவும் துவா செய்வதனால் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் சுவனத்தை பரிசாக வழங்குவானாக! ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ்
(எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)
This page has the following sub pages.
மறுமொழியொன்றை இடுங்கள்