Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

என் இஸ்லாமிய அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!அல்லாஹ்வுக்காக பொறுமையை மேற்கொள்வீராக! சுவனத்தை தட்டிச்செல்ல பொறுமையை மேற்கொள்வீராக! இன்றைய தினம் பொறுமைதான் நமக்கு சிறந்தது!

அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டும் விலகி இருப்பீராக! (அருள்மறை குர்ஆன் 7:199)


அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அருள்மறை குர்ஆன் 3:200)

யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அருள்மறை குர்ஆன் 42:43)

நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)


வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழி தவறவே மாட்டார்கள். (உமர்(ரலி) நூல்:ரஜீன்)

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)

நாம் முஸ்லிம்கள் அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் எனவே இன்றைய தினம் பொறுமைதான் நமக்கு சிறந்தது!

எங்கள் இறைவா அநீதி இழைக்கப்பட்ட எங்கள் சமுதாயத்திற்காக எங்கள் மீது உன் அமைதியையும் பேரருளையும் இறக்குவாயாக! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!

சுப்ஹானல்லாஹ்!

அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹு அக்பர்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பாபர் மசூதி வழக்கில் 24ம் தேதி தீர்ப்பு

மனிதர்களின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது!

200 ஆண்டுகாலமாக அடிமைபட்டு கிடந்த நம் தாய்நாடான இந்தியாவில் ஆங்கிலேய அராஜக அரசாங்கம் கொடுத்த பல பெரிய அரசாங்க பதவிகளைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இந்திய நாட்டு விடுதலைக்காக மக்களோடு மக்களாக சேர்ந்து பின்னிப்பினைந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் தேடிக்கொடுத்த நல்ல சமுதாயம் நம் முஸ்லிம் சமுதாயம் அன்றைய சூழ்நிலையில் நம் சமுதாயத்தை எவரும் தீவிரவாதி என்று பச்சை குத்தவில்லை!

ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட்டு ஒடுக்கப்பட்டு, தரம்தாழத்தப்பட்டு ஒரு சில இடங்களில் இறைவனைக்கூட தொழ இயலாத வண்ணம் தடுக்கப்பட்டோம் இறுதியாக இந்துக்கள் அல்ல மாறாக இந்துசகோதரர்களில் ஒழிந்துக் கொண்டுள்ள சில கருப்பு ஆடுகளான காவி கயவர்களால் அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய பாபர் மசூதியை இழந்துவிட்டோம் இன்று இவர்களின் சூழ்ச்சியால் மசூதி இருந்த இடத்தில் தொழுவதா? கல்லை கும்பிடுவதா என்று தீர்மானிக்க உள்ளார்கள் இதன் தீர்ப்பு வரப்போகிறதாம்!

இந்திய நாட்டு சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயமாகிய நமக்கு இன்றைய தினம் நியாயமான தீர்ப்பு வழங்கப்படுமா? அல்லது மஹ்ஷர்வரை பொறுத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுமா? பொறுத்திருப்போம்!

பாபர் மசூதி தீர்ப்பை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு அணுகுவது

பாபர் மசூதி தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால் இந்துக்களுக்கு மன வேதனையும் இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால் இஸ்லாமியர்களுக்கு மன வேதனையும் ஏற்படும் இது இனப் பிரிவினைக்காக வகுக்கப்பட்ட 50 ஆண்டுகால பொன்விழா சூழ்ச்சி மட்டுமல்லாது வரலாற்று சதியுமாகும். இந்த தீர்ப்பு 2010ல் மட்டுமல்ல 2050ல் வெளியானாலும் இந்திய பாரம்பரியமிக்க இந்துக்கள் இஸ்லாமியர்கள் இனப் பிரிவினைக்கு பாதகமான சூழலே நிழவும். (அல்லாஹ் மன அமைதியை நம் இந்திய நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிருத்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் மீதும் பொழிவானாக!)

1) தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிமான்கள் பாபர் மசூதியை இடித்தது முறையல்ல என்று தீர்ப்பளித்து அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு உரியது என்று தீர்ப்பளித்தால் நாம் நமக்கு உரிய நியாயமான தீர்ப்பை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளோம் என்று எண்ணி அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே) என்று கூறி அமைதி காக்க வேண்டும் ஆரவாரப்படக்கூடாது இதை மீறி தம்பட்டம் அடித்து ஆரவாரப்பட்டால் நமக்கு எதிராக உள்ளவர்களுக்கு மனவேதனை ஏற்படும் மீண்டும் அங்கிருந்து ஒரு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்! எனவே தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறலாம்!

2) தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்கும்போது அது இந்துக்களுக்கு சாதகமாக அமைந்து நமக்கு எதிராக அமைந்துவிட்டால் நாம் ஆத்திரப்படக்கூடாது ஏனெனில் நாம் இஸ்லாமியர்கள் அதாவது அமைதியை விரும்புபவர்கள். எனவே இந்துக்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமையும்பட்சத்தில் நாம் கீழ்கண்டவாறு நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்! மேலும் கீழ்கண்டவாறு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்!

 1. பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்குபவன் மனிதன் இறைவனல்ல!

 1. அல்லாஹ் தீர்ப்பு வழங்குவோரில் உயர்ந்தவன்! அவன் மஹ்ஷர் எனும் மறுமைநாளில் நமக்கு இழைக்கப்படட அநீதிக்கு பகரமாக நன்மையை கொடுப்பான்!

மேற்கண்ட இந்த இரண்டு நம்பிக்கைகளையும் கீழ்க்கண்ட ஒரு நபிமொழியின் மூலம் உணர இயலும்

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200

மேற்கண்ட நபிமொழியை உணர்ந்த நாம் இனி கீழ்கண்ட அருள்மறை வசனத்தின் சுவையையும் உணர வேண்டும்

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:135)

இங்கு பாபர் மசூதிக்கு தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில் முஸ்லிம்களாகிய நாம் நம் சமுதாயத்திற்கு நன்மையை தேடிக்கொள்ளும் விதமாக அமைதிகாக்க வேண்டும் அவ்வாறு அமைதி காப்பதால் மறுமையில் இவர்களுக்கு (காவி கயவர்களுக்கு) எதிராக அல்லாஹ்வுக்கு சாட்சி கூறுபவர்களாக நாம் மாறலாம்!

இன்று இவர்கள் நம்மை வென்றுவிடலாம் ஆனால் மறுமையில் நாம் நமது சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்விடம் எடுத்துக்கூறி அல்லாஹ்வுக்காகவே நாம் சாட்சிகளாக மாறிவிடலாம்!

நபிகளார் (ஸல்) காட்டிய மாபெரும் பொறுமை

தாயிப் நகரத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கப்ட்டார்கள் உச்சகட்ட வேதனைக்கு என்று கூறும் அளவுக்கு சொல்லொனா துயரங்களை அனுபவித்தார்கள் அப்படிப்பட்ட நேரத்தில் கூட ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அவரின் முன் தோன்றி தாயிப் நகரத்தை இருமலைகளுக்கிடையில் வைத்து நசுக்கிவிடவா என்று கேட்க நபிகள் பெருமனாரோ தாயிப் நகர மக்கள் என்றைக்காவது ஒருநாள் மனம் திருந்தலாம் என்று எண்ணி அந்நரக மக்களின் மீது கருணை காட்டினார்கள் மன்னித்து விட்டார்கள் பின்னர் மக்கா மாநகரை அடைந்தார்கள்.

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே அன்று நம்முடைய அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு எதிராக கொடுமை இழைத்த சமுதாயத்தின் மீது காட்டியை பொறுமையை இன்று முஸ்லிம்களாகிய நாம் இந்துக்கள் மீது காட்டி பாபர் மசூதியின் தீர்ப்பின் போது அமைதிகாக்கலாமே! என்றைக்காவது ஒருநாள் தாங்கள் பாபர் மசூதியை இடித்தது தவறுதான் என்று உணர்ந்து இவர்கள் இஸ்லாத்தை தழுவலாமே இதனால் அல்லாஹ் நமக்கு ஒரு நன்மையை முற்படுத்தி வைக்கலாமே!

அல்லாஹ்வின் மீது ஈமான் வைத்தவன் என்றுமே துன்பப்பட மாட்டான் அதுபோலத்தான் இந்த தீர்ப்பும்!

1)      தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால் நமக்கு நியாயம் கிடைத்த மகிழ்ச்சி கிடைக்கும். அல்ஹம்துலில்லாஹ்

2)      தீர்ப்பு இந்துக்களுக்க சாதகமாக இருக்கம் பட்சத்தில் தீர்ப்பளிப்பவன் சாதாரண மனிதன்தான் அல்லாஹ் கிடையாது என்ற பெறுமிதம் கிடைக்கும்! இதுவும் ஒருவகையில் மகிழ்ச்சிதானே! இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்

எனவே முஸ்லிம்களாகிய நாம் அமைதி விரும்பிகள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த இது ஓர் உண்ணதமான வாய்ப்பு இதை நலுவவிடாதீர்கள். பாபர் மசூதி தீர்ப்பு நமக்கு பாதகமாக அமைந்துவிட்டதே என்ற எண்ணி பொங்கி எழுந்து உங்கள் குடும்பத்தை நாசப்படுத்திக்கொள்ளாதீர்கள் நாம் பொங்கி எழ வேண்டும் அதனால் சிறை சென்று குடும்பத்தாரை நடுத்தெருவில் நிற்க வைக்க வேண்டும் என்று கருப்பு ஆடுகள் சூழ்ச்சிகள் செய்யலாம் எனவே நாம் உயிர் உள்ள வரை பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டலாம் உயிருடன் இருக்கும் போது நீதி கிடைக்கவில்லை எனில் மரணித்தபிறகாவது மஹ்ஷரில் (மறுமையின் நியாயத்தீர்ப்பு நாளில்) அல்லாஹ்விடம் நீதியை பெறலாம்!

அல்லாஹ் மன அமைதியை நம் இந்திய நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிருத்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் மீதும் பொழிவானாக!

என் இந்திய நாட்டு அனைத்து மத, மார்க்க சகோதர, சகோதரிகளே இந்த இக்கட்டான பாபர் மசூதி தீர்ப்புநாளில் இனக்கலவரத்தை தூண்டும் சக்திகளின் மாய வலையில் சிக்கி நம் சகோதரத்துவத்தை சீர்கெடுத்து நம்மிடையே பகைமையை வளர்த்துக் கொள்வதைவிட தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோமாக!

சிந்திக்க படைக்கப்பட்ட சமுதாயமே இதோ சிந்திக்க சில வசனங்கள்

அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அருள்மறை குர்ஆன் 3:200)

வேறோர் இடத்தில், ‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அருள்மறை குர்ஆன் 42:43)

நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)

பொறுமைக்கு இலக்கணம் இஸ்லாமியர்களே என்பதை இந்த உலகிற்கு உணர்த்த இதுவே சிறந்த தருணம்! தவறவிடாதீர்கள்! இஸ்லாத்தின் கோட்பாடுகளை தவறிவிட்டு விடாதீர்கள்

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

யூதர்களை மிஞ்சிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கூட்டம்

அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று தவ்ஹீத் சகோதரர்களும், அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று இணைவைப்பாளர்களும் விவாதிக்கின்றனர்.

இந்த இரு அணியினரில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கூறுபவர்கள் குர்ஆன் மற்றும் நபிமொழி ஹதீஸ் ஆதாரங்களை முன்வைத்து உண்மை பேசுகிறார்கள் மாறாக உருவம் இல்லை என்று கூறும் இணைவைப்பாளர்களும் அவர்களது தலைவருமான உஸ்தாத் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களை மறுத்துப் பேசி அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றும் அவ்வாறு இருந்தால் அவன் ஒற்றைக் கையனா, ஒரு கால் மட்டும்தான் உள்ளதா? அவன் ஆடை அணிகிறானா? நிர்வாணியா? என்றெல்லாம் பேசி இஸ்லாத்தின் ஆணிவேரான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மறுத்து பேசுகிறார்.

இந்த ஜமாலி கூட்டத்தாரின் செயல்கள் எப்படிப்பட்டவை என்பதை அலசிப்பபார்ப்பதற்கு முன் படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வைப் பற்றி பேசும்போது ஒரு முஸ்லிம் பேண வேண்டிய ஒழுங்குகளை இங்கு முதலில் காண்போம்.

அல்லாஹ்வின் பெயர்களை கூட திரிக்க்கக்கூடாது

அல்லாஹ்வை பற்றி அருள்மறை குர்ஆனில் 99 திருநாமங்கள் இடம்பெற்றுள்ளன இவற்றை அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அழகிய பெயரால் அழைக்கிறோம். இதில் உள்ள ஒவ்வொரு பெயரும் அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துரைக்கிறது. உதாரணமாக ரஹ்மான் (அருளாளன்) ரஹீம் (அன்பாளன்) என்பனவாகும் இதையே அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்-அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்” அல்குர்ஆன் (7:180)

மேற்கண்ட இந்த வசனத்தில் அல்லாஹ்வின் உருவம் பற்றி பேச்சு இடம்பெறவில்லை அவனது பெயர்களைப் பற்றித்தான் முழுக்க முழுக்க பேசப்படுகிறது. இந்த வசனத்தில் அல்லாஹ் தனது பெயர்களை திரித்துப் பேசுபவர்களுக்கு அவர்களுடைய செயல்களுக்கான தக்க கூலி கொடுப்பான் என்ற பிரகடப்படுத்தி யுள்ளதன் மூலமாக அல்லாஹ் தன் பெயர்களை திரித்து பேசுபவர்கள் மீது எந்த அளவுக்கு கோபப்படுகிறான் என்பது தெளிவாக புரிகிறது. அல்லாஹ்வின் பெயர்களை திரிப்பதன் மூலமாகவே இந்த பயங்கரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்த நாம் அல்லாஹ்வின் உருவத்தை கிண்டலடிக்கலாமா? அல்லாஹ்வின் உருவத்தை கிண்டலடிப்பவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை நீங்களே உங்கள் உள்மனதில் சற்று சிந்தித்துப்பாருங்கள்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)

அல்லாஹ்வின் வார்த்தைகளை பரிகசிக்கக்கூடாது

சகோதரர்களே அல்லாஹ் ஒரு கட்டளையை பிறப்பித்துவிட்டால் அந்த கட்டளைக்கு மாற்றமாக நடப்பது அவனை பரிகசிப்பதற்கு சமமாகும். உதாரணமாக ஒரு ஆசிரியர் கல்வியை போதிக்கும் போது இந்த பாடத்தை நினைவில் நிறுத்துங்கள் என்று கூறினால் அந்த நேரத்தில் மாணவர்கள் எங்களுக்கு இது தேவையா? என்று எதிர் கேள்வி எழுப்பினால் அங்கு மாணவர்களால் ஆசிரியர் பரிகசிக்கப்படுகிறார் என்று அர்த்தமாகிறது. இப்படிப்பட்ட செயல்தான் நபி மூஸா (அலை) அவர்களுக்கு நேர்ந்தது அதைப்பற்றி அல்லாஹ் அருள்மறையில் இவ்வாறு கூறுகிறான்

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், ‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டுமென்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்என்று சொன்னபோது, அவர்கள் ‘(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகிறீரா?’ என்று கூறினர். (அப்பொழுது) அவர் ‘(அப்படி பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்என்று கூறினார் (அல்குர்ஆன்: 2:6)

சகோதரர்களே இங்கு பசுமாட்டை அறுக்க அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியை மூஸா நபி தம் சமுதாயத்தவர்களிடம் கூறுகிறார் ஆனால் அவருடைய சமூகத்தாரோ எங்களை பரிகசிச்கிறாயா (கிண்டலடிக்கிறாயா) என்று கூற அந்த மூஸா நபியோ பரிகசிப்பது அறிவீனம் என்றும் அப்படிப்பட்ட செயலிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதாகவும் பிரார்த்திக்கிறார்.

இங்கு மூஸா நபியின் சமூகத்திற்கு சாதாரணமான ஒரு பசுமாட்டை அறுக்க கட்டளையிடப்பட்டு அதை மீறுவதை பற்றி பேச்சு எழுகிறது ஆனால் நபிகள் (ஸல்) அவர்களுடைய சமூகத்தாராகிய நமக்கு அல்லாஹ்வின் பெயர்களை திரிக்கக்கூடாது என்று அல்குர்ஆன் (7:180) வசனம் கூறுகிறது. இப்போது சிந்தித்துப்பாருங்கள் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று பேசி அவன் ஆடை அணிகிறானா, ஒற்றைக் கால் கொண்டவனா? அவனுக்கு கண் உள்ளதா? என்று ஏளனமாக பேசி பரிகசித்து கிண்டலடிப்பது கூடுமா? இது ஜமாலி கூட்டத்திற்கு அறிவீனமில்லையா? பரிகசித்தல் தொடர்பாக மூஸா நபியின் பிரார்த்தனை எங்கே ஜமாலி கூட்டத்தாரின் நிலைமை எங்கே! சிந்தியுங்கள் சகோதரர்களே!

அல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது

படைத்த ரப்புல் ஆலமீனுக்கு உருவம் உள்ளது ஆனால் அந்த உருவத்தை நம்மால் உருவகப்படுத்த இயலாது ஏனென்றால் அல்லாஹ்வின் உருவத்தை மனிதனால் கற்பனை செய்துகூட காண இயலாது இதைப்பற்றி அல்லாஹ் கூறும் போது!

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன்: 6:103)

அல்லாஹ்வை நாம் பார்க்கவில்லை பிறகு எப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதை நம்மால் நம்ப இயலும் என்று நமக்குள் ஒரு சலசலப்பு ஏற்படும் ஆனால் இந்த சலசலப்பு உண்மையான இறைவிசுவாசிக்கு ஏற்படாது ஏனென்றால் அவன் இப்படிப்பட்ட சலசலப்புகள் தோன்றினால் அருள்மறை குர்ஆனையும் ஹதீஸ்கள் வைத்து இறைவனுடைய ஆற்றல்களை உணர்ந்துக் கொள்வான்.

அல்லாஹ்வுக்கு முகம் உண்டு, கைகள் உண்டு, கால்கள் உண்டு, கண்கள் உண்டு, கேட்கும் சக்தியும், பார்க்கும் பார்வையும், மதி நுட்பமும் உண்டு இவைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தான வகையில் அமைந்திருக்கும் மாறாக மனிதனுக்கு உள்ளது போன்று அமைந்திருக்காது என்றுதான் நாம் உணர வேண்டும்.

ஜமாலி கூட்டத்தாரின் அறிவீனம்

நபிகளார் (ஸல்) காலத்தில் ஒரு மனிதரை அறிவீனத்தின் தந்தை என்ற அழைக்கப்பட்டது நினைவிருக்கட்டும் இப்படிப்பட்ட அறிவீனத்தைத்தான் ஜமாலி கூட்டத்தார் பின்பற்றுகின்றனர். இவர்களின் அறிவீனத்தை சற்று அலசிப்பார்ப்போம் வாருங்கள்.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனை மனிதனுக்கு கொடுத்து அந்த குர்ஆனில் தனது முகம், கை, கால்கள், கெண்டைக்கால் போன்ற அடையாளங்களை விவரித்து பேசுகிறான். மேலும் மஹ்ஷரில் திரைவிலக்கப்பட்டு அல்லாஹ்வின் கெண்டைக்கால் காட்சிதரும்போது அதனைக் காணும் மூமின்கள் சிரம்பணிவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறான். ஜமாலி கூட்டத்தார் இங்குதான் பிரச்சினையை ஆரம்பிக்கிறார்கள் அதாவது அல்லாஹ்வுக்கு கால் இருந்தால் அது மனிதனின் காலை போன்று இருக்கும் அப்படி எத்தனை கால்கள், கைகள் உள்ளன அவ்வாறு மனிதனைப் போன்று கால்கள் இருந்தால் அல்லாஹ்வைப் போல் எதுவுமில்லை என்ற வசனம் தடைபடுகிறது என்பதுவே. இந்த எதிர்வாதம் உஸ்தாத் ஜமாலி கூட்டத்தாரின் மூடத்தனத்திற்கு சாட்சியாகும்.

ஒரு மனிதன் அல்லாஹ்வை தன்னைப் போன்ற மனிதனாக கற்பனை செய்து பார்த்தால் அது முழுக்க முழுக்க முட்டாள்தனமாகும். இதற்கு பின்வரும் ஒரு உதாரணம் மூலம் விளங்க இயலும் இந்த உதாரணத்தை கண்டு யாரும் சிரிக்காதீர்கள் மாறாக சிந்தியுங்கள்.

மனிதன் என்ற இடத்தில் ஜின்கள் என்ற இனத்தை வைத்துப் பார்ப்போம் இந்த இடத்தில் ஜின்களுக்கு நேர்வழி புகட்ட ஒரு வேதமும் அந்த வேதத்திற்கு ஜின்களின் இனத்திலிருந்து ஒரு தூதரும் அனுப்பப்பட்டிருந்தால் அந்த ஜின்களின் இனம் அவர்களின் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் முகம், கை, கால்கள் ஆகியவற்றை படித்து அல்லாஹ்வின் உருவத்தை தங்களது ஜின் உருவத்திற்கு ஒத்ததாக கருதினால் தங்கள் கைகளைப் போன்று இறைவனுக்கு கைகள் இருக்கும், தங்கள் முகத்தை போன்று இறைவனுக்கு முகம் இருக்கும் தங்கள் கால்களைப் போன்று இறைவனுக்கு கால்கள் இருக்கும் என்று நம்பினால் அது ஜின்களின் முட்டாள்தனமாகும். மேலும் அல்லாஹ்வுக்கு கைகளே இல்லை என்று கூறுவதும் முட்டாள்தனமாகும்.

எனவே மனிதர்களும் முஸ்லிம்களுமாகிய நாம் அல்லாஹ்வின் கைகள் என்று குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்தவுடன் அது மனிதனின் கைகளைப் போன்ற அமைப்பில் அல்லாமல் இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சமாக திகழும் என்று எண்ண வேண்டும்.  அல்லாஹ்வின் முகம் மனிதனின் முகத்தைப் போன்று அல்லாமல் இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சமாக திகழும் என்று எண்ண வேண்டும். இப்படிப்பட்ட இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சங்களை காண நாம் அனைவரும் மஹ்ஷர் நாள் வரை பொறுத்திருக்க வேண்டும்! இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் அங்க அவையங்களை இப்போது உணருவோம் வாருங்கள்!

அல்லாஹ்வுக்கு முகம் உள்ளது

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன் (அல்குர்‍ஆன் 2:115)

இங்கு அல்லாஹ்வின் முகம் என்று கூறப்பட்டுள்ளது இந்த முகம் அவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சங்களில் அமைந்திருக்கும் என்று கருதுங்கள். மாறாக அல்லாஹ்வின் முகம் வட்டமானதா? நீளமானதா? அகலமானதா என்று கற்பனை செய்யாதீர்கள் அவ்வாறு கற்பனை செய்வது பாவமான காரியத்தில் நம்மை தள்ளிவிடும் ஏனென்றால் அல்லாஹ் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன்!

அல்லாஹ்வுக்கு கேட்கும் சக்தி உண்டு

அல்லது அவர்களின் இரகசியத்தையும் அவர்கள் இரகசியம் பேசுவதையும் திண்ணமாக நாம் செவிமடுப்பதில்லை என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனரா? ஆம். அவர்களிடமுள்ள (மலக்குகளான) எமது தூதர்கள் எழுதிக்கொண்டுள்ளனர்.” (43:80)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ் இரகசியத்தை கூட கேட்பதாக அறிவிப்பு செய்கிறான் இங்கு அறிவிப்பு செய்பவன் யார் அல்லாஹ்! இந்த அறிவிப்பை நம்பக்கூடியவன் மனிதன் ஆனால் இந்த மனிதன் அல்லாஹ்வின் இந்த அறிவிப்பை கேளி செய்து அவனுக்கு காது இருந்தால் எவ்வளவு நீளமானதாக இருக்கும் என்று பேசுபவன் அகந்தை பிடித்தவனான் இப்படிப்பட்ட அகந்தைதான் ஜமாலி கூட்டத்தாரிடம் காணப்படுகிறது. மேலும் இதோ ஒரு நபிமொழியை படியுங்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(
புனித கஅபா) ஆலயத்தின் அருகே ‘ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்’ அல்லது ‘குறைஷியர்’ இருவரும் ஸகஃபீ ஒருவரும்’ ஒன்று கூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப் போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களின் உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?’ என்று கேட்க, மற்றொருவர், ‘நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்’ என்றார். இன்னொருவர், ‘நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும்போதும அவன் நிச்சயம் கேட்பான்’ என்றார். அப்போதுதான் உயர்ந்தோனான அல்லாஹ், ‘(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்குகெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை’ எனும் (திருக்குர்ஆன் 41:22 வது) வசனத்தை அருளினான். (புகாரி 7521)

அல்லாஹ்வுக்கு பார்வைகள் உண்டு

அல்லாஹ் நூஹ் நபிக்கு கப்பலை கட்ட ஆணை பிறப்பித்தபோது அந்த கப்பல் அல்லாஹ்வின் பார்வையில் வஹீ அறிவிப்பில் எவ்வாறு அறிவுறுத்தப்பட்டதோ அதுபோன்று நேர்த்தியாக கட்ட வலியுறுத்துகிறான் இங்கு வஹிக்கு மாற்றமாக கப்பலை கட்டக்கூடாது என்பது மறைமுகமான கட்டளையாக உள்ளது எனவே அல்லாஹ்வின் பார்வையில் கப்பல் வடிவமைக்கப் படுகிறது என்று நூஹ் நபி இந்த இடத்தில் அஞ்சியிருக்க வேண்டும் இதைத்தான் குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 11:37)

மேலும் மக்கா வெற்றியைப் பற்றி கூறும் போது ஒவ்வொருவருடைய செயலையும் அல்லாஹ் பார்ப்பதாக நபிகளாருக்கு அவனே அறிவுறுத்துகிறான் இங்கு நபிகளார் (ஸல்) அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அஞ்சியிருக்கிறார்கள்

இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:24)

எனவே சகோதரர்களே அல்லாஹ்வுக்கு கண்கள் இருந்தால் அது எப்படியிருக்கும் என்று நாமாக கற்பனை செய்ய இயலாது மாறாக அல்லாஹ் பார்ப்பதாக கூறும்போது அதற்கு தேவையான சில அமைப்புகள் இருக்கும் என்று நாம் நம்ப வேண்டும் ஆனால் ஜமாலி கூட்டத்தாரோ இது அல்லாஹ்வின் பண்பு என்று கூறுகிறது பார்வைக்கும் பண்புக்கும் வித்தியாசம் தெரியாத இந்த கூட்டத்தாருக்கு ஏதாவது வஹி வந்துள்ளதா? இவர்களின் வரட்டு வாதம் ஆச்சரியத்ததை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ்வுக்கு மதி நுட்பம் உண்டு

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்குர்ஆன்31:34)

இங்கு அல்லாஹ் தனக்கு மதி நுட்பம் உள்ளதை தாமாக முன்வந்து அறிவிக்கிறான் இது அல்லாஹ்வின் வல்லமைக்கு மற்றுமோர் உதாரணமாகும் எனவே இந்த ஜமாலி கூட்டத்தார் அல்லாஹ்வின் மதி நுட்பத்திற்கு கேளி செய்து அதற்கான மூளை எங்கே என்று கேட்டுவிடுவார்களோ?

அல்லாஹ்வுக்கு கால்கள் உண்டு ஆடையும் உண்டு

ஜமாலி கூட்டத்தார் அல்லாஹ்வுக்கு கால்கள் உண்டா? என்று கேட்கிறார்கள் அதுவும் ஒற்றைக்காலா? இரண்டு கால்களா? என்று ஏளனம் செய்து அவன் ஆடை அணிகிறானா? நிர்வாணியா என்று நா கூசாமல் பேசுகிறார்கள். இவர்கள் மூடர்கள் இவர்களுக்கு கீழ்கண்ட இறைவசனம் விளங்கவில்லையோ?

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். (அல்குர்ஆன் 68:42.)

ஒரே வசனத்தில் ஜமாலிக்கு போன்றோருக்கு அல்லாஹ் நுட்பமாக பதில் கொடுக்கிறான் அதாவது திரை அகற்றப்படும் பிறகு கெண்டைக்கால் திறக்கப்படும். இங்கு கால் என்பதை பண்பு என்று ஜமாலி கூறுவது அர்த்தமற்றது. பண்பை திரையிட்டு மூட இயலாது அதாவது ரஹ்மான் என்ற ஒரு பண்பை திரையிட்டு மூடியிருந்தால் இந்த ஜமாலி உலகில் வாழ முடியுமா? இப்படி கெண்டைக்காலை பண்பு என்று கருதினால் நிலைமை தலைகீழாகிவிடும் அதாவது அல்லாஹ் தன் பண்புகளை யாரிடமும் காட்டாமல் ஒழித்து வைத்துள்ளான் என்று குழப்பமும் ஏற்படும். எனவே இங்கு கெண்டகைகால் என்று அல்லாஹ் கூறுவதை அப்படியே ஏற்கத்தான் வேண்டுமே தவிர அதற்கு மாற்றமாக பேசுவது அல்லாஹ்வை கிண்டலடிப்பதற்கு சமமமாகும்.

அல்லாஹ்வுக்கு ஆடை உண்டு

அல்லாஹ் ஆடை அணிகிறானா? நிர்வாணியா என்று கேள்வி எழுப்பிய ஜமாலிக்கு இதோ அல்லாஹ்வின் ஆடை பற்றிய ஓர் அழகான ஹதீஸ் காணப்பபடுகிறது.

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘(மறுமைநாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?’ என்று வினவியதற்கு இப்னு உமர்(ரலி) கூறினார்: உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார். இறைவன் தன்னுடைய திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். பின்னர் (அவரிடம்) இறைவன் ‘நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். இறைவன் (மறுபடியும்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அப்போதும் அவர் ‘ஆம்’ என்று கூறி தம் குற்றத்தை ஒப்புக் கொள்வார். பிறகு ‘நான் (உன் குற்றங்களை) உலகில் மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்’ என்று சொல்வான். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது (புகாரி 7514)

மேற்கண்ட ஹதீஸை ஜமாலி படித்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது எனவே அல்லாஹ்வை இழிவாக பேசிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி தன் அகந்தையால் இந்த இடத்தில் அறிவு குறைந்த அரை நிர்வாணியாகிவிட்டார்.

அல்லாஹ் அமர்ந்திருக்கவும் செய்வான்

‘‘நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்’ (அல்குர்ஆன் 13:02)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தாம் அர்ஷின் மீது அமர்ந்திருப்பதாக கூறுகிறான் இங்கு இந்த அறிவிப்பை கூறுவது யார் அல்லாஹ், கூறப்படுவது யாரை அல்லாஹை எனவே நாம் எவ்வாறு இதை நம்பாமல் இருக்க இயலும். ஒரு வேலை இதை அல்லாஹ்வின் பண்பு என்று கருதினால் அது எவ்வாறு அர்ஷில் அமர்ந்திருக்கும்?

 • அல்லாஹ் தான் அர்ஷில் அமர்ந்திருப்பதாக கூறுகிறான்
 • பின்னர் காரியத்தை அவனே நிர்வகிக்கிறதாக கூறுகிறான்
 • இறுதியாக சூரியன் சந்திரனை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறி தன்னை சந்திப்பதற்கு இது சாட்சி என்று பிரகடனப்படுத்துகிறான்

இங்கு அமர்ந்துள்ளான் என்பதை ஜமாலி பண்பு என்று கூறினால் அந்த பண்பை நாம் சந்திக்க இயலுமா? இங்கு பண்பு என்று கூறுவதால் அல்லாஹ்வின் வார்த்தையை மறுத்துப் பேசிய குற்றத்திற்க ஜமாலி உட்பட்டுள்ளார். (அல்லாஹ் காப்பாத்தனும்)


அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.   ‘எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும் மாறிமாறி வரச் செய்கிறேன்’. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7491), முஸ்லிம் (2246)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ்வின் கைகளில் அதிகாரம் உள்ளதாக அல்லாஹ்வே கூறுவதாக நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள் ஆனால் ஜமாலி கூட்டத்தாரோ இது கைகள் அல்ல மாறாக அல்லாஹ்வின் பண்பு என்று கூறுவதன் மூலம் காஃபிர்களை மிஞ்சிவிட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறைநம்பிக்கையாளர்கள் மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள் ‘(அதிபயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் என்ன?’ என்று பேசிக்கொள்வார்கள். அதன்படி அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் சென்று அவர்களிடம் ‘நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவிர்; அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்பித்தான். எனவே, எங்கள் இறைவன் எங்களை (இந்தச் சோதனையிலிருந்து) விடுவிக்க எங்களுக்காக அவனிடம் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொள்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று அவர்களிடம் சொல்லி, தம் செய்ததவற்றை அவர்களிடம் எடுத்துரைப்பார்கள்.
இந்த ஹதீஸை அனஸ்(ரலி) அறிவித்தார் (புகாரி 7516)

மேற்கண்ட நபிமொழியில் ஆதம் நபியைப் குறிப்பிடும்போது அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான் என்று கூறப்படுகிறது இதை இந்த ஜமாலி மறுத்தால் அது அவரது அறிவீனமாகும்!

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் மற்றுமொரு அறிவீனம்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

யூதப் பாதிரியார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் ஏற்படும்போது அல்லாஹ் வானங்கள் ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும் தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் மற்ற படைப்புகளை ஒரு விரலிலும் வைத்துக் கொண்டு பிறகு அவற்றை அசைப்பான். பின்னர் ‘நானே அரசன்; நானே அரசன்’ என்று சொல்வான்’ எனக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தாலும், அதை ஆமோதிக்கும் வகையிலும் நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியும் அளவுக்குச் சிரிப்பதை கண்டேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி அவர்கள் மதிக்கவில்லை’ எனும் (திருக்குர்ஆன் 06:91 வது) இறைவசனத்தைக் கூறினார்கள். புகாரி 7513.

மேற்கண்ட நபிமொழியை சகோதரர் பி.ஜே அவர்கள் முன்வைத்த போது இதை மறுத்துப் பேசிய ஜமாலி அல்லாஹ் பூமியை ஒரு விரலில் வைத்துக் கொள்கிறான் அப்படியெனில் அதில் உள்ள தண்ணீரையும், ஈர மண்ணையும் எவ்வாறு மற்றொரு விரலில் வைக்க முடியும் எல்லாமே பூமியில் அடங்கிவிடுகிறதே என்பதுதான். இந்த வாதம் ஜமாலி மூடத்தனத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. இதோ இந்த நபிமொழியின் விளக்கத்தை சற்று கவனமாக சிந்தித்து படியுங்கள்!

வானங்கள் ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும்

இங்கு வானங்கள் பூமிகளை என்று பண்மையாக வந்துள்ளது இதன் மூலம் பல்வேறு வானங்களையும் பூமிகளையும் அல்லாஹ் தன் விரலில் வைக்க இயலும் என்று அறியவேண்டும்.

தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் என்று கூறப்பட்டுள்ளது இது பூமியில் உள்ள தண்ணீரா? அல்லது ஈர மண்ணா? என்று சிந்திக்க வேண்டும் மேலும் மேற்கண்ட ஹதீஸில் பூமியில் உள்ள மண் தண்ணீர் என்று கூறப்படவில்லை அப்படியே கூறப்பட்டிருந்தாலும் படைத்த இறைவன் பூமியிலிருந்து தணியாக மண்ணையும், தண்ணீரையும் பிறிக்க சக்தியில்லாதவனா? அப்படியெனில் இந்த ஜமாலி அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவில்லை காஃபிர்களைப் எவ்வாறு தங்கள் தெய்வங்களை நம்புகிறார்களோ அவ்வாறே இந்த ஜமாலியும் அவரது கூட்டத்தாரும் அல்லாஹ்வை நம்புகிறார்கள். இது முற்றிலும் முட்டாள்தனமாககும் காரணம் மனிதன் மண்ணோடு மக்கி போனாலும் அவனுடைய விரல் நுனிகளை கூட உருவாக்குவோம் என்று அல்லாஹ் கூறும்போது அவன் தனியாக பூமியிலிருந்து நீரையும் ஈர மண்ணையும் பிறிக்க ஆற்றல் அல்லாதவனா?

 • சுவர்க்கத்தில் கூட மரமுண்டு (ஆதாரம் – புகாரி, முஸ்லிம்)
 • சுவர்க்கத்தில் கடை வீதி (ஆதாரம் – முஸ்லிம்)
 • சுவர்கத்தில் ஆறுகள் உண்டு (ஆதாரம் குர்ஆன்)
 • அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும் (ஆதாரம் திர்மிதி)
 • சுவனத்தின் மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது

அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும், அதனுடைய இரு ஓரங்களும் தங்கமாகும். முத்து பவளத்தின் மீது அது ஓடுகின்றது. அதனுடைய மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது. அதனுடைய தண்ணீர் தேனைவிடவும் இனிமையானது, ஐஸ் கட்டியை விடவும் வெண்மையானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

யூதர்களை மிஞ்சிய ஜமாலி கூட்டத்தார்

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று கூறியதன் மூலம் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் அவரை பின்பற்றும் ஜமாலி கூட்டத்தாரும் யூதர்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு யூதர்களை விட தரம் தாழ்ந்துவிட்டார்கள் அதற்கான ஆதாரம் இதோ

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 5:64)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ் யூதர்களைப் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ்வை கீழ்த்தனமாக சித்தரித்தார்கள் என்றும் அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று கிண்டலடித்தார்கள் என்றும் கூறுகிறான் ஆனால் அல்லாஹ்வோ யூதர்களை சபித்துவிட்டு தன்னுடைய இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன என்று கூறுகிறான். இங்கு அல்லாஹ் நாடியிருந்தால் அந்த வசனத்தில் தனக்கு கைகள் இல்லை என்று கூறி யூதர்களை பொய்யர்களாக்கி யிருக்கலாம் ஆனால் அல்லாஹ் உண்மை பேசக்கூடியவன் என்பதால் தனது இரு கைகளுமே விரிக்கப்பட்டே உள்ளன என்று கூறுகிறான். இங்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று கூறுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்த வசனத்தை மறுத்துப் பேசுவதோடு அவர் யூதர்களை விட தரம் தாழ்ந்துவிட்டார் என்பது நிரூபணமாகிவிட்டது. எனவே இவறை அறிவீனத்தின் தந்தை என்று கூறுவதா? அறிவீனத்தின் பாட்டன் என்று கூறுவதா?

முடிவுரை

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் 6:103)

அல்லாஹ்வை இந்த கண்களால் நம்மால் காண இயலாது எனவே அல்லாஹ்வை கற்பனையாக உருவகப்படுத்த இயலாது மாறாக அல்லாஹ் கூறும் கைகள், கால்கள், ஆகியவற்றை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறானோ அவ்வாறே இருப்பதாக நம்ப வேண்டும் இவைகளை பண்புகள் என்று வர்ணிக்க இயலாது பண்பு என்று வர்ணிக்க முற்பட்டால் அல்லாஹ்வையே பண்பு என்று கூறவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்.

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)

அல்லாஹ் தனது கைகள், கால்கள், முகம் ஆகியவற்றை ஆதாரமாக கூற அதை மறுத்து அவைகள் அனைத்தும் பண்புகள் என்று உளறுவது மேற்கண்ட அருள்மறை வசனத்தை நினைவு படுத்துகிறது. அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள்.

அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 3:106)

மறுமையில் அல்லாஹ்வை காணத் துடிக்கும் கண்களுக்கு அல்லாஹ் உருவமற்றவன் என்ற எண்ணம் ஏற்படாது அப்படி ஏற்பட்டால் அவர்கள் கருத்த முகங்களையுடையோராவர். எனவே நீங்கள் மறுமையில் மகிழ்ச்சியால் மலர்ந்த பிரகாசமான வெண்மையான முகங்களையுடையவர்களாக அல்லாஹ்வை காண துடித்தால் அல்லாஹ்வின் கைகளையும், கால்களையும், திரையையும், முகத்தையும் நம்புகள்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் குறிப்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கும் அவரது கூட்டத்தாருக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிராத்திப்போமாக!

அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)

அல்லாஹ்வின் திருப்பெயரால்…………

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக)

பிறை பார்த்தல் பிற்போக்குத்தனமா?

அன்பிற்கினிய மாற்றுமத அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு இதோ பதில்கள்!

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இஸ்லாத்தை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் அவன் சத்திய சன்மார்க்கம் என்றால் என்ன என்பதை உணர்ந்துக்கொள்ள முடியும். இப்படி உணர்வதற்கு கேள்வி ஞானம் மிக அவசியமாகிறது ஆனால் முற்படுத்தும் கேள்விகள் கோடாறிகளாக இருந்தால் சச்சரவுகளும் சஞ்சலமே மிகுந்து தேவையற்ற மனஸ்தாபங்கள் விளைந்துகிடுகின்றன எனவே சாதூரியமாக கேள்விகளை கேளுங்கள் இறைவன் நாடினால் நாமும் பதில் பதிக்க முற்படுகிறோம்.

சகோ. மகிழ்நன் முன்வைத்த கட்டுரையிலிருந்து பதில்கள்

கேள்வி

இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ அல்லது அடுத்த வாரமோ, இஸ்லாமியர்கள் புனித மாதமாகக் கருதும் ரமலான் தொடங்கி விடும். (சகோ. மகிழ்நன்)

பதில்

இந்த வரிகளில் சகோதரர் அவர்கள் ரமலான் மாதம் இஸ்லாமியர்களால் புனிதமாக கருதப்படுகிறது என்ற வாதத்தை ஏற்றுள்ளார் அப்படியெனில் அந்த மாதத்தை தானாக முன்வந்து கொச்சைப்படுத்தலாமா?

கேள்வி

நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, பூமியில் மோதவிருக்கும் ஒரு விண்கல், மோதும் நேரத்தினை மிகத் துல்லியமாக (வினாடிகள் உட்பட) அறிவிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது.

பதில்

இன்று அறிவியில் உலகம் துல்லியமாக கணிக்கும் ஆற்றலை பெற்றுள்ளது உண்மைதான் ஆனால் அறிவியல் ஆன்மீகமாகுமா? என்றால் அதற்கு சிறிதளவும் இடமில்லை.  அறிவியல் வேறு! ஆன்மீகம் வேறு. உதாரணமாக ஒவ்வொரு மனிதனும் உயிருடன் வாழ்கிறான் ஆனால் இந்த அறிவியல் உலகம் அந்த மனிதனது ஆன்மாவை காட்டுமா? இங்கு ஆன்மீகம் அறிவியலை மிஞ்சுகிறதே இதற்கு என்ன பதில். இங்கு இஸ்லாமியர்களுக்கு பிறை தொடக்கத்தை கணிப்பதில் எந்த குழப்பமும் கிடையாது மாறாக அறிவியலாளர்கள்தான் குழப்புகிறார்கள்.

கேள்வி

ஒவ்வொரு ஊரிலும் டவுன் காஜி என்று ஒருவரும், சென்னையில் தமிழகத் தலைமை காஜி என்று ஒருவரும் இருப்பார்கள். அவர்கள்தான், பிறை பார்த்து, மாதத்தின் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இவர்களைத் தவிர ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைமையும், அவர்கள் தனியாக பிறை பார்த்து, மாதத் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இங்கே ஏற்படும் குழப்பம்தான், ஒரே ஊரில் ஒரு பகுதியில் நோன்பு தொடங்கியும், இன்னொரு பகுதியில் நோன்பு தொடங்காமலும் இருக்கும் காரணம்.

பதில்

காஜி என்பவர் இஸ்லாமிய சட்டதிட்டங்களை அறிந்தவராவார் அவர் மார்க்க அறிவு குறைவாக உள்ளவர்களுக்கு உரிய சட்டதிட்டங்களை எடுத்துக்கூறி உண்மையை விளக்கிக்கூறுவார். இந்தியாவில் இஸ்லாமிய அரசு இல்லை எனவே பிறை விஷயத்தின் போது மக்களுக்கு நடுவராக இருந்து பெருநாள் அறிவிப்பு செய்ய காஜிகளை நாடுகின்றனர். இதில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு இடமே இல்லை.  சில குக்-கிராமங்களில் போதிய பள்ளிவாசல் வசதிகள் இருக்க வாய்ப்பில்லை அவர்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக பெருநாள் அறிவிப்பு செய்கின்றன. இங்கு பெருநாள் கொண்டாடும் முஸ்லிம்களாகிய நமக்கே எந்த குழப்பமும் ஏற்படுவதில்லை மாற்றுமதத்தவர்கள் ஏன் இவ்வளவு கவலைபட்டு சிரமமப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

கேள்வி

தலைப்பிறையை கண்ணால் பார்த்தால் மட்டுமே, அதனை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளவேண்டும் என்று சில ஹதீஸ்கள் இருப்பதாக சொல்வார்கள். முகம்மது வாழ்ந்த காலத்தில், அறிவியல் வளர்ச்சி இல்லாத நிலையில், இந்த நடைமுறைப் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இன்று அறிவியலின் வளர்ச்சியின் மூலம் தலைப்பிறையை மிக எளிதாகக் கணிக்க முடியும். கணிக்க முடியும், ஆனால் கணிக்கக் கூடாது என்று இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது “வரூஊம், ஆனா வராது” காமெடிதான் நினைவுக்கு வருகின்றது.

பதில்

எங்கள் மாநபி நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கட்டளையை பிறப்பித்தால் நாம் நம்மால் இயன்ற அளவுக்கு கட்டுப்படுவோம். முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் இப்போதைக்கு உள்ளது போன்ற அறிவியல் வளர்ச்சி இல்லை என்பது உண்மைதான் ஆனால் அல்லாஹ் அந்த நபிக்கு பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் சில விஞ்ஞான சித்தாந்தங்களை கற்றுத்தந்தான் அதன்படி கீழே உள்ள ஹதீஸ் ஆதாரமாக திகழ்கிறது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.

இன்றைக்கு சர்ச்சையாக இருக்கும் சந்திரன் பிறையைப் பேசும்போது நபிகளார் (ஸல்) அவர்கள் அந்த சந்திரன் பிளவுபட்டு இருதுண்டுகளாக மாறிற்று என்று விஞ்ஞானத்தை வகுத்துள்ளார்கள் அதை இன்றைய ஆராய்ச்சியாளர்களும் கண்டு வியக்குகின்றனர் மேலும் இதை அரபியன் பிளவு என்றும் வர்ணிக்கின்றனர். (படத்தை காணவும்)

கேள்வி

கணிக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் முக்கியமான காரணம், முகம்மது கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்என்று கூறியுள்ளார்; அதனை மீறக்கூடாது என்பதாகும். முகம்மது சொன்ன பல விஷயங்களை இன்றைய சூழலுக்கு ஒத்துவராது என்று கூறிவிட்டு, தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு செய்துவருகின்றனர். உதாரணத்திற்கு, தனியாகவோ, இருவர் மட்டுமோ பயணிக்க முகம்மது தடை விதித்துள்ளார்; பயணம் செய்யும்போது மூன்று நபர்கள் பயணிக்க அனுமதி கொடுத்துள்ளார். ஆனால், இன்றைய சூழலில் பயணத்தின் போது, இத்தகைய தடையை யாரும் பொருட்படுத்துவதேயில்லை.

பதில்

மாற்றுமத சகோதரர்களே சாதாரணன மனிதராகிய காந்தியை மஹாத்மா காந்தி என்று அழைக்கிறீர்கள் ஆனால் அல்லாஹ்வின் நபி (இறைதூதர்)யை முஹம்மது என்று அழைக்கிறீர்கள் இனியாவது முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) என்று அழைக்க முற்படுங்கள் அது உங்களுக்கு சிறந்ததாக அமையும்.

எங்கள் இதைத்தூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் பிறையை எவ்வாறு கணித்தார்களோ அவ்வாறே நாமும் கணிப்போம், அவர் எவ்வாறு நமக்கு வாழ வழிவகுத்து சென்றாரோ அதன்படியே நாம் வாழ்வோம். இதில் எங்களுக்கு எந்த சங்கடங்களோ, மனஸ்தாபங்களோ ஏற்படாது ஏனென்றால் எங்கள் வழி மாநபி (ஸல்) காட்டியவழி.

ஒருவேளை நாம் இன்றைய நவீன அறிவியலை பின்பற்றி பிறையை கணித்தால் உடனே ஏன் நபியை புறக்கணித்துவிட்டீர் என்று கூறமாட்டீர்களோ? இப்படி செய்தால் அப்படி பேசுவது அப்படி செய்தால் இப்படி பேசுவதுதானே மனிதனின் குணம் இதை திருத்த முடியுமா! இங்கு மாற்றுமத அன்பர் பயணத்தை பற்றி பேசுவது பொருத்தமாக இல்லை மாறாக குழப்பமாக உள்ளது!

கேள்வி

அடுத்தது, உலகம் முழுதும் ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது; உலகின் ஒரு பாதி பகலாக இருக்கும்போது; இன்னொரு பாதி இரவாக இருக்கும். அதனால், ஒரே நேரத்தில் நோன்பு வைப்பதோ, தொழுவதோ சாத்தியமில்லை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் ‘beating around the bush’ என்று சொல்லுவார்கள், அதற்கு மிகச்சரியான உதாரணம், இவர்களது இந்த உதாரணம்தான். அனைவரும் கேட்பது, ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நாட்களில் மாதம் தொடங்குகின்றதே; இவர்கள் சொல்லுவது, ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது.

கிருத்துவர்கள் உலகம் முழுவதும் டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள். சர்வதேச தேதிக் கோட்டினை (International Date Line), அளவீடாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் கிருத்துவர்கள், தங்கள் நாட்டு நேரப்படி (Local Time Zone), கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

பதில்

இங்கு முஸ்லிம்களாகிய நாம் சந்திர நாட்காட்டியை பயன்படுத்துகிறோம் ஆனால் கிருத்தவர்கள் சூரிய நாட்காட்டியை பயன்படுத்துகிறார்கள் இந்த இரண்டையும் ஒப்பிடுவது நாகரீகமற்ற செயலாகும். உதாரணமாக அமாவாசையன்று பிறை தெரியாது அதற்காக சந்திரனே இல்லை என்று கூறிவிடமுடியாது ஆனால் சூரிய கிரணங்கள் சந்திரனில் பட்டு அதன் வெளிச்சம் எங்கு தென்படுகிறதோ அங்குதான் தலைப்பிறை தெரியும் அதுவும் சில நிமிடங்களே தென்படும். இது இயற்கையின் நீதி. அதே போல இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்க கிருத்தவர்களின் ஜனவரி புத்தாண்டு உதயமாகிறது அந்த நேரம் அமெரிக்காவில் மாலை நேரமாகும் அவர்கள் கொண்டாட மாட்டார்கள் அவர்கள் நேரப்படி நள்ளிரவு 12 மணிக்குத்தான் கொண்டாடுவார்கள் இதை உங்களால் உணர முடியவில்லையோ?

கேள்வி

அதுபோல், இஸ்லாமியர்களும் தங்கள் மாதங்களின் தொடக்கத்தை, சர்வேதச தேதிக் கோட்டின் அடிப்படையில், உள்ளூர் நேரப்படி கணக்கிட்டுக்கொள்ளலாம். ஆனால், சர்வேதச தேதிக் கோடு ஒன்று இருப்பதையே மறைத்துவிட்டு, சவூதியை அளவீடாகக் கொண்டு கணக்கிடும்போது பல குழப்பங்கள் வரும் என்று கூறி குழம்பிக்கொள்வார்கள்.

துருவப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் நாடுகளான நார்வே, பின்லாந்து முதலியவற்றில், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும். அத்தகையப் பகுதிகளில், பிறை பார்த்து மாதத் தொடக்கத்தைக் கணக்கிட முடியாது. அப்பொழுது, வேறு நாடுகளில் பிறை தெரிந்தால், நார்வேயில் ரமலான் தொடக்கத்தை கணக்கிடலாம் என்பார்கள்.

வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற “அதிசயத்தை”, குர் ஆன் மூலம் உரைத்த அல்லாஹ்விற்குத் தெரியாதா, தான் படைத்த பூமியில் நார்வே போன்ற நாடுகளும் இருக்கும், அவற்றிற்கு இத்தகைய விதிகள் எல்லாம் பொருந்தாது என்று? அரேபியா என்னும் சிறு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு, அவர்கள் வாழ்வியலுக்குப் பொருந்தும் அளவிற்கு கூறப்பட்ட சில விஷயங்கள், உலகம் முழுமைக்கும் என்று கூறுவது இங்கே பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை சரி செய்வதற்காகவேணும், அறிவியல் கணிப்புகளை பின்பற்றுகிறார்களா என்று பார்ப்போம்.

பதில்

சர்வதேச தேதிக்கோட்டை பற்றி இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாம் அதற்கான அறிவு நம்மிடம் நிறைவாகவே உள்ளது ஏன் நாம் இந்துக்களுக்கு வழிபாட்டு முறையை கற்றுத்தருகிறோமா? வருடத்திற்கு 12 மாதங்கள் என்று அல்லாஹ் கூறிவிட்டான் பிறையை பற்றி அல்லாஹ் கூறும் போது

(நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; ”அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. ………………. (அருள்மறை குர்ஆன் 2:189)

படைத்த ரப்புல் ஆலமீனுக்கு தெரியும் நார்வே எது, நாகப்பட்டினம் எது என்ற எனவே ………………………………………………………………………….. உங்களுக்கு பிறை பற்றி கேள்வி எழுப்ப எந்த அருகதையும் கிடையாது! என்பதுதான் இப்போதைக்கு பதிலாகும். மன்னிக்கவும்

அல்லாஹ் மன்னிப்பானாக!

குறிப்பு

இங்கு சகோதரர் ரமேஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க தீர்த்தம் என்ற சொடரை நீக்கியுள்ளோம்! இதுபோன்று அவர்கள் அல்லாஹ்வை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்வார்களா? கண்ணியமுள்ள மாற்றுமதத்தவர்கள் முன்வரவும் மாறாக அல்லாஹ்வை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்தாதவர்கள் நம் பார்வையில் இனி கண்ணியக் குறைவானவர்களே!

நோன்பாளிகளே பிறை குழப்பத்திற்கு இதோ தீர்வு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புச் சகோதர, சகோதரிகளே


புனித ரமலான் மாதம் வந்துவிட்டாலே முஸ்லிம்களாகிய நம் சமுதாயத்தின் மத்தியில் பெரும் மகிழ்ச்சி காணப்படுகிறது நோன்பு நோற்க வேண்டும், தான தர்மங்களை செயல்படுத்த வேண்டும் பொய், புறம், கேலி, கிண்டல், நக்கல் நையாண்டி ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கனமாக சிந்திக்கிறோம் மேலும் ஒருபடி முன்னே சென்று நம் சமுதாயத்தவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆர்வப்படுகிறோம் ஆனால் அதே வேலையில் இந்த மாதம் வந்துவிட்டால் சமுதாயம் பிறையின் விஷயத்தில் தத்தளிக்கிறது நம் சமுதாயத்தில் சிலர் மார்க்க விஷயத்தில் பிறைக்கு புது வடிவம் கொடுத்த புதுமையை புகுத்தி குழப்பிவிடுகிறார்கள் இதோ இதுதான் அந்த குழப்பம்!

08.09.2010 அன்று ரமளான் மாதம் முடிவடைகிறது, அதற்கு அடுத்த நாளான 09.09.2010 பெருநாள் தினம் என்றும் அன்று நோன்பு வைப்பதை அல்லாஹ்வின் தூதர் தடை செய்துள்ளார்கள் என்றும் சில இயக்கவாதிகள் தங்கள் வளைத்தளங்களில் பிரசுரிக்கிறார்கள் இதுபோன்ற செய்திகளை கண்டு மனம் வேதனைப்படுகிறது நோன்பாளிகளாகிய நம்மில் ஒரு கூட்டத்தார் இந்த சுவையான மாதத்தின் முதல் நாளையும் இறுதி நாளையும் தீர்மானிக்க அருள்மறை குர்ஆன் மற்றும் நபிவழியை அணுகாமல் தான்தோன்றித்தனமான செயல்படுகின்றனர். இந்த நாளில்தான் ரமலான் ஆரம்பமாகிறது! இந்த நாளில்தான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று நபிகளார் அறுதியிட்டு தின்னமாக கூறியிருக்கிறார்களா? அல்லது அவரவர் பகுதியின் பிறையை அடிப்படையாக வைத்து தீர்மானிக்க வழிவகுத்தார்களா?

அன்புச் சகோதரர்களே ரமலான் ஆரம்பிப்பதற்க முன்னரும் பெருநாள் தினத்தையும் 1 மாதத்திற்கு முன்னரே முன்கூட்டி தீர்மானிக்க மார்க்கத்தில் எவருக்கேனும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? இது நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நடைமுறையா? இது சுன்னத்தான வழிமுறையா?

அருள்மறை குர்ஆன் மற்றும் நபிகளார் (ஸல்) அவர்களின் கீழ்கண்ட இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

அல்லாஹ் உலக மக்கள் அனைவரையும் நோக்கி உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் என்று தெளிவாக கூறுகிறான் இதன் விளக்கம் அவரவர் பகுதியில் பிறையை வைத்து ரமலான் மற்றும் பெருநாளை அறிந்துக்கொள்ளுங்கள் என்றுதானே அர்த்தமாகிறது. மேலும் மாநபி (ஸல்) அவர்கள் கீழ்காணும் விதமாக அறிவுறுத்துகிறார்கள் அதாவது!

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

நபிமார்களின் முத்திரையாம் மாநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து 23 ஆண்டுகள் வஹியினை பெற்று நமக்கு அருள்மறை குர்ஆனையும், விஞ்ஞானத்தையும் நற்பண்புகளையும் காட்டித்தந்து வழிகாட்டிச்சென்றார்கள் மேலும் அந்த மாநபி (ஸல்) அவர்கள் பல்வேறு விஞ்ஞான ரீதியான ஆதாரங்களையும் நம்முன்னே வைத்துவிட்டு சென்றார்கள் அதன் வரிசையில் இதோ கீழ்கண்ட ஹதீஸ் ஒன்றை படியுங்கள்

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று . அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.

இன்றைக்கு சர்ச்சையாக இருக்கும் சந்திரன் பிறையைப் பேசும்போது நபிகளார் (ஸல்) அவர்கள் அந்த சந்திரன் பிளவுபட்டு இருதுண்டுகளாக மாறிற்று என்று விஞ்ஞானத்தை வகுத்துள்ளார்கள் அதை இன்றைய ஆராய்ச்சியாளர்களும் கண்டு வியக்குகின்றனர். இப்படிப்பட்ட மாநபி (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் இந்த உலகிற்கு ஒரு பிறைதான் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவிப்பு செய்திருக்கலாமே ஆனால் மாநபி (ஸல்) அவர்கள் மாதங்களைப் பற்றி கீழ்கண்டவாறு கூறுவது ஏன்?

”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).

விஞ்ஞான பிறைவாதிகள் உண்மையை உணர மறுப்பது ஏன்?

இணைவைப்பு கொள்கையை ஆதரித்து பேசக்கூடிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்றோர் விவாதங்களில் ஈடுபடும்போது அவர்களுக்கு முன்னர் என்னதான் குர்ஆன் ஹதீஸ் வசனங்களை எடுத்துவைத்தாலும் அந்த கூட்டத்தார் உண்மையை அறிந்தும் அறியாதவிதமாக மறுத்து பேசுவார்கள் இது அறிவுடைமையாகாது எனவே இந்த பிடிவாத குணங்கள் தவ்ஹீதை பற்றி பேசி பிறையை முன்கூட்டி தீர்மானிக்கும் விஞ்ஞான பிறைவாதிகளுக்கு ஏன் ஏற்படுகிறது. நிலைமை இப்படியிருக்க  ஜமாலி கூட்டத்தாரின் பிடிவாத குணத்திற்கும் விஞ்ஞான பிறைகணிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

நபிகளார் மாதம் இப்படியும் இருக்கும் அப்படியும் இருக்கும் என்கிறார்கள் இதை இவர்கள் உணருவதில்லை, பிறைபார்த்து நோன்பு வையுங்கள் பெருநாள் கொண்டாடுங்கள் என்றால் அதையும் உணர மறுக்கின்றனர் இறுதியாக அல்லாஹ் சுப்ஹானவதாலா கீழ்கண்டவாறு உண்மையை உரைக்கிறான் அதையும் உணர்வதில்லை இதோ!

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

விஞ்ஞான பிறைவாதிகள் முன்கூட்டி தீர்மானிக்கும் இந்த பிறையின் மூலம் உலகம் முழுவதும் ஒரே நாள் பிறை ஒரே நாள் பெருநாள் என்ற வாதத்தை முன்வைப்பது அல்லாஹ்வின் வார்த்தைக்கு மாற்றமில்லையா?

”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).

என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூற இந்த விஞ்ஞான பிறைவாதிகளோ உலகம் முழுவதும் ஒரே நாள் பிறை ஒரே நாள் பெருநாள் என்று வாதிடுகிறார்கள் இது நபிகளாரின் பொன்மொழிகளுக்கு மாற்றமில்லையா?

தங்கள் அமீருக்கு (தலைவருக்கு) கட்டுப்படுகிறார்களா?

மேற்கண்ட விஞ்ஞான பிறைவாதிகள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுகிறார்கள் அதன்படி அவர்கள் நடந்துக்கொள்கிறார்களா? என்றால் அதுவும் கிடையாது மாறாக தங்கள் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஞ்ஞான பிறை விஷயம் பற்றி தங்கள் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு உண்மையை ஒத்துக்கொண்டார் அப்படியிருக்க அந்த வார்த்தைகளுக்கேணும் இவர்கள் கட்டுப்படுகிறார்களா? தாங்கள் கொண்ட கொள்கையைக்காவது செவிசாய்க்கிறார்களா? என்றால் அதுவும் கிடையாது!

 • பிறை விஷயத்தில் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கட்டுப்படுவதில்லை!

 • பிறை விஷயத்தில் நபிகளார் (ஸல்) அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்படுவதில்லை!

 • பிறை விஷயத்தில் தங்கள் தலைவரின் வார்த்தைக்கு கட்டுப்படுவதில்லை!

அல்லாஹ்வுக்கோ, அவனது தூதருக்கோ அல்லது தங்களது அமீர் என்ற தலைவர் முதற்கொண்டு யாருக்கும் கட்டுப்படாமல் முழுக்க, முழுக்க விஞ்ஞானத்திற்கு கட்டுப்படும் இவர்களுக்கு நாம் ஏன் கட்டுப்படவேண்டும், நம் சமுதாயம் ஏன் கட்டுபட வேண்டும்! சிந்திப்பீர்! செயல்படுவீர்!

விஞ்ஞானத்தில் பிறையையும் பெருநாளையும் முன்கூட்டியே கணிக்கும் இவர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்விகள் இதோ இதுதான்

 • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1 மாதத்திற்கு முன் முன்கூட்டியே ரமலான் பிறையை அறிவித்தார்களா?

 • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1 மாதத்திற்கு முன் முன்கூட்டியே பெருநாள் தொழுகை இந்த நாள்தான் விழும் என்று அறிவித்தார்களா?

இந்த பிறை பற்றிய பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே பிறை பற்றிய இந்த பிரச்சினைக்க நாம் நபிகளார் (ஸல்) அவர்களை நீதிபதியாக, ஏற்று அவர் எவ்வாறு பிறையை கையாண்டார்களோ அதுபோன்று நாமும் பிறை விஷயத்தில் தெளிவை பெற்ற நன்மக்களாக முயல்வோமாக!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்

தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.

பெரும்பாண்மையான இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும் படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!

தவ்ஹீத் எதை போதிக்கிறது

தவ்ஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்று பொருள்படும் அதாவது ஏகனாகிய அல்லாஹ்வை பற்றி இஸ்லாம் கூறும் சித்தாந்தம் இதோ:

 • அல்லாஹ் தனித்தவன், இணை துணையில்லாதவன்,
 • அல்லாஹுக்கு நிகர் அவனே
 • அல்லாஹுக்கு நிகராக யாரும் இல்லை,
 • அல்லாஹ் அவனே முதலானவன், அவனே முடிவானவன்,
 • அல்லாஹ் அவனே அகிலங்களை படைத்து பரிபாலிப்பவன்
 • அல்லாஹ் அவனே ஜீவராசிகள் அனைத்திற்கும் ரட்சகன்
 • அல்லாஹ் அருளானவன், அன்பானவன், அழகானவன்,
 • அல்லாஹ் பேராற்றலுடையவன், அண்டங்களின் அதிபதி
 • அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசையாது
 • அல்லாஹ் படைப்பினங்கள் ஒவ்வொன்றையும கண்காணிப்பவன்
 • அல்லாஹ் அனைத்து பாக்கியங்களையும் அருள்பவன்
 • அல்லாஹ் நம்மை பராமரிப்பவன், நம்மை பாதுகாப்பவன்,

மேற்கண்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கே கொண்டுள்ள பேராற்றலுடைய அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வை வணங்குகள் அவனைத் தவிர வேறு எதையும் வணங்காதீர்கள் அவ்வாறு வணங்கினால் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறது இந்த கோட்பாடுதான் தவ்ஹீத் அதாவது இஸ்லாத்தின் முதல் முக்கிய கலிமாவாகிய

லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ்

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்)

தவ்ஹீத் கொள்கையை பின்பற்றுபவர்கள் என்ன கூறுகிறார்கள்!

தவ்ஹீத் என்ற அழகான கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தாமாக எதையும் உருவாக்கிக்கொண்டு பேசுவது கிடையாது மாறாக அவர்கள் அல்குர்ஆனையும், நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையான ஹதீஸ்களையும் தீர ஆராய்ந்து அந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எவ்வாறு  வாழந்துக் காட்டி வாழ வலியுறுத்தினார்களோ அதைத்தான் போதிக்கிறார்கள். காரணம் நபி (ஸல்) அவர்களை பின்பற்று பவர்களாகிய நாம் நாமாக, நம் இஷ்டப்படி எதையும் பின்பற்றுவதில்லை எத்திவைப்பதில்லை மாறாக நம் நபிகளாரின் வழிமுறை பின்பற்றுகிறோம். இதோ கீழ்கண்ட இறைவசனத்தை கேளுங்கள்!

அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 10:15)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவர்கள் சத்தியமுழக்கமிடுகிறார்கள் இதோ அந்த சத்திய முழக்கத்தை சற்று நீங்களே சிந்தியுங்கள்!

அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள்!

ஏகனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம், நம் வாழ்வும் நம் மரணமும் ஒரு சோதனையாக உள்ளது அந்த சோதனையில் வெற்றி பெற வேண்டுமெனில் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அல்லாஹ்விடமே அருளுதவி தேடுங்கள் என்ற கண்ணியமாக முழக்கமிடுகிறார்கள்.

இந்த சத்திய முழக்கத்தை கேட்டவுடன் இணைவைப்பாளர்களும், மாற்றுமத்தவர்களும் எங்கள் இஷ்ட தெய்வங்களை ஏசுகிறான், இவனுக்கு அனுமதியளித்தது யார்? என்று பேசிக்கொள்கிறார்கள் சற்று கீழ்கண்ட வசனத்தை படித்தால் இவ்வாறு முழக்கமிட சொன்னது யார் என்ற புரியும்! இதோ அந்த வசனம்

நபிகளார் (ஸல்) கூறினார்கள்

பிரார்த்தனை தான் வணக்கமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ர­)

(ஆதார நூல்கள்: அஹ்மத் , திர்மீதி, அபூதாவூத்)

அல்லாஹ் கூறுகிறான்

ல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:106)

இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் தர்காஹ்வை வழிபடாதீர்கள்!

தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தர்காஹ் வாதிகளை நோக்கி இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் அவர்கள் மண்ணோடு மண்ணாகி மக்கிவிட்டார்கள் அவர்களால் எதையும் கேட்க முடியாது, அவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்று அறிவுரை கூறினால் உடனே தர்காஹ்வாதிகள் என் அவ்லியாவை திட்டுகிறான் இவனுக்கு ஏன் இந்த நெஞ்சழுத்தம் என்று வினவுகிறார்கள். கப்ருகளை வணங்கும் சகோதரர்களே கீழ்கண்ட அருள்மறை குர்ஆனில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தை கேட்டால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்!

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:197, 198)

”கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தனர்’ (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.)


தாயத்து கட்டாதீர்கள்!

தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தர்காஹ்வாதி களிடம் மந்திரித்த தாயத்துக்களை கட்டாதீர்கள் அது நபிவழிக்கு முற்றிலும் மாற்றமானது இதனால் நீங்கள் சீரழிந்துவிடுவீர்கள் என்று அறிவுரை கூறினால் உடனே தர்காஹ்வாதிகள் உனக்கு இவ்வாறு கூறியவன் யார் என்று கேள்வி எழுப்புவார்கள் அதற்கு பதில் இதோ கீழ்கண்ட எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்தான் நம்மை தாயத்து கட்ட வேண்டாம் என்று ஆணை பிரப்பித்தார்!

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்

ஷபே பராத் இரவு வேண்டாம், மண்ணரைத் திருவிழா கூடாது!

தவ்ஹீத் என்ற அற்புதமான கொள்கையை ஏற்றுக்கொண்ட நாம் கப்ருகளை வணங்கும் தர்காஹ்வாதிகளையும், மத்ஹபுவாதி களையும் நோக்கி ஷபே பராத் என்ற இரவை நபிகளார் காட்டித் தரவில்லை அன்றைய தினம் மண்ணரைகளில் விழா கொண்டாடுவது காஃபிர்கள் மற்றும் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறை என்று அறிவுரை கூறினால் அதை ஏற்க மறுத்து நம்மை அடிக்க கைகளை ஓங்குகிறார்கள் இவர்கள் ஏன் கீழ்கண்ட வசனத்தை உணர்வதில்லை

அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:-

“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319    3456)

அல்லாஹ் கூறுகிறான்

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

மவ்லூது பாடாதீர்கள், கத்தம் பாத்திஹா ஓதாதீர்கள்!

மவ்லூதுகளை பாடி கத்தம் பாத்திஹாக்களையும், நபிகளார் காட்டித்தராத திக்ருகளையும், 1000 முறை கௌது நாயத்தை அழைப்பதையும் கண்டித்து இதனால் நரகம் சித்தப்படும் என்ற எச்சரித்தால் நம்மை நோக்கி தர்காஹ்வாதிகள் மூடர்கள் இவர்கள் புதுமைவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள் ஆனால் இவ்வாறு உண்மையை உணர மறுக்கும் இவர்கள் நபிகளாரின் கீழ்கண்ட அறிவுரையை இதுநாள் வரை உணராதது ஏன்?

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள். (அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)

யார் அதிகப்பிரசங்கவாதிகள் தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவரா?

குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் இணைவைப்பாளர்கள் மத்ஹபுவாதிகள்

அல்லாஹ்வை தவிர எதையும் வணங்காதீர்கள்(அல்குர்ஆன்)

அவ்லியாவையும் வணங்குவோம்

இறந்தோரை பிரார்த்திக்காதிர்கள் (அல்குர்ஆன்)

இறந்தோர் நமக்கு அருள்புரிவார்கள்

கப்ருகளை உயர்த்திக் கட்டாதீர்கள்(நபிமொழி)

கப்ருகளை உயர்த்திக் கட்டுவோம்

உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் (நபிமொழி)

உயர்த்திக் கட்டப்படட கப்ருகளையும், தர்காஹ்களையும் இடிக்கமாட்டோம்!

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள்.

(அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)

மார்க்கத்தில் புதுமையை விரும்புவோம் மவ்லூது, கத்தம் பாத்திஹா, கந்தூரி விழா, ஷபே பராத், மண்ணரை திருவிழா 1000 முறை கவுஸ் என்ற அழைப்போம் இன்னும் ஏராளம் இருக்கு அது நம் மூதாதையர்கள் காட்டித்தந்த வழிமுறை அதை விடமாட்டோம்!

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்
தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்

தாயத்தை கட்டினால் என்ன? தாயத்தை கட்டுவோம், கட்டக்கூடாது என்று கூறுபவர் யார்?

முடிவுரை

தர்காஹ்வை வணங்கி வந்த என் அருமை சகோதர சகோதரிகளே இந்த அறிவுரை உண்ணிப்பாக படித்த நீங்கள் இனி எந்த வலிமுறையை பின்பற்ற போகிறீர்கள்!

அல்லாஹ்வும் அவனது அனைத்து நபிமார்களும் காட்டித் தந்த வழிமுறையையா? அல்லது அல்லாஹ்வும் அவனது நபிமார்களும் காட்டித்தராத உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய கண்மூடித்தனமான குருட்டு வழிமுறையையா?

நீங்கள் எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்

இனிப்பு வேண்டுமா? கசப்பு வேண்டுமா என்றால் இனிப்பை அழகாக தேர்ந்தெடுப்பீர்கள்! மானம் வேண்டுமா? அவமானம் வேண்டுமா என்றால் மானம்தான் பெரிது என்பீர்கள்! சுவர்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? என்றால் சுவர்கம்தான் வேண்டும் என்பீர்கள் ஆனால் அந்த சுவர்கத்திற்கு செல்ல நீங்கள் உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய மார்க்கத்திற்கு முரணாண காரியங்கள் அனைத்தையும் இன்றே இக்கணமே விட வேண்டும் அதற்கு பதிலாக நபிகாளர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் அது எப்படிப்பட்டது இதோ அல்லாஹ் கூறுகிறான் கேளுங்கள்!

(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (அல்குர்ஆன், 16:44)

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி


அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)


அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (அந்த) நாளில் அவர்களிடம் (நீங்கள் மக்களுக்கு எனது கட்டளைகளை எடுத்துக் கூறிய போது) “என்ன பதிலளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான். அதற்கு அவர்கள் அது பற்றி எங்களுக்கு எவ்வித ஞானமுமில்லை. நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை யெல்லாம் அறிந்தவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5: 109)


(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்59:7)

குர்ஆன் ஹதிஸ் வசனங்களை தேட பேருதவியாக இருந்த வெப், பிளாக் தளங்கள் அனைத்திற்கும் நன்றி!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஆக்டோபஸ் குறியும் கூத்தாட்டமும்? நவீன முட்டாள்கள்தனம்

2010ம் ஆண்டு ஜுன்-ஜுலை மாதங்களின் இடையே நடைபெற்ற உலக கால்பந்தாட்ட போட்டிகளில் பல்வேறு நாட்டு அணிகள் கலந்துக்கொண்டன இந்த போட்டிகளை உலகத்தில் பல கோடி மக்களும் கண்டு களித்தனர் ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டிகளை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டக்காரர்களும், குறி சொல்லும் சோதிடர்களும் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டனர் அவர்களின் வரிசையில் ஆக்டோபஸ் சோதிடம் மிகவும் பேசப்பட்டது உண்மையில் ஆக்டோபஸ் குறி சொல்லுமா? ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் நவீன சோதிடக்காரர்களுக்கு இதோ சவுக்கடி!

ஆக்டோபஸ் என்றால் என்ன?

எட்டு கால்களும் அதன் நடுவில் வட்ட வடிவமான தலையை கொண்ட ஒருவகை நீர்வாழ் உயிரினத்திற்கு ஆக்டோபஸ் என்று பெயர்.  இந்த ஆக்டோபஸ் குறைந்தபட்சம் 2 அடி முதல் அதிகபட்சமாக 18 அடி நீளம் வரை வளரும். பொதுவாக நடுத்தர வகை ஆக்டோபஸ்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலும் பசுபிக் பெருங்கடலிலும் வாழ்கின்றன.

 

ஆக்டோபஸ் எவ்வாறு உணவு உட்கொள்கிறது?

இந்த ஆக்டோபஸ்-ன் ஒவ்வொரு காலிலும் ஊறிஞ்சு குழாய்கள் காணப்படுகின்றன மொத்தமாக ஒவ்வொரு ஆக்டோபஸின் உடலிலும் 240 ஊறிஞ்சும் குழாய்கள் ஆங்காங்கே பரவி காணப்படுகின்றன. இந்த உறிஞ்சு குழாய்கள் இறையை இலாவகமாக பிடித்து வாய்ப்பகுதிக்குள் தள்ளுவதற்கு பயன்படுகிறது.

 

ஆக்டோபஸ் எவ்வாறு இடம் பெயர்ந்து செல்கிறது?

ஆக்டோபஸ் என்ற உயிரினத்தின் 8 கால்களிலும் ஒருவகையான உறிஞ்சு குழாய்கள் இருப்பதை மேலே படித்தீர்கள் இந்த உறிஞ்சு குழாய்கள் உணவை கவ்வி பிடிப்பதற்கு மட்டுமல்லாது கடலுக்கு அடியில் காணப்படும் பெரிய பாறைகளை கவ்வி பிடித்து இலாவகமாக நகர்வதற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது கடலின் மணல் திட்டுக்களை உறிஞ்சு குழாய்கள் உதவியால் பிடித்துக்கொண்டு நகர்ந்தும் செல்கிறது.

 

ஆக்டோபஸ்-ன் தற்காப்பு கலை

ஆக்டோபஸ் என்ற உயிரினம் அதிபுத்திசாலி உயிரினங்களின் வரிசையில் இடம்பெறுகிறது அதற்கான காரணம் இது தன்னை பிற உயிரினங்களின் தற்காத்துக்கொள்ளும் விதத்தை வைத்து அறிந்துக கொள்ளலாம்.

 

இந்த ஆக்டோபஸ்கள் மணல் திட்டுக்களில் காணப்படும் சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியோ அல்லது மணல் குகைகளை அமைத்தோ அதற்குள் பதுங்கிக்கொண்டு எந்த விலங்கினமும் தன்னை நெருங்காத வண்ணம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது.

 

மேலும் இதன் வயிறுகளிலிருந்து ஒருவகையான கருமை நிறமுடைய திரவம் வெளிப்படுகிறது அது தன்னை தாக்க வரும் உயிரினத்தின் எதிரில் எச்சரிகை விடுத்து அந்த உயிரினத்தை தன்னிடமிருந்து விரட்டியடிக்க பயன்படுத்துகிறது.

 

அதுமட்டுமின்றி இந்த ஆக்டோபஸ் உயிரினங்கள் பச்சோந்திகளைப் போன்று அவ்வப்போது தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்கிறது. இந்த நிகழ்வு அந்த ஆக்டோபஸ்-ன் உள்ளுணர்வு மாற்றங்கள், சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்கிறது. மேலும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இந்த ஆக்டோபஸ்கள் நாடினால் அருகிலுள்ள கடல் பாறைகளின் நிறத்தை சில நிமிடங்களில் தேர்ந்தேடுத்துக் கொண்டு எதிரியை திக்குமுக்காட வைத்துவிடுகிறதாம்.

 

ஆக்டோபஸும் அதன் இனப் பெருக்கமும்

ஆக்டோபஸ் இடும் முட்டைகள்

ஆக்டோபஸ் என்ற உயிரினத்திலும் ஆண் பெண் என்ற இரண்டு வகை உண்டு இந்த இரண்டுமே தன் இனப்பெருக்கத்திற்கான உணர்வுகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆக்டோபஸும் பிறந்த 5வது மாதத்திலேயே இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடுகின்றன என்று ஆராய்ச்சியானர்கள் கூறுகின்றனர்.

 

ஆண் ஆக்டோபஸின் உடலில் உள்ள ஒரு கால் பகுதியில் SPERM எனப்படும் ஒருவகை விந்து அணுக்களுகளை பெற்றுள்ளன இதை SPERMATOPHORES என்று வல்லுநர்கள் அழைக்கின்றனர். இந்த விந்து அணுக்கள் பெண் ஆக்டோபஸின் MANTLE CAVITY என்ற பகுதிக்குள் செலுத்தப்பட்டு அதை சூளுரச் செய்கிறது. பெண் ஆக்டோபஸ் சூள் கொண்ட பின் 1/8 இஞ்ச் கொண்ட முட்டைகளை இடுகிறது. இந்த பெண் ஆக்டோபஸ்கள் சுமார் 100,000 முட்டைகளை இடும் திறன் கொண்டவைகளாக திகழ்கின்றன. இறுதியாக 4 முதல் 8 வாரங்கள் இந்த பெண் ஆக்டோபஸ் கோழிகளை போன்று அடைகாக்கின்றன பின்னர் ஆக்டோபஸ் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரத்து துவங்குகின்றன.

 

ஆக்டோபஸ்களின் வாழ்நாள் எவ்வளவு?

இன்றைய நவீன உலகத்தில் உலா வரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  ஆக்டோபஸ்களின் வாழக்கை முறையை உண்ணிப்பாக கவனித்த வந்தாலும் அதன் வாழ்நாளை பொருத்தவரை இன்னும் ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளனர் காரணம் அதுபற்றிய உண்மைகளை இன்னும் அவர்களால் முழுவதுமாக ஆராய முடியவில்லை.  

 

இந்த ஆக்டோபஸ்கள் உத்தேசமாக பிறந்து ஒருவருடம்  வாழ்ந்து மரணித்துவிடும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள் இதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதம் ஆக்டோபஸ்கள் பிறந்த 5 மாதத்தில் தங்கள் இனப்பெருக்க உணர்வுகளை எட்டுவதுதான். அதே சமயம் ஆக்டோபஸ்கள் விகாரணமான உடல் அமைப்பை கொண்டுள்ளதால் அதன் மரணம் அதன் உடலமைப்பை கொண்டு அமையலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

 

ஆக்டோபஸ்- குறி கேட்பது பாவமான காரியமாகும்

ஆழ்கடல் நீரோட்டங்களில் அழகாக தன் ஜோடியுடன் சுந்திரமாக உலவிக்கொண்டு திரியும் ஆக்டோபஸ்களை பிடித்து அவைகளை கண்ணாடி நீர்த்தொட்டிகளில் வைத்து காட்சிப் பொருளாக பார்த்து ரசிப்பது அசிங்கமான செயலாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை பற்றி குரள் எழுப்பும் நாம் அழகான விலங்கினங்களையும் பறவை, நீர் வாழ் மற்றும் இன்ன பிற உயிரினங்களின் உரிமையையும் பரிக்க முற்படலாமா?

மேலும் கால்பந்தாட்டத்தில் இந்த அணி வெல்லுமா? அந்த அணி வெல்லுமா என்று என்று சோதிடம் பார்ப்பதற்காக இரண்டு தொட்டிகளில் ஆக்டோபஸ்களின் உணவை வைத்துவிட்டு அந்த கண்ணாடி தொட்டிகளுக்கு வெளியே இரண்டு அணிகளின் தேசிய கொடியை ஒட்டி ஆக்டோபஸ் எந்த தொட்டியின் உணவை சாப்பிடுகிறதோ அந்த அணி வெற்றி பெரும் என்று சோதிடம் கணிக்கிறார்களே இது கேவலமான காரியமாக தென்பட வில்லையா?

பகுத்தறிவை கொண்டுள்ள மனிதன் போயும் போயும் ஆக்டோபஸ்கள், கிளிகள், பறவைகளிடம் மற்றும் வாண்மண்டல கோள்கள் ஆகியவற்றிடம் குறி கேட்பது மனித இனத்திற்கே அசிங்கமான செயலாகும்! இந்த செயல் எவ்வாறு உள்ளதென்றால் அதற்கான உதாரணம் இதோ

துள்ளிக்குதிக்கும் மான்கள் நிறைந்த சோலையில் நான்கு சிங்கங்கள் அமர்ந்துக்கொண்டு இப்போது மான்களை வேட்டையாடினால் வெற்றி கிடைக்குமா? வெற்றி கிடைக்காதா? என்று பேசிக்கொள்ளுமாம் அதற்கு ஒரு முட்டாள் சிங்கம் அருகில் ஊர்ந்துக்கொண்டு செல்லும் நத்தையை பிடித்து மரக்கிளையில் வைக்குமாம் பிறகு அந்த முட்டாள் சிங்கம் கூறுமாம் நத்தை மரத்திலிருந்து கீழே விழுந்தால் நம்முடைய மான் வேட்டையில் வெற்றி கிடைக்கும் நத்தை மரத்திலிருந்து கீழே விழாமல் இருந்தால் நமக்கு தோல்வி நிச்சயம் என்று குறி கூறுமாம். இந்த முட்டாள் சிங்கத்தின் வார்த்தைக்கு மயங்கி மற்ற 3 சிங்கங்களும் மான் வேட்டைக்காக நத்தையை உற்று நோக்கிக்கொண்டே மான்களை தொலைத்துவிடுமாம்!

ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் மடையர்களே!

ஆக்டோபஸ் சோதிடம்

கால்பந்தாட்டத்திற்காக ஆக்டோபஸ்களை நீங்கள் பயன் படுத்தினீர்கள் இதோ இந்தவகை குறி பார்க்கும் ஒரு சுவாரஸ்யமான போட்டியை நடத்த உங்களால் இயலுமா? இதோ அந்த போட்டி

இரண்டு அணிகளை தேர்ந்தேடுங்கள் ஒரு அணி வீரர்களிடம் பழைய ரக துப்பாக்கிகளை கொடுத்துவிடுங்கள் மற்றொரு அணி வீரர்களிடம் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து விடுங்கள் பிறகு இரண்டு நீர்த்தொட்டிகளில் ஆக்டோபஸ் உணவை வைத்துவிட்டு அந்த தொட்டிகளின் வெளியே இரு அணிகளின் சின்னங்களை ஒட்டிவிடுங்கள் இப்போது ஆக்டோபஸ் உயிரினத்தை அந்த தொட்டிக்கு அருகே வைத்துவிடுங்கள் அணி 1-ல் உள்ள தொட்டியின் உணவை ஆக்டோபஸ் சாப்பிட்டால் உங்களை அணி 1 பழைய ரக துப்பாக்கியால் சுடும் அல்லது அணி 2-ல் உள்ள தொட்டியின் உணவை ஆக்டோபஸ் உண்டுவிட்டால் உங்களை அந்த அணியினர் நவீன ரக துப்பாக்கியால் சுடுவார்கள்! ஆக்டோபஸ் உயிரினத்திடம் குறி கேட்கும் மடையர்களே இது உதாரணத்திற்காகத்தான் கூறப்பட்டது இதற்கும் துணிந்துவிடாதீர்கள்!

ஆக்டோபஸ் குறியின் மூலம் குறிப்பிட்ட அணிக்கு வெற்றி எவ்வாறு கிடைத்தது!

இதோ அடுக்கான காரணங்கள்!

 

 • ஒவ்வொரு அணியின் சார்பாக விளையாடும் வீரர்கள் மனிதர்கள்தான்.
 • ஒவ்வொரு மனிதனும் பலவீனமானவன் எளிதில் நம்பிவிடுவான்
 • கால்பந்தாட்ட வீரர்கள் நிற்பது இலட்சம் பேர் கூடியுள்ள மைதானித்தில்
 • கால்பந்தாட்ட வீரர்களின் குறிக்கோள் நன்றாக விளையாட வேண்டும் என்பதே
 • தன் அணிக்காக கோள் அடிக்க தவறினால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற பதற்றமும், அணியின் கோச் கேவலமாக திட்டுவார் என்ற பயமும் ஒவ்வொரு அணி வீரனிடமும் இருக்கும்!
 • தன் ஆட்டத்திறன் எடுபடவில்லையென்றால் சொந்த நாட்டில் முகம் காட்ட இயலாது என்ற வெட்க உணர்வும் ஒவ்வொரு வீரனுக்கும் இருக்கும்!
 • தனது அணி தோற்றுவிட்டால் பணத்தை வாங்கிக்கொண்டார்களோ என்ற அவதூறு பட்டம் கிடைத்துவிடுமே என்ற பயமும் ஒரு பக்கம் இருக்கும்!
 • 30 வருடங்களாக எடுத்த கடுமையான பயிற்சி தோல்வியில் முடிந்தால் தன்னுடைய முயற்சிகள் வீனாகிவிடுமே என்ற பதற்றம் நெஞ்சை பிளக்கும்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆக்டோபஸ்களை வைத்து குறி சொல்லி விளையாட விருக்கும் இரு அணியில் ஒரு அணி நிச்சயம் தோற்று போய்விடும் என்று கூறினால் அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட விளையாட்டு வீரர்களால் எவ்வாறு ஜீரணிக்க இயலும் இது விளையாட்டு துரோகமில்லையா? இதனால் மேற்கூறப்பட்ட பதற்றம் இன்னும் அதிகமாக கூடி அந்த விளையாட்டு வீரர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கோல் அடிக்கும் எண்ணம் வருமா? அல்லது நம் அணி ஆக்டோபஸ் குறி போல் தோற்றுவிடுமா என்ற பயம் வருமா?

 

இதோ சுய பரிசோதனை செய்து பாருங்கள்

காலையில் உங்கள் நண்பர்களோடு வாக்கிங் செல்வீர்கள் அப்போது யார் முதலில் வருவார் என்று போட்டி கூட வரும் அப்போது உங்கள் பின்னால் ஒருவன் நின்றுக்கொண்டு நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் தோற்றுவிடுவீர்கள் என்று கூறினால் உங்களுக்கு எரிச்சல் வருமா? ஓட்டத்தில் கவனம் வருமா? அல்லது உங்கள் கவனம் சிதறுமா?

இதோ இஸ்லாம் கூறும் அறிவுரைகளை கேளுங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)

 

பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

 

முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)

 

அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (அல்குர்ஆன் 24:40)

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.(அல்குர்ஆன்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எனக்கு மெயில் மூலமாக கிடைத்த தகவல் தங்களுக்கு மிக்க பயனுறும் என்பதன் அடிப்படையில் இங்கு சமர்பிக்கிறேன்! கீழ்கண்ட லிங்கிற்கு சென்று நம் வாக்காளர் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள இயலுகிறது!

உங்கள் பெயர் பதிவுகளை சரிபார்க்க

http://www.elections.tn.gov.in/eroll/  

 

வாக்காளர் பதிவுகளுக்கு தேவைப்படும் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்ய

http://www.elections.tn.gov.in/forms.htm  

 

தகவல் அளித்தமைக்கு நன்றி

http://newstbm.blogspot.com/2010/06/blog-post.html

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

அன்புச் சகோதர சகோதரிகளே!

 

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

 

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை

 1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
 2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
 3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
 4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
 5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
 6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!

மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்

ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது

ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. (அல் குர்ஆன்: 86:5-7)

 

இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்

பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!

பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது

ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்

இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்

பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும்  விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

 

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG  அதாவது கருமுட்டையாகும்

 

கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!

பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!

மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

 • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
 • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.
 • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது

 • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன
 • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
 • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
 • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன

பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்

மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

 • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

 • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது
 • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது
 • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

 

 • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.
 • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
 • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.

 • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்! (இதற்கு தகுந்த ஆதாரங்களை அறிவியல் ஆய்வாளர்கள் காட்ட வேண்டும் அதுவரை இது அறிவியல் கூற்று என்றுதான் நம்ப இயலும்)

 

 • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.

 • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
 • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
 • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

 

 • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

குறிப்பு – பல்வேறு இணைதளங்கள் இந்த கட்டுரைக்கு உதவின நன்றிகள் பல!

அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!

அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்

 

%d bloggers like this: