Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2010

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?

 

அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

 

இந்த கேள்வியை கேட்டுவிட்டால்  ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

 

சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?

உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்

தாய்

ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா? தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?

மகன்

சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!

உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்! 

 

உங்கள் தந்தை இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!

தந்தை

ஏன்டா! மகனே உன்னுடைய 5 வயசுல உனக்கு பொம்மை கார் வாங்கி கொடுத்தேன், 10 வயசுல உனக்கு சின்ன சைக்கிள் வாங்கி கொடுத்தேன்! 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன்! 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனான எனக்கு கொடுப்பதில்லையே! தந்தை ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே? இந்த வயசான காலத்துல நான் யாருக்கிட்ட டா போய் கை ஏந்துவேன்! ஏன்னிடம் மருந்துவாங்க காசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா?

மகன்

என்னப்பா? உனக்கு அறிவு இருக்கா! சின்ன வயசுல நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்ததை போய் இப்ப சொல்லிக் காட்டுறியே? நீ எல்லாம் ஒரு அப்பனா? இது உனக்கு நல்லா இருக்கா? வயசாகி போனதால புத்தி கெட்டுப்போச்சா! இப்ப என்ன உனக்கு காசுதான வேணும் இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீ, பன்னு சாப்பிடு இதுக்கப்பறம் காசு கீசுன்னு எங்கிட்ட வந்துடாத! மருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொரு மகனிடம் போய் கேள்! என்ன தொல்லை பண்ணாத!

உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் தந்தையாரை வாயடைக்க செய்தீர்கள்! நீங்களோ அவரை சமாளித்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

 

உங்கள் மனைவி இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!

மனைவி

என்னங்க! நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாகி விட்டது! அழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும், கை நிறைய வருமானம் அபரிமிதமாக இருக்கு! இத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம் நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே மனைவி ஸ்தானத்திலிருந்து நான் உங்களுக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லுங்கள்? ஏன் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுறீங்க நானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம்?

   

கணவன்

என்ன ரொம்பத்தான் ஓவரா பேசுரே! பொம்பளைன்னு பார்க்கறேன் இல்லன்னா நடக்கறதே வேற? கணவன் என்கிற மரியாதை போயிடுச்சா? இந்த பேச்சே போதுமே உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப!

 எனக்கு வயசு இருக்கு, வருமானமும் இருக்கு இன்னொரு கல்யாணம் என்ன 4 கல்யாணம் கூட செய்ய தெம்பு இருக்கு உனக்கு விருப்ப மிருந்தா……………………………………????(சண்டை விபரீதமாக சென்றுக்கொண்டே இருக்கும்)

 

உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் அருமை மனைவியின் வாயை அடைத்துவிட்டீர்கள்!! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

 

மஹ்ஷரில் உங்கள் இறைவன் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம்!

அல்லாஹ் ஆதமின் சந்ததியைச் சேர்ந்தவனே! என் அடிமையே! நான் உனக்கு

  • நல்ல பெற்றோரை கொடுத்தேன்!
  •  நல்ல மனைவி மக்களை கொடுத்தேன்! 
  • அறிவுத் திறமையும் செல்வத்தையும் கொடுத்தேன்! 
  • சொத்துக்கள், சுகங்களை கொடுத்தேன்! 
  • கவுரவமான வாழக்கையை கொடுத்தேன்! 
  • உயிர்வாழ அனைத்தும் இலவசமாக கொடுத்தேன்! 
  • நேர்வழிக்கு அருள்மறை குர்ஆனையும் கண்ணியமாக வாழ்க்கை முறைக்காக நபிமார்களையும்  அணுப்பினேன்

 முஸ்லிமாக வாழந்து, 5 வேளை தொழுகைகளை பேணி, ஜகாத் கொடுத்து, ஹஜ் செய்து உலகில் வாழந்து வந்ந நீ எதற்காக எனக்கு இணை வைத்தாய்?

படைத்த இறைவனாகிய நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?

நீங்கள்

?        ?      ?

 

அன்புச் சகோதர, சகோதரிகளே வாழந்து விட்டால் போதுமா? நாலு காசு சம்பாதித்தால் போதுமா? சொத்து சுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டால் போதுமா?

 

இந்த உலகில் வாழும்போது நம் குடும்பத்தினரை நிம்மதியிழக்கச் செய்து நம் சுகத்தை காண்கிறோம். அதே நேரம் நம் படைத்த இறைவனுக்கு இணைவைத்துவிட்டு மறுமையில் நாம் நரகத்தை தங்குமிடமாக எண்ணி நிம்மதியிழந்து தவிப்போமே இந்த கைசேதம் தேவையா? சகோதர சகோதரிகளே

 

நம்முடைய அராஜக குணத்தால்

  • பெற்ற தாயின் வாயை அடைத்துவிடலாம்,
  • வளர்த்த தந்தையின் வாயை அடைத்துவிடலாம்
  • கட்டிய மனைவியின் வாயை அடைத்துவிடலாம்
  • ஊர் உலகத்தின் வாய்களை அடைத்துவிடலாம்

 

மேற்கண்ட இவர்களின் வாய்களை அடைத்துவிட்டு அவர்களிடம் வெற்றி கொள்ளும் நீங்கள் அல்லாஹ்விடம் வெற்றி கொள்ள முடியுமா?

 

வாழ்க்கை ஒரு முறைதான் எனவே அந்த வாழ்க்கை முறையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய விதத்தில் இருந்தால் நமக்கு இலாபமா? நட்டமா?

 

இதோ அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகள்!

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)

 

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்(திருக்குர்ஆன், 5:72)

 

நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.  இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘பெரும் பாவங்கள்’ என்று வந்துள்ளது.(புகாரி 6871)

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6882)

 

அன்புச் சகோதர சகோதரிகளே! மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை! இணைவைப்பதை அல்லாஹ் மன்னிப்பதில்லை!

 

சிந்திப்பீர்!   செயல்படுவீர்!

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

 

குறிப்பு

இந்த கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் இந்த நிகழ்வுகளை உணர வேண்டும் என்பதற்காகவே நீங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். (தவறாக தென்பட்டால் மன்னிக்கவும்)

Read Full Post »

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை

 

தங்களை சுன்னத் ஜமாஅத் என்று கூறி்க்கொள்ளும் தர்காஹ்வாதிகளே இது சுன்னத்தா? ஷிர்க்கா?

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.

சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.

  • அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்.
  • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்

மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!

 

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்

அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்! இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!

நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்

எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.

இந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?

 

சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா?  சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?

நபி வழி சுன்னத் சுன்னத் ஜமாஅத்
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. சாதாரண எறும்பு கடித்தால் கூடா யா! கவுஸ், நாகூர் ஆண்டவரே, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது
இணைவைப்பு வழிபாடு கிடையாது சமாதி வழிபாடு முக்கியத்துவம்
மார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது! மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிது, பைஅத்,  தீட்சை என்று நம்பி மோசம் போவது!
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள், வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது ஸலவாத்துன்நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது!
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது!
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது! இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது

சுன்னத்ஜமாஅத் என்று பெயர் வைத்துக்கொண்டோரே இது சுன்னத்தா?

  • தர்காஹ் போவது சுன்னத்தா?
  • அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
  • கப்ரு வணங்கம் சுன்னத்தா?
  • மவ்லூது சுன்னத்தா?
  • மீலாது சுன்னத்தா?
  • ஸலவாத்துன்நாரியா சுன்னத்தா?
  • தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
  • முரீது சுன்னத்தா?
  • ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
  • கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
  • 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
  • 1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா
  • ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
  • வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
  • வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
  • நாகூர் மொட்டை சுன்னத்தா?
  • தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
  • மரணித்தால் ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா?
  • சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
  • விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
  • உருஸ், படையல் சுன்னத்தா?
  • சந்தனகூடு சுன்னத்தா?
  • கொடிமரம் சுன்னத்தா?
  • அவ்லியாக்களுக்கு நேர்ச்சை சுன்னத்தா?
  • கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
  • தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
  • கவ்வாலி இசைக்கச்சேரிகள் சுன்னத்தா?
  • யானை குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
  • ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
  • கருமணி தாலி கட்டுதல் சுன்னத்தா?
  • மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
  • சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?

 

அல்லாஹ் ஓவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்களை  அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான் எந்த நபியாவது மேற்கண்ட இழிசெயல்களை செய்து காட்டினார்களா? குர்ஆன் ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!

சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்!

 

அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான சுன்னத் ஜமாஅத்தினர் என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா? கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்க கூடாதா?

 

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது

‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

 

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

 

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

 

இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும்.

நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)

 

இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

 

அல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

 

சுன்னத் ஜமாஅத் என்ற பெயரை மாற்ற கோரிக்கை விடுப்போமே

நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை அஹ்லே சுன்னத் வல்-ஜமாஅத் என்ற பெயர்  வைத்திருப்பது அந்த சுன்னத்தை அதாவது நபிவழியை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது எனவே அஹ்லே சுன்னத்வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் அல்லது நாமாக இவர்களை சுன்னத் ஜமாஅத்தார் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறேன்!

என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்

(ஒரு சகோதரர் இந்த பெயர்தாங்கிகளுக்கு அஹ்லே ஷிர்க் வல் ஜமாஅத் என்று சரியா பொருந்தக்கூடிய பெயரை முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்!

Read Full Post »

ஹவாலா ஹராமா?

கேள்வி 1 – ஹவாலா ஹராமா?

கேள்வி 2 – GOVT எதேனும் தடை செய்ததை நாம் செய்தாலும் அது ஹராமில் சேறுமா?

பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

வ அலைக்குமுஸ்ஸலாம்!

 

அரசாங்கம் மற்றும் சட்டம்

பல மனிதர்கள் ஒன்று கூடி தங்களுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமாகவோ கருத்துக்கணிப்பு அல்லது வாக்கெடுப்பின் மூலமாகவோ நிர்ணயிப்பது அரசாங்கமாகும். உதாரணமாக 5 வருடங்களுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடத்தி ஆட்சியை அமைக்கலாம்! அந்த ஆட்சியதிகாரத்தின் மூலம் சட்டம் இயற்றலாம்! இதை நாம் அரசாங்கம் என்று கூறுகிறோம்.  அரசாங்கம் இயற்றும் சட்டங்கள் மனிதனை குஷிப்படுத்தும் நோக்கத்திற்காகவும் எப்படியாவது வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் அமையும் இச்சட்டங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க மனிதனால் வகுக்கப்பட்டதே!

 

உதாரணமாக!

மனிதவர்கத்திற்கு கேடு விளைவிக்கும் மதுபானத்தை மனிதன் குடிக்கிறான் அதற்கு அடிமையாகிவிடுகிறான் இதை அரசாங்கம் பார்க்கிறது ஆனால் அதை தடுக்க சக்தி இருந்தும் தடுக்க மறுக்கிறது மேலும் இதனை தடுப்பதால் அரசாங்க கஜானா காலியாகிவிடும் என்று எண்ணி மதுபாணம் தயாரித்து அதை வினியோகம் செய்து மனிதனை குஷிப்படுத்துகிறது தன் கஜானாவையும் நிரப்பிக்கொள்கிறது! நாட்டு குடிமகன் சாராயம் குடித்து கெட்டு குட்டிச்சுவராக போனால் குடும்பம் அவதிப்படுமே என்ற பயம் இந்த அரசாங்கங்களுக்கு கிடையாது! அதனால்தான் அரசு என்கிறோம்.

இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சட்டம்

மனிதன் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே அல்லாஹ் ஒவ்வொன்றாக சட்டம் இயற்றிவந்தான். சில சட்டங்கள் மனிதனை சோதிப்பதற்காகவும் சில சட்டங்கள் மனிதனை நேர்வழிப்படுத்துவதற்காகவும் வகுத்துத்தந்தான்.

 

ஒவ்வொரு நபிமாருக்கும் ஒரு சட்டம் வகுத்து இறுதியாக முஹம்மது என்ற மாமனிதரை இறுதி நபியாக தேர்ந்தெடுத்து தனது சட்டங்களை முறைப்படுத்தி இஸ்லாத்தை முழுமைப்படுத்தி இதுதான் சட்டம் இவ்வாறுதான் மனிதர்கள் அனைவரும் வாழ வேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டான்! அதை மீறுவோர் மறுமையில் தண்டிக்கப்படுவார்கள்! அல்லாஹ்வின் சட்டத்தை மீறியதற்காக மஹ்ஷர் எனும் பெருவெளியில் மனிதனுக்கு எந்த பரிந்துரையாளரும் பரிந்துரைக்க இயலாது! அப்படியே பரிந்துரைத்தாலும் பலனளிக்காது! அல்லாஹ் மன்னித்தால் தவிர!

 

உதாரணமாக

அல்லாஹ் மதுபாணத்தை ஹராமாக்கியுள்ளான் எனவே நாம் இதை நெருங்கக்கூடாது இதோ அல்லாஹ் வகுத்த சட்டம்!

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. (அல்குர்ஆன் 2: 219)

இங்கு படைத்த ரப்புல் ஆலமீன் மனிதனுக்கு எது நல்லது எது கெடுதல் என்று அழகாக வர்ணிக்கிறான் மேலும் இது ஹராம் மற்றும் இது ஹலால் என்பதை வகுத்து கியாம நாள்வரை அவனே அதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான்.

 

அல்லாஹ் ஹலால் ஆக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது!

சில இணைவைக்கும் முஷ்ரிக்குகள் அல்லாஹ் ஹலால் ஆக்கியதை ஹராமாக்கினார்கள் இதை கண்டிக்கும் விதமாக அல்லாஹ் கிழ்கண்ட வசனத்தை இறக்குகிறான் இதோ பாருங்கள்!

 

நிச்சயமாக, அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள் என்று கூறும். அவர்கள் சாட்சி கூறினால் (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் நம் வசனங்களை பொய்ப்பிக்கின்றவர்கள் மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர். (அல்குர்ஆன் 6-150)

கேள்வி எண் 1

ஹவாலா ஹராமா?

ஹவாலா” என்றால் பரிமாற்றம் என்பது பொருளாகும். அதாவது நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் உங்கள் மனைவிக்கு மாதாமாதம் கணிசமான தொகை அனுப்பும்போது அதை வங்கியின் வழியாக அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் இப்படி அனுப்பப்படும் பணத்தை வங்கியில் நேரடியாக வரவு வைத்து அதற்கான பிடித்த தொகையை வங்கி பிடித்தம் செய்யும் இறுதியாக உங்கள் மனைவிக்கு இந்த பணம் சென்று சேர சில நாட்கள் பிடிக்கும்! இதனால் வெளிநாட்டு பணப் புலக்கம் உள்நாட்டில் எவ்வாளவு என்பதை தீர்மாணிக்க இயலும்! நாட்டின் வருவாயில் மதிப்பு கூடுகிறது.

ஆனால் இதே மாதாமாதம் கணிசமான தொகை பணத்தை உங்கள் நண்பரிடம் ரொக்கமாக கொடுக்கிறீர்கள் அவரும் பணத்தை வாங்கிக்கொள்கிறார் பின்னர் உங்கள் தாய்நாட்டில் உள்ள உங்கள் நண்பரது வங்கியிலிருந்து பணத்தை அவரது சொந்த பணத்தை உங்கள் மனைவிக்கு கொடுக்கிறார் இதனால் பணம் அடுத்த வினாடி உங்கள் மனைவியின் கையில் சென்று சேருகிறது!  இன்று பத்தாயிரம், நாளை பத்து இலட்சம், சில நாட்கள் கழித்து பல கோடிகள் கைமாறுகிறது அரசாங்கத்தின் கண்களில் மண்ணை தூவுகிறீர்கள்!

ஹவாலா ஹரமா என்று தீர்மானிக்கலாமா?

ஹவாலா என்பதை ஹராமா? என்று தீர்மானிப்பதைவிட அதன் நிறை குறைகளை தீர்மானித்துப்பார்க்க வேண்டும்!

கேள்வி எண் 2

GOVT எதேனும் தடை செய்ததை நாம் செய்தாலும் அது ஹராமில் சேறுமா?

 மதுபாணம் ஹராம் இதை அரசாங்கம் ஹலாலாக்க இயலாது!

 இஸ்லாம் அனுமதிக்கும் ஹிஜாப் ஆடையை பிரான்ஸ் போன்ற அரசாங்கம் தடை செய்ய இயலாது இவ்வாறு தடைசெய்தால் அதை அனுமதிக்க முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடையாது!

அரசாங்கம் ஏதேனும் சட்டம் வகுத்தால் அது நியாயமாக இருக்கும்பட்சத்தில் அதற்கு கட்டுப்படுவது ஒரு நாட்டின் பிரஜையின் கடமையாகும். அதே சமயம் அரசாங்கம் இயற்றும் சட்டம் அல்லாஹ்வின் சட்டத்தை மீறுவது போல் தெரிந்தால் அதை ஒருபோதும் அனுமதிக்கலாகாது! 

 

குறிப்பு

நாம் அயல்நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திடம் அனுமதி கோரி, பாஸ்போர்ட் எடுத்து பிறகு வாணுர்தியில் பயணிக்கிறோம்! இதற்கு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் நாம் சம்பாதித்தவுடன் நம்முடைய அரசாங்கத்திற்கு தெரியாமல் ஹவாலா வழியில் செலுத்தி மோசடி செய்கிறோம் இது கூடுமா? நாம் திருடி சம்பாதிப்பதில்லையே நேர்மையான சம்பாத்தியத்தைதானே கணக்கு காட்டுகிறோம் அப்படியிருக்க அரசாங்கத்தை ஏன் ஏமாற்ற வேண்டும்? அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவுவது மோசடியில் அடங்காதா?

 

தனி மனிதனை ஏமாற்றுவதும் குற்றம்தான் அரசாங்கத்தை ஏமாற்றுவதும் குற்றம்தான் அல்லாஹ்வின் பார்வையில் குற்றவாளிகள் தப்பிக்க இயலுமா? சகோதரர்களே சிந்தியுங்கள்!

 

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப் பட்டவற்றையும், பரிசுத்த மானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)

 

அல்லாஹ் கூறுகிறான்:- நபியே! கஷ்டங்களை சகித்து பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக இறுதிமுடிவு இறையச்சமுடையோர்களுக்கேயாகும். (அல்குர் ஆன்: ஹூத்11:49)

 

அல்லாஹ் கூறுகின்றான்:- விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் உங்களில் கீழ்ப்படிந்து நடக்கும் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுங்கள். ஆனால் எந்த விசயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டீர்களோ அதனை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசம் கொண்டவராக இருந்தால் இதுதான் நன்மையாகவும், மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அந்நிஷா 4:59)

 

இந்த கருத்தில் தவறு இருந்தால் மார்க்க அறிஞர்களிடம் எடுத்துச் செல்லவும் அவர்கள் குர்ஆன் சுன்னா அடிப்படையில் பதில் கொடுத்தால் அதை என்னிடமும் பகிர்ந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் (இன்ஷா அல்லாஹ்) தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்கிறேன்!

 

வலியவந்து யாரையும் ஏமாற்றாதீர்கள், யாரிடமும் ஏமாறாதீர்கள்

 

அல்ஹம்துலில்லாஹ்

Read Full Post »

%d bloggers like this: