Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2010அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.(அல்குர்ஆன்)

Read Full Post »

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எனக்கு மெயில் மூலமாக கிடைத்த தகவல் தங்களுக்கு மிக்க பயனுறும் என்பதன் அடிப்படையில் இங்கு சமர்பிக்கிறேன்! கீழ்கண்ட லிங்கிற்கு சென்று நம் வாக்காளர் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள இயலுகிறது!

உங்கள் பெயர் பதிவுகளை சரிபார்க்க

http://www.elections.tn.gov.in/eroll/  

 

வாக்காளர் பதிவுகளுக்கு தேவைப்படும் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்ய

http://www.elections.tn.gov.in/forms.htm  

 

தகவல் அளித்தமைக்கு நன்றி

http://newstbm.blogspot.com/2010/06/blog-post.html

Read Full Post »

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

அன்புச் சகோதர சகோதரிகளே!

 

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

 

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை

 1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
 2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
 3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
 4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
 5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
 6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!

மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்

ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது

ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. (அல் குர்ஆன்: 86:5-7)

 

இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்

பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!

பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது

ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்

இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்

பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும்  விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

 

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG  அதாவது கருமுட்டையாகும்

 

கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!

பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!

மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

 • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
 • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.
 • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது

 • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன
 • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
 • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
 • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன

பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்

மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

 • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

 • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது
 • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது
 • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

 

 • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.
 • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
 • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.

 • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்! (இதற்கு தகுந்த ஆதாரங்களை அறிவியல் ஆய்வாளர்கள் காட்ட வேண்டும் அதுவரை இது அறிவியல் கூற்று என்றுதான் நம்ப இயலும்)

 

 • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.

 • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
 • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
 • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

 

 • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

குறிப்பு – பல்வேறு இணைதளங்கள் இந்த கட்டுரைக்கு உதவின நன்றிகள் பல!

அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!

அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்

 

Read Full Post »

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஜட்கா ஹராமானது! ஹலால் மாமிசம் உண்ண வாங்க!

தமிழ்ஹிந்து தளத்தில் ஜட்கா என்ற உயிர்பலியிடும் முறைக்கு வரவேற்பு அளித்து இஸ்லாமியர்கள் உண்ணும் ஹலால் மாமிசத்தை இகழ்ந்து பேசுகிறார்கள் எனவே தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு ஜட்கா பற்றிய உண்மையை அறியச் செய்த பதிலளிக்கிறோம்!

ஜட்கா என்பது என்ன?

ஜட்கா (Jhatka) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது இதற்கு கொல்வது என்று பெயர். ஜட்கா என்ற பெயரை வடமாநிலத்தவர்கள் சட்கா (Chatka) என்றும் அழைப்பர்.

ஜட்கா முறைப்படி எவ்வாறு பலியிடுகிறார்கள்?

ஒரு பலியிடக்கூடிய பிராணியை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு அந்த பிராணியின் கழுத்தை நோக்கி ஓங்கி ஒரே அடியாக கூர்மையான கத்தி, வால் மற்றும் கோடாரியால் வெட்டுவதுதான் ஜட்கா எனப்படு வதாகும். ஒரு பிராணியை இவ்வாறு வெட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

தமிழ்ஹிந்து என்ற தளத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்: ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட மிருகத்தில் ரத்தம் இருப்பதில்லை. ரத்தம் வடிய விடப்பட்டு விடுகிறது. இந்த கறி சுவையற்றதாக ஆனாலும், மென்மையாக ஆகிவிடுவதால், இந்த கறியை பல இந்துக்கள் வாங்கி உண்கின்றனர். அதனால், அந்த துடிக்க துடிக்க கொல்லப்பட்ட மிருகத்தின் துயரத்துக்கு பொறுப்பாளியாகவும் ஆகி விடுகின்றனர். ஆனால் இவர்களின் வாதம் அடிப்படை ஆதாரமற்றதாகும் மேலும் ஜட்கா முறையில் பிராணியின் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதை கவனிக்கவும்!

பலி பிராணியின் கழுத்தை ஓங்கி வெட்டுவதால் அந்த பிராணியின் தலை முழுவதுமாக வெட்டப்பட்டு கீழே விழுந்து விடுகிறது. இதனால் மூளை செயலிழந்துவிடுகிறது மேலும் மூளைக்கும் உடலுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட்டு அந்த பிராணியின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கப்பட்டு ஆங்காங்கே நின்றுவிடுகிறது. இதனால் அந்த பிராணியின் இரத்தில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற வழியின்றி மாமிசத்தில் தங்கிவிடுகிறது. நோய்க்கிருமிகள் கலந்த மாமிசத்தை உண்பதில் ஏனோ இவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி!

ஜட்கா முறையும் சீக்கியர்களின் ஈனச் செயலும்

ஜட்கா முறையில் ஒரு பலி பிராணியை கொல்வது சீக்கியர்களின் விருப்பமான நடவடிக்கையாகும் ஏனெனில் சீக்கிய மதம் இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளை எதிர்க்கும் மதமாகும். இந்த சீக்கிய மதவாதிகள் இஸ்லாம் எதை தடுக்கிறதோ அதை செய்து காட்டும் திறமைசாலிகள் அந்த அளவுக்கு அவர்களின் மத போதகர்களால் மூலைச் சலவை செய்யப்பட்டவர்கள்.

சீக்கியர்களின் வீரதீர விளையாட்டுக்களில் ஜட்கா என்பதும் ஒன்றாகும் இவர்கள் பலி பிராணியை மக்கள் நிறைந்த கூட்டத்திற்கு நடுவே நிற்க வைத்து அதன் பின்னால் நின்று ஆரவாரமிட்டு அந்த பலி பிராணி பயந்து நடுங்க வேண்டும் இப்படிப்பட்ட சித்திரவதைக்கு பின்னர் ஒரே வெட்டு தலையும் உடலும் இரண்டாக பிரிந்துவிடும் இவ்வாறு பலி பிராணியை வெட்டுவது சீக்கியர்களின் வர்மக்கலையாம்!

சீக்கியர்களின் முட்டாள்தனம்!

சீக்கியர்கள் இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்பதால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாவத்திற்கு ஆளாகிறார்களாம் காரணம் நாம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆடு வெட்டுகிறோமாம்! எனவேதான் அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்து வெட்டப்படும் ஹலால் மாமிசத்தை இவர்கள் விரும்புவதில்லையாம்! எனவேதான் ஜட்கா முறையில் இவர்கள் பலிகொடுக்கும் போது Sat Sri Akaal” (சாத்திரிகால்) என்ற போர் முழக்கமிட்டு பலியிடுகிறார்கள்! ஆடு வெட்ட போர் முழக்கமா? என்ன வேடிக்கை இது!

சீக்கிய மதத்தில் இரு பிரிவுகள் உள்ளன அதில் ஒரு பிரிவினர் மட்டும்தான் ஜட்கா முறையில் அறுத்த மாமிசத்தை உட்கொள்கிறார்கள்! மேலும் இன்றொரு சீக்கிய பிரிவினர் அசைவ உணவை வெறுக்கிறார்கள். குறிப்பாக முக்கிய பிரதிநிதிகளான SGPC (SHIROMANI GURDWARA PARBANDHAK COMMITTEE) அதாவது சிரோன்மனி குருத்துவாரா பிரபந்தக் கமீட்டியும், தம்தாமி தக்சால் (Damdami Taksal) என்ற அமைப்பும் அசைவ உணவையும் ஜட்கா முறையையும் கடுமையாக எதிர்க்கிறார்கள் மேலும் இவர்களின் கூற்றுப்படி தங்களுடைய எந்த சீக்கிய குருவும் ஜட்கா முறையை ஆதரிக்கவில்லை என்று குரல் எழுப்புகிறார்கள்.

பொற்கோவில் என்று பரவலாக பேசப்படும் குருத்துவாராவில் ஜட்கா முறை நடைபெறுவதில்லை மேலும் இந்த ஜட்கா முறையை பல்வேறு சீக்கிய அமைப்பகளும் வருடாவருடம் கண்டிக்கின்றன. ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக கலம் இறங்கக் கூடிய சில மாற்றுமத தீவிரவாதிகள் தான் இந்த ஜட்கா என்ற முறையை ஆதரிக்கின்றன மாறாக மாற்றமதத்தவர்களில் பெரும்பாலானோர் ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட இறைச்சி யைத்தான் புசிக்கின்றனர் இதிலிருந்தே ஜட்கா முறைக்கு மாற்று மத்தவர்களிடம் செல்வாக்கு இல்லை என்பது தெளிவாக புரிகிறது!

ஜட்கா என்ற பழக்கம் பகவத் கீதைக்க எதிரானது

பகவத் கீதையில் உயிர் பலியிடுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்ற அப்படியிருக்க உயிர்பலி கொடுக்க ஜட்கா முறையை அனுமதிப்பது ஏன்?

ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வதும் அதன் கஷ்டத்தை அதிகரிப்பதும் தவறானது என்றும் ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படுகிறது என்றும் தமிழ்ஹிந்து என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடுகிறார்கள் ஆனால் இவர்கள் ஜட்கா முறையில் நடைபெறும் அக்கிரமங்களை மூடிமறைத்துவிடுகிறார்கள் இதோ ஹிந்துக்களின் ஜட்கா முறையில் உயிர் எவ்வாறு சித்ரவதை செய்யப்படுகிறது என்பதை சற்று கேளுங்கள்!

 • ஜட்கா கொடுப்பதற்கு முன் பலி பிராணியின் Testicles எனப்படும் இந்திரிய விதைகள் அறுக்கப்படுகின்றன அந்த பலி பிராணி துடிக்கிறது இதற்கு இவர்களின் வேத புராணங்களில் ஆதாரம் உள்ளது மற்ற வேத புராணங்களில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை படியுங்கள்!

விருஷ்னிக மேஷ சம்பந்தா க்ரஹீ

(Vrishanika mesha sambanda grahee)

முக்தைக மேஷ ஜீவோத சாஹி

(Muktaika meshaha jeevoda sahee)

மேஷம் எனப்படும் ஜட்கா கொடுக்கும் போது உயிருள்ள ஆட்டின் விந்து விதைகளை அறுக்க இந்த சுலோகம் வலியுறுத்து கிறதாம்! இந்த வேத சுலோகங்களை இந்த தமிழ்ஹிந்து மறுக்குமா?

 • கோழியாக இருந்தால் அதன் தலையை கதவின் துவாரத்தில் இட்டு நசுக்குகிறார்கள்

 • காளியம்மண் பண்டிகைகளின் போதும் சுடுகாட்டு கொல்லி என்ற விழாவின் போதும் ஆடு, கோழி இவைகளை பலி பிராணியாக நேர்ச்சை செய்து உயிரோடு இந்த மிருகங்களை பற்களால் கடித்து கொல்கிறார்கள்!

இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்ண அருள்மறையின் வசனங்களை இந்த தமிழ்ஹிந்து இணைய தளவாதிகளிடம் இங்கிருந்தே சமர்பிக்கிறோம் இனியாவது இவர்கள் இஸ்லாத்தை சிந்தித்து நேர்வழிக்கு வர முயலட்டும்!

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)

அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:88)

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்5:93)

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்2:173)

இஸ்லாத்திற்குள் வாருங்கள்! தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பிதழ் இனிதே விடப்பட்டுள்ளது! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

Read Full Post »

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு நிகழும் அன்றாட பிரச்சினைகள்


 • (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
 • ‘அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
 • ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
 • அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
 • மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
 • எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:1 முதல் 6)

மேற்கண்ட இந்த அருள்மறை வசனங்கள் எழுதவும், படிக்கவும் தெரியாத கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு அனைத்தையும் சூழ்ந்து அறியக்கூடிய ஞானமிக்க இறைவானாகிய அல்லாஹ் விடமிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளாகும். இதன் மூலம் நாம் அறியக்கூடியது என்னவெனில் அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகிறான் என்பதே! (சுப்ஹானல்லாஹ்)

அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).


இங்கு அல்லாஹ் அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை என்று கூறுகிறான் கல்வியைப் பற்றி சிந்தித்திருந்தால் நம் சமுதாயம் இன்று அனைத்து சமூகத்தாரையும் பின்னுக்குத் தள்ளியிருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை இதனால் என்ன தீமைகள், ஏன் நம் சமுதாய  மாணவ மாணவிகள் கல்வியில் பின்தங்கியுள்ளார்கள் என்பதை அலசிப்பார்ப்போம் வாருங்கள்!

தீன்குல மாணவ மாணவிகள் படிப்பில் ஆர்வம் செலுத்தற்கான காரணங்கள் இதோ

நெம்பர் 1 – பெற்றோர்களும் ஆசரியர்களும்

நாம்தான் ஒழுங்காக படிக்கவில்லை நம் பிள்ளைகளாவது படிக்கட்டுமே என்று தவிக்கும் பெற்றோருக்கு சாதாரண நோட்டு புத்தகம் வாங்குவதற்கு கூட வசதிகள் குறைவாக உள்ளது காரணம் பெற்றோரின் கல்வியறிவின்மைதான்.

நம் சமுதாயத்தின் 5ம் வகுப்பு கீழ் படித்த பெற்றோர்களில் பெறும்பாலும் பீடி சுற்றுபவர்களாகவும், பஞ்சர்கடை, பிளாஸ்டிக் பொருள் விற்பனையாளராகவும், ரிக்சா இழுப்பவராகவும் குதிரைவண்டி ஓட்டுனர்களாகவும் தான் வாழ்கிறார்கள் மேலும் 6 முதல் 10ம் வகுப்பு மேல் படித்த பெற்றோர்களில் பெறும்பாலானோர் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தினக்கூலிகளாகவும், ஆட்டோ ஓட்டுனராகவும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வறுமை இவர்களின் பிள்ளைகளை பாதிக்கிறது!


 • 6ம் வகுப்பு படிக்கும் மகன் வசதியற்ற தன் தந்தையிடம் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கித்தர கெஞ்சுகிறான் ஆனால் போதிய பணவசதியன்மையால் தந்தை முகம் சுழிக்கிறார்!
 • 7ம் வகுப்பு படிக்கும் மகள் அடுப்பங்கரையில் இருக்கும் தன் வசதியற்ற தாயிடம் ஒரு நோட்டு புத்தகம் வாங்கித்தர கெஞ்சுகிறாள் ஆனால் தாயோ அப்பாவுக்கு வருமானம் இல்லை இரண்டு நாள் போகட்டும் என்று கூறி பள்ளிக்கு அனுப்புகிறாள்!

மகன் பள்ளிக்கு செல்கிறான் பக்கத்து வகுப்பில் பயிலும் தன் தோழனிடம் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்குகிறான் இதை பார்க்கும் ஆசிரியரோ ஜாமென்ட்ரி பாக்ஸ் கூட வாங்க உனக்கு வக்கில்லையா என்று வகுப்பறையில் எல்லோர் முன்னால் கண்டிக்கிறார் மகனின் மனம் உடைகிறது! கண்களில் கண்ணீர் வடிகிறது, இறுதியாக படிப்பில் கவனம் சிதறுகிறது!

நோட்டு புத்தகம் வாங்காத நிலையில் மகள் தயங்கி தயங்கி  பள்ளிக்கு செல்கிறாள் ஆசிரியையோ நோட்டு வாங்கிவரவில்லை என்று காரணம் கூறி வகுப்பறையில் ஏளனம் செய்து வெளியே நிற்க வைக்கிறார். மகளின் கண்களில் கண்ணீர் வடிகிறது, இறுதியாக படிப்பில் கவனம் சிதறுகிறது!

நெம்பர் 2 குடும்பத்தில் வறுமை

அல்லாஹ்வின் கருணையினால் நம் குடும்பங்களில் தகப்பன்கள் அதிகம்பேர் சாராயம் குடிப்பதில்லை எனினும் வறுமானம் குறைவாக உள்ளதால் குடும்பத்தை நிர்வகிப்பதில் தடுமாறு கிறார்கள். இதோ மதந்தோறும் வகைவகையான போராட்டங்கள்

 • முதல் வாரம் வீட்டு வாடகை கட்ட போராட்டம்
 • இரண்டாம் வாரம் மின்சார கட்டணம் கட்ட போராட்டம்
 • மூன்றாம் வாரம் கியஸ், சீமெண்ணை வாங்க போராட்டம்
 • நான்காவது வாரம் அரிசி வாங்க போராட்டம்

மேற்கண்ட போராட்டங்களும், பிரச்சினைகளும் நம் சமுதாய குடும்பங்களில் விஷ்வரூபம் எடுக்கிறது இதற்கு நடுவில் சிக்கித்தவிப்பது நம் தீன்குல மாணவ மாணவிகளே!


மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் குடும்ப வறுமையைப் பற்றி சிந்திப்பதில்லை ஆனால் நம் தீன்குல செல்வங்களோ ஏன் என் அப்பா அழுகிறார், ஏன் என் அம்மா கண்ணை கசக்குகிறாள் என்று மனதிற்குள் சிந்திக்கிறது காரணம் இது சிந்திக்கும் சமுதாயமல்லவா?

நெம்பர் 3 பசியும் பட்டினியும்

நம் தீன்குல மாணவர்கள் மதிய உணவுக்கு ஆசை ஆசையாக உணவருந்த வீட்டிற்கு சென்றால் அப்போதுதான் அடுப் பங்கறையில் அரிசி உலை வைக்கப்படுகிறது தாயாரோ சமயல் எண்ணை தீர்ந்துவிட்டது எனவே பழைய சாதத்தை சாப்பிடு என்று கண்ணீரோடு கூறிவிடுகிறாள் நம் மாணவனோ வகுப்பறையில் புத்தகத்தை திறந்தால் தாயாரின் முகம்தான் தெரிகிறது!

நம் சமுதாய மாணவியோ மதிய உணவுக்கு சாப்பாட்டை டிபன் பாக்ஸ்லி கட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறாள் ஆனால் மதிய உணவு இடைவேளையின் போது ஒரு ஓரத்தில் தனிமையில் அமர்ந்து வேகமாக சாப்பிட்டு முடிக்கிறாள் காரணம் இவள் கொண்டுவந்துள்ளதோ பொன்னி அரிசி அல்ல மாறாக உலுத்துப்போன ரேசன் அரிசி இதனால் நாக்கில் ருசி இருப்பதில்லை படிக்கும்போது வாய் நமநமக்கிறது!

நெம்பர் 3 வீட்டில் படிப்பதில்லை டியுசன் கூட செல்வதில்லை

நம் தீன்குல மாணவ மாணவிகளில் வீட்டில் படிக்கலாம் என்றால் பெற்றோருக்கு கல்வியறிவு குறைவு பாடங்களை அவர்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை எனவே தாங்களாகவே படித்து பாடங்களை புரிந்துக்கொள்கிறார்கள் மேலும் பெற்றோர்களிடம் வருமானம் குறைவாக உள்ளதால் நிறைய தீன்குல மாணவ மாணவிகள் டியுசன் கூட செல்வதில்லை இதற்கு கூட மாதம் ரூ.500 செலவு செய்ய வேண்டுமே! தீன்குல மாணவர்களோ இதை சாக்காக பயன்படுத்தி கோலி விளையாடுவது, நொன்டியடிப்பது, வீதி வீதியாக ஓடி சுற்றித்திரித்திரிவது ஆகிய பொழுது போக்குகளில் மாலை நேரத்தை கழித்துவிடுகிறார்கள்.

தீன்குல மாணக்கர்கள் நன்றாக படிக்க இதோ வழிகள்

தீன்குல மாணவ மாணவிகள் நன்றாக படித்து முன்னேற பெற்றோர்களின் பொறுப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது அதற்கு அடுத்தபடியாக நம் சமுதாயத்தில் வசதிபடைத்தவர்களின் பொறுப்பும் முக்கியமாக திகழ்கிறது. ஆம் இவர்கள் ஊதாரித்தனமான செலவுகளை நிறுத்திக்கொண்டால் நம் தீன்குழ ஏழை மகன்களும், மகள்களும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பெற்றோர் திருந்த வழிகள்

தர்காஹ்வுக்கு போகாதீர்கள்! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள்

 • வருடா வருடம் குடும்பத்துடன் நாகூர், ஏர்வாடி முத்துப்பேட்டை தர்காஹ்களுக்கு சென்று ஊதாரித்தனமாக ரூ.6000 செலவு செய்கிறார்கள் இதை விட்டுவிட்டு அந்த பணத்தை தன் மகன் மற்றும் மகளுடைய ஒருவருட படிப்பு செலவுக்கு ஒதுக்க இயலாதா? ஏன் பெற்றோர் இதை சிந்திப்பதில்லை!
 • இந்த மாதம் இந்த ஃபாத்திஹா, அந்த மாதம் அந்த ஃபாத்திஹா என்று மாதந்தோறும் நடத்தும் ஃபாத்திஹா என்ற பூஜைக்கு ஆகும் செலவு மாதச் செலவு ரூ.300 இதை நிறுத்திவிட்டடு மேற்படி பணத்தை தன் மகளுடைய டியுசனுக்கு செலவிட இயலாதா? ஏன் பெற்றோர் இதை சிந்திப்பதில்லை!
 • தந்தை பீடி குடிப்பதற்கு மாதம் ரூ.400 செலவு செய்கிறார் இதை நிறுத்திக்கொண்டு தன் மகனுடைய டியுசன் செலவுக்கு என்று ஒதுக்க இயலாதா? ஏன் பெற்றோர் இதை சிந்திப்பதில்லை!
 • ஏழ்மை நிலையிலும் வருடத்தில் ஒரு முறை கடன்வாங்கியாவது காதர்வலி உருஸ் படையல் என்று ஊதாரித்தனமாக ரூ.10,000 செலவு செய்கிறார்கள் இதை விட்டுவிட்டு அந்த பணத்தில் நல்ல அரிசியை வாங்கி தன் பிள்ளைகளுக்கு கொடுக்க இயலாதா? ஏன் பெற்றோர் இதை சிந்திப்பதில்லை!

நம் சமுதாயத்தில் வசதிபடைத்தவர்களும் திருந்த வழிகள்

 • நம் சமுதாத்தில் உள்ள ஒவ்வொரு வசதிபடைத்த இளைஞனும் அணியும் ஜீன்ஸ் பேண்டின் விலை ரூ.2000 இதை தன் பகுதியில் வாழும் ஏழை தீன்குல மாணவனின் படிப்பு செலவுக்கு ஒதுக்கி ஜகாத் கொடுக்க இயலாதா? சாதாரண பேண்ட் அணிந்தால் சமுதாயம் ஒதுக்கிவிடுமா அல்லது அல்லாஹ் கோபித்துக்கொள்வானா?

 • நம் சமுதாத்தில் உள்ள ஒவ்வொரு வசதி படைத்த கண்ணிகள் அணியும் வேலைப்பாடு மிகக் சவுதி ஹிஜாப்-ன் விலை ரூ.2000 இதை தன் பகுதியில் வாழும் ஏழை தீன்குல மாணவியின் படிப்பு செலவுக்கு ஒதுக்கி ஜகாத் கொடுக்க இயலாதா? விலை குறைந்த வேலைப்பாடு இல்லாத ஹிஜாப் அணிந்தால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா?

 • ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கணவன் தன் மனைவிக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வாங்கித்தரும் ஹீல்ஸ் சாண்டல் (செருப்பு)ன் விலை ரூ.400. இதை தன் பகுதியில் வாழும் ஏழை மாணவனின் இரண்டு மாத டியுசன் செலவுக்கு கொடுத்தால் தங்கள் மதிப்பு குறைந்தவிடுமா? ரூ.50க்கு செறுப்பு அணிந்தால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா?

இஸ்லாத்தை ஏற்று தங்கள் சொத்து சுகங்களை துறந்து ஹிஜரத் செய்த முகம் அறியாத புதிய மார்க்க தோழர்களுக்காக எத்தனையோ சஹாபா பெருமக்கள் தங்கள் சொத்துக்களில் சரிபாதியை கொடுத்து அவர்களும் முன்னேற வழிவகை செய்துள்ளார்கள் இப்படிப்பட்ட தியாகச் செம்மல்கள் வாழந்த நம் இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு ஒரு செருப்புக்கு ஆகும் செலவைக்கூட வசதிபடைத்த நம் சமுதாய சகோதர, சகோதரிகள் நம் சமுதாயத்தின் ஏழை மாணவ மாணவிகளுக்கு செலவழிக்க முற்படாதது வெட்கக்கேடாக உள்ளது! இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கையை வாழக்கூடிய நாம் எளிதாக சுவனம் சென்றுவிட இயலுமா? சிந்தியுங்கள்!

என் மகனும் மகளும் எக்கேடு கெட்டால் எனக்கென்ன எனக்குத் தேவையானது ஃபாத்திஹாவும், சந்தனக்கூடமும், தர்காஹ்வும், காதர்வலி உருஸும்தான் என்று வாழந்து வரும் வசதியற்ற பெற்றோர் தாங்கள் இணைவைத்துக்கொண்டு தங்கள் குழந்தைகளை துன்புறுத்திக்கொள்கிறார்களே இதை அல்லாஹ் மன்னிப்பானா?

இன்று நம் சமுதாயம் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்டு உள்ளதற்கு காரணம் நாம் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஒழுங்காக படிக்காததுதான் இது நம் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் மீது அல்லாஹ் விதித்த சாபமோ என்று கூட சில நேரங்களில் சிந்திக்க தோன்றுகிறது ஏனெனில் அந்த அளவுக்கு நம் சமுதாயத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தரிகெட்டு ஒரு கேவளமான வாழக்கையை வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலை மாற வேண்டும் அதற்கு மாணவ மாணவிகளுக்காக நாம் தாவா பணியை அதிகமதிகம் நடத்த வேண்டும் அப்போதுதான் இந்த சமுதாயம் திருந்த மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

Read Full Post »

%d bloggers like this: