பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு
என் இஸ்லாமிய அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!அல்லாஹ்வுக்காக பொறுமையை மேற்கொள்வீராக! சுவனத்தை தட்டிச்செல்ல பொறுமையை மேற்கொள்வீராக! இன்றைய தினம் பொறுமைதான் நமக்கு சிறந்தது!
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டும் விலகி இருப்பீராக! (அருள்மறை குர்ஆன் 7:199)
அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அருள்மறை குர்ஆன் 3:200)
‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அருள்மறை குர்ஆன் 42:43)
நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)
“வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழி தவறவே மாட்டார்கள். (உமர்(ரலி) நூல்:ரஜீன்)
‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)
நாம் முஸ்லிம்கள் அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் எனவே இன்றைய தினம் பொறுமைதான் நமக்கு சிறந்தது!
எங்கள் இறைவா அநீதி இழைக்கப்பட்ட எங்கள் சமுதாயத்திற்காக எங்கள் மீது உன் அமைதியையும் பேரருளையும் இறக்குவாயாக! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!
சுப்ஹானல்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹு அக்பர்!
மறுமொழியொன்றை இடுங்கள்