Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதர, சகோதரரிகளே மேற்கண்ட தலைப்பை படித்தவுடன் ஒரு நிமிடம் நீங்கள் மிரண்டுவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ்! (அல்ஹம்துலில்லாஹ்)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது மனைவியையும் தனது பிள்ளையையும் சுடும் பாலைவன மணலில் தவிக்க விட்டார் பின்னர் அல்லாஹ் விடமிருந்து கட்டளை வந்ததும் மீட்டுவந்தார், அடுத்ததாக  அல்லாஹ்வின் மற்றொரு கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனை அறுத்து பலியிட துணிந்தார் இறுதியாக அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் பலி பிராணியை அறுத்து தன் மகனை மீட்டார்! இப்படிப்பட்ட மாநபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்தான் இஸ்லாம் அதனை பின்பற்றக் கூடியவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் இந்த மாநபியும் இவருக்கு பின்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும்  இறுதியாக வந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றும் முஸ்லிம்களாக நாம் இன்று வாழந்து வருகிறோமா?

உறுதியான ஈமான் கொண்ட நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுவதை நீங்கள் மறைமுகமாக புறக்கணித்து வாழ்கிறீர்கள் ஆம் பிறை விஷயத்தில் நீங்கள் வழிதவிறிவிட்டீர்கள் நீங்கள் உங்கள் மனோ இச்சையைத்தான் பின்பற்றி வாழ்கிறீர்கள்! இது ஒன்றே போதும் நீங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவர் என்பதற்கு!

வாருங்கள் உங்கள் மனோ இச்சையை எடைபோடுவோம்

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (குர்ஆன் 8:20)

அன்புச் சகோதரர்களே அல்லாஹ் இங்கு இந்த வசனத்தை காஃபிர்களையோ இணைவைப்பாளர்களையோ விழித்து கூறாமல் மூமின்களே என்று கண்ணியமான முறையில் அறிவுறை கூறுகிறான்.

மூமின்கள்தானே படைத்த இறைவனுக்கு எதையும் இணை வைக்காமல் வாழ்ந்து மடிகிறார்கள் ஆனால் அவர்களில் எத்தனைபேர் இணையில்லாத அந்த இறைவனுடைய தூதருக்கு கீழ்படிகிறார்கள்! சிந்திக்கமாட்டீர்களா?

குர்ஆனை ஓழுங்காக ஓதுவோம், அதனை பொருளுணர்ந்து படிப்போம் பிறருக்கும் எத்திவைப்போம் ஆதாரங்கள் நிறைந்த ஹதீஸ்களின் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் என்று சத்திய முழக்கமிடும் தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்கள் ரமலான் மற்றும் ஈதுல்-அல்ஹா பெருநாட்கள் வந்துவிட்டால் தரம்புரண்டு விடுகிறார்களே!

பெருநாள் என்ற அந்த இனிய நாட்களில் மட்டும் தங்கள் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு குர்ஆனை ஓரம் தள்ளிவிட்டு, நபிவழியை புறக்கணித்துவிட்டு நவீன விஞ்ஞானம், ஆன்லைன் பிறை என்ற தங்கள் மனம் போன போக்கில் பெருநாள் கொண்டாடி மகிழ்கிறார்களே இவர்கள் கீழ்கண்ட நபிமொழியை புறக்கணிப் பதேனோ?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்!(நூல்கள்: புகாரி, அஹ்மத்)

மாநபியும் விஞ்ஞான அறிவிப்பும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரன் பிளந்தது என்ற உண்மையை உலகிற்கு காட்டித்தந்தவர் அல்லவா? ஆதாரம் இதோ!

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.

இந்த மாநபி நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்துவிடும் அன்றைய தினம் உங்கள் இஷ்டம் போல் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கலாமே ஏன் அவ்வாறு அறிவுறுத்தவில்லை?

மாநபியும் பிறை பற்றிய அறிவிப்பும்

கண்ணியமிக்க எங்கள் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறைகள் நோன்புகள் பற்றி என்ன கூறினார்கள்?

ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

மாநபியும் மாதங்கள் பற்றிய அறிவிப்பும்

எங்கள் உம்மி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மாதங்களை எவ்வாறு தீர்மானிக்க அறிவுறுத்தினார்கள் மறந்துவிட்டதா? ஆதாரம் இதோ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).

மாதங்கள் பிறைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்றுதானே நபிகளார் அறிவுறுத்தியிருக்கிறார்கள் அதை மறந்து விட்டு ஆயிரம் வருடங்களுக்கு நாங்கள் காலண்டர்களை கணித்து கூறுவோம் என்று ஜோசியக்காரர்களை போன்று நம்மில் தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு போன காரணம் என்னவோ? ஏன் நபிமொழிகள் கேட்டு கேட்டு உள்ளம் புளித்து போய்விட்டதா?

இந்த வசனம் இந்த விஞ்ஞான காலத்திற்கு பொருந்தாதா?

கண்ணியமிக்க சகோதரர்களே படைத்த இறைவன் முற்றும் அறிந்தவன் அவன் விஞ்ஞான வளர்ச்சியையும் அறிந்தவன் அவனே அதை நமக்கு கற்றுத்தருபவன். அவன் நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும் எனவே பிறைகளை மக்களே கணிக்கலாம் என்று சட்டம் வகுத்திருக்கலாம் அப்படி சட்டம் வகுத்து தருவது அவனுக்கு சிரமமானதல்ல ஆனால் அவன் கீழ்கண்டவாறு தான் சட்டம் வகுத்துள்ளான்!

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

ஆனால் இன்றைய மக்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் நாங்கள் அறிவியல் வல்லுனர்கள் என்று மார்தட்டிக்கொண்டு மேற்கண்ட வசனத்தை மறக்கடிக்கிறார்கள்! உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று இறைவன் கூறும் இந்த செய்தி இந்த விஞ்ஞான சாட்டிலைட் காலத்திற்கு பொருந்தாத வசனமா? அப்படியானால் உங்களில் இந்த வசனம் தேவையில்லை என்று கூற முன்வருபவர் யார்? நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையானவராக இருந்தால் இந்த சவாலை ஏற்று வாருங்கள் பார்ப்போம்! அல்குர்ஆனுடைய வசனமாகிய 2:185 இந்த காலத்திற்கு தேவைப்படாது, காலத்துக்கு முரண்பட்டது என்று கூற உங்களில் எவனுக்கேனும் திராணியிருக்கா? ஒருவராவது கையை உயர்த்துங்கள் பார்ப்போம்!

தரம்புரண்ட தவ்ஹீத் கொள்கை சகோதரர்கள்

இன்றைய நவீன விஞ்ஞான காலத்தில் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது அவர்கள் கூறுகிறார்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட தீர்மானம் வகுத்தால் நாங்களும் அவர்களுடன் உடன்படுகிறோம் என்று! இவர்கள் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர்கள்தான் ஆனால் கொள்கையில் தடம் புரண்டவர்கள். தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த கொள்கைவாதிகள் நாளை கீழ்கண்டவாறுகூட கூற முன்வருவார்களா?

உலகம் முழுவதும் நபிவழியை புறக்கணித்தால் நாங்களும் புறக்கணிப்போம்

தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த தரம்கெட்ட கொள்கைவாதிகளிடம் நாம் கேட்கும் கேள்விகள் இதுதான்!

 1. பிறையை தீர்மானிப்பது நபிவழியின் அடிப்படையிலா? அல்லது உலக மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?
 1. அருள்மறை குர்ஆனை பின்பற்றுவது 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) என்ற யாரோ ஒருவர் வாழ்ந்தாராமே அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையிலா? அல்லது தற்போது நம்முடன் வாழந்துக் கொண்டிருக்கும், வாழப்போகும் 600 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?
 1. உலகம் முழுவதும் ஒன்று கூட இனி எங்களுக்கு குர்ஆன் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
 1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹராமை ஹலால் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
 1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹலாலை ஹராம் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?

நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுவதை மறுத்து உலகப்பிறைக்கு வக்காலத்து வாங்க துடிக்கும் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல மாறாக தவ்ஹீதில் தடம்புரண்ட தருதலைவாதிகள்! இவர்கள் இறைவனுக்கும் அவனது தூதர்களுக்கும் கட்டுப்படுவதை காட்டிலும் 600 கோடி மக்களின் மனோ இச்சைக்கு கட்டுப்பட துடிக்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது அல்லாஹ்தான் இவர்களை திடப்படுத்த வேண்டும்!

ஒருவேளை உலகில் வாழும் 600 கோடி மக்களும் அல்லாஹ்வை வணங்குவதை வெறுத்தால் அவர்களின் மனோ இச்சைக்கும் இவர்கள் கட்டுப்படுவார்களா? இதோ இவர்களி்ன செயல் கீழ்கண்ட இறைவசனத்தை நினைவுபடுத்தவில்லையோ!

(நபியே! இன்னும்) நீர் கூறும்: அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (குர்ஆன் 3:32)

கொள்கையை விட குடும்பம்தான் முக்கியமா?

அன்புச் சகோதர, சகோதரிகளே இன்று இந்த பிறை விஷயத்தில் நாம் போராடுவது உன்னதமான அந்த நபிவழியை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆனால் ஒரே நாள் உலகம் முழுவதும் பிறை என்ற வாதிடுபவர்கள் எதற்காக இந்த கொள்கையை விடுகிறார்கள் தெரியுமா? காரணங்கள் இதோ!

1.       சவுதி, துபாய் நாடுகளில் வாழும் மகன் தான் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தன் தாயும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!

2.       தாய்நாட்டில் வசிக்கும் சகோதரனோ வெளிநாடுகளில் வாழும் தன் சகோதரன் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தானும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!

3.       தாய்நாட்டில் வசிக்கும் மக்கள் சவுதி மக்களை பார்த்து  இன்று அவர்கள் பெருநாள்  கொண்டாடும் போது நாம் இன்று சொந்த நாட்டில் திண்டாட வேண்டுமா? என்று பதறுகிறார்கள்!

4.       வெளிநாட்டுவாழ் மக்களோ இன்று நாங்கள் பெருநாள்  கொண்டாடி விட்டோம் எங்களைப் போன்று மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ஏன் பெருநாள் கொண்டாடவில்லை என்ற புலம்புகிறார்கள்!

குடும்ப உறுப்பினர்களிடம் அளவுகடந்த பாசம் வைக்கும் மேற்கண்ட நபர்களிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான்! உங்களை பெற்ற தாய், வளர்த்த தந்தை, உடன் பிறந்த சகோதரன், சகோதரி, கட்டிய மனைவி, பெற்றெடுத்த மகன், மகள் ஆகியோர் அல்லாஹ்வையும் அவனது நபியையும் விட சிறந்தவர்களா? உங்கள் நேசம் உங்கள் குடும்பத்தாருடன்தானா? அப்படியானல் உங்கள் குடும்பத்தாரின் மீது நேசம் காட்டுவதற்காக வேண்டி கீழ்க்ணட வசனத்தை குர்ஆனிலிருந்து நீக்கிவிடலாமா?

நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்” (திருக்குர்ஆன், 3:31)

வாருங்கள் உங்களில் யார் உங்கள் குடும்பத்தாரையும் விட  அல்லாஹ்வை அதிகம் நேசிக்க முன்வருகிறார்கள் என்பதை நாமும் பார்க்கிறோம்!

நீங்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நேசித்திருந்தால் அவருடய நபியை பின்பற்றி பெருநாள் கொண்டாட வேண்டுமே ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நேசிப்பதை விட உங்களுடைய வெளிநாட்டுவாழ் சகோதர, சகோதரிகளையும், தாய்நாட்டுவாழ் தாய் தந்தையரும்தானே நேசமுள்ளவர்ளாக இருக்கிறார்கள்! இதனால்தானே நபிவழியை புறக்கணிக்கிறீர்கள்!

(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.(அல்குர்ஆன் 6:106)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (அல்குர்அன் 8:20)

மத்யன் நகர மக்களும் ஷுஐப் நபியும் படிப்பினை

இந்த பிறை விஷயத்தில் விஞ்ஞானத்தை பின்பற்றும் நீங்கள் தரம்புரண்டுவிட்டீர்கள் உங்களைப் போன்றே அளவை நிறுவைகளில் தரம்புரண்ட ஒரு சமூகத்தை பற்றி அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

மதயன் நகர மக்களை அளவை நிறுவைகளில் மோசடி செய்து வந்தார்கள் அவர்களை நேர்வழிப்படுத்த அவர்களின் சகோதரரும் நபியுமாகிய ஷுஐப் (அலை) அவர்கள் வருகிறார்கள். அவர் தன் சமூகத்தாரிடம் கூறுகிறார் இதோ

“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். (அல்குர்ஆன் 11:85)

ஷுஐப் நபியின் வரலாற்றை நாம் கூறுவது உங்களுக்கு பொருத்தமில்லாதவையாக தென்படலாம் ஆனால் இதிலும் படிப்பினை உள்ளது! அளவை நிறுவைகளை அறியாத சமுதாயதவர்கள் அதுபற்றி அறிந்துக்கொள்கிறார்கள் பின்னர் அவைகளில் மோசடி செய்கிறார்கள் இதை கண்டிக்கும் போது கூடவே பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்என்று நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் அதற்க அந்த மக்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? இதோ

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (அல்குர்ஆன் 11:87)

இப்படிப்பட்ட ஏளனமான வார்த்தைகளைத் தான் இன்று உலகப் பிறை ஒரே பெருநாள் என்று கர்ஜிக்கக்கூடிய சகோதரர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கூற வேண்டிய பதிலையும் நபி ஷுஐப் நமக்க கற்றுத்தருகிறார் இதோ ஆதாரம்

(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (அல்குர்ஆன் 11:88)

உலகப் பிறை என்று வாதிடக்கூடியவர்களிடம் நாம் ஆதாரங்களை காட்டினால் அதை நிராகரித்து மத்யன் நகரவாசிகள் எவ்வாறு நபி ஷுஐப் அவர்களை இகழ்ந்தார்களோ அதைப்போன்று இவர்களும் நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுபவர்களையும் அதை அறிவுறுத்து பவர்களையும் இகழ்கிறார்கள் இதோ ஆதாரம்

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் 11:91)

நபி ஷுஐப் அவர்கள் கூட குடும்பத்தாரைவிட அல்லாஹ் வைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும் என்று கூறுகிறார்

(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.(அல்குர்ஆன் 11:92)

நபிக்கு கட்டுப்படாதவர்களுக்கு கட்டுப்படுதல் இல்லை!

என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:93)

எனவே சகோதரர்களே ஷுஐப் நபியின் மேற்கண்ட கருத்தையே நாமும் கூறுகிறோம் நீங்க்ள உங்களுக்கு இசைந்தாவறு செய்து கொண்டிருங்கள் நபிவழியில் பெருநாள் கொண்டாடுபவர்களான நாங்களும் நபிவழிக்கு இசைந்தவாறு பெருநாள் கொ்ணடாடு கிறோம். நம்மில் இழிவுதரம் வேதனை யாருக்கு வந்தடையும் என்பதையும், நம்மில் பொய்யர் நீங்களா, நாமா? என்பதை  மஹ்ஷரில் அல்லாஹ்வின் சமூகத்தில் அறிந்துக்கொள்வோம் வாருங்கள்! ஒரு வேளை இந்த உலகமே எங்களுக்கு எதிராக அணிதிரண்டு நின்றாலும் தவ்ஹீத் என்ற ஏகத்துவக் கொள்கையிலும் நபிவழயில் தொழுகைகள், ஜகாத், ஹஜ், உம்ரா, குர்பானி, பெருநாட்கள் மற்றும் ஏவைகள் எல்லாம் எங்கள் இறைவன் எங்கள் மீது கடமையாக்கியுள்ளானோ அவைகளை குர்ஆன் மற்றும் நபிவழியில்தான் பின்பற்றுவோம்! எங்கள் இறைவனுக்கு நாங்கள் மாறு செய்யமாட்டோம் எங்கள் நபியின் வழியை கைவிடமாட்டோம்! நாங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழுவோம் அதே நிலையில் மரணிக்கவும் செய்வோம் (இன்ஷா அல்லாஹ்)!

இதோ உங்களுக்கு இறுதியாக உபதேசம் செய்கிறோம்!

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:92)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? உங்கள் கொள்கை சரியா?

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர். (அல்குர்ஆன் 11:944)

அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட சகோதரர்களே நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை ஒழுங்காக பின்பற்ற துடிக்கும் நீங்கள் பிறை விஷயத்தில் தரம்புரண்டுவிடாதீர்கள், சோதிடக்காரனிடம் சென்று நல்ல நாள் பற்றி குறிகேட்பதும் ஒன்றுதான் 1000 வருடங்களுக்கு ஹிஜிரா காலண்டரை தயாரித்து பெருநாள் தொழுகைகளை விஞ்ஞான கணிப்பின் அடிப்படையில் முன்கூட்டியே தீர்மானிப்பதும் ஒன்றுதான்.

எனவே இப்படிப்பட்ட பிறை சோதிடர்களை நம்பி உங்கள் ஈமானை அல்லாஹ்வின் சமூகத்தில் கேள்விக்குறியதாக ஆக்கிவிடாதீர்கள்! இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை புறக்கணித்துவிடாதீர்கள்!

நீங்கள் நபிவழியை புறக்கணித்து மனோ இச்சையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிம் கொண்டால் அது அல்லாஹ்வை தவிர்த்து கப்ருகளையும், சிலைகளையும் வணங்கக்கூடிய காஃபிர்கள், முஷ்ரிக்குகள், முனாஃபிக்குகளின் தீர்மானங்களை ஒத்த தீர்மானமாகும்! எனவே சகோதர, சகோதரிகளே நீங்கள் மஹ்ஷரில் மூமின்களாக இப்ராஹீம் நபி போன்ற நல்ல கூட்டத்தாரோடு நிற்க ஆசைப்பட்டால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் (நபிவழி)யை உறுதியாக பின்பற்றித்தான் ஆகவேண்டும் இதைவிட உங்களுக்கு வேறு வழி இல்லை! THERE IS NO OPTION TO PROHIBIT QUR’AN & SUNNAH இதோ ஆதாரம்!

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். (அல்குர்ஆன் 2:130)

இந்த குர்ஆன் மற்றும் நபிவழியை புறக்கணிக்காதீர்கள்

நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:57)

விஞ்ஞான பிறையை கணிக்கும் விஞ்ஞானிகளே நபிவழியை புறக்கணிக்காதீர்கள்! தரம்புரண்ட நீங்கள் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்

لا اله الا الله محمد رسول الله

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?


தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!

 

தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது!

பயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு! இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்!

 

தப்லீக் ஜமாஅத்தினர் நடவடிக்கைகள்

குடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.

மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக  பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்!

பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.

முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்!


தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?

மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்! இதோ சில போதனைகள் பாரீர்!

ஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்

நீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்!

 

தப்லீக் ஜமாஅத் என்ற இந்த வழிகேடு எப்போது உதயமானது?

முஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.

 

தப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப காலத்து நோக்கம்

இந்திய சுதந்திரத்திற்கு முந்திய கட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நோட்டமிட்டார்கள் பின்னர் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் இடம் தெரியாமல் சென்றுவிடுமோ என்று பயந்ததும் இந்த அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். இந்த திட்டத்திற்கு முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் முஹம்மது இலியாஸ் இந்த அமைப்புக்கு இட்ட சுலோகன் என்ன தெரியுமா முஸ்லிம்களே! முஸ்லிமாக இருங்கள்! (“O Muslims! Be Muslims”) இவர்ளின் இந்த சிந்தனை அல்லாஹ்வின் மீது இவர்களுக்கு உள்ள தாழ்ந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது!

 

தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சி

1926ல் மீவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த வழிகேட்டு அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆகிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது!

 

தப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்

இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ!

 

இஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை  பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார்! சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா? அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா? வஹி வந்ததா? இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா? இது வழிகேடு அல்லவா? சிந்திக்கமாட்டீர்களா?

 

இந்த ஜமாஅத்தின் கோட்பாடுகளாவன

1. முதல் கலிமா

அல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்

 

2. ஐவேளை தொழுகை

உலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்!

 

3. இலம் மற்றும் ஜிக்ரு

அல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது

 

4. இக்ரமே முஸ்லிம்

தங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வது

 

5. இக்லாஸ்-ஏ- நிய்யத்

மனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது!

 

6. தாபிர்-ஏ- வக்த்

குடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பிரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்

 

புதிய தத்துவம் எண் 7

மேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.

 

சகோதரர்களே! தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான  தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா? அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்!


அல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய வேதம்!

தப்லீக் என்ற வழிகேட்டின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்

 

இந்த ஜக்கரிய்யா என்ற வழிகேட்டு மொளானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு FAZAIL-E-AMAL (அமல்களின் சிறப்பு) என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த வழிகேடர்களுக்கு புனித நூலாகும்!

 

அமல்களின் சிறப்பு என்ற இந்த வழிகேட்டு நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது!

 

தப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்

தாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.

தினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் FAZAEL-E-AMAAL (அமல்களின் சிறப்பு) என்ற வழிகேட்டு புத்தகத்தை படிப்பது

வாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது!

ஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.

ஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.

வாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.

தினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது!

வருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது!

 

சர்வதேச தப்லிக் கூட்டம்

முதலாவது சர்வதேச தப்லிக் கூட்டம் பங்ளாதேஷ் நாட்டில் கூடுகிறது இந்த கூட்டத்திற்கு வங்காள மொழியில் பீஷ்வா இஸ்திமா (BISHWA IJTEMAWorld Gathering) என்று பெயர். இந்தக் கூட்டம் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள டோங்கி என்ற ஊரில் குறைந்தபட்சம் 2 இலட்சம் பேருடன் அரங்கேரும்.

 

இரண்டாவது சர்வதேச தப்லிக் கூட்டம்

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஜ்வின்ந் என்ற நகரத்தில் வருடத்தின் இரண்டாவது சர்வதேச தப்லீக் இஸ்திமா நடைபெறும்.  கடந்த 2008 ஆம் ஆண்டு 1.5 இலட்சம் பேர் இந்த கூட்டத்தில் கூடினர்.

 

தப்லீக் ஜமாஅத் என்னும் வழிகேட்டின் அங்கத்தினர் யார்?

அரசியல் தலைவர்கள்

 • பாகிஸ்தான் நாட்டு அதிபராக இருந்த முஹம்மது ரபீக் தரார்,
 • பரூக் லெஹரி,
 • நவாஸ் ஷெரீப்,
 • முன்னால் பங்களாதேஷ் நாட்டு அதிபராகவும் ராணுவ தலைவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான்
 • பாகிஸ்தான் ராணுவ லெப்டினன் ஜெனரல் ஜாவித் நஸீர்

 

கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள்

 • ஷாஹீத் அப்ரிடி (பாகிஸ்தான்)
 • ஷக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்)
 • இன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
 • முஷ்தாக் அஹமது (பாகிஸ்தான்)
 • சயீத் அன்வர் (பாகிஸ்தான்)
 • சலீம் மாலிக் (பாகிஸ்தான்)
 • மொயின் அக்தர் (பாகிஸ்தான்)
 • ஹாஷிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா)
 • பாடகர் ஜுனைத் ஜம்ஷட்
 • குல்ஜார் ஆலம்
 • ஆலம்ஜேப் முஜாஹித்
 • தலைசிறந்த எழுத்தாளரான  டாக்டர் நாதிர் அலிகான்

 

(நன்றி en.wikipedia.org/wiki/Tablighi_Jamaat).

தப்லிக் ஜமாஅத்தினரின் இந்த கேடுகெட்ட வழிமுறைக்கு இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்குமா?


மஹ்ஷரில் தோல்வியுற வேண்டுமா? அப்போ வாங்க!

 

அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் 26ல் அந்த நாளில் (மறுமைநாளில்) உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான் என்று வருகிறது இதன்படி அந்த மறுமை நாளில் அந்த ரஹ்மான் தண்டிப்பானே என்ற பயம் இந்த தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஏற்பட வேண்டாமா? இவர்களின் இந்த செயல் கீழ்கண்ட வசனத்தை நினைவுபடுத்தவில்லையா?

 

எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? (25-28)

 

அந்நாளில் அறியாமைக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான் (25-27)

 

மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். (குர்ஆன் 2:86)

 

நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.) (குர்ஆன் 25:29)

 

நாதாக்களும், தலைவர்களும் கைகொடுப்பார்களா?

அன்றியும் அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள், அப்போது (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம், இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா? என்று கேட்பார்கள்! (அதற்கு) அவர்கள் “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்கு காட்டுவோம், (தப்பிக்க வழியே அன்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான், வேறு புகழிடமே நமக்கு இல்லையே! என்னு (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள். (14-21)

 

தவறுகளை திருத்திக்கொள்பவர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்கொள்வார்கள் (52-25)

 

இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்தபோது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம் (52-26)

 

ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான் (52-27)

 

நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன் (52-28)

 

அல்லாஹ் கூறுவது போல் நன்மையின் எடைகள் பற்றி பயந்து கொள்ளுங்கள்

எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் (23-102)

ஆனால் எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் தங்களையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள், அவர்கள் தாம் நரகில் நிரந்தரமனவர்கள் (23-103)

 

சிந்திக்க சில தேன் துளிகள்

 • இந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா?

 

 • இந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா?

 

 • இந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா?

 

 • இந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா?

 

 • இந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது  உண்டா?

 

 • இந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா? அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா?

 

நீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)

 

அழகிய அழைப்பு

தப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.

குர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்!

இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள்! இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்!

குர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள்! இதோ குர்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்!

என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)

அல்லாஹ் இந்த தப்லிக் ஜமாஅத்தினருக்கும் நேர்வழிகாட்ட துவா செய்வோமாக!

குறிப்பு

இந்த கட்டுரையை படித்து நிறைய சகோதரர்கள் திட்டுகிறார்கள் அதற்காக நாம் கவலைப்படுவதாக இல்லை திட்டுக்களும், அடிகளும், உதைகளும் வாங்குவது முஸ்லிம்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் திருப்பி அடிக்கமாட்டோம், திட்டமாட்டோம் மாறாக துன்பம் இழைப்பவர்களை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுவோம் ஏனெனில் நாம் குர்ஆன் மற்றும் நபிவழியை பின்பற்றும் முஸ்லிம்கள்!

தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்கி கத்தம் ஃபாத்திஹா ஓதி மவ்லூது என்ற பாவ புத்தகத்தை ஓதும் ஜமாலி ஜமாஅத்தை விமர்சிக்கிறோம் ஆனால் தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்காமல்  அவர்கள் சொன்னார்கள் என்று அமல்களின் சிறப்பு என்ற நூலை எழுதிவைத்துக்கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தை விமர்சிக்கக்கூடாதா? ஏன் இந்த இருதலைப்பட்சம்!

ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்பது நபிகளார் (ஸல்) அவர்களின் நடைமுறை எனவேதான் ஜமாலி ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம், தப்லிக் ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்

 

ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!

வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

 

ஹிந்து மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்

இந்து சகோதரர்கள் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிலைகளை வடித்து அச்சிலைக்கு பல கைகள், கால்கள், மூக்கு, மர்மஸ்தான உறுப்புகள் ஆகியவற்றை செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள். ஆனால் இந்து மத வேதங்கள் படைத்த இறைவனைப் பற்றி கூறும் போது “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3) என்று கூறுகிறது அதன் பொருள் இதோ கீழே உள்ளது

அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)

இந்த யஜுர் வேதம் இறைவனை உருவகிக்க முடியாது என்று கூறுகிறது மேலும் இறைவன் உருவமற்றவன் அதாவது இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாததல் உருவம் இங்கு இல்லாதவன் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறது ஆனால் இந்துமத வேதங்களை படிக்காத இந்துக்கள் மரம், சூரியன், காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை முறையே சிவன், பிரம்மா, விஷ்ணு எண்று வர்ணித்து அதை கடவுளாக்கி அதற்கு விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த ஹிந்து மட்டைகள் கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தை படித்திருக்க வேண்டாமா?

 

இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

 

கிருஸ்தவ மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்

கிருத்தவ சகோதரர்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய குமாரன் என்று தங்களுடைய வாய்களால் பொய்களை இட்டுக்கட்டி அவரை சிலையாகவும், சிலுவையில் தொங்கும் விதமாகவும், அவருடைய தாயார் மரியாள் குழந்தையுடன் நிற்பது போன்றும் செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள்.

இயேசு என்ற தீர்க்கதரிசி தந்தையின்றி பிறந்ததால் அவரை கிருஸ்தவர்கள் தேவகுமாரன் பொய்யாக வர்ணிக்கிறார்கள் தந்தையின்றி பிறந்த இயேசுவை தேவகுமாரன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் தேவ குமாரனாக, தேவ குமாரத்தியாக வர்ணிக்கவில்லை! ஆண் துணையின்றி இயேசு பிறந்தார் ஆனால் ஆண், பெண் ஆகிய இரண்டு  துணையுமின்றி ஆதாம் என்ற முதல் மனிதர் பிறந்தாரே அது இவங்களுக்க புரியவில்லையோ! இந்த கிருஸ்தவ மட்டைகள் இயேசுவையும் அவருடைய தாயார் மரியாளையும் கடவுளாக்கி அவர்கிளின் பெயரால் விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த கிருஸ்தவ மட்டைகள் கீழ்கண்ட பைபிஸ் வசனத்தை படித்திருக்க வேண்டாமா?

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; வைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. (பைபிள் ஏசாயா 44:9 )

 

கப்ருவணங்கி மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அவனது தூதர்களை பின்பற்றுங்கள் என்று இஸ்லாம் முதல் கலிமாவை போதித்தால் நாங்கள் இந்த கலிமானை வாயால் ஓதுவோம் ஆனால் அதன்படி நடக்கமாட்டோம் என்று நக்கலடித்து அவ்லியாக்களை வணங்கி இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.

 

முஸ்லிம்களில் இந்த பலவீன பிரிவினர் அதாவது சமாதிகளை வழிபடும் கப்ருவணங்கிகள் இந்துக்களையும், கிருஸ்தவர் களையும் ஓரங்கட்டிவிட்டு அவர்களை விட ஒருபடி முன்னே சென்று சிலைகளை செதுக்காமல் ஊர், பேர் தெரியாத ஒருவருடைய சமாதியை கண்டுபிடித்து அதன் மீது பச்சை ஆடையை போர்த்தி, ஊதுவர்த்திகளை கொழுத்தி அந்த இறந்த மனிதர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர் அவர் அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்வார் என்ற என்று பொய்களை அவிழ்த்துவிட்டு கடவுளுக்கு இணையாக கப்ருகளை (சமாதிகள்) வைத்து வணங்குகிறார்கள். இந்த கப்ருவணங்கி மட்டைகள் கீழே உள்ள குர்ஆன் வசனத்தை உணரக்கூடாதா?

 

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

 

முடிவுரை

வழிகேடு என்னும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக இந்த 3 அணியினரும் உள்ளனர். இவர்கள் வேதங்களை படிப்பதில்லை, பைபிளை படிப்பதில்லை, குர்ஆனை உணர்வதில்லை எனவேதான் இவர்கள் மூவரையும் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக வர்ணிக்கிறோம் இவர்களின் வழிமுறையில் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அறிவு வந்த பின்னரும் இந்த நிலை ஏன் நீடிக்கிறது அந்தோ பரிதாபம்! அல்லாஹ் இவர்களுக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளே இதோ கீழ்கண்ட இறுதிவேதமான அருள்மறை குர்ஆனின் அறிவுரைகளை கேளுங்கள்!

நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர் (4:51)

 

 

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

 

இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்

அல்லாஹ் கூறுகிறான்: –
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

 

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது


‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

 

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்


(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

 

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

 

இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)

 

 

இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!


”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

 

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அப்துல் காதர் ஜீலானி Vs ஷைகு ஹம்மாத் (சபாஷ் சரியான போட்டி)

 

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடிய முஸ்லிம்களுக்கு மத்தியில் உயிருடன் உள்ள மனிதர்களான ஷைகுமார்களையும்  வணங்கலாம் இறந்த மனிதர்களது சமாதியையும் வணங்கலாம் என்று கூறி இறைவனுக்கு இணையாக வைத்து தர்காஹ் வழிபாடுகள் இன்று பட்டிதொட்டி எங்கும் பின்பற்றப்படுகின்றன. இந்த தர்காஹ் வழிபாடுகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறிய செயல் மட்டுமல்லாது நிரந்தர நரகத்திற்கும் உரிய செயலாகும் இதை நாம் கூறவில்லை அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)

அல்லாஹ்விடம் பாதுகாவல் தோடாமல் தர்காஹ்வையும் அதில் உள்ள மண்ணோடு மக்கிப் போன மய்யித்துகளிடமும் பாதுகாப்பு தேடும் கப்ருவணங்கிகள் மேற்கண்ட அருள்மறை வசனத்தை ஏற்க மறுக்கின்றனர் மேலும் இணைவைப்பு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள் இவர்களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் அருள்மைறையில் கூறுகிறான்

 

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்அன் 16:105)


மேலே நீங்கள் படித்த இந்த வசனம் 100க்கு 100 உண்மையாகி விட்டது ஏனெனில் இதை கூறுபவன் இறைவன்! எனவே இந்த வசனத்தின் மூலம் சுன்னத்தை பின்பற்றாத தர்காஹ்வாதிகளின் தரம் அவர்கள் அவிழ்த்துவிடும் பொய்கள் நிறைந்த புழுகு மூட்டைகளை அலசுவோம்!

 

தர்காஹ்வாதிகள் தலைவர் பெயரில் அவிழ்த்துவிடும் பொய்கள்!

ஆத்மீக கடல், ஞானதீபம், தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா, முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று அல்லாஹ்வை நம்புவதாகும். ஏனெனில் அவன்தான் இந்த அண்டங்கள் மற்றும் அகிலங்கள் அனைத்தையும் ஒழுங்காக படைத்து, பரிபாலித்து வருகிறான். இப்படிப்பட்ட இறைவனை எப்படி புகழ்ந்தாலும்  பொறுத்தமாக அமையும் மேலும் இறைவனை புகழ்வது நம்மீது கடமையாகிறது!

ஆனால் இந்த அழகான கடமையை ஒன்றுமே படைக்க திராணியற்ற மனிதனுக்கு கொடுப்பது முட்டாள்தனமில்லையா? இந்த முட்டாள்தனத்தைத்தான் இந்த கப்ரு வணங்கிகள் அவ்லியாக்களின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள் அதுவும் அப்துல் காதர் ஜீலானி என்ற மனிதரை பற்றி புகழ்ந்து பேசுவதாக இருந்தால் அல்லாஹ்வை விட அதிகமாக புகழ்துவிடுவார்கள்!  வாருங்கள் ஜீலானிக்கு இந்த கர்ருவணங்கிகள் சூட்டியுள்ள புகழ்மாலைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் சற்று விரிவாக அலசுவோம்!

 

அப்துல் காதர் ஜீலானி ஆத்மீக கடலா?

ஆத்மீக கடல் என்பதன் பொருள் என்னவென்றால் கடல் எவ்வாறு பறந்து விரிந்து காணப்படுகிறதோ அதுபோன்ற அறிவு படைத்தவர் என்று பொருள்படுகிறது. அதாவது ஆன்மீகம், ஆத்மீகம் ஆகியவற்றை கரைத்து குடித்து முத்திப்போனவர் என்று அர்த்தமாகிறது. இஸ்லாத்தில் பழுத்தபழம், முத்திப்போன குருமார்கள் என்று யாரையாவது குறிப்பிட இயலுமா? இதைப்பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் இதோ

 

(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை யெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5:109)

 

அல்லாஹ் அங்கீகரித்து அனுப்பிய தனது தூதர்களுக்கே மறைவான ஞானம் இல்லாத போது சாதாரண மனிதரான ஜீலானிக்கு ஆத்மீக ஞானம் வந்துவிடுமா? எனவே ஆத்மீக கடல், ஆத்மீக ஞானி என்ற புகழ் பொய் என்பது நிரூபணமாகிவிட்டது!

 

அப்துல் காதர் ஜீலானி ஞானதீபமா?

ஞானம் என்பது அறிவு, தீபம் என்பது வெளிச்சம் எனவே ஞானதீபம் என்பது அறிவுக்கு வெளிச்சம் தரும் ஒளி என்ற பொருள்படுகிறது அதாவது அல்லாஹ் ஞானம் மிக்கவன் என்று குர்ஆனில் கூறுகிறான் இவர்களோ தங்கள் தலைவரை அந்த ஞானத்திற்கான தீபம் என்று புகழ்கிறார்கள்! இவர்கள் மறைவாக என்ன கூறவருகிறார்கள் என்றால்  இந்த ஜீலானி என்ற தீபம் அனைந்துவிட்டால் அல்லாஹ்வுக்கு ஞானம் இல்லை என்ற தத்துவத்தைத்தான்! (இத்தகுல்லாஹ்)! அல்லாஹ்வின் வல்லமையை விட அப்துல் காதர் ஜீலானியை புகழ்ந்தவிட்டதால் ஞானதீபம் என்ற புகழ் முழுக்க முழுக்க பொய் என்று நிரூபணமாகிறது!

 

அப்துல் காதர் ஜீலானி மெய்நிலை கண்ட ஞானியா?

கப்ருவணங்கிகள் அப்துல் காதர் ஜீலானியை மெய்நிலை கண்ட ஞானி என்று புகழ்கிறார்கள்! இவர் மெய்நிலையை கண்டுவிட்டார் என்று அல்லாஹ் கூறி வஹியை இறக்கினானா? நபிகளார் (ஸல்) அவர்களுக்கு மெய்நிலை கண்ட ஞானம் இருந்ததா? இதோ அல்லாஹ் என்ன கூறுகிறான்?

 

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்:  ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அல்-குர்ஆன் 6:50)

 

இறுதி நபிக்கு இல்லாத இந்த மறைவான ஞானத்தை இந்த அப்துல் காதர் ஜீலானி பெற்றுள்ளார் என்று கப்ருவணங்கிகள் கூறுவது நபியை இழிவுபடுத்தும்விதமாக இல்லையா? எனவே அப்துல் காதர் ஜீலானியை மெய்நிலை கண்ட ஞானி என்று கூறியது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது!

 

மனிதனாக பிறந்து மனிதனாக மடிந்த ஜீலானியை ஆத்மிக கடல் என்றும், ஞானதீபம் என்றும் மெய்நிலை கண்ட ஞானி என்றும்  வர்ணிக்கிறார்களே இப்படி சாதாரண மனிதனை அல்ல மாறாக அல்லாஹ்வின் தூதர்களுக்கும் அந்த தூதர்களின் முத்திரையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூட வர்ணிப்பது கூடுமா? நபிகளார் (ஸல்) என்ன கூறினார்கள்? இதோ படியுங்கள்

 

ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவேன், மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன். (அஹ்மத்,பைஹகீ)

 

 

எனவே சாதாரண மனிதர் அப்துல் காதர் ஜீலானிய தவசீலர் என்றும் மெய்நிலை கண்ட ஞானி என்றும் சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி என்றும் சுல்தானுல் அவ்லியா என்றும் புகழ்ந்து துதி பாடிய தர்காஹ்வாதிகளை ஷைத்தான் வழிகெடுத்துவிட்டான் இதில் உள்ள மிக முக்கியமான வேடிக்கை என்னவென்றால் தங்கள் குறைகளை கேட்கிறார் என்று எந்த ஜீலானியை இவர்கள் நம்புகிறார்களோ அந்த ஜீலானியே இந்த கப்ருவணங்கிகளை ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை! (இறந்த பிறகு எவருக்காவது கேட்கும் ஆற்றல் இருந்தால்தானே காப்பாற்ற இயலும்)

 

கப்ருவணங்கிகள் கூறுவது 100% பொய்தான் ஆதாரங்கள்

 

அப்துல் காதர் ஜீலானி அவர்களுக்கு மெய்நிலை காணும் நிலை மற்றும் மறைவான ஞானம் உள்ளது என்று சப்பைகட்டி கூறும் தர்காஹ்வாதிகள் அதே வாய்களால் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் சில ஆசிரியர்களின் உதவியால்தான் கல்வி பயின்றார் எனறு கூறுகிறார்கள் இதோ ஜீலானியின் ஆசிரியர்கள்

 

 • அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி,
 • அபுல் உபா அல பின் ஹகீம்,
 • அபூ காலிப் அஹ்மது,
 • அபுல் காஸிம் அலி,
 • அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி

 

அட கப்ருவணங்கிகளே உங்கள் நாதர் ஜீலானி அவர்கள் தன்னுடைய அடிப்படை அறிவை கற்றுக்கொள்ள மனிதர்களின் உதவியை நாடியுள்ளார் என்று உங்கள் வாய்களாலேயே கூறுகிறீர்கள் அப்படியிருக்க அவருக்கு மெய்ஞானம் எங்கிருந்தய்யா வந்தது! இது உங்களின் பொய் நெ. 1

 

அப்துல் காதர் ஜீலானி அவர்கள் ஆத்மீக கடலாக இருக்கும் போது அவர் தனது ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தியிருக்க வேண்டும் மாறாக ஆசிரியர்களிடம் இவர் பாடம் பயின்றது ஏன்? உங்க பாஷையில் கூறுவதாக இருந்தால் ஆத்மீக கடல் ஏனப்பா குட்டையிடம் பாடம் படித்தது? சிந்திக்க மாட்டீர்களா? இது உங்களின் பொய் நெ. 2

 

சாதாரண ஷைகு அப்துல் காதர் ஜீலானிக்கு வழிகாட்டியா?

அப்துல் காதர் ஜீலானி எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்று நினைத்தாராம், இதைப்பற்றி கப்ருவணங்கிகள் கீழ்கண்டவாறு கூறுகிறார்கள்

 

அப்துல் காதர் ஜீலானி கல்வி கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள்.எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். (மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )

 

மேலே உள்ள கருத்தை படித்தவுடன் தர்காஹ்வாதிகள் இட்டுக்கட்டிய பொய்களில் அவர்களே தடுமாறிய விதம் பற்றி பாருங்கள்!

 

 • அப்துல்காதர் ஜீலானியை ஆத்மீக கடல் என்று பொய் கூறினர் அப்படியெனில் அந்த ஆத்மீக கடலுக்கு வழிகாட்டி தேவையா? இது பொய் என்பது புரியவில்லையா?

 • அப்துல் காதர் ஜீலானி அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவர் என்று பொய் கூறினார்கள் இப்போது அந்த ஜீலானியே அல்லாஹ்வை நெருங்க ஒரு ஷைகுவின் வழிகாட்டுதல் தேவை என்று எண்ணிணாராம்? இது பொய்யாக தெரியவில்லையா?

 • அப்துல் காதர் ஜீலானி தனக்கு ஞானகுரு தேவை என்று துவா செய்து அந்த துவாவை இறைவன் அங்கீகரித்து ஹம்மாத் என்ற ஷைகுவை அவருக்கு தேர்ந்தெடுத்து கொடுத்தான் என்று கூறுகிறார்கள் இதுபற்றி அல்லாஹ் விடமிருந்து ஏதாவது வஹி வந்துள்ளதா? இது பொய் இல்லையா?

 

 

அப்துல் காதர் ஜீலானி Vs ஷைகு ஹம்மாத்!

அப்துல் காதர் ஜீலானி தனது ஷைகுவிடம் பாடம் படிக்கும் போது அந்த ஷைகு முன்வைத்த பல கடுமையான சோதனைகளை கடந்து சகிப்புதன்மை மற்றும் திட நம்பிக்கையின் பயனாக மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றாராம் பின்னர் அவரது ஷைகு ஹம்மாத் அவர்கள் ஜீலானியை பார்த்து கூறிய வார்த்தைகள் என்று இந்த கப்ரு வணங்கிகள் கூறுவது இதுதான்!

 

இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள் (கூறியது ஷைகு ஹம்மாத்)(மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )

 

அட கப்ருவணங்கிகளே! உங்கள் கட்டுரையின் அடிப்படையில் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அஜமி ஆகிவிட்டாரே! இதோ சற்று ஷைகு ஹம்மாத் அவர்கள் கூற்றிலிருந்து நாம் உணர்ந்த தெளிவை சற்று விளக்கமாக படியுங்கள்!

 

 • இந்த அஜமி அப்துல் காதிர்

 

அப்துல் காதர் ஜீலானியை அவரது ஷைகுவான ஹம்மாத் அவர்கள் அஜமி என்று கூறிவிட்டார் இதன் மூலம் அப்துல்காதர் ஜீலானிக்கு பிறப்பின் அடிப்படையில் எந்த ஞானமும் இல்லை என்பது தர்காஹ்வாதிகளின் மூலமாகவே தெளிவாகிவிட்டது. எனவே ஜீலானியை விட அவரது ஷைகு ஹம்மாத் அவர்கள் அறிவு படைத்தவர் என்பதை இந்த பொய்யர்கள் தங்கள் வாய்களாலேளே கூறிய பின்னரும் அதை உணர மறுக்கிறார்கள்.

 

 • வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார்

 

ஜீலானி வருங்காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார் என்று அவரது ஷைகு ஹம்மாத் கூறியதன் மூலம் ஜீலானியை விட அவரது குரு ஹம்மாத் அவர்கள் கப்ருவணங்கிகளின் கருத்துப்படி ஆத்மீக ஞானமிக்கவராக ஆகிவிட்டார்! அப்படியானால் ஜீலானி ஞானம் குறைந்தவர்தான் என்பது பொய்யர்களாலேயே உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.

 

 • தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார்

 

தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார் என்று ஷைகு ஹம்மாத் முன்னறிவிப்பு செய்தார் என்பதை படிக்கும் போது ஷைகு ஹம்மாத் அவர்கள் அப்துல் காதர் ஜீலானியைவிட ஆற்றல் மிக்கவராகிறார் அப்படியானல் அப்துல்காதர் ஜீலானிக்கு ஆற்றல் குறைவுதான்! இந்த கப்ருவணங்கிகளின் கருத்துப்படி ஷைகு ஹம்மாத் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியவராகிறார் அதாவது அல்லாஹ் உத்தரவிடுவான் என்று இவர் பொய்யை இட்டுக்கட்டியிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதமாகிறது!

 

 • இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்

 

அப்துல் காதர் ஜீலானியை அவர் காலத்து எல்லா வலிமார்களும் தலைப் பணிவார்கள் என்று ஷைகு ஹம்மாத் கூறியதாக கப்ருவணங்கிகள் கூறுவதன் மூலம் ஜீலானியின் ஆத்மகுரு ஷைகு ஹம்மாத் கீழ்கண்ட ஹதீஸை படிக்கவில்லை என்ற உண்மையும் வெளியாகிறது!

 

ஒருவர் மற்றவரின் காலில் விழுவதற்கு நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனின் காலில் மனைவி விழுவதற்கு அனுமதித்திருப்பேன் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்

 

முடிவுரை

அப்துல் காதர் ஜீலானிதான் உலகிலேயே ஆற்றல் மிக்கவர் என்று இதுநாள் வரை இந்த கப்ருவணங்கிகள் கூறிவந்தனர் ஆனால் அது பொய் என்பதை அவர்களின் வாய்களாலேயே உணரப்பட்டு விட்டது அதாவது அஜமியாக இருந்த அப்துல் காதர் ஜீலானியை அறிவு கொடுத்தது ஒரு ஷைகு ஹம்மாத் எனும் போது அந்த ஹம்மாத் என்ற ஆசிரியர்தான் ஜீலானியைவிட அறிவாற்றல் மிக்கவராக இருந்திருக்க வேண்டும்! ஆனால் கீழ்கண்ட வார்த்தை அதையும் மறுக்கிறது!

 • தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார் (ஷைகு ஹம்மாத்) (மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )

மேற்கண்ட வரிகளின் மூலம் இந்த ஷைகு ஹம்மாத் என்ற நபரையும் இந்த கப்ருவணங்கிகள் பொய்யராக்கி விட்டார்கள். அப்துல் காதர் ஜீலானி அவர்கள் சொல்லாததையெல்லாம் சொல்லியதாக கூறும் இந்த கப்ருவணங்கி தர்காஹ்வாதிகள் அவருடைய ஷைகுவையும் பொய்யராக்கி விட்டார்கள். எனவே திருமறையின் கீழ்கண்ட வசனம் கப்ருவணங்கிகளின் விஷயத்தில் 100 சதவீதம் உண்மையை கூறுகிறது.

 

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்அன் 16:105)

 

நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான். (அல்குர்ஆன் 6:39)

 

குறிப்பு

அப்துல் காதர் ஜீலானி என்ற நபர் மீது நமக்கு எந்த காழ்புணர்ச்சியும் கிடையாது மாறாக அந்த மனிதருடைய பெயரால் நிறைய கட்டுக்கதைகள் புணையப்பட்டதாகவும் அந்த கதைகளுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பல்வேறு மார்க்க அறிஞர்கள் கூறுவதை சற்று நினைத்து பாருங்கள்!

 

R.P.M. கனி அவர்கள் எழுதிய மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை” எனும் நூலிலிருந்து மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணியினர் தொகுத்து தங்களது பிளாக்தளத்தில் பிரசுரித்த கட்டுரையை ஆதாரமாக கொண்டு இங்கு அப்துல் காதர் ஜீலானி அவர்கள் மீது புணையப்பட்ட கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது!

மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவர் அணியினரே உங்கள் சுன்னத் ஜமாஅத் அவிழ்த்து விடும் பொய்களை பார்த்தாவது சிந்தித்து, செயல்படுங்கள் இஸ்லாம் கூறும் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள்!

மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணியினருக்கு இஸ்லாத்தின் அழைப்பு இங்கிருந்தே விடப்படுகிறது!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

மரம் ருக்கூ செய்கிறதா? மலை சஸ்தா செய்கிறதா?

 

ஒரு முஸ்லிமுக்கு உண்டான அழகிய பண்பு என்னவெனில் அவன் அல்லாஹ்வையும், மலக்குமார்களையும், தூதர்களையும், வேதங்களையும், மறுமை நாளையும், சுவர்கம், நரகம் ஆகிய வற்றையும் முழுமையாக நம்ப வேண்டும்.  அதே போன்று அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக விளக்கிக் கூறும் மறைவான ஞானம் பற்றிய செய்திகளையும் ஆதாரம் இல்லையென்றாலும் அல்லாஹ்வும் அவனது நபிமார்களும்  கூறுவதால் நம்ப வேண்டும்!

 

ஆனால் நம்மில் பலர் அருள்மறை குர்ஆனை படித்தவுடன் அதில் கூறப்பட்டுள்ள மறைவான ஞானம் பற்றிய தகவல்களை உணர்கிறார்கள் ஆனால் அதை எவ்வாறு அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகாமல் விழிபிதுங்கி வழிதவறிவிடுகிறார்கள. இதற்கு காரணம் என்ன என்று சிந்தித்துப்பார்த்தால் அவர்கள் அல்குர்ஆனை ஒழுங்காக விளங்காததுதான் என்பது தெளிவாகிறது.

 

 

மறைவான ஞானத்தை கூறும் அருள்மறை வசனம்

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:41)

 

மேற்கண்ட இந்த அருள்மறை வசனத்தை படித்தவுடன் மனிதன் இதை உள்ளத்தால் நம்ப வேண்டும் ஆனால் இவ்வாறு செய்வதில்லை மாறாக தாம் காணும் காட்சிகளை இந்த வசனத்திற்கு உதாரணமாக கூற முற்பட்டுவிடுகிறான். இதோ மேலே உள்ள வசனத்திற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதாரம் கீழே உள்ள படங்கள்தான்.

 

மேலே உள்ள இரண்டு படங்களை பார்த்தவுடன் மெய் சிலிர்த்துப் போவது உண்மைதான். காரணம் இந்த இரண்டு படங்களும் தொழுகையை நினைவுட்டும் விதமாக அமைந்துள்ளது.

 

மரம் வளைந்து காணப்படும் முறையை பார்த்தால் தொழுகையில் மனிதன் ருக்கூ செய்வது போன்றும் அதே போன்று மலை முகடு குனிந்து வளைந்து இருப்பதை பார்த்தவுடன் தொழுகையில் மனிதன் சஸ்தாவில் உள்ளது போன்றும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு வினோதமாகத்தான் உள்ளது எனவேதான் உடல் சிலித்துவிடுகிறது.

 

ஆனால் முஸ்லிம்களில் பலவீனர்கள் இந்த படங்களை பார்த்தவுடன் மேற்கண்ட அல்குர்ஆன் 24:41 என்ற இறைவசனம் கூறுவது இந்த உண்மையைதான் என்று படத்தை பார்த்துத்தான் நம்புகிறார்களே தவிர உள்ளத்தால் நம்புவதில்லை. (இந்த அரிய படங்கள் இல்லையெனில் இந்த வசனத்தை நிராகரிப்பார்களா?)

 

பலவீனர்களே கீழே உள்ளவற்றை சற்று சிந்தித்துப்பாருங்கள்

 • சுமார் 100 மரங்களுக்கு நடுவில் உள்ள ஒரே ஒரு மரம் மட்டும் ருக்கூ-வில் இருப்பது போன்று காணப்படுகிறது அப்படியானல் மீதமுள்ள 99 மரங்கள் ருக்கூவில் நின்று தொழவில்லையா?

 

 • மலைகள் சூழ்ந்த இந்த படத்தில் ஒரே ஒரு மலை முகடு மட்டும் சஸ்தாவில் இருப்பது போன்று உள்ளதே அப்படியானல் அருகருகே உள்ள மலைகள் சஸ்தா செய்ய வில்லையா?

 

கீழ்கண்ட அல்குர்ஆனுடைய வசனத்தை இவ்வாறு உணருங்கள்

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:41)

 

முதலாவதாக இந்த அருள்மறை வசனம் உண்மையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது இதை நம்புவது நம் கடமையாகும் அதில் அணுவளவும் சந்தேகமில்லை. (அல்ஹம்துலில்லாஹ்)

 

முதலாவதாக

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? என்று மேற்கண்ட இந்த வசனத்தை அல்லாஹ் ஆரம்பிக்கின்றான் ஏனெனில் அல்லாஹ் யாருக்கு ஞானத்தை போதித்தானோ அவர்களுக்குத்தான் அதற்கான உண்மை மிக எளிதாக புரியும்.

 

உதாரணமாக இதயம் எவ்வாறு செயல்படும் என்ற பாடத்தை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் நடத்தினால் அவனால் ஓரளவுக்கு பதில் கூற இயலும் ஏனெனில் அவன் அதைப் பற்றிய அறிவை படிப்படியாக அறிந்துவைத்திருப்பான் ஆனால் இதே பாடத்தை 1ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு நடத்தி்னால் ஏதாவது பயன் உள்ளதா?

எனவே இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள மறைவான செய்திகளை அல்லாஹ் தன் இறுதித் தூதருக்கு கற்றுத்தருகிறான் என்பதை முதலில் உணருங்கள் பின்னர் அந்த தூதர் எவ்வாறு எதிர் கேள்வி கேட்காமல் இந்த செய்தியை உண்மை என்று நம்பினாரோ அவ்வாறு நீங்களும் நம்புங்கள்!

 

இரண்டாவதாக

வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும் என்று அல்லாஹ் கூறுகிறான் அதாவது வானங்கள் என்று பண்மையாக கூறப்பட்டுள்ளது அல்லாஹ்வின் வல்லமையை குறிக்கிறது அதை முதலில் நாம் உணர வேண்டும் இதோ ஆதாரம்

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்அன் 2:29)

 

இங்கு அல்லாஹ் கூறும் ஏழு வானங்கள் என்ற உண்மையும் மறைவான ஞானத்தில் உள்ளதாகும் ஏனெனில் இதன் எல்லைகள் யாராலும் அறியமுடியாது (அல்லாஹ் நாடியோரைத் தவிர) இந்த ஏழு வானங்களிலும் அதற்குரிய மலக்குமார்களை அல்லாஹ் நியமித்துள்ளான் எனவே அந்தந்த மலக்குமார்களுக்கு வானங்கள் பற்றிய ஞானத்தை அல்லாஹ் கற்றுத்தந்திருப்பான் எனவே அவர்கள் இந்த பிரம்மாண்டத்தை கண்டு வியந்து அல்லாஹ்வை துதிக்கிறார்கள் என்று நாம் நம்ப வேண்டும்.

 

ஆனால் மனிதர்களாகளாகிய நாம் இந்த ஏழு வானங்கள் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினால் வழிதவிறிவிடுவோம் ஏனெனில் நமது கண்களுக்கு எட்டக்கூடிய வானத்தின் எல்லையை கூட நாம் அறிய திராணியற்ற பலவீனர்களாக உள்ளோம்! (அல்லாஹு அக்பர்)

 

மூன்றாவதாக

வானங்களை பண்மையாக வர்ணிக்கும் உங்கள் இறைவன் நாம் வாழத்தகுந்த இடத்தைப் பற்றி வர்ணிக்கும் போது பூமிகள் என்று பன்மையாக கூறாமல் பூமி என்று ஒருமையில் கூறுகிறான் அதாவது மனிதன் வாழத்தகுந்த இடம் இந்த பூமி மட்டும்தான் என்று நாம் நம்பவேண்டும். எனவே இந்த பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன என்று நம்ப வேண்டும். ஆனால் பூமியில் உள்ள எல்லோரும் இறைவனை துதித்துவிடுவார்களா என்றால் இல்லை மாறாக அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டினானோ அவர்களும் யார் அல்லாஹ்வை உள்ளத்தால் அஞ்சுகிறார்களோ அவர்கள் என்று கருதுங்கள்!

 

நான்காவதாக

பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

இங்கு பறவைகளைப் பற்றி இறைவன் கூறுகிறான் அவைகளில் விண்ணில் படபடவென சிறகடித்து பறப்பவையும் உண்டு நிலத்தில் நடப்பையும் உண்டு எனவே மேற்கண்ட வசனத்தை படித்தவுடன் பறக்கும் பறவைகள் மட்டும்தான் பறந்து சென்று தஸ்பீஹ் செய்கின்றன என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக கீழ்கண்டவாறு சிந்தித்து உணர வேண்டும்.

 

வானத்தில் பறக்கும் போது பறவைகள் 100% கீழே விழுந்து மடிய வாய்ப்புகள் உள்ளது இருந்தாலும் இந்த பறக்கும் பறவைகள் வானில் எவ்வாறு பறக்க வேண்டும் என்று தங்களுடைய உள்ளுணர்வில் உதிக்கும் ஆற்றலை மையமாக வைத்து பறக்கும் முறைகளை தீர்மாணிக்கின்றன.

 

எனவே உள்ளத்தில் ஏற்படும் ஒருவகை உள்-உணர்வின் (சிந்தனையின்) திறமையினால் சிறகையடித்து வானில் பயமின்றி இவைகளால் பறக்க இயலுகிறது இப்படிப்பட்ட நிலையில் இவைகள் உள்ளுணர்வின் மூலம் பறக்கும் யுக்திகளை உணரும்போது அல்லாஹ்வின் வல்லமையையும் நிச்சயமாக உணர்ந்திருக்கும் என்று நாம் நம்ப வேண்டும். எனவே இந்த உள்ளுணர்வின் மூலமாக ஏன் இந்த பறவைகள் அல்லாஹ்வை பறந்தபடியே நன்றி செலுத்த தஸ்பீஹ் செய்யாது? என்று நினைக்க வேண்டும் அதை அப்படியே நம்ப வேண்டும்! (அல்லாஹு அக்பர்)

 

 

ஐந்தாவதாக

இறுதியாக இந்த வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்

ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்

 

வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகளும் தொழுகின்றன தஸ்பீஹ் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான் எனவே இதை மறுகேள்விக்கு இடமளிக்காமல் இதை இவ்வாறே நாம் நம்ப வேண்டும். மாறாக காக்கை எவ்வாறு தொழும், கழுகு எவ்வாறு தொழும், மலை எவ்வாறு தொழும், மலக்குகள் எவ்வாறு தொழுவார்கள் என்று கேள்வி எழுப்பக்கூடாது.

 

நம்மை நாமே முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த தொழுகையையே ஒழுங்காக பின்பற்றாமல் தங்கள் நாதாக்களும், குருமார்களும் கற்றுத்தந்த பித்அத் புதுமையான முறையில் ஷாபி, ஹனபி முறை தொழுகை, 20 ரக்ஆத் 40 ரக்ஆத் தொழுகை என 1000 புதுவகை தொழுகை முறைகளை வேதமும் நபிவழியும் இருக்கும் போதே மனிதன் பின்பற்றுகிறான். எனவே மேற்கண்ட கேள்வி எழுப்ப இவனுக்கு அடிப்படை அறிவே கிடையாது!

 

மேலும் மேற்கண்ட வசனத்தில் வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகளும் தொழும் முறைகளை எவ்வாறு உள்ளுணர்வின் அடிப்படையில் அறிந்துவைத்துள்ளனவோ அதுபோல அவைகளின் செயல்பாடுகளையும் அல்லாஹ்வும் நன்கறிந்துள்ளான் என்ற செய்தியை இந்த அருள்மறை வசனம் உறுதிப்படுத்துகி்ன்றது எனவே எதிர்கேள்விக்கு இடமே இல்லை மேலும் இப்படிப்பட்ட கேள்வியை கேட்க நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது!

 

அப்படியானல் குர்ஆனில் மனிதனுக்கு உள்ள அதிகாரம் என்ன இந்த வரைமுறையைக் கூட அல்லாஹ் அழகாக குர்ஆனில் வர்ணிக்கிறான் அவைகளை பற்றி சுருக்கமாக காண்மோம்!

 

மனிதன் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அருள்மறை வசனங்கள்

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் ஆகியவற்றின் தொழுகை, தஸ்பீஹ் பற்றிய மறைவான செய்திகளை தெளிவாக விளக்கிக் கூறிய இறைவன் அந்த வானங்கள், பூமி மற்றும் பறவைகளை பற்றி மனிதன் எவ்வாறு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறான் இதோ

 

வானத்தை பற்றி சிந்திக்க வலியுறுத்தும் குர்ஆன் வசனம்

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (அல்குர்ஆன் 41:11)

 

பூமியை பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன் (அல்குர்ஆன் 13:41)

 

வானம், பூமி மற்றும் கப்பல்கள் பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்

(நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான், தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன் 22:65)

அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? – அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 26:7)

 

 

நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 27:86)

 

பறவைகளை பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்

இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை – நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன். (அல்குர்ஆன் 67:19)

 

வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 16:79)

 

மறைவான ஞானத்தை யார் நம்புவார்கள்?

அல்லாஹ் ஞானம் மிக்கவன் என்ற சொல் 100க்கு 100 உண்மையாகிவிட்டது ஏனெனில் இன்றைக்கு நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று தங்களைத்தாங்களே மார்தட்டிக் கொள்ளும் ஒருசிலர் தக்காளியில், சுண்டைக்காயில், பப்பாளியில் அல்லாஹ்வின் பெயர் உள்ளது என்பதை ஆதாரத்துடன் கண்களால் கண்ட பின்புதான் ஆஹா! ஓஹோ என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் இது முறையான நம்பிக்கையல்ல! மாறாக முஸ்லிம்களில் குர்ஆனையும் நபிவழியையும் முறையாக பேணி அல்லாஹ்வுக்கு அஞ்சும்விதமாக அஞ்சி பயபக்தியுடன் வாழ்பவர்கள் தங்கள் கண்களுக்கும், தங்கள் அறிவுப் புலன்களுக்கும் எட்டாத மறைவான விஷயங்களை ஆதாரம் இல்லையென்றாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுகிறார்கள் என்பதற்காகவே நம்புகிறார்கள் என்ற உண்மைச் செய்தியை படைத்த ரப்புல் ஆலமீனே கூறுகிறான்! இந்த ஞானம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கேனும் வந்துவிடுமா? (சுப்ஹானல்லாஹ்) ஆதாரம் இதோ!

 

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (அல்குர்அன் 2:3)

 

 

குறிப்பு

சகோதர சகோதரிகளே இனிமேலாவது மரம் தொழுவுது, காக்கை தொழுவுது, மலை சஸ்தாவில் இருக்குது என்று படங்களை காட்டி புரளியை கிழப்பாதீர்கள் அப்படி நீங்கள் புரளியை கிழப்பினால் அவைகள் தினமும் எத்தனை ரக்ஆத் தொழுகின்றன, எத்தனை முறை தஸ்பீஹ் ஓதுகின்றன என்பதை விளக்குங்கள்! மனிதன் தொழுவதைப் போன்றுதான் மலையும், மரமும் தொழுமா? இந்த அறிவு கூட வேண்டாமா? அள்ள அள்ள குறையாத செல்வத்தை கண்களால் கண்ட பின்பு ஒரு சில அரேபியர்களுக்கு அறிவு மழுங்கி இப்படி வதந்தியை கிழப்புகிறார்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்களாகிய நாங்களுமா அஜமிகளாக மாறி அவர்களின் மூடத்தனத்தை பின்பற்றவேண்டும்! சிந்திப்பீர்! செயல்படுவீர்!

 

எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே

அல்ஹம்துலில்லாஹ்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ

 

தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

 

சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

 

நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா?

 

நீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச் செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும் நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள் ஆதாரம் இதோ

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )

 

சகோதரர்களே இன்று இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் துணையுடன் சிலர் பொய்களை பரப்புகிறார்கள் மற்றும் சிலரோ தாங்கள் காணும் பழங்கள், தாவரங்கள், செடி கொடிகள் ஏதாவது தோற்றம் தென்பட்டால் அதைக் கொண்டு பொய்களை பரப்புகிறார்கள் இதோ அந்த பொய்களை காண்போமா?

 

பழங்களி்ன வாயிலாக பொய்யை பரப்புதல்

பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள்! ஆதாரம் இதோ

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த பழங்களில்  அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா?

 

மிருகங்களின் வாயிலாக பொய்யை பரப்புதல்

ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று புரளியை கிழப்புகிறார்கள்! ஆதாரம் இதோ

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா? இவைகள் பேசிவிடுமா? பறக்குமா? சிரிக்குமா?

 

இப்படிப்பட்ட செய்திகள் உங்கள் மெயில் இன்பாக்ஸில் கண்டு அதை நீங்கள் பார்த்தவுடன் அதிசயித்து போய்விடுகிறீர்கள் உடனே அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள் இறுதியாக பொய்கள் வாலால் அல்ல மாறாக மெயிலால் பரப்பப்படுகின்றன. இந்த பொய்களுக்கு நீங்களும் உடந்தையாகிறீர்கள். இந்த செயல் யுத, கிருத்த மாற்றுமத கலாச்சாரத்தை சேர்ந்ததாகும்! ஆதாரம் வேண்டுமா? இதோ

சிந்திக்க சில வழிகள்

அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வி்ன் பெயர் தக்காளியில் வந்துவிட்டால் உடனே அதில் சிறப்பு என்கிறீர்களே அல்லாஹ்வின் பெயர் மட்டும்தான் தக்காளியில் தென்படுமா? இதோ இவைகளும் தென்படுகின்றன

கிராஃபிக்ஸ், எடிட்டிங் துணையுடன் பொய்களை பரப்புவது!

இன்றைய நவீன யுகத்தில் கிராஃபிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நவீன யுத்திகள் ஒருசில தவறான மனிதர்களின் கைகளில் தவழ்கிறது அதன் மூலம் மக்களை மூடர்களாக வழிதவற விடப்படுகிறார்கள்.

 

கிராஃபிக்ஸ் என்ற யுத்தியின் மூலமாக மக்கள் அதிகமாக வழிகெடுவது சினிமா துறையில்தான் இதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை அந்த அளவுக்கு பெயரை சம்பாதித்துவிட்டது!


ஆனால் இந்த கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் உதவியுடன் மதங்கள், மார்க்க விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் பரப்பும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் நேபாள நாட்டு வீடியோ படமான மசூதியின் பறக்கும் மேற்கூறை ஆகியனவாகும்.

இவைகளை கண்டதும் பரப்பிவிடுகிறீர்கள் அப்படியானல் பொய்களை பறப்புவதில் நீங்கள் வல்லவர்தானே! இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான் ஆதாரம் வேண்டுமா? இதோ

 

கப்ருவேதனை தலைப்பில் பரப்பப்படும் அகோர காட்சகள்

கப்ருகளில் வேதனை செய்யப்படுவது உண்மைதான் இதை மெய்ப்படுத்தும் விதமாக ஏராளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன. இதோ ஆதாரம்

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.”
அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 1314)

 

மனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் குர்ஆனில் அடிக்கடி கூறுகிறான் எனவே இப்படிப்பட்ட பலவீனமான மனிதனுக்கு முன்னால் கப்ரு வேதனைகளை அல்லாஹ் காட்டுவானா? இதை உணர வேண்டாமா?

 

இதோ முஸ்லிம்களில் பலவீனர்கள் பரப்பும் கப்ரு வேதனை பற்றிய புகைப்படங்கள்

இந்த புகைப்படம் கப்ரு வேதனைக்கு காட்டப்படும் போது கூறும் புழுகு மூட்டைகள் இதுதான்.

 

 • இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
 • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

 • சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது. உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.

 

மேற்கண்ட இந்த கருத்துக்கள் புழுகு மூட்டைகளாக தென்படுகின்றன இதுபற்றி இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்!

 

தமிழகத்தில் தினமும் செய்திகளில் இடம்பெறும் மிக முக்கியமான தகவல்களில் ஒன்று கீழ்கண்ட செய்திதான்!

 

கள்ளக்காதல் தொடர்பால் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். காவல்துறையினரின் புலன்விசாரனையில் உண்மை வெளிவந்தது பிணத்தை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது

 

இப்படிப்பட்ட பிணங்களை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கும் போதுகூட அந்த பிணங்கள் மேலே கப்ரு வேதனைக்கு காட்டப்படும் அளவுக்கு சின்னாபின்னமாக இருக்காது அப்படியானல் கள்ளக்காதலால் கொலையுண்டவர்களுக்க அதாபு இல்லையா? என்ற கேள்வி எழவில்லையா?

 

பிர்அவ்னுடைய உடல் படிப்பினையில்லையா?

மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான் அவனுடைய உடல் இன்றளவும் அழியாமல் உள்ளது இதை அருள்மறை குர்ஆன் உறுதிபடுத்துகிறது! எனவே பிர்அவ்னுடைய உடல் இன்றளவும் அழுகாமல் உள்ளதால் அவனுக்கு கப்ரு வேதனை இருக்காது என்று கூறுவீர்களா?

 

கப்ரு வேதனைக்கான ஞானம் மனிதனுக்கு உள்ளதா?

கப்ருவேதனை எங்கு நடைபெறும் என்பதற்கான ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது நம்மிடம் இல்லை ஏனெனில் கடலில் தள்ளப்பட்ட பிணங்கள், நெருப்பில் எறிக்கப்படும் பிணங்கள் வேதனைகளை எப்படியாவது எங்கேயாவது அனுபவித்துக்கொண்டு இருக்கலாம் அதற்கான ஞானம் மனிதனுக்கு வந்துவிடுமா?

 

அல்லாஹ்வின் மீது பலவீனமான நம்பிக்கை வைக்காதீர்

தக்காளியில், ஆட்டு ரோமத்தில், தர்புசனியில், சுட்ட சப்பாத்தியில் அல்லாஹ்வின் பெயர் போன்ற அரபு எழுத்துக்களை கண்டவுடன் அல்லாஹ்வின் ஆற்றலை பார்த்தீரா என்று ஆஹா ஓஹோ என்று பேசுகிறீர்கள் இது பலவீனமான நம்பிக்கை மட்டுமல்லாமல் அல்லாஹ்வை கிண்டலடிக்கும் செயலுமாகும்!

 

சிந்தித்துப்பாருங்கள்

மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் கடலை இரண்டாக பிளந்து வாழவழிவகை செய்தவன் போயும் போயும் தக்காளியில் தன் பெயரை பதிப்பானா? உங்கள் பெயர் தக்காளியில் உள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு கோபம் வராதா?

 

அல்லாஹ்வின் பெயரை ஆடு மாடுகளின் ரோமங்களில் கண்டவுடன் உடல் சிலிர்க்கிறதே அதே மிருகங்கள் கண்ட இடங்களில் படுக்குமே இதை உங்களால் உணர முடிய வில்லையா?

 

எது அதிசயம்

அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா? இதுவல்ல அதிசயம் இதோ கீழே உள்ளதுதான் அதிசயம்!

 

இலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே இது அதிசயம்!

 

தாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே இது அதிசயம்!

 

துபாயில் இருந்துக்கொண்டு மனைவியிடம் செல்போனில் பேசுகிறீர்களே இது அதிசயம்!

 

வானத்தில் பயணிக்கிறீர்களே இது அதிசயம்!

 

எழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே இது அதிசயம்!

 

அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்! எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்! பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!

தக்காளி, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல! குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை  முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்!

ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

 

என் இறைவன் அழகானவன்! தூய்மையானவன்! ஆற்றல்மிக்கவன்!

அல்ஹம்துலில்லாஹ்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

 

முன்னுரை

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்!

 

ஆதம் நபியின் நற்குணம்

முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்

 

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

 

அல்லாஹ்வையே ஆசானாக பெற்ற மாபெரும் அருள் இந்த ஆதி நபிக்கு இருந்த போதிலும் அல்லாஹ் வகுத்த சட்டத்தை இவர் ஒருமுறை மீறினார். பின்னர் தாம் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம் தான் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கொண்டு அவனிடமே பாவ மன்னிப்பையும் பெற்றார். இதோ இதற்கான ஆதாரம்


பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:121)

 

இந்த சம்பவம் மனிதர்களான நமக்கு நேர்வழிபடுத்த கியாமநாள் வரைக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. இறுதியாக ஆதம் நபி தன்னுடைய ரஹ்மானிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரியதை பெருந்தண்மைமிக்க வல்ல ரஹ்மான் மன்னித்தான் மேலும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்னிப்பு கோருதலை மனிதர்களுக்கான தலையாய கடமைகளில் ஒன்றாக்கினான்! சுப்ஹானல்லாஹ்! இதோ ஆதாரம்

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (அல்குர்ஆன் 2:160)

 

இப்லிஸ்-ன் அகம்பாவமும் மிர்ஸா குலாம் அஹ்மதுவும்

அகம்பாவம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் இது இப்லிஸ் என்பவனது குணத்தின் பிரதிபலிப்பாகும். இதோ ஆதாரம்

நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

 

தாம் தவறில் ஈடுபடுகிறோம், இறைவன் விதித்த சட்டத்தை மீறுகிறோம் என்பதை நன்றாக உணர்ந்தும் தான் செய்தது முற்றிலும் நியாயம் என்று மரணிக்கும்வரையிலோ அல்லது அந்த நிலையிலேயே மரணித்துவிட்டு தன் எடுபடாத வாதத்தை தம்மை பின்பற்றுகிறவர்களி்ன் மீது முடக்கிட்டு கியாமநாள் வரையிலும் அவர்களையும் வழிதவறச் செய்துவிட்டு சென்ற ஷைத்தானியத் குணம் கொண்ட மனிதர்களும் நம்மில் உள்ளனர்.

 

இப்படிப்பட்ட ஆணவம், அகம்வாபத்தால் வழிகெட்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் நாம் இங்கு காணப் போகிறோம் அவன்தான் மிர்ஜா குலாம் அஹ்மது என்ற காதியாணிகளின் தலைவன். இவனைப் போன்று நாமும் நம் சந்தததிகளும் தரம்புரண்டு காபிர்களாக மாறிவிடாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பாதுகாப்பு தேடுவோமாக!

 

யார் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது?

 

பிரிட்டீஸ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காதியான் என்ற கிராமத்தில் 1835ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் பிறந்தவர்தான் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது என்ற மனிதர். இவருடைய தந்தை பெயர் மிர்ஸா குலாம் முர்தஜா என்பதாகும் இவர் ஒரு வைத்தியராவார்.

 

ஆங்கில நாட்காட்டியை கி.மு. மற்றும் கி. பி என்று கூறுவது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். தந்தையின் அரவணைப்பில் மிர்ஜா குலாம் அஹ்மது மற்றொன்று தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது

இவரது வாழ்க்கையை விவரிக்க இரண்டாக பிரித்து கூறுவதற்கும் ஒரு காரணமுண்டு ஏனெனில் மிர்ஸா குலாம் அஹ்மது தன் தந்தையின் அரவணைப்பில் ஒழுங்கான மனிதராக இருந்தார் ஆனால் தந்தையின் மரணித்திற்கு பின்னர் தரம்புரண்ட மனிதனாக காஃபிரா மாறினான். எனவேதான் தரம்புரள்வதற்கு முன் இருந்த மிர்ஸா குலாம் அஹ்மதை அவர் என்றும் காஃபிரான பின்னர் அவன் என்றும் இங்கு குறிப்பிடுகிறேன் இந்த மனிதனது வாழ்க்கையை பற்றி விரிவாக காணுவோம்.

 

தந்தையின் அரவணைப்பில் மிர்ஜா குலாம் அஹ்மது

கல்வி கற்கும் குழந்தைப் பருவத்தில் இவர் பாரசீக மொழியையும் அரபு மொழியையும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டார். (இதை நினைவில் நிறுத்துங்கள்). கூடவே மருத்துவப் பணியாற்றிய தன் தந்தையாருக்கு ஒத்தாசையாகவும் இருந்தார். பின்னர் இளைமைப் பருவத்தில் தன் தந்தையின் அறிவுரையின் படி 1864 முதல் 1868 வரை சியால்கோட் நகரில் கிளர்க் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் கிருத்தவர்களோடு மதவிவாதங்களில் ஈடுபடலானார். பின்னர் தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 1868ல் மீண்டும் காதியாண் என்ற நகரில் உள்ள தனது தந்தையாரின் எஸ்டேட் விவகாரங்களை கவனித்து வந்தார்.

 

தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது

மிர்ஸா குலாம் அஹ்மது தனது 40வது வயதை எட்டிய போது 1875ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். இதன் பின்னர் 1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டார்.

 

மிர்ஸா குலாம் அஹ்மது வழிகெடுவதற்கு ஆரம்பம் இதுதான்

1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து விவாதங்களில் மிர்ஜா குலாம் அஹ்மது ஈடுபட்ட போது ஆரிய சமாஜத்தார் ஒரு சவாலை முன்வைத்தனர் இதோ அந்த சவால்

 

அன்றைய ஆரிய சமாஜத்தின் சவால் இதுதான்

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை மிர்ஜா குலாம் அஹ்மது நிறுபிக்க வேண்டும் அவ்வாறு நிறுபித்தால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நம்புகிறோம் (என்றனர் ஆரிய சமாஜத்தார்)

 

மிக மிக எளிமையான இந்த சவாலிற்கான பதில் அந்த அருள்மறை குர்ஆனில் உள்ளது இதை படிக்கவும் உணரவும் தவறிய மிர்ஸா குலாம் அஹ்மது ஆரிய சமாஜத்தாரின் கேள்விக்கு பதில் கூற திணறினான், வாயடைத்து போனான்! பின்னர் என்ன செய்வது என்றே புரியாமல் குழம்பினான் இறுதியாக வழிகேட்டில் மூழ்க ஆரம்பித்தான் இதோ இவன் வழிகெட்ட விதம்!

 

ஆரிய சமாஜத்தை சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு சிறப்பு பூஜைகளையும் தவங்களையும் மேற்கொண்டு தங்கள் காரியங்களை சாதிப்பார்களோ அது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்ற சாதாரண மனிதர் சிறப்பு தவத்தின் மூலம் ஞானத்தை பெறுவது ஒன்றே சிறந்த வழி என்று எண்ணினான் அதற்காக காதியான் என்ற நகரத்தை விட்டு ஹோஸியார்பூர் என்ற நகரத்திற்கு சென்றான்.

 

ஹோஸியார்பூரில் குலாம் அரங்கேற்றிய கூத்துக்கள்

மிர்ஸா குலாம் அஹ்மது ஹோஸியார்பூருக்கு விஜயம் செய்யும் போது அவருடன் 3 நபர்களும் இருந்தனர். அந்த ஊரில் தன்னுடன் பயணித்த நபர்களில் ஒருவரது சிறிய இரண்டு அடுக்கு கொண்ட மாடி வீட்டில் தஞ்சம் புகுந்தான்.

 

பின்னர் மாடி வீட்டின் ஒரு அறையில் தனிமையில் அமர்ந்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்தான் ஆனால் வேலா வேலைக்கு உணவை மட்டும் தன்னுடைய சகாக்களின் உதவியால் பெற்றுக்கொண்டான். இவன் அந்த தனி அறையில் நிகழ்த்திய தவத்தின் பெயர் சில்லாஹ்-நஸ்ஹினி என்பதாகும். இது வழிகெட்ட சூஃபிக்களிடம் காணப்படும் கடின தவமாகும்.

 

சில்லாஹ்-நஸ்ஹினி (Chilla-nashini) என்றால் என்ன?

சில்லாஹ் நஸ்ஹினி என்ற வார்த்தை பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும் CHILLA என்பது CHEHEL அதாவது 40 (நாற்பது) நஸ்ஹினி என்பது தனிமையில் தியானித்தல். அதாவது பாரசீகர்கள் பின்பற்றும் 40 நாள் தியானமாகும். இந்த 40 நாள் இரவு பகல் தவத்தின் போது தவத்தை மேற்கொள்பவர் பேசுதல், உணவு உட்கொள்ளுதல், தூக்கம், தண்ணீர் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பார்கள்.

 

பாரசீகர்கள்தான் இந்த தவத்தை கண்டுபிடித்தனர் ஆனால் அவர்களே இந்த தியான முறையை மூடத்தனம் என்று வர்ணிக்கின்றனர் ஏனெனில் இந்த தவத்தின் மூலம் வெற்றி கிடையாது தோல்விதான் ஏனெனில் 40 நாட்கள் கடும் தவத்தின் மூலமாக தியானம் மேற்கொள்பவர்கள் உடநலம் கெட்டு புத்திசுவாதீனம் ஏற்பட்டு மரணித்துவிடுவார்கள். ஆதாரம் இதோ!

 

சில்லாஹ் நஸ்ஹினி தவத்தின் போது மரணம் நிச்சயம்!

14ம் நூற்றாண்டில் இந்த தவம் சூஃபிக்களின் புகழ்பெற்ற பாடகர் ஹபேஃஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவருடைய கொள்கையை பின்பற்றி 1884ம் ஆண்டு முதல் முறையாக ஷரியர் முன்டேகர் இராணி என்பவர் (அதாவது மெஹர் பாபா என்பவரின் தந்தை) இந்த சில்லாஹ் நஸ்ஹினி என்ற கடுமையான தவத்தில் ஈடுபட்டார் ஆனால் 40ம் நாளை நெறுங்குவதற்கு முன் 30வது தவத்திலேயே மரணித்துவிட்டார். ஏனெனில் எந்த ஆகாரமும், நீரும் எடுத்துக்கொள்ளாததே!

 

தியானத்திற்காக ஜும்மா தொழுகையை விட்ட மிர்ஸா குலாம்

சில்லாஹ் நஸ்ஹினி என்ற 40 நாள் தியானத்தின் போது தவமிருப்பவர் கடுமையை கடைபிடிப்பதால் யாரிடமும் பேசாமல், சிறிதளவும் உணவு உண்ணாமல், துளியளவும் தண்ணீர் பருகாமல், சிறுதூக்கம் கூட போடாமல் கடுமையாக தவமிருப்பார்கள் மேலும் இத்தவத்தை வெட்ட வெளியில் மேற்கொள்வார்கள் அதுசமயம் எப்படிப்பட்ட மிருகம் தாக்கினாலும் தாங்கிக்கொள்ளவார்கள் ஆனால் இந்த மிர்ஸா குலாம் என்பவனோ தனிஅறையில் மிருகங்கள் அண்டாத வகையில் தம்மை பாதுகாத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி ஒழிந்து மறைந்து உணவு உட்கொண்டான், தூங்கினான்.

 

இந்த மிர்ஸா குலாம் அஹ்மது தாம் மேற்கொண்ட தவத்தின் போது ஜும்மா தொழுகையை கூட தொழவில்லை அதாவது 40 நாள் தனிமை தவத்தில் வீட்டை விட்டே வெளியேறாமல் இருந்தான் எனவே இவனுக்கு ஜமாஅத் தொழுகை உண்டா?

 

தவம் மூடித்து மிர்ஸா குலாம் செய்த பிரகடனம்

ஆரிய சமாஜத்தாரின் சவாலுக்கு பதில் கூற தவத்தை மேற் கொண்ட மிர்ஸா குலாம் தவத்தில் தில்லுமுல்லுகளை மேற்கொண்டு உயிர்பிழைத்தான் 40ம் நாள் தவத்திற்கு பின்னர் தாம் இறைவனிடம் அருள்வாக்கு பெற்றதாக இட்டுக்கட்டி பொய்யை பரப்பினான்.

 

பின்னர் 1888ம் ஆண்டு தமக்கு அல்லாஹ்விடம் வஹி வந்ததாகும்  மக்கள் அனைவரும் மிர்ஸா குலாம் அஹ்மதாகிய தன்னிடம் பைஅத் பெற வேண்டும் என்று கட்டளையி்ட்டதாகவும் அல்லாஹ்வின் மீது வேண்டுமென்றே புரளியை கிளப்பினான்!

1889ம் ஆண்டு இந்த புரளியை தூண்டுப் பிரச்சுரங்கள் மூலமாகவும் ஊர் ஊராக பரப்பினான். பின்னர் அவசர அவசரமாக தன்னிடம் பைஅத் பெற்ற 40 மூரிதுகளின் உதவியால் 1889ம் ஆண்டு மார்ச் 23ம் நாளன்று அஹ்மதியா அமைப்பை உருவாக்கினான்.

 

மிர்ஸா குலாம் தன்னை இறுதி நபி என்று வாதிட்டான்

தவம் முடித்த மிர்ஸா குலாம் தன்னை மஸீஹ் என்றும் இமாம் மஹதி என்றும் பிரகடனப்படுத்தி பொய்களை பரப்பினான் அந்த பொய்களை வஹி (இறைவனிடமிருந்து வந்த செய்திகள்) என்று கூறினான். இந்த பொய்கள் மூலம் கிருத்தவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பிரச்சினையை காட்டுத்தீயாக பரப்பிவிட்டான்.

 

ஈஸா நபி மீது இட்டுக்கட்டிய செயல்

கிருத்தவர்கள் ஏசு எனும் ஈஸா மஸீஹ் சிலுவையில் அறையப்பட்டார் என்று நம்புகிறார்கள் ஆனால் இஸ்லாம் இதை மறுக்கிறது மாறாக சிலுவையில் அறையப்படும் முன் ஈஸா நபி மரணிக்கவில்லை விண்ணுலகிற்கு உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் கியாமநாளுக்கு முன்னர் இறங்கி தஜ்ஜாலை கொன்று ஆட்சி நடத்துவார் பின்னர்தான் மரணிப்பார் என்பதாகும். ஆனால் இந்த இரண்டு கொள்கைளைக்கும் முரணாக மூன்றாவதாக ஒரு கொள்கையை இந்த குலாம் அஹ்மது கிளப்பினான் இதுதான்

 

ஈசா (ஏசு) நபி தம் பிரச்சாரத்திற்காக இந்தியா வந்தபோது இயற்கையாகவே மரணடைந்தார் என்றும் அவரை காஷ்மீரில் நல்லடக்கம் செய்யப்பட்டவிட்டது என்றும் கப்ருகூட உள்ளது என்றும் மாபெரும் பொய்யை இட்டுக்கட்டினான்.

 

மிர்ஸா தம்மை இமாம் மஹதி என்று பிரகடனப்படுத்துதல்

இந்த பொய்யன் மிர்ஸா குலாம் தம்மைத்தாமே இமாம் மஹதி என்று பிரகடனப்படுத்திக்கொண்டான் அதற்கு இவன் அவிழ்த்து விட்ட மாபெரும் சூழ்ச்சியுடன் கூடிய பொய் இதுதான்

 

நபி மூஸா அவர்களுக்கு மறித்து 1400 ஆண்டுகளுக்கு பின்னர் ஈஸா நபி வருவார் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டது போன்று போன்றுதான் நபி முஹம்மதுவுக்கு பின்னர் 14 நூற்றாண்டுகள் கழித்து இமாம் மஹதி வருவார் என்று முன்னறிவிப்பு உள்ளது அந்த முன்னறிவிப்பின் படி மிர்ஸா குலாம் அஹ்மதாகிய தாம்தான் இமாம் மஹதி என்றான். இந்த பொய்களை வஹி என்று அறிவிப்பு செய்து அருள்மறை குர்ஆனுக்கு எதிராக தஸ்கிரதுஸ் ஸஹததன் என்ற நூலை உருவாக்கி அதில் எழுதிக்கொண்டான்.

 

தம்மை இறுதி நபி என்று பிரகடனப்படுத்துதல்

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் உள்ள இமாம் மஹதியின் வருகைக் குறிப்புகளை திருடி தன்னுடைய தஸ்கிரதுஸ் ஸஹததன் என்ற நூலில் எழுதிக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை நபிமார்களுடன் ஒப்பிட்டு காட்டி தாம்தான் இஸ்லாத்தின் இறுதி நபி என்று பிரகடனப்படுத்தினான்.

 

நபிமார்களின் முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் பிரகடனப் படுத்தியதற்கு மாற்றமாக இந்த மிர்ஸா குலாம் சூழ்ச்சி செய்தான் பின்னர் அல்லாஹ்வி்ன் அதிகாரத்தை கையில் எடுத்தான் முஹம்மது இறுதி நபியல்ல மிர்ஸா குலாம் ஆகிய தாம் மட்டும்தான் இறுதி நபி என்றும் தாம் இஸ்லாத்தை கட்டிகாக்க வந்தவன் என்றும் அபாண்டமான பொய்யை இட்டுக்கட்டினான்!

மிர்ஸா குலாமுக்கு விடப்பட்ட ஃபத்வா

தன்னை இமாம் மஹதி என்றும் இறுதி நபி என்றும் பிரகடனப்படுத்திய மிர்ஸா குலாம் முஸ்லிம்களை நோக்கி இனிமேல் யாரும் ஆயுதங்களைக் கொண்டு ஜிஹாது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினான் இதை அறிந்ததும் அக்காலத்து மார்க்க மேதைகள் மிகுந்த மனவேதனையடைந்தனர் அவர்களிடம் மிகப் பெரும் சலசலப்பு காணப்பட்டது மேலும் இதே காலகட்டத்தில் சூடான் நாட்டை மற்றொருவன் தன்னை இமாம் மஹதி என்ற பிரகடனப்படுத்தியதும் மார்க்க மேதைகளின் குழப்பத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

 

பின்னர் மார்க்க மேதைகள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதில் ஒரு முடிவு பிறந்தது அதாவது ஆங்கிலேயர்கள்தான் ஜிஹாதை தடைசெய்தார்கள் என்றும் இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் அதை ஆதரித்து பேசும்விதமாக ஜிஹாதை தடை செய்வதால் இவன் ஆங்கிலேயே கைக்கூலிதான் என்று பிரகடனப்படுத்தினர். இவன் ஆங்கிலேய நாய்களின் கைக்கூலி என்பதற்கான ஆதாரம் அடங்கிய  வாக்குமூலம்

Behold! I have come to you people with a directive that henceforth jihad with the sword has come to an end but jihad for the purification of your souls still remains. This injunction is not from me but rather it is the will of God. British Government and Jihad pg.15

இறுதியாக காதியாணிகளின் தலைவனான பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது என்ற மனிதன் சாதாரண மனிதர்தான் என்றும் இந்த மனிதன் தன்னை இறுதி நபி என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு மீறிய செயல் என்றும் இவன் முழுக்க முழுக்க காஃபிர்தான் என்றும் மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுத்தனர். இந்த ஃபத்வாவை இந்தியாவில் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்வேறு இந்து, புத்த, கிருத்த மத மற்றும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களும் ஒருமனதாக ஏற்றனர். (சுப்ஹானல்லாஹ்)

 

பொய்யன் மிர்ஸா குலாமுக்கு எதிர்ப்பு வலுத்தது

அன்றைய காலகட்டத்தில் வாழந்த மார்க்க அறிஞரான அஹ்மத் ரிதா கான் என்பவர் பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது பற்றிய தகவல்களை சேகரித்து ஹேஜாஸ் எனும் நகருக்கு பயணம் மேற்கொண்டார் அங்கு மக்கா மற்றும் மதீனத்து மார்க்க மாமேதகளின் கருத்துக்கணிப்பை கேட்டறி்ந்தார். அங்குள்ள மார்க்க மாமேதைகள் அனைவரும் இந்த பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மதுவை கைது செய்து தூக்கிலடவேண்டும் என்று முடிவு கூறினர்.

 

மிர்ஸா குலாம் அஹ்மது அரங்கேற்றிய பெருநாள் திடல் நாடகம்

1900ம் ஆண்டு தியாகத்திருநாள் (பக்ரீத்) அன்று பெருநாள் திடலில் இந்த பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது உரையாற்றினான். இதுதான் காதியாணிகளின் முக்கிய பெருநாள் உரை நிகழ்த்தப்பட்ட தினமாகும். இந்த பெருநாள் உரையை இரண்டு காதியாணிகளின் குறிப்பெடுத்துவந்தனர் இறுதியாக இந்த பெருநாள் உரைக்கு குத்பா இல்மியாஹ் என்று பெயர் சூட்டினர்.

 

இந்த பெருநாள் உரையின் போது அங்கு குழுமியிருந்த காதியாணி அமைப்பின் பிற தலைவர்கள் மாபெரும் பொய்யை இட்டுக்கட்ட ஆரம்பித்தனர் அதாவது பெருநாள் உரையாற்றும் போது மிர்ஸா குலாம் அஹ்மதுவின் கை இதுவரை பார்த்திராத கையாக தென்பட்டது என்றும் கனீர் கனீர் என்ற குரள் புதுவிதமாக இருந்தது என்றும் இதுவரை பார்த்திராத கை, கேட்டிராத குரள் என்றும் பொய்யை ஜல்ரா தோரணையில் கூறினர் இட்டுக்கட்ட இதை கேள்விப்பட்ட பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மதுவோ பொய்யை மெருகூட்டும் விதமாக தன்னுடைய ஹகீகத்துல் வஹி என்ற நூலில் எழுதிய கட்டுக்கதை இதோ.

 

எனது பெருநாள் உரையானது மாபெரும் அதிசயமானது அந்த உரையை எனது நாவில் பேசியது நானா? அல்லது வானவர்களின் தூதரான மலக்குமார்களா? என்று எனக்கே ஆச்சரியமாக உள்ளது! நான் எனது நாவை அசைத்தேன் அந்த நாவினில் வந்தது எல்லாம் இறைவனிடமிருந்து வந்த வஹியாகும்பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது

 

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம்

தந்தையின் அரவணைப்பில் மிர்ஸா குலாம் அஹ்மது அரபு மொழியை கற்றனான் என்பதை நினைவில் நிறுத்துங்கள் என்று மேலே சுட்டிக்காட்டியிருந்தேன். இதோ அதற்கான விளக்கம் கீழே உள்ளது.

 

தமக்கு அரபு மொழி தமக்கு தெரியாது என்றும் அல்லாஹ்தான் தமக்கு அரபு மொழியில் புத்தகம் எழுத உதவினான் என்றும் மிர்ஸா குலாம் அஹ்மது உளறினான் (ஆதாரம் Mirza Ghulam Ahmad, Seerat-ul-Mahdi, Narration No. 104)


மேற்கண்ட வாக்குமூலத்தின் மூலம் இவன் அல்லாஹ்விடம் கல்வி கற்றதாக (தம்மை ஆதம்நபிக்கு ஈடாக) வாதிட்டு அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைக்கிறான்!

 

மேற்கண்ட வாதம் பொய் என்பதற்கு இவனுடைய மற்றொரு நூலே ஆதாரம் இதோ கீழே உள்ளது

 

தம்முடைய 10ம் வயதில் ஃபஜல் அஹ்மது என்ற அரபு மொழி ஆசிரியரின் உதவியால் தாம் அரபு மொழி கற்றதாக இந்த பொய்யனின் வாக்குமூலம் இடம் பெற்றுள்ளது (ஆதாரம்– Mirza Ghulam Ahmad, Kitab ul Bariyah, Roohani Khazain Volume 13, pages 180–181)

 

பள்ளிப் பருவத்தில் தாம் அரபு இலக்கணம் படித்ததாக ஒப்புக்கொண்டுள்ளான் (ஆதாரம் Mirza Ghulam Ahmad, Kitab ul Bariyah, Roohani Khazain Volume 13, pages 180–181)

 

மிர்ஸா குலாம் அஹ்மதுவின் மரணம்

1907 மற்றும் 1908ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இவன் பாகிஸ்தான் நாட்டு லாகூர் நகருக்கு குடும்பத்துடன் பயணமானான். அங்கு தன் பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினான். அதுசமயம் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு (பேதி) ஏற்பட்டு 1908ம் ஆண்டு மேமாதம் 26ம்நாள் மரணமடைந்தான்.

 

அஹ்மதியாக்களை காஃபிர்களாக உலக நாடுகள் பிரகடனம்

பாகிஸ்தான் நாட்டின் அறிவிப்பு

1974ம் ஆண்டு பாகிஸ்தான் நாடு தனது பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றி மிர்ஸா குலாம் அஹ்மது என்பவனையும் அவனை பின்பற்றும் அஹ்மதியாக்களை காஃபிர்கள் என்று பிரகடனப்படுத்தினார்கள்.

 

1984ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பீனல் கோடு செக்சன் காஃபிர்களாக மாறிய அஹ்மதியாக்கள் எனும் காதியாணிகள் இனி தங்கள் பிரச்சாரங்களை அரங்கேற்றக்கூடாது என்றும் அவ்வாறு மேற்கொள்பவர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலடப் படுவார்கள் என்றும் சட்டமியற்றியது.

 

2007ம் ஆண்டு பெலாரஸ் நாடு காஃபிர்களான காதியாணிகள் தங்கள் கீழ்த்தரமான பொய்களை அவிழ்த்துவிடுவதை தடை செய்தது.

 

காஃபிர்களின் நாயகன் மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வழிமுறையை படித்திருப்பீர்கள் இதோ கீழ்கண்ட இந்த அருள்மறை வசனம் இதை மெய்ப்படுத்துகிறதா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

 

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

 

மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் ஒரு பொய்யன்

இவனை பின்பற்றும் காதியாணிகள் பொய்யர்கள்

 

மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் ஒரு காஃபிர்

இவனை பின்பற்றும் காதியாணிகள் காஃபிர்களே

 

காஃபிர்களுக்கு உதாரணம்

அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்அன் 24:39)

 

 

காஃபிர்களின் வைராக்கியமும் முட்டாள்தனமும்

(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை – முட்டாள்தனமான வைராக்கியத்தை – தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் – அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:26)

நன்றி http://en.wikipedia.org/wiki/Mirza_Ghulam_Ahmad

 

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

நபிகள் நாயகம்தான் இறுதி நபியா? காதியாணிகளின் கேள்வி

 

கேள்வி எழுப்பியது காதியாணிகள்

எழுப்பியவர் Sabar ( jafarla@yahoo.co.in )

 

கேள்வி

ஈசா (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களே இது கிறிஸ்தவ நடைமுறை இல்லையா?

 

பதில்

காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே நீங்கள் கேட்ட கேள்வியில் இரண்டு விபரீதமான கேள்விகள் அடங்கி யுள்ளன. உங்கள் கருத்துப்படி இதோ அந்த 2 விபரீதங்கள்

1)      ஈஸா நபி வானில் உயர்த்தப்படவி்ல்லை!

2)      ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்துவிட்டார்!

 

விபரீதம் 1 (ஈஸா நபி வானில் உயர்த்தப் படவி்ல்லை) என்பதற்கான பதில்

ஈஸா நபி வானில் உயர்த்தப்பட்டார் என்று அருள்மறை குர்ஆனில் வல்லமைமிக்கவனும், ஞானமிக்க இறைவனாகிய எங்கள் இறைவன் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்!

 

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:158)

 

ஈஸா நபி வானில் உயர்த்தப்படவில்லை என்று நீங்கள் வாதிடுவதை ஏன் இங்கு விபரீதம் என்கிறோம் என்றால் இந்த அறிவிப்பை வெளியிடுபவன் அல்லாஹ்தான்! அதற்கு மேற்கண்ட 4-158 வசனம் சாட்சியாக உள்ளது. இதை காதியாணிகளாகிய  நீங்கள் மறுக்கிறீர்கள் இப்படி மறுப்பதனால் அந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் தன்மைகளாகிய வல்லமை மிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்பதனை தாங்கள் நிராகரிக்கிறீர்கள். இதுதான் அந்த விபரீதம்.

 

அல்லாஹ் தன்னை வல்லமை மிக்கவன் என்றும் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியாணியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கு அந்த வல்லமை இல்லை என்று கூறவருகிறீர்களா?

 

அல்லாஹ் தன்னை ஞானமிக்கவன் என்றும் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியாணியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கு அந்த ஞானம் இல்லை என்று கூறவருகிறீர்களா?

 

அல்லாஹ்வுக்கு வல்லமையும் உண்டு, ஞானமும் உண்டு எனவேதான் தனது இரண்டு வல்லமைகளை சுட்டிக்காட்டி மனிதனால் சாதிக்க முடியாத இந்த காரியத்தை தான் சாதித்தாக கூறுகிறான். (அல்லாஹு அக்பர்)

 

 

விபரீதம் 2 (ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்து விட்டார்) என்பதற்கான பதில்

 

ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லை மேலும் இயற்கையாக இன்னும் மரணிக் கவுமில்லை என்று அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்! இதோ அந்த வசனம்

 

 

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)

 

காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே உங்கள் கருத்துப்படி ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்பட்டார் என்றால் அவரை கொன்றது யார்? அல்லது அவர் இயற்கையாக மரண மடைந்தார் என்றால் அதற்கான குர்ஆன் ஆதாரம் எங்குள்ளது? காட்டவும்! இறுதியாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று நீங்கள் வெறும் யூகத்தைப் பின்பற்றுகிறீர்கள் உங்களுக்கு இதுபற்றிய எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக நீங்கள் மூடர்கள்தான் அதற்கான ஆதாரம் இதோ

 

 • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறினால் யுதர்களை பின்பற்றிவிடுவீர்கள்,

 

 • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறினால் கிருத்தவர்களை பின்பற்றிவிடுவீர்கள்

 

 • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி இயற்கையாகவே மரணித்து விட்டார் என்று கூறினால் அல்லாஹ்வை விட ஞானமிக்க வராகிவிடுவீர்கள்.

மேற்கண்ட இந்த மூன்றில் எந்த தத்துவத்தை பின்பற்ற போகிறீர்கள். அறிந்துக்கொள்க மேற்கண்ட 3 தத்துவத்தில் எந்த ஒன்றை பின்பற்றினாலும் அல்லாஹ்வின் லானத் (சாபத்திற்கு) ஆளாகிவிடுவீர்கள் என்று எச்சரிக்கிறோம்!

 

கேள்வி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மூமின் ஒரு முறைதான் படு குழியில் விழுவான் என்று கூறினார்கள். ஏற்கனவே இரண்டு பெரிய சமுதாயங்கள் இறைத்தூதர்களின் இரண்டாவது வருகையை எதிபார்த்து படுகுழியில் விழுந்து கிடக்கிறார்கள் அதைப் பார்த்திருந்தும் அதே தவறை இந்த மூட முல்லாக்கள் செய்கிறார்கள் என்றால் இவர்களை நாம் எப்படி மூமின் என்று சொல்ல முடியும்.

 

பதில்

ஒருவன் மூமின் என்பதற்கு அடிப்படை அடையாளம் அவன் படைத்த ரப்புல் ஆலமீனையும், இறுதித்தூதரான நபிகள் நாயகத்தையும் நம்புவதாகும். இந்த அடையாளம் நம்மிடம் உள்ளது ஏனெனில் அல்லாஹ் ஈஸா நபியை உயர்த்திக் கொண்டதாக அருள்மறையில் கூறுகிறான் அதை நாம் நம்புகிறோம் அதே நேரத்தில் இறுதி நபியாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈஸா நபி வானிலிருந்து இறங்கி வந்து தஜ்ஜால் என்ற கொடியவனை அழிப்பார் என்று கூறினார் அதையும் நாம் நம்புகிறோம். இந்த செய்தியின் மூலம் அல்லாஹ்வும் உண்மை கூறுகிறான் அவனது இறுதித்தூதரும் உண்மையை கூறுகிறார் இதனை முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்! ஈஸா நபி வருவார் என்பதற்கான ஆதாரம் வேண்டுமா? இதோ

கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் ‘லுத்’ எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

 

கேள்வி

மிஹ்ராஜ் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் சந்தித்தார்கள் இரண்டாவது வானத்தில் இசா (அலை) அவர்களுடன் யோவான் (யஹ்யா) நபி பார்த்தார்கள். அங்கு யாருடைய சடலமும் தென்படவில்லை. எல்லா நபிமார்கள் ஆன்மீக ரீதியாக உயிருடன் இருந்தார்கள். அனால் இந்த மூட முல்லாக்கள் இசா நபி மட்டும் வானத்தில் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.

 

பதில்

அட அடி முட்டாள் காதியாணிகளே அல்லாஹ் விதித்த இந்த சோதனையில் சிக்கிவிட்டீர்களே, விரைவில் சுதாரித்துக் கொள்ளுங்கள். என்ன சோதனை என்பது உங்களுக்கு புரியவில்லையா? மிஹ்ராஜை நம்புவதுதான் அந்த சோதனை!

 

 • நபிகளார் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்றதும் உண்மை
 • அங்கு இறந்த நபிமார்களை கண்டதும் உண்மை
 • அங்கு உயிருடன் உள்ள ஈஸா நபியை கண்டதும் உண்மை

 

அறிந்துக்கொள்க மிஹ்ராஜ் எனும் பயணம் இந்த புமியில் நடைபெறவில்லை மாறாக விண்ணுலகத்தில் நடைபெற்றது புமியில்தான் மரணித்தால் சடலம் இருக்கும் விண்ணுலகத்தில் யாருடை சடலமாவது இருக்குமா? விண்ணுலகம் என்ன உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கப்ருஸ்தானா? சடலம் இருக்க! அல்லாஹ் நாடினால் இறந்தவரை உயிர்ப்பிப்பான், உயிருள்ள ஈஸா நபியை தன்னிடம் வாழவழிவகையும் செய்வான்!

உங்கள் முட்டாள்தனத்தி்ற்கு இதோ மற்றுமொரு ஆதாரம் முன்வைக்கிறேன் கீழு உள்ளதை படியுங்கள்

 

எத்தனையோ நபிமார்கள் மரணித்தார்கள் அவர்களை நபிகள் நாயகம் மிஹ்ராஜில் சந்தித்தார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் அதுபோலத்தான் ஈஸா நபியும் மரணித்த நிலையில் அங்கு இருந்திருப்பார் அவரை நபிகளார் சந்தித்திருப்பார்கள் என்று கூற வருகிறீரா? அட காதியாணிகள் எனும் அடி முட்டாள்களே விண்ணுலகில் மரணித்த நபிமார்கள் இருந்தார்கள், உயிருன் ஈஸா நபியும் இருந்திருக்கிறார் என்பதை நபிகளார் (ஸல்) அவர்கள் தாம் உயிருடன் இருக்கும் போது பார்த்துள்ளார்கள் இதை மறுப்பீர்களா? புரியவில்லையா?

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தில் விண்ணுலகில் உயிருடன் சென்று திரும்பியுள்ளார் எனும்போது ஈஸா நபியினால் ஏன் அந்த விண்ணுலகில் உயிருடன் வாழ இயலாது?

 

கேள்வி

நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று கூறுகிறீர்களே இது கிறிஸ்தவ நடை முறை இல்லையா?

பதில்

இத்தகுல்லாஹ் (அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள்)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று கியாம நாள் வரை உலகில் உள்ள அனைத்து காஃபிர்களும் கூட கூறுவார்கள் ஆனால் காதியாணிகளாகிய நீங்கள் கூறமாட்டீர்கள் போலும்! காஃபிர்களுக்கு உள்ள அடிப்படை அறிவு கூட உங்களுக்கு கிடையாதா? இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று கூறும் அருள்மறை வசனம் (அல்லாஹ்வின் வார்த்தைகள்)


முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்” (அல்குர்ஆன் 33:40)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி முத்திரை என்று அல்லாஹ் கூறுகிறான் இதன் மூலம் யாரும் அவருக்குப் பின் நபியாக வரமாட்டார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது! இதோ இறுதி நபியின் இறுதிப்பேருரையின் கட்டளை

 

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத் தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்து காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளை தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான (மார்க்க வரி) ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காக படைத்துள்ள கவனத்தில் நுழைவீர்கள்.…………………. (நூல்: முஸ்லிம், திர்மிதி, அஹ்மத், இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)

 

 

காதியாணிகளே முத்திரை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யாருடைய உள்ளங்களில் இறைநிராகரிப்புக்கான முத்திரை குத்தப்பட்டுவி்ட்டதோ அவர்களுக்கு இறுதி முத்திரை யைப் பற்றி எங்கே தெரியப்போகிறது! இதோ இதை அறிந்துக்கொள்ளுங்கள்!

 

அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:7)

 

காதியாணிகளுக்கு எச்சரிக்கை

உண்மையை உணர மறுக்கும் காதியாணிகளே நீங்கள் உங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ் கூறும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வாரும்!

இன்னும், (முஹம்மது (ஸல்) (என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அல்குர்ஆன் 2:23)

இது இயலாத காரியம் நீங்கள் பொய்யர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். உங்களுடைய குருட்டுத்தனமாக வாதம் எப்படி இருக்கிறதென்றால் இதோ இந்த அருள்மறை வசனத்தைத்தான் நினைவுட்டுகிறது!

 

அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்” என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார்கள். (14:10)

 

யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 19:75)

 

குறிப்பு

காதியாணிகளே அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் காபிர்களாக மரணித்து விடாதீர்கள்!

அல்ஹம்துலில்லாஹ்

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சுவர்க்கத்தில் எருமை மாடுகளா? காதியாணிகள் எனும் கருத்துக்குருடர்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும்

 

கேள்வி எழுப்பியது   காதியாணிகள்

எழுப்பியவர்          jafarla@yahoo.co.in

 

முன்னுரை

 

அன்பின் சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

மனித இனம் அறிவு கொடுக்கப்பட்டு, சிந்திக்கக்கூடிய இனமாக இருக்கிறது எனவேதான் இறைவன் அறிவுக்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் சிந்திப்பதற்காக அல்குர்ஆனையும் அருளினான்! ஆனால் இன்றைய காலகட்டத்தில் காதியாணிகள் என்ற கருத்துக்குருடர்களின் கூட்டம் அல்குர்ஆனையும் நபிவழியையும் உணராமல் கீழ்தரமாக சித்தரித்து இஸ்லாத்தின் கண்ணியத்தின் மீது அநாகரிகமான கேள்விகளை எழுப்புகின்றனர். இந்தக் கேள்விகள் இஸ்லாத்தை பற்றி அறிந்துக்கொள்ள எழுப்பினால் பரவாயில்லை மாறாக இஸ்லாத்தை தகர்க்கும் விதமாக உள்ளதால் இவர்களின் தரத்தை தோலுறித்துக்காட்ட எண்ணி தக்க பதில்களை கட்டுரையாக வடிவமைத்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்! இதோ காதியாணிகள் எனது பிளாக் தளத்தில் தொடுத்த கேள்விகளுக்கான பதில்கள்

கேள்வி

இப்லீஸ் என்றால் ஒரு தனி படைப்பினம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இறைவன் உவமையாக கூறிய விசயங்களில் இதுவும் ஒன்று

பதில்

மேற்கண்ட கேள்வியின் மூலம் காதியாணிகள் இப்லிஸை ஏதோ உதாரணப் பொருள் என்றும் உவமை (எடுத்துக்காட்டு) என்றும் தான் நம்புகின்றனர் என்ற செய்தி உண்மையாகிவிட்டது. இது இவர்களின் மூட்டாள்தனத்திற்கு பறைசாற்றும் விதமாகவும் அமைந்துவிட்டது. ஏனென்றால் இப்லீஸ் தான் படைக்கப்பட்ட ஒரு படைப்பினம் என்று அல்லாஹ்விடம் வாக்குமூலம் அளித்துள்ளான். அறி்ந்துக்கொள்க இப்லிஸ் என்பவன் நெருப்பிலிருந்து படைக்கப்படட படைப்பினம்தான் ஜின்களும் இவனது இனம்தான். ஆதம் (மனிதனை) எவ்வாறு அல்லாஹ் படைத்தானோ அதுபோலத்தான் ஜிப்ரயீல், மீக்காயில் போன்ற மலக்குமார்களையும், இப்லீஸையும் அல்லாஹ் படைத்தான். ஆதாரம் வேண்டுமா?

 

இதோ இப்லீஸின் வாக்குமூலம்!

 

நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

 

 

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)

 

கேள்வி

நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் திருக்குரானில் கூறும் போது நீர் எறிந்த போது நீர் எறியவில்லை நிச்சயமாக  அல்லாஹ் தான் எறிந்தான் என்று வருகிறது. இதார்க்கு இந்த முல்லாக்கள் என்ன பதில் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகிவிட்டதாக கூறுவார்களா?

பதில்

இங்கு இந்த காதியாணிகள் முன்வைக்கும் சம்பவம் பத்ருப்போருடன் தொடர்புடையதாகும். இந்த பத்ருப்போர் அதில் கலந்துக்கொண்ட மூமின்களுக்கான சோதனையாகும்! ஏனெனில் பத்ருப்போரின் போது பகைவர்களின் கைகள் ஓங்கியிருந்ததாகும் அன்றைய தினம் அவர்களிடம் அனைத்துவிதமான போர் தளவாடங்கள், தந்திரங்கள் ஆக்ரோஷமான படைபலம் ஆகியவை இருந்ததாகவும் ஆனால் அதே வேளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தக்வா இறையச்சம் என்ற ஒரு பலத்தை மட்டும் நம்பியிருந்தாகவும் அறியமுடிகிறது இந்த சூழ்நிலையில் பத்ருப்போரில் பங்கேற்றவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழந்து புறமுதுகு காட்டிவிடக்கூடாது அவ்வாறு போரிலிருந்து விலகிவிடுபவர்கள் மீது அல்லாஹ் கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் எச்சரித்தான் இதோ அந்த குர்ஆன் வசனங்கள்

 

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள். (அல்குர்ஆன் 8:15)

 

(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் – அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன் 8:16)

 

 

இந்த போரின் போது அல்லாஹ் தனது புறத்திலிருந்து எந்த கண்களும் பார்த்திராத வகையில் மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு இறுதி வெற்றியை அளித்ததாகும் கூறப்படுகிறது. இதோ அதற்கான ஆதாரம்

 

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:17)

 

இந்த வசனத்தை வைத்துத்தான் இந்த காதியாணிகள் எனும் கருத்துக்குருடர்கள் தரம்புரள்கிறார்கள் அதாவது நபிகளார் (ஸல்) அவர்கள் எதிரிகளின் மீது மண்ணை எறிந்தபோது அதை அவர் எறியவில்லை அல்லாஹ்தான் எறிந்தான் என்று இருப்பதை படித்துவிட்டு நபிகளார் என்ன அல்லாஹ்வா? என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வாதம் இந்த காதியாணிகளின் அடிமுட்டாள்தனத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் ஏனெனில் இந்த வசனத்தின் ஆரம்ப பகுதியில் அல்லாஹ் கூறுவது

 

வசனத்தின் ஆரம்ப பகுதியில்

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்;

 

வசனத்தின் மைய பகுதியில்

(பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்;

 

வசனத்தின் இறுதி பகுதியில்

முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்;

 

இந்த வசனத்தை கண்பார்வையற்ற குருடன் கேட்டால் கூட எளிதாக விளங்கிவிடுவான் ஆனால் கண்பார்வையிருந்தும் கருத்துக் குருடர்களாக இருக்கும் இந்த காதியாணிகள் விளங்க மாட்டார்கள்.

 

இதோ இந்த வசனத்தின் மைய பகுதியில் பகைவர்கள் மீது மண்ணை நபிகளார் எறியவில்லை அல்லாஹ்தான் எறிந்தான் என்பது போன்றே வசனத்தின் ஆரம்ப பகுதியில் எதிரியை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல மாறாக அல்லாஹ்தான் வெட்டினான் என்று கூறப்படுகிறது இங்கு நீங்கள் என்ற பண்மையின் மூலம் மூமின்களின் படைவீரர்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான்! எனவே நபிகளாரை அல்லாஹ்வா? என்று கேள்வி எழுப்புவர்கள் மூமின் படைவீரர்களை அல்லாஹ்களா? என்று கேள்வி எழுப்புவார்களா?

 

பத்ருப் போரின் படிப்பினை என்ன? என்பதை அல்லாஹ் மூமின்களுக்கு விளக்குகிறான் அதுவும் நீங்கள் மேலே படித்த அல்லாஹ் எறிந்தான் என்ற வசனத்தி்ன் தொடர்ச்சியாக வரும் ஒரு வசனம் விளக்குகிறது!

 

(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்). (அல்குர்ஆன் 8:19)

 

இந்த வசனத்தின் படிப்பினை என்னவெனில் இறைநிராகரிப் பவர்கள் தங்கள் பலத்தை மட்டுமே நம்புகிறார்கள் என்றும் இறைவிசுவாசிகளான மூமின்கள் தக்வா என்ற இறை நம்பிக்கையை மட்டுமே பலமாக நம்புகிறார்கள் என்பதுதான். எனவே வெற்றி தோல்வி என்பது அறிவு, படை, வீரம் ஆகிய பலத்தால் அல்ல மாறாக இறைநம்பிக்கை மற்றும் இறைநாட்டத்தில்தான் உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்! (அல்ஹம்துலில்லாஹ்)

 

கேள்வி

இறைவன் தன்னைப்பற்றி கூறும்போது வானம் மற்றும் பூமியின்  ஒளியாக இருக்கிறான் என்று வருகிறது. இதை வைத்து ஒளியை பார்த்து அது இறைவன் என்று கூறுவீர்களா?

பதில்

காதியாணிகளின் இந்த கேள்வி அல்குர்ஆனின் கீழ்கண்ட வசனத்தை தகர்த்தெரியும்விதமாக உள்ளது இதோ அந்த இறைவசனம்

அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்; ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் கூண்டினுள் இருக்கிறது; அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது. அவ்விளக்கு கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத, அருள் பெற்ற ஒலிவ மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது. அதன் எண்ணெய் தானாக ஒளிரவே செய்யும்; நெருப்பு அதனைத் தீண்டாத போதிலும்! (இவ்வாறு) ஒளிக்கு மேல் ஒளி (அதிகமாவதற்கான அனைத்துக் காரணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன.) அல்லாஹ் தான் நாடுவோர்க்கு தன்னுடைய ஒளியின் பக்கம் வழிகாட்டுகின்றான். அவன் உவமைகளின் வாயிலாக மக்களுக்கு விஷயத்தை விளக்குகின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். 24:36 (அவனது ஒளியின்பால் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப்படுவதற்கும், எங்கே தன் பெயர் நினைவு கூரப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காணப்படுகிறார்கள். அவற்றில் காலை, மாலை நேரங்களில் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள். (24:35)

 

இந்த வசனத்தில் அல்லாஹ்வை தன்னை ஒளியாக வர்ணிக்கிறான் இங்குள்ள ஒளி என்ற வார்த்தையை காதியாணிகள் படித்துக்கொண்டு சாதாரண ஒளியை நாம் பார்க்கிறோம் அதை அல்லாஹ் என்று எடுத்துக்கொள்ளலாமா? என்று கிண்டலடிக்கின்றனர். ஆனால் இந்த மூடர்கள் இந்த ஒளி என்பதை சரியாக படிக்கவில்லை! இதோ விளக்கமாக படிக்கவும்!

 

ஒளி என்பது இரண்டு வகைப்படும் சாதாரணமான ஒளி மற்றும் அசாதாரணமான ஒளி! சாதாராணமான ஒளிக்கு உதாரணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் டார்ச் லைட், மின்விளக்கு ஒளி ஆகியவையாகும். ஆனால் அல்லாஹ் தனக்கு உதாரணமாக கூறும் ஒளியை இந்த சாதாரணமான ஒளியுடன் ஒப்பிடவது மூடத்தனமாகும் ஏனெனில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும்போது மிக பிரம்மாண்டமான ஒளியை உவமையாக கூறுகிறான். இதோ ஆதாரம்

 

வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்;

 

இந்த அண்டத்தில் பல்வேறு வானங்களும் கணக்கிலடங்கா கோள்களும் உள்ளன அவை அனைத்தும் ஒரு அதிசயிக்கத்தக்க வகையில் ஒளியினால் மின்னுகின்றன. இந்த மிகப் பிரம்மாண்டமான ஒளியை அல்லாஹ் தனக்கு உவமை என்றுதான் கூறுகிறான். சிந்தித்துப்பாருங்கள் இந்த அண்டத்தின் மீதுள்ள இந்த பிரம்மாண்டமான ஒளியை அல்லாஹ் நீக்கிவிட்டு இருளை பரப்பிவிட்டால் மனிதனது டார்ச்லைட் உதவியுடன் வெளிச்சமிட்டு காட்ட இயலுமா? சாத்தியமே இல்லை! எனவேதான் மனிதனால் சாத்தியப்படாத ஒரு பொருளை அல்லாஹ் தனக்கு உவமையாக (எடுத்துக்காட்டாக) கூறுகிறான்! (சுப்ஹானல்லாஹ்)!

 

 

கேள்வி

சுவர்கத்திப்  பற்றி அல்லாஹ் திருக்குரானில் கூறும்போது பாலாறுகளும், தேனாருகளும் ஓடும் என்று வருகிறது இதை வைத்து இவர்கள் சுவர்க்கத்தில் எருமை  மாடுகளின் கூட்டமும், தேனீக்களின் கூட்டமும் இருக்கிறது என்று கூறுவார்களா?

பதில்

இந்த கேள்வி எப்படி உள்ளதெனில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது போன்று உள்ளது! அட அடி முட்டாள் காதியாணிகளே சுவர்கத்தில் தேனாறும் பாலாறும் ஓடுவது பற்றி சிந்திக்கிறீர்களே இந்த உலகில் உள்ள எறுமை அல்லது பசுமாட்டின் மடியில் பாலை சுரக்கச் செய்வதும் அல்லாஹ் தானே அதை உணரமாட்டீர்களோ? இதையும் சற்று உணருங்கள்.

 

கணவன் மனைவியிடையே அன்பை ஏற்படுத்துவதும் அதே நேரத்தில் ஆணுக்கு வீரியமிக்க விந்தணுக்களை கொடுப்பதும் அதன் மூலம் மனைவியை கருவுறச் செய்வதும், கருவுற்ற பெண்ணிற்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பதும் தான் நாடினால் அந்த தடுப்பதும் இறைவன் நாட்டமே!

 

இதுபோன்றுதான் ஒரு எறுமை அல்லது பசுமாட்டிற்கு மேய்ச்சல் நிலத்தை கொடுப்பதும் அதன் மூலம் அவைகளின் மடியில் பாலை சுரக்க வைப்பதும், அந்த பாலை மனிதன் சுவைக்கும்படி செய்வதும் இறைவன் நாட்டமே!

 

மனிதனுக்கு விளைநிலத்தை கொடுப்பதும் அதில் அவன் உழுதால் பயிரை முளைக்கச் செய்வதும் அந்த பயிர் அறுவடைக்கு தாயார்படுத்துவதும் தான் நாடினால் யானை,  மழைக்காற்று, வெள்ளம் ஆகியவற்றால் அழிக்கச் செய்வதும் இறைவனின் நாட்டமாகும்.

 

இறைவன் நாடினால் சூல் கொண்ட மேகங்களை உங்கள் பகுதிக்கு அனுப்புவான் பின்னர் உங்களை சோதிக்க நாடினால் காற்றின் மூலம் மழையை திசைமாற்றி பொழியச் செய்வான் இதுவும் இறைவனின் நாட்டம்தான்.

 

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (அல்குர்அன் 47:15)

 

இந்த வசனத்தை நம்ப மறுக்கும் காதியாணிகள் இதன் மூலம் இறைநிராகரிப்பை முழுமையாக்கிக் கொள்கிறார்கள் என்பதும் அதை தங்கள் வாய்களாலேயே வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்ற உண்மையையும் இங்கு நாம் எத்திவைக்கிறோம்!

 

கேள்வி

திருக்குர்ஆன் கூறுகிறது இந்த உலகத்தில் குருடராக இருப்பவர், மறு உலகத்திலும் குருடராக இருப்பர். என்று வருகிறது. இங்கு ஆன்மீக ரீதியாக யாரெல்லாம் இந்த உலகத்தில் குருடராக இருப்பார்களோ அவர்களை அல்லாஹ் மறுமையில் எழுப்பும் போது வெளிப்படையாக (கண் தெரியாதவராக)  குருடராகவே எழுப்புவான். ஆனால் இந்த மூட முல்லாக்கள் குடுக்கும் விளக்கம் என்ன தெரியுமா இந்த உலகத்தில் முடவனாக, குருடனாக, இருப்பவர்களை மறுமையில் எழுப்பும்போது முடவனாக குருடனாக எழுப்புவான் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

 

பதில்

மேற்கண்ட இந்த கேள்வியின் மூலம் இவர்கள் குர்ஆனுடைய வசனத்தை தவறாக திரித்து வதந்தியை பரப்புவது போன்று பரப்புகிறார்கள்! உண்மையில் குர்ஆனில் இந்த குருடர் என்ற வார்த்தையை பற்றி எவ்வாறு குறிப்பிட்டுள்ளது என்பதை நீங்களே பாருங்கள்

 

யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான். (அல்குர்ஆன் 17:72)

 

இந்த வசனத்தில் சாதாரணமாக உடல் குறைபாடுள்ள குருடர்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடவில்லை அதே போன்று ஒரு மனிதனுக்கு கண்பார்வையை பறித்து சோதிக்கும் ரப்புல் ஆலமீன் அந்த கண்பார்வையற்ற மனிதரை கேவலமாக கிண்டலடிப்பானா? செய்யமாட்டான் அவன் அல்லாஹ் கருணையாளன்! உடல் குறைபாடுள்ளவர்களை நேசிப்பான்.

 

குருட்டுத்தனமாக சிந்திக்கும் காதியாணிகளுக்கு வேண்டுமானால் மேற்கண்ட அருள்மறை வசனம் (17-22) சரியாக பொறுந்தும் ஏனெனில் இவர்கள் கண்பார்வையிருந்தும் நேர்வழியை அடையாத வழிகெட்ட கருத்துக்குருடர்கள் இவர்கள் இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து இனிமேலாவது மறுமைக்காக நேர்வழியை தேடட்டுமாக!

 

கேள்வி

நபி (ஸல்) அவர்கள் கருப்பு நிறத்தில் உள்ள நாயை சைத்தான் என்று கூறியதாக வருகிறது.  இதற்க்கெல்லாம் இவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்.

 

பதில்

வாருங்கள் நாய்களைப் பற்றி அறிந்துக்கொள்வோம்!

ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். (ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிப் பின்னர் கேட்டபோது] “உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை” என்றார். அவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்: புகாரி, 3227).

மேற்கண்ட அறிவிப்பின் மூலம் நாம் வீடுகளில் நாய்களை வளர்க்கக்கூடாது என்பது அறியமுடிகிறது அதே போன்று நாய்வளர்ப்பில் கீழ்கண்ட விதிவிலக்கு ஒன்றும் உள்ளது!

 

கால்நடைகளைக் காவல்காக்கும் நாயையும், வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர, (வேறு காரணங்களுக்காக) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்குக் குறைந்துவிடும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, 5480, 5482. முஸ்லிம், 3202)

 

காதியாணிகள் கேள்வி எழுப்புவது என்னவென்றால் கருப்பு நாயை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று கூறினார்கள் என்பதாகும். இவ்வாறு நபிகளார் கூறியிருந்தால் அவர் அந்த நேரத்தில் ஜின்-ஷைத்தானை கருப்பு நிறம் கொண்ட நாயின் வடிவத்தில் பார்த்திருக்கலாம் என்று நாம் கருதலாம் ஆனால் இதே நபிகளார் (ஸல்) அவர்கள் எங்கெல்லாம் கருப்பு நிற நாய்களை பார்த்தார்களோ அங்கெல்லாம் அந்த கூட்டங்களை ஷைத்தான்கள் என்று கூறினார்களா? இதை சிந்திக்க வேண்டாமா?

 

சரி இவர்கள் கூறுவது போன்று நபிகளார் கருப்பு நிற நாயை ஷைத்தான் என்று கருதினார் என்றே வைத்துக் கொள்வோம் அப்படியானால் மனிதனின் உடம்பில் ஓடும் ரத்ததத்தில் ஷைத்தான் ஓடுகிறான் என்றும் நபிகளார் கூறியதாக ஒரு ஹதீஸில் கூறப்படுகிறது எனவே மனித உடம்பில் உள்ள ரத்தம் ஷைத்தான் என்று இந்த காதியாணிகள் கூறுவார்களா? இதோ இந்த நபிமொழியையும் சற்று படியுங்கள்!

 

ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அவசரப்படாதே!” நானும் உன்னோடு வருகிறேன்என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் ‘ஸுப்ஹானல்லாஹ் இறைத்தூதர் அவர்களே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்என்று தெளிவுபடுத்தினார்கள். (புகாரி 2038)

எனவே எவ்வாறு நபிகளார் (ஸல்) அவர்கள் ஒரு கருப்பு நாயை ஷைத்தான் என்று உவமையாக கூறினார்களோ அதே போன்றுதான் அல்லாஹ்வும் மனித ரத்த நாளங்களில் ஷைத்தான் ஓடுகிறான் என்று கூறுகிறான். இந்த விளக்கத்தின் மூலம் நாம் இங்கு அறிவது என்னவெனில் காதியாணிகளின் இரத்தத்தில் ஷைத்தான் கொஞ்சநஞ்சமல்ல மிக மிக அதிகமாகத் தான் ஓடுகிறான் என்று புலப்படுகிறது! (அல்லாஹு அக்பர்)

 

அன்பின் சகோதர சகோதரிகளே காதியாணிகள் எந்த அளவுக்கு தரம்கெட்ட வாதிடுகிறார்கள் என்பது இங்கு தோலுரித்துவிட்டோம் இனி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி இவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் தோலுரிப்போம் (இன்ஷா அல்லாஹ்)

 

குறிப்பு

குர்ஆன் ஹதீஸ் வசனங்கள் பல்வேறு இணையதளங்களிலிருந்து திரட்டப்பட்டவையாகும் ஜஜாகல்லாஹ் கைரன்!

 

பதிலை கொடுக்க சிந்திக்கும் ஆற்றலையும், நேரத்தையும் அறிவையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்!

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

யார் இந்த நிர்மோஹி அகரா?

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தை சொந்தம் கொண்டாடும் சாதுக்களின் அமைப்பிற்கு பெயர்தான் நிர்மோகி அகரா. இவர்கள் ஹிந்து சமயத்தைச் சார்ந்த வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் அனுமாரின் தீவிர பக்தர்கள். மொத்தம் வடஇந்தியாவில் 14-அகரா பிரிவுகள் உள்ளன இந்த பிரிவுகளைத்தான் அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்துள்ளது

அகரா என்றால் என்ன?

அகரா என்ற சமஸ்கிருத வார்த்தையை அகதா என்றும் அழைப்பார்கள் அதாவது சாதுக்களின் பிரிவில் தற்காப்பு படையினர் என்று பொருள்படும். ஆதாரம் இதோ

ஹிந்து சமயத்தில் சாதுக்கள் என்றால் அமைதியானவர்கள் என்றும் புளு பூச்சியை கூட கொல்லமாட்டார்கள் என்றும்தான் நாம் அறிவோம் ஆனால் அதே சாதுக்களின் அமைப்பில் தற்காப்புக்காக கொலை செய்வதும் உண்டு என்பது இந்த அகரா என்ற அமைப்பின் மூலம் தெரியவருகிறது! இந்த சாதுக்களின் அமைப்பில் மிக முக்கிய பிரிவான அகரா என்ற சாதுக்கள் அமைப்பு தந்திரமான அமைப்பாகும் அதாவது இவர்கள் சாதுக்கள் போல் காட்சியளித்தாலும் தாங்கள் கொண்ட கொள்கைக்காக எதிரணியில் இருப்பவர்களுடன் போர் தந்திரத்தாலும், குஷ்டி மோதல்களாலும் சண்டையிட்டு தாங்கள் மட்டும் வெற்றி பெறுவதாகும் இதன் மூலம் சாதுக்கள் அசுர குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பாபர் மசூதியின் பிரச்சினையில் உண்மையாகிறது. அகரா எனப்படும் இவர்களை சாதுக்கள் என்று கூறுவதைவிட அசுர வர்க்கத்தினர் என்று கூறுவதுதான் சிறந்ததாகும் எனவே இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க அரங்கேற்றிய கூத்துக்களை இங்கு முன்வைக்கிறோம்!

அகரா பிரிவின் வரலாறு


இந்து சமயத்தில் அகரா என்ற பிரிவு கி.மு 2500ம் ஆண்டு வாக்கில் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. இவர்களின் வரலாறுபடி இந்த ஆதி சங்கராச்சாரியார் 7 அகாரா பிரிவினரை தோற்றுவித்தவராகிறார் இவைகளின் பெயர்களாவான!

1.      மஹாநிர்வானி

2.      நிரஞ்சனி

3.      ஜுனா

4.      அடல்

5.      அவஹன்

6.      அக்னி

7.      அனந்த் அகரா

இந்த 7 அகரா பிரிவினர் பிற்காலத்தில் பல்கிப் பெருகி 14 பிரிவினராக மாறின இவைகளில் உள்ள பாபர் மசூதியை இடிக்க துணை நின்று பெயர் சம்பாதித்த ஒரு பிரிவுதான் நிர்மோகி அகரா!

சில அகாரா யோகிகள் தங்கள் அமைப்பை ஆதி சங்கராச்சாரியார் தோற்றுவிக்கவில்லை என்றும் தங்கள் மத குருவான கோரக்நாத் என்ற முனிவர்தான் தோற்றுவித்தார் என்று கூறுகின்றனர்.

அகரா பிரிவுகளின் பலம் மற்றும் பலவீனம்

கைகளில் வாள் ஏந்தும் நிர்வாண அகராக்கள் (சாது அசுரர்கள்)

மஹாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா ஆகிய அகரா சாதுக்களின் பிரிவுகள் மிகவும் பலமானதாகும். எனவே மற்ற பிரிவுகள் இந்த பலமான பிரிவுகளுடன் சமரசமாயின அவைகளாவன

 • அடல் அகரா என்ற பலவீனமான பிரிவு மஹாநிர்வாணி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!

 • அனந்த அகரா என்ற பலவீனமான பிரிவு நிரஞ்சனி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது

 • அவஹன் என்ற பலவீனமான பிரிவு ஜுனா என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!

இந்த பலவீனமான பிரிவுகள் பலமான அகராவுடன் இணைந்தாலும் சிற்சில நேரங்களில் தங்களுடைய எண்ணங்கள், வெற்றி தோல்விகள், தங்கள் குருதேவ் ஆகிய விஷயங்களில் வேறுபாடு கண்டு பொறாமை மனப்பாண்மையினால் உயர்வுதாழ்வு கொள்ளும்

அகராக்களின் வழிபாட்டு முறைகள்

அகராக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பதுடன் தங்கள் இஷ்ட தெய்வங்களின் முறைப்படியும் சண்டையிட்டு பிரிந்துவிடுவார்கள்

கடவுள் வழிபாட்டு முறையில் வேறுபாடு
சிவ அகராக்கள் சிவனை வழிபடுபவர்கள்
கல்பவஸிஷ் அகராக்கள் பிரம்மாவை வழிபடுபவர்கள்
வைராகி அகராக்கள் விஷ்ணுவை வழிபடுபவர்கள்

கடவுளுக்கு தவம் இருப்பதில் வேறுபாடு

ஒரு அகரா பிரிவு 8 வகை தவங்களை மேற்கொள்ளும் அந்த 8 தவங்களுக்கும் 52 வகையான மர்ஹிஸ்கள் (MARHIS நடுவன்) உள்ளது. ஒவ்வொரு மர்ஹிசும் மஹந்த் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.  இந்த நிர்வாகத்திற்கு தலைமை வகிப்பவர் ஸ்ரீ பஞ்ச் (பஞ்ச் என்ற ஐந்து தலைவர்கள் – பஞ்சாயத்து தலைவர் போன்று). இந்த ஸ்ரீ பஞ்ச் என்ற தலைவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவா, சக்தி, கணேசா ஆகிய கடவுள்களை பின்பற்று பவர்களாவர். இந்த ஸ்ரீபஞ்ச் என்ற 5 தலைவர்களையும் கும்ப மேளா என்ற விழாவின் போது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கும்ப மேளா என்பது என்ன?

கும்பா என்பது சமஸ்கிருத வார்த்தையாகும் இதற்கு PITCHER என்று ஆங்கிலத்தில் அழைப்பர் அதாவது கலசம் என்று கூறப்படும் கைப்பிடி இல்லாத மண் பானையாகும். அதாவது கும்ப ராசிக்காக காட்டப்படும் ஒரு வகை பானை. மேளா என்பது சந்திப்பு, கூட்டம் கூடுதல், சந்தை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள்.

இந்த கும்ப மேளாவின் ஆரம்பத்தை பற்றி கி.பி. 602-664ன் இடைப்பட்ட காலத்தின்படி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட சீன துறவி (Huan Tsang or Xuanzang)யின் குறிப்பு படி ஹர்ஷவர்த்தனர் என்ற மன்னர்தான் இதை ஆரம்பித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய யோகி முனிபர்கள் இதை மறுக்கின்றனர்.

கும்ப மோளாவில் என்ற நடைபெறுகிறது

இங்குதான் அகரா பிரிவுகள் சங்கமிக்கிறார்கள். நிவாணமாக நடனமாடுகிறார்கள், நிர்வாணமாக வழிபடுகிறார்கள், ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக குஷ்டி மோதல்களில் ஈடுபட்டு தங்கள் திறமைகளை அகரா சாதுக்களின் தலைவர்கள் முன் காட்டுகிறார்கள். இறுதியாக நிர்வாணமாக அனைவரும் ஆற்றில் குளிக்கிறார்கள்.

இதோ இவர்கள்தான் நிர்மோஹி அகரா!

நீங்கள் மேலே கண்ட அகரா பிரிவுகளில் நிர்மோஹி அகராவும் ஒன்றாகும் இது பிற்காலத்தில் தோன்றிய 14 பிரிவுகளில் இந்த நிர்மோஹி அகரா என்ற பிரிவை அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்தது!

நிர்மோஹி அகராவின் நோக்கமும் உண்மை நிலையும்!

இந்த அமைப்பு வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி தோற்றுவிக்கப்பட்டது. இவர்களின் கடவுள் ஹனுமான் அதாவது ராமாயணம் என்ற இதிகாச கற்பனைக் கதையின் கதாநாயகனான ராமனுடை சேவகன் ஹனுமான்! இந்த அமைப்பின் தலைவர் மஹந்த் பாஸ்கர தாஸ் என்பவராவார்.  இந்த அமைப்பினுடைய பெயரான நிர்மோஹி அகார என்பதற்கு ஒரு பொருள் உள்ளது அதாவது யாருடனும் ஒன்றிப்போகாத குழு. (NIRMOHI AKHARA means GROUP WITHOUT ATTACHMENT) இதன் தலையயை கோட்பாடு யாருடனும் ஒத்துப்போகாமல் வாழ்வதே!

நிர்மோஹி அகராவின் ஆரம்பகால சதியும் தோல்வியும்!

இந்த நிர்மோஹி அகரா அமைப்பு 1949ம் ஆண்டுதான் பாபர் மசூதியுடன் தொடர்புடையது என்று அனைவராலும் பேசப்படுகிறது ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும் இந்த அமைப்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலேயே இனக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு 1885ல் பாபர் மசூதியின் இடத்தை சொந்தம் கொண்டாடியது!

அடிமை இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் 1885ம் ஆண்டு ஃபைசாபாத் (FAIZABAD) ஒரு சூட் பைல் (நீதி மன்ற வழக்கு) ஒன்றை தாக்கல் செய்தது அந்த வழக்கில் இவர்கள் முன்வைத்த வாதம் இதோ ”அயோத்தி என்ற பகுதியில் ராமர் (ராம் சபுத்ரா) கோவில் இருந்ததாகும்  இது பாபர் மசூதிக்கு மிக அருகாமையில் இருந்ததாகும் கூறப்பட்டிருந்தாக அறியப்படுகிறது. ஆனால் அன்றைய ஃபைசாபாத் நீதிமன்ற நீதிபதிகள் இந்த பிரச்சினையை வளர்க்கவிடாமலும் பிரச்சினை நீடித்தால் இனக்கலவரம் ஏற்பட்டு சமுதாயம் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்றும் கருதி ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது! மேலும் கோவிலை கட்ட இந்த யோகி அமைப்பு முறையிட்ட பரிந்துரையின் மீதும் தடை விதிக்கப்பட்டது. இது நிர்மோஹி அகரா என்ற இந்த இந்துத்துவா அமைப்பின் மீது விழுந்த முதல் அடியாகும்!  இந்த பலமான இடியை தாங்கிக்கொள்ள இயலாத இந்த அமைப்பு 64 ஆண்டுகாலமாக பொங்கிக்கொண்டே இருந்தது! பின்னர் 1949ல் சுதந்திர இந்தியாவில் மீண்டும் தன் பழைய கதையை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தது! இந்த நேரத்தில் இவர்கள் முன்வைத்த வாதம் பாபர் மசூதி அந்த பகுதியில் இல்லை என்பதே!

இறுதியாக இந்த நிர்மோஹி அமைப்பு 1989ல் உத்திரப்பிரதேச அரசாங்கத்தின் மீதே லாசூட் (LAWSUIT) என்ற வழக்கை தொடர்ந்தது. அதன்படி இவர்கள் நீதிமன்றத்தை அணுகி பாபர் மசூதியின் இடத்தை தங்களுக்கு வழங்கி ராமரை வழிபட வழிவகை செய்வதேயாகும். இந்த வழக்கு உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பிறகு நடைபெற்றவை படங்களாக உங்கள் முன் இதோ

இப்போது நிர்மோஹி அகரா அமைப்பு தீவிரவாத அமைப்பா இல்லையா?

மாற்றுமத சகோதரர்களின் பார்வைக்கு இந்த கட்டுரையை சமர்பிக்கிறோம்!

யாரோ ஒருவன் ஆப்கானிஸ்தானி்ல் குண்டு வைத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பச்சை குத்துகிறீர்களே இன்று இந்த நிர்மோஹி அகரா என்பவர்கள் யார்? இவர்கள் காவி தீவிரவாதிகள் இல்லையா? முடிவு உங்கள் (மாற்றுமதத்தவர்கள்) கையில்!

காந்தியடிகள் பிறந்த இந்த நாட்டை சுடுகாடாக ஆக்கிவிடாதீர்கள்

அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அருள்மறை குர்ஆன் 3:200)

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)

புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே!

%d bloggers like this: