Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே 15th, 2010

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

ஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா? பிராமணரா?

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – (அல்குர்ஆன் 6:108)

பிற மதத்தவர்கள் வணங்குபவற்றை ஏசக்கூடாது என்று நம் மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது. இஸ்லாம் என்ற எளிமையான மார்க்கம் அல்லாஹ்வைத் தவிர எதையும் வணங்கக்கூடாது என்று ஓரிரைக்கொள்கையை போதிக்கிறது ஆனால் இந்த கொள்கையை தகர்க்கும் விதமாக வரம்பு மீறி மாற்றுமதத்தவர்கள் நம் மார்க்கத்தை தங்கள் வழிபாட்டுத்தளங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் சபரிமலை ஐயப்ப கோவில் அதற்கு உதாரணமாக விளங்குகிறது. எனவே உண்மையை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்ன நிர்பந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவற்றை பற்றி ஏசவில்லை மாறாக விளக்கிக்கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். (மாற்றுமதத்தவர்கள் மன்னிக்கவும்)

1)      ஐயப்பன் பிறப்பு எத்தகையது

2)      ஐயப்பன் கடவுளா? மனிதரா?

3)      ஐயப்பன் கோவில் 18 படிக்கட்டுகளும் வாவரும்!

4)      வாபர் (வாவர்) பற்றிய கட்டுக்கதைகள்

5)      வாவர் என்பவர் முஸ்லிமா?

6)      வாவர் தர்காஹ்வில் நடைபெரும் கூத்துக்களும் ஆதாரங்களும்

ஐயப்பன் பிறப்பு எத்தகையது

 

ஐயப்பனுக்கு தகப்பன் யார்?

சைவ சமயத்தில் மூன்று ஆண் கடவுள்களை தங்கள் முக்கிய கடவுள்களாக வகுத்துள்ளார்கள் அவர்களை மும்மூர்த்திகள் என்று அழைப்பார்கள் அவர்களின் பெயர்களாவன:

 • பிரம்மா (படைத்தல்),
 • விஷ்ணு (காத்தல்,)
 • சிவன் (அழித்தல்)

 

இந்த மும்மூர்த்திகளில் சிவன் (அழிக்கும் கடவுள்) என்ற வஸ்துவை இந்துக்கள் தங்களின் பிரதான கடவுளாக கருதுகிறார்கள். இந்த சிவன்தான் ஐயப்பனின் முதல் தகப்பன் என்று ஐதீகம் கூறுகிறது.

 

ஐயப்பன் ஓரினச் சேர்க்கையில் பிறந்தவர்!

ஐயப்பனின் பிறப்புதான் இங்கு சர்ச்சையை உருவாக்குகிறது அதாவது மும்மூர்த்திகளில் சிவன் மற்றும் விஷ்ணு என்ற இரண்டு ஆண்கடவுள்களும் உடலுறவு கொண்டு பிறந்தவர்தான் ஐயப்பன்! ஓரினச் சேர்க்கை எவ்வாறு நிகழந்தது என்று அந்த ஐதீகமே விளக்குகிறது.

விஷ்ணு என்கிற ஆண்கடவுள் மோகினி என்ற பெண்ணாக உருமாறி சிவனை மயக்கி உறவு கொண்டராம் இந்த உறவின் அடையாளம்தான் ஐயப்பனாம்! இது முழுக்க முழுக்க ஓரினச் சேர்க்கைதானே.

 

இங்கு கேள்வி என்னவெனில் 

 • படைக்கும் பிரம்மா இருக்கும் போது ஏன் அவர் ஐயப்பனை படைக்கவில்லை மேலும் ஏன் சிவனையும், விஷ்ணுவையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி ஐயப்பனை படைத்தார்.

 

 • பிரம்மா நாடியிருந்தால் மோகினி என்ற பெண்ணை படைத்துவிட்டு அந்த பெண்ணை சிவனிடம் உறவுக்கு அனுப்பி ஐயப்பனை படைத்திருக்கலாமே ஏன் இவ்வாறு செய்வில்லை!

 

 • சிவன் நெற்றிக்கண்ணால் கூட பார்க்க வல்லமை படைத்தவர் என்கிறார்கள் அப்படியானால் இந்த மோகினி வேடத்தில் வந்த விஷ்ணுவை இந்த சிவனால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை

 

 • சிவனும் விஷ்ணுவும் இரண்டு ஆண் கடவுள்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு மோக கழியாட்டம் போடுவதை ஏன் பிரம்மா தடுக்கவில்லை அல்லது தேவாதி தேவர்கள் ஏன் புலம்பவில்லை!

 

 • சிவனுடைய பாதி அங்கம் பார்வதியாக இருக்கும்போது விஷ்ணு பெண் வேடமிட்டு அவரிட்ம உறவு கொண்டது சிவனுடைய குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

 

ஐயப்பனின் பிறப்பே கற்பனையாக உள்ளது அதை நியாயப்படுத்த இஸ்லாமியர்களின் பெயர்களை இணைத்து கூட்டு சேர்த்துள்ளார்கள். அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னப்பா சம்பந்தம்?

 

ஐயப்பன் கடவுளா? மனிதரா?

ஐயப்பனின் பிறப்பை பற்றி குறிப்பிடும் போது அந்த நபர் கேரள நாட்டு பாண்டாலம் பகுதியின் மன்னருடைய வளர்ப்பு மகன் என்று கூட செய்தி கிடைக்கிறது. அந்த காலத்தில் பாண்டாலம் பகுதியை ராஜராஜசேகரன் என்ற மன்னர் ஆண்டு வந்தானாம் இவர் ஒரு நதிக்கரையோரம் வேட்டையாட சென்றானாம் அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் அந்த நதியில் தென்பட்டதாம் சென்று பார்த்த போது அங்கு ஒரு குழந்தை இருந்ததாம் அதன் கழுத்தில் விலைமதிப்பற்ற மணி மாலை இருந்ததாம் அதனால் அந்த குழந்தையை மணிகண்டன் (மணியை கழுத்தில் அணிந்தவன்) என்று அழைத்தாராம்.

இந்த மன்னர் தீவிர சிவ பக்தனாம் மேலும் இவரின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடையதாம் இதனால் நதிக்கரையோரம் கண்டெடுத்த குழந்தை மணிகண்டனை சிவன்தான் கொடுத்தான் என்று நம்பினானாம். மன்னர் இந்த மணிகண்டனுக்கு கல்வியையும் மற்ற கலரிபயட்டு என்ற வர்மக்கலைகளையும் கற்றுத்தந்தானாம். (கடவுளின் குழந்தைக்கு கலரிப்பயட்டு தெரியதா?)

மணிகண்டன் கிடைத்த பிறகு ராணி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாலாம் ஆனால் ராஜராஜசேகரனோ ஐயப்பன்தான் தனது மூத்தமகன் அவன்தான் பட்டத்து இளவரசன் என்று கூறினானாம்.

 

ஐயப்பன் கோவில் 18 படிக்கட்டுகளும் வாவரும்!

சபரி மலையிலுள்ள ஐய்யப்பன் கோவில் பழமை வாய்ந்த நிலையில் இருந்ததாகவும் அதை மீண்டும் புதிய பொழிவுடன் வடிவமைத்து மறுநிர்மானம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மறுநிர்மானம் ஐயப்பன் கூறிய முறையில் நடைபெற்றதாகவும் அந்த பக்தர்களால் நம்பப்படுகிறது. புதிய கோவிலுக்கு கிழக்கு பார்த்த வாசலும் 18 படிக்கட்டுகளும் கட்டினார்களாம். 

இந்த 18 படிக்கட்டுகளின் பின்னனி 

5 படிக்கட்டுகளை இந்திரியா என்றும், எட்டு படிக்கட்டுகளை ராகா என்றும், 3 படிக்கட்டுகளை குன, வித்ய, அவித்ய என்றும் தீர்மாணித்து வடிவமைத்தார்களாம். இந்த 18 படிக்கட்டுகளையும் பாதுககாக்கும் பணியை வார் (வாபர்) மற்றும் கடுத்தா ஆகியோர்தான் கவனிக்க வேண்டும் என்று ஐயப்பன் கூறினானாம். மேலும் 18வது படிக்கட்டு வாவர் என்ற தனது முஸ்லிம் நண்பருடைய நினைவாக கட்டப்பட்டதாக இவர்கள் நம்புகிறார்கள்.

 

வாவர் (வாபர்) பற்றி கட்டுக்கதைகள்

கடுத்தசுவாமி மற்றும் வாவர்சுவாமி (வாபர்) ஆகியோரின் கதைகள் பூதநாத புராணத்தில் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

கடுத்தசுவாமி என்பவரது கதை

இவன் பாண்டல நாட்டு ராஜாவின் படைத்தளபதியாம். இவன் கரடு முரடான மலைகளில் தந்திரமாக போர் நடத்தும் திறமைசாளியாம். பாண்டிய மன்னர்களை வெற்றிகொண்ட மாவீரனாம் இதனால் கடுத்தா என்ற கடுத்தசாமியை மன்னர் தனது பாதுகாவலராக தேர்ந்தெடுத்தராம். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இவன் அந்த சபரிமலையை மறு நிர்மாணிக்கும் பணியை செய்தானாம் மேலும் தீவிர ஐயப்ப பக்தனாக மாறினானாம்.

வாவர் என்ற முஸ்லிம் என்பவரின் பிறப்பு பற்றிய சர்ச்சை 

கதை 1   ஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த திருவள்ளா என்ற பகுதியை அடுத்துள்ள வைப்புர் பகுதி மக்களின் கருத்துப்படி 14 மற்றும் 15ம் ஆம் நூற்றாண்டுகளில் (ஆங்கில நாட்காட்டிப்படி கிருஸ்துவுக்கு பின் 1301 முதல் 1400ம் ஆண்டு வரை) வாவர் என்பவர் வாழந்துவந்ததாக கூறுகிறார்கள். இந்த வாவர் பிராமண கோத்திரத்தில் பிறந்தவர் என்றும் பின்னர் இஸ்லாத்தை தழுவியவர் என்றும் கூறுகிறார்கள். 
கதை 2   இந்த வாவர் என்ற மனிதன் பாண்டிய தேசம் என்று அழைக்கப்பட்ட மதுரையை சேர்ந்தவராம். மேலும் திருமலைநாயக்கன் என்ற பாண்டிய மன்னனுடைய படையெடுப்பின் போது வாவருடைய குடும்பம் திருவணந்தபுரத்தை தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
கதை 3  வாவர் என்ற இந்த மனிதர் அரேபிய நாட்டிலிருந்து இஸ்லாத்தை போதிக்க இந்தியா வந்தாராம். 
கதை 4  வாவர் என்பவன் ஒரு கடல்கொள்ளையனாம் இவன் கப்பலில் பயணம் செய்து நாடுகளை கொள்ளையிட்டு வந்தானாம் இறுதியாக ஐயப்பனிடம் போரிட்டு தோற்றுப்போனானாம்.  இறுதியாக ஐயப்பனிடம் சரணடைந்து அவனுடைய பக்தனாக மாறினானாம். இவன் போரிட்டதற்கு ஆதாரமாக பழைமையான ஒரு வாள் இன்று கூட அந்த தர்காஹ்வில் வைத்துள்ளார்களாம். இறுதியாக ஐயப்பனே பாண்டல தேச மன்னருக்கு ஆணை பிறப்பித்து வாவருக்கு என்ற தனது நண்பருக்கு எருமலி என்ற இடத்தில் ஒரு தர்காஹ் கட்ட ஆணையிட் டனானாம்.
கதை 5  வாபர் என்பவன் ஒரு முஸ்லிம் என்றும் கொள்ளைக்கூட்டத் தலைவன் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். இந்த வாபர் என்ற வழிபறி கொள்ளைக்கூட்டத் தலைவன் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவன் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தாகவும் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்ததாகவும் அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை என்றும் கூறுகிறார்கள். எனவே அரசர்கள் ஐயப்பனிடமே முறையிட்டதாகவும். ஐயப்பனே வாபர் என்ற முஸ்லிமை காணச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஐயப்பன் சிறுவனாக இருந்தானாம் வாபரை கொல்ல முயன்றானாம் அப்போது வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டானாம்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றாரனாம் அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. 

வாபருக்கு ஐயப்பன் கொடுத்த வாக்குறுதி 

எனது கோயிலக்கு வரும் பக்தர்கள் உனது பள்ளிவாசலுக்கும் வருவார்கள் அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.  இதன்படி
சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டானாம்.

ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக ஐயப்ப பக்தர்கள் நம்புகிறார்களாம். இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இங்கு உண்மை நிலை என்ன? 

 • ராஜராஜசேகரன் ஒரு மனிதன் பாண்டலநாட்டு அரசன்
 • மணிகண்டன் என்பது நதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
 • கடுத்தசுவாமி என்பவன் ராஜராஜசேகரனின் படைதளபதி
 • வாவர் என்பவர் போர் திறமை பெற்றவன் (வாள் உள்ளது)

 

இங்கு முஸ்லிம்களின் பெயரை தங்களுடன் சாதகமாக பயன்படுத்தி அந்த நபரை பற்றி நான்கு கதைகள் புணையப் பட்டுள்ளன. வாவர் என்பவர்

1)      பிராமண மதத்தவர் மதம் மாறி இஸ்லாத்திற்கு வந்தார்

2)      மதுரையை சேர்ந்த தமிழர்

3)      அரேபிய நாட்டிலிருந்து இஸ்லாத்தை போதிக்க வந்தவர்

4)      கடல் கொள்ளையன் (வாள் ஆதாரமாக உள்ளது)

 

வாவர் உண்மையில் முஸ்லிமா? 

வாவர் என்பவர் உண்மையிலேயே அரேபியநாட்டிலிருந்து வந்து இந்தியாவில் இஸ்லாத்தை பரப்புபவராக இருந்திருந்தால் ராஜராஜசேகரன் என்ற பாண்டல நாட்டு மன்னனிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்து மடிந்திருக்க வேண்டும் அல்லது அந்த மன்னரை முஸ்லிமாக மாற்றியிருக்க வேண்டும் இங்கு இந்த இரண்டு காரியங்களும் நடைபெறவில்லை எனவே வாவர் என்பவரை அரேபியர் என்று நம்புவது இயலாத காரியமாகும் காரணம் அரேபியாவிலிருந்து வந்த நபர் இங்கு வந்து மார்க்கத்தை பரப்பி ஐயப்பனின் காலில் சரணாகதியாகி அவனுடைய தாசனாக இருப்பதைவிட அரேபியாவிலேயே தங்கி அங்கேயே தடம்புரண்டு வாழ்ந்திருக்கலாம். எவனாவது மார்க்கத்தை பரப்ப கடல்கடந்து வந்து ஐயப்பனை வழிபடுவானா?

மதுரையை சேர்ந்த தமிழர் என்றும் கேரளத்தை சேர்ந்த பிராமணர் என்றும் மதம் மாறி இஸ்லாத்திற்குள் வந்தவர் என்றும் கூறப்படுகிறது மேலும் கடல்கொள்ளையன், வழிப்பறி கொள்ளையன் என்ற மற்றுமொரு கதையும் உள்ளது இந்த 3 கதைகளை வைத்து பார்க்கும் போது இந்த வாவர்

 • தமிழ் பேசும் தமிழனாக இருக்கலாம்!

 

 • பிராமனராக வாழந்தவர் என்று கூறப்படும் செய்தியின் அடிப்படையில் மாற்றுமதத்தவராக கருதப்படும் இவர் இஸ்லாத்தை சீரழிக்க முஸ்லிமாக நடித்திருக்கலாம்!

 

 • பிராமண மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவியவர் என்ற கோணத்தில் பார்த்தால் இந்த வாவர் என்ற மனிதர் அல்லாஹ்வின் மீதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறியாதவராகவும், தமிழகத்து தர்காஹ்களை பார்த்துவருவோம் என்ற ஸ்டைலில் தர்காஹ் வழிபாடுகளில் ஈடுபாடு கொண்ட இணைவைப்பாளராக கூட  இருந்திருக்கலாம் என்று சிந்திக்க தோன்றுகிறது ஆனாலும் தர்காஹ்வாதியான எந்த இணைவைப்பாளரும் அவ்லியாவை வணங்குவார்களே தவிர ஐயப்பனை வழிபடமாட்டார்கள். கூறுவதற்கே கஷ்டமாக உள்ளது!

 

 • கொள்ளைகாரன் என்று கூறும்போது பெண், பொன் மற்றும் பொருளாசை கொண்டவராக இருந்து அதற்கு அடிமையாகி ஐயப்பன் என்ற பெயர் கொண்ட அநாதை மனிதனும் பட்டத்து இளவரசனாகிய மணிகண்டனிடம் (கடவுள் கிடையாது) தன்மானத்தை இழந்தவராக இருந்திருக்கலாம். அற்ப இலாபத்திற்காக கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் யாரிடமும் அடிபணியமாட்டார்கள் என்பதும் உண்மைதான் எனவே உண்மையில் வாவர் கொள்ளையனாக இருந்திருந்தால் ஐயப்பனுக்கு அடிமையாக வாழ்வதைவிட வேறு பகுதிக்கு தப்பி ஓடி கொள்ளையடித்திருக்கலாம்!

 

எனவே வாவர் என்ற ஒரு நபர் இருந்திருக்கிறாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது! காரணம் அவருடைய தர்காஹ்வில் சமாதி கிடையாது! 

 

 

வாவர் தர்காஹ்வில் நடைபெரும் கூத்துக்கள் 

சபரிமலையில் உள்ள 18 படிகட்டுகளில் இறுதியாக உள்ள 18ம் படிக்கட்டு வாவர்சாமி படிக்கட்டு என்று பெயராம். அதே சமயம் வாவர் தர்காஹ அந்த மலைப்பாததையில் அமைந்துள்ளதாம் இந்த பகுதிக்கு எரிமேலி என்று பெயர். 

இந்த இடத்தில் ஐயப்பன் அரக்கியை கொன்றானாம் இதை கொண்டாடும் விதமாக அவனுடைய பக்தர்கள் உடலில் வண்ணப்பொடி பூசி, இலை, தழைகளை கட்டிக்கொண்டு, மரத்தாலான ஆயுதங்களுடன் மேளதாளம் முழங்க, ஆடிப்பாடிக்கொண்டு பேட்டை சாஸ்தாவையும், ஐயப்பனின் நண்பரான வாபரையும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வார்களாம். அதுசமயம் வாபர் தர்காஹ்வில் விபூதி பிரசாதம் தரப்படுகிறதாம். 

 

தர்காஹ் கட்டிடமும் சர்ச்சையும் 

வாவர் என்ற முஸ்லிம் துறவியை ஐயப்பனின் நண்பர் என்று வர்ணிக்கும் இந்த ஐயப்ப பக்தர்கள் வழிபடும் வாவர் தர்காஹ்வில் வாவருடைய சமாதி கிடையாதாம். சமாதிக்கு பதிலாக கல்வெட்டு போன்ற ஒரு கல் மட்டும்தான் உள்ளதாம்.

தர்காஹ்வுக்குள் 4 சுவர்கள் உள்ளதாம் அதில் 3 சுவர்களின் மீது பச்சை பட்டாடையை போர்த்தியிருப்பார்களாம். ஒரு பக்க சுவர் மட்டும் பார்வையில் படுமாறு வைத்திருப்பார்களாம். இந்த தர்காஹ்வில் ஃபாத்திஹா ஓதும்போது தப்ருக் தட்டில் கொடைமிளகாய்யை தான் வைப்பார்களாம். ஒரு உண்டியல் இருக்கிறதாம் அதில் ஐயப்ப பக்தர்கள் காணிக்கை போடுவார்களாம். இதில் மிக பயங்கரமான சம்பவம் எது எனில் ஐயப்பன் சந்நிதானத்திற்கு செல்வதற்கு ஆடுகள் பயன்படுத்து வார்களாம் இந்த ஆடுகள் தர்காஹ்வுக்கு நேர்ச்சை செய்து கொள்வது போல சொல்கிறார்கள்.  இறுதியாக இந்த ஆடுகளை ஐயப்ப தேவஸ்தான அரக்கட்டளை ஏலத்தில் விற்றுவிடுகிறதாம்.

தரம்கெட்ட தர்காஹ்வாதிகள் கூறும்போது 

வாவர் என்பவன் சூஃபி ஞானியம் இவன் இந்துக்களால் வாவர்சுவாமி என்று அழைக்கப்படுகிறாராம். இவருடைய தர்காஹ் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். வாவர் தர்காஹ்வில் ஐயப்ப பக்தர்கள் ஃபாத்திஹா ஓதுவார்களாம்.

ஐயப்ப பக்தர்களில் யாராவது இந்த வாவர் தர்காஹ்வில் ஃபாத்திஹா ஓதாமல் சென்றால் பல்வேது இன்னல்களை சந்திப்பதாக ஐதீகமாம்!

முடிவுரை 

 1. ஐயப்பன், அவனது பிறப்பு, வாவர் தர்காஹ் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே பொய்தான் என்பது தெளிவாக புரிகிறது.

 

 1. கேரளத்து மக்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பதால் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டை தகர்த்தெரிய துள்ளியமாக சதித்ததிட்டம் போட்டிருக்கிறார்கள் எனவேதான் வாவர் என்று பெயர் கொண்ட முஸ்லிம் கற்பனை கதையை வளர்த்துவிட்டு அந்த முஸ்லிம் ஐயப்பனுக்கு நண்பர் என்றும் ஐயப்ப பக்தர் என்றும் கட்டுக்கதையை சரமாரியாக அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.

 

 1. ஐயப்பன் ஓரினச் சேர்க்கையில் பிறந்தவர் என்றும் கி.பி.1400ம் ஆண்டில் வாழந்த வாவருடைய நண்பர் என்றும் கூறுவது காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நிலையில் இருக்கிறது காரணம் இந்து சமயம் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று இவர்களே கூறுகிறார்கள்.

 

 1. கேரளத்து மாந்ரீகர்களின் தெளிவான சூனிய விளையாட்ட அதாவது மனதை ஈர்க்க நடந்த நாடகக்கூத்து என்று இந்த ஐயப்பன் மற்றும் வாவர் விஷயத்தில் தெளிவாக நமக்கு தெரிகிறது.

 

சிந்தித்துப்பாருங்கள் சிவனும், விஷ்ணுவும் ஓரினச் சோர்க்கை புரிந்ததாக ஐதீகம் கூறுகிறது இவர்களின் கதையே இப்படி இருக்கும் போது இன்றைய பிரேமானந்தாவும், நித்யானந்தாவும் ஏன் விபச்சாரம் புரியமாட்டார்கள்.

மாற்றுமதத்தவர்களின் இந்த நாடகம் ஆரம்பம் முதலே கோணலாக உள்ளது  அதன் முடிவும் கோணலாகத்தான் உள்ளது.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரமில்லை என்ற வசனம் இந்த அத்தனை கட்டுக்கதைகளையும் தரைமட்டமாக்கிவிட்டது

 

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)

Read Full Post »

%d bloggers like this: