Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே 19th, 2010

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இஸ்லாமிய கூகுல் குழும நிர்வாகிகளுக்கு எச்சரிக்கைகள்

கண்ணியமிக்க தீன்குல சகோதர சகோதரிகளே!

நபி (ஸல்) அவர்கள், ”மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதுஎன்று கூறியபோது நாங்கள் கேட்டோம் யாருக்கு?” நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்என பதிலளித்தார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)

முஸ்லிம்களாகிய நாம் தற்போது கணிணி உலகில் வாழ்ந்து வருகிறோம் எனவே நாம் நம்முடைய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும், நம்மால் ஆன அறிவுரைகளையும், நல் அமல்களையும் முகம் தெரியாத முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத சகோதர, சகோதரிகளிடம் பகிர்ந்துக்கொள்ளவும், மார்க்கத்தை நன்முறையில் பரப்பவும் இஸ்லாமிய கூகுல் குழுமங்களை நாடுகிறோம். ஆனால் இந்த இஸ்லாமிய கூகுல் குழுமங்களில் ஒரு சில குழுமங்கள் இஸ்லாத்தின் நெறிமுறைகளை ஓரளவுக்கு கடைபிடிக்கின்றன மற்றும் சில குழுமங்களோ இஸ்லாத்தின் கண்ணியத்தை சீர்குலைத்து வருகின்றன. இந்த அநியாயத்தை முஸ்லிம்களாகிய நாம் நம்மால் முடிந்தவரை தட்டிக்கேட்க வேண்டும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயக்காரனிடம் நீ அநியாயக்காரன்என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.” (முஸ்னத் அஹமத்) 

 

கூகுல் குழுமங்களில் தமிழ் பேசக்கூடிய தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் என்று மார்தட்டிக்கொண்டு வலம்வரும் கூகுல் குழுமம் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைத்துக் கொண்டு மேலும் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களின் கீழ்கண்ட அமுதமொழிக்கு மாற்றமாகவும் நடந்துவருகிறது.

 

முஸ்லிம்கள், ஒருவருக்கொருவர் சகோதரர் ஆவர். ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய மாட்டார்; ஒருவரை ஒருவர் கைவிட்டு விடவும் மாட்டார். தன் சகோதரனின் தேவையைக் கவனிப்பவரின் தேவையை இறைவன் நிறைவு செய்வான்; தன் சகோதரனின் கவலையைப் போக்குபவரின் கவலைகளில் ஒன்றை மறுமை நாளில் அல்லாஹ் நீக்கி விடுவான். (புகாரீ, முஸ்லிம்)

 

மேற்கண்ட இந்த நபிமொழியை நீங்கள் அனைவரும் நன்றாக கவனித்திருப்பீர்கள் ஆம் இன்றைய இஸ்லாமிய குழுமங்களில் குறிப்பாக தமிழ் முஸ்லிம் சகோதர குழுமம் இதற்கு மாற்றமாக நடந்து வருகிறது இந்த போக்கை கண்டிக்காமல் விட்டுவிட்டால் அக்குழுமத்தில் உள்ள நம் தீன்குல செல்வங்கள் சீரழிந்து விடுவார்களே என்ற அச்சத்தின் காரணமாக இந்த எச்சரிக்கையை ஒரு முஸ்லிம் என்ற தரப்பிலிருந்து நானே விடுக்கிறேன். முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வுக்குத்தான் அஞ்சுவோமே தவிர சகோதரத்துவத்தை சீரழிக்கும் அநியாயகார குழுமத்தாருக்கு அஞ்ச மாட்டோம். வாருங்கள் இந்த கூகுல் குழுமத்தாரினால் ஏற்படும் அவலத்தை அறிந்துக்கொள்வோம்

குழும உறுப்பினர்கள் எழுப்பும் அவதூறுகளை ஆதரித்து ஆதாரமற்றவைகளை நா கூசாமல் பரப்புவதில் குழும மாடரேட்டர் முதலிடம்!  

 

ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.(அல்குர்ஆன் 33-69)

 

அல்லாஹ் நம்மை நோக்கி ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து அவதூறு பரப்பி நோவினை செய்யாதீர்கள் என்று எச்சரிக்கிறான் ஆனால் தற்போது குழுமம் நடத்தும் சகோதர மாடரேட்டர்கள் அல்லாஹ்வின் இந்த அறிவுரைக்கு செவிசாய்க்காதது ஏன்?

 

சில குழும உறுப்பினர்கள் வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதை அறிந்தும் அதற்கு குழும மாடரேட்டர்கள் என்ற அந்தஸ்தில் உள்ளவர்கள் வதந்தி பரப்புபவர்களிடம் ஆதாரம் கேட்காமல் இருப்பது ஏன்?

 

அவ்வாறு ஆதாரம் கேட்டு அதை தர இயலாத பட்சத்தில் அந்த உறுப்பினரை பகிரங்கமாக நீக்க அறிவிப்பு வெளியிடாதது ஏன்?

 

இதை இவர்கள் செயல்படுத்த தவறும்பட்சத்தில் இந்த குழும மாடரேட்டர்களும் குழும நிர்வாகியும் அவதூறு பரப்புவதில்தான் குறியாக உள்ளார்கள் என்பதற்கு இவர்களின் நடத்தையே சாட்சியாக இருக்கின்றன இவர்களை அல்லாஹ் மூமின் என்ற அந்தஸ்துக்கு உயர்த்துவானா? இதை படித்தாவது சிந்திக்கட்டும்!

 

குழுமத்தில் உண்மையை கூறினால் அதை பிரசுரிப்பதில்லை மாறாக மார்க்க சகோதரர்களிடையே பாரபட்சம் காட்டி நேர்மைக்கும் உண்மைக்கும் மாற்றமாக நடந்துக்கொள்ளது

மார்க்கத்தில் கண்ணியமிக்கவர்களாக கருதப்படும் நபர்களோ அவர்களின் தோழர்களோ விதண்டாவதிகள் பரப்பம் அவதூறுகளை தவறு என்பதை நிருபிக்க நாடி குழுமத்தில் தங்கள் கருத்துக்களை பதித்தால் அதை இந்த குழும மாடரேட்டர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு மட்டறுப்பது ஏன்? உண்மையை எடுத்துக்கூறுவதை தடுப்பது ஒரு மூமினுடைய பண்பாக இருக்குமா? இந்த குழுமத்தார் கீழ்கண்ட இறைவசனத்தை படித்திருக்க வேண்டாமா?

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.  (அல்குர்ஆன் 2:42)

 

முகவரியற்ற மனிதர்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் கண்ணியமிக்க சகோதரர்களை கிண்டலடித்தலை அனுமதிப்பதும் 

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதாஎன்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.” (ஸுனன் அபூதாவூத்) 

சில கூகுல் குழும மாடரேட்டர்கள் தங்கள் குழுமங்களில் ஒருசிலரது பெயர்களை முன்மொழிந்து அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மார்க்கத்ததை எத்திவைக்கும் தவ்ஹீத் சகோதரர்களில் ஒரு தனி இடம் பிடித்து மார்க்கப்பணியாற்றும் தாயிக்களின் பெயரை முன்மொழிந்து அவர்களுக்கு புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று வகை வகையாக வசைபாடி அவன் அவளோடு இருந்தான், இவன் இவளோடு சென்றான் என்று  தங்கள் குழுமங்களின் வாயிலாக  பரப்பியும் வருகிறார்கள் மேலும் தாங்கள் குழுமங்களின் ஊடே நியாயத்தை எத்திவைக்கிறோம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணாக ஒரு சகோதரனை மற்றொரு சகோதரன் கிண்டலடித்து திட்டும் கொடுமையை வளர்க்கிறார்கள் இதுதான் இஸ்லாமிய நடைமுறையா?

 

சிந்தித்துப்பாருங்கள் நாம் தவறு செய்தது நமக்கு புரிந்த நிலையில் நம்மை நோக்கி ஒரு சகோதரன் மானக்கேடான வார்த்தைகளால் திட்டினால் நம் உள்ளம் பதறாதா? நாம் இதை அனுமதிப்போமா?

 

அதுபோலத்தானே ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை வசைபாடி, மானக்கேடாக திட்டும்போது திட்டு வாங்கக்கூடிய சகோதரனுக்கு மன நிம்மதி சீர்குலைந்து காணப்படும் இதை நாம் ரசிக்கலாமா?

 

இவ்வாறு திட்டக்கூடிய சகோதரர்களை குழும மாடரேட்டர் தடுக்கக்கூடாதா? அவரை எச்சரிக்கக்கூடாதா? இந்த குழும மாடரேட்டர்கள் கீழ்கண்ட நபிமொழியை படித்திருக்க வேண்டாமா?

 

அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.” (முஸ்னத் அஹ்மத்) 

 

கண்ணியமிக்க தீன்குல சகோதர சகோதரிகளுக்கு அறிவுரைகள் 

ஒரு சில முஸ்லிம்கள் என்ற பெயர்தாங்கிகள் நடத்தும் கூகுல் குழுமங்களில் நாம் பங்கேற்கும்போது நம் எண்ணங்கள் தூய்மையானவையாக இருந்தாலும் அவர்களின் தவறான நடத்தைகளாலும் நடவடிக்கைகளாலும் நாம் இன்னல்பட்டு அவர்களின் சண்டை சச்சரவுகளில் சிக்கி சேற்றில் விழுந்த செந்தாமரை போல் தரம்புரண்டுவிடுகிறோம் எனவே சகோதர சகோதரிகளே சற்று சிந்தியுங்கள் நல்ல குழுமமாக தேர்ந்தெடுத்து அங்கு நாம் நம் கருத்துக்களை பதிப்போம் மேலும் இஸ்லாத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் தமிழ் முஸ்லிம் சகோதர குழுமம் போன்ற அநாகரீக குழுமங்களை விட்டும் நாம் நீங்கி நம்மை நாமே சுத்தப்படுத்திக்கொள்வோமாக! இக்குழுமங்களை நடத்துபவர்கள் தங்களைத்தாங்களே அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தங்கள் குழும உறுப்பினர்களின் அடையாளங்களை அறிந்தவைத்துக் கொண்டு எதை சாதிக்க முற்படுகிறார்கள் என்பது அந்த வல்ல ரஹ்மானுக்கே தெரியும் எனவே நம்முடைய நியாயமான கருத்துக்களுக்கு கண்ணியமளிக்காமல் பாரபட்சம் காட்டும் குழுமங்களிலிருந்து நாம் நீங்குவதே நமக்கு சிறந்ததாக அமையும்.

 

இதோ அவதூறு பரப்புவது பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கைகள்

 

ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார். (அல்குர்ஆன் 33-69)

 

 

அவதூறு பரப்புபவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). (அல்குர்ஆன் 4-156) 

 

புறம்பேசி மனிதனின் மாமிசத்தை சாப்பிட வேண்டாமே!

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புதம்முடையவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை  செய்பவன். (அல்குர்ஆன் 49-12) 

 

என் கண்ணியமிக்க மார்க்க சகோதரர்களே நபிகளார் (ஸல்) சஹாபாக்களுடன் செய்துக்கொண்ட அழகான ஒப்பந்தத்தை பாருங்களேன்!  

 

அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம் விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினாலஅவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 2, எண் 18)

 

கூகுல் குழும பொறுப்பாளர்களே உங்களுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கை

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள் ”அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே ! எனவே உங்களில் ஒவ்வொருவரும் தன் பொறுப்பில் உள்ளோர் குறித்து கேள்வி கேட்கப்படுவீர்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவுது)

குறிப்பு 

மார்க்க சகோதரர்கள் நபிவழிப்படி தொழுகை மேற்கொள்வதற்காக அல்லாஹ்வின் ஆலயம் கட்ட நிதியுதவி கேட்டு ஒரு சில இஸ்லாமிய குழுமங்களில் கருத்துக்களை பதித்தால் குழும மாடரேட்டர்கள் சம்பந்தப்பட்ட மார்க்க சகோதரர்களை மட்டறுக்கிறார்கள் இப்படிப்பட்ட குழுமத்தார் அதே சமயம் ரியல் எஸ்டேட் தொழிழுக்கு நிலம் வாங்க விற்க என்ற மார்க்கெட்டிங் விளம்பரத்தை தங்கள் குழுமங்களில் அனுமதிக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்தைவிட இந்த ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பானதா? சிந்தித்துப்பாருங்கள்!

அனைவரும் அல்லாஹ்வின் சாபத்திற்கு அஞ்சிச்கொள்வோமாக

இத்தகுல்லாஹ்

 

 

Read Full Post »

%d bloggers like this: