Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச் 26th, 2010

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாஃவா பணியை முஸ்லிம்களே தடுக்கின்றனர்!

அன்பிற்கினிய ஏகத்துவ சகோதர சகோதரிகளே!

 

ஏகத்துவவாதிகள் என்று நம்மை நாமே மார்தட்டிக்கொள்கிறோம். எந்த ஒரு செயலை செய்தாலும் அது குர்ஆனில் உள்ளதா? ஹதீஸ்களில் உள்ளதா? என்று ஆராய்ந்து பார்க்கிறோம். அதன் பயனாக இன்று நாம் தூய்மையான மார்க்கதில் இருக்கிறோம் (அல்ஹம்துலில்லாஹ்) ஆனால் நேற்று நம் நிலை என்ன?சற்று சிந்தித்துப் பாருங்களேன்!

 

கடந்த காலங்களில் நம் நிலை

 

  • தர்காஹ்வே கதி, கப்ருகளை வணங்கியிருந்தோம்,

 

  • கத்தம் பாத்திஹா ஓதியிருந்தோம்,

 

  • மவ்லூது எனும் ஷிர்க்கில் மூழ்கியிருந்தோம்,

 

  • உருஸ், மேலதாளங்கள், கத்னா விழா, புனித நீராட்டு விழா கொண்டாடி பணத்தை வீண் விரயம் செய்தோம்.

 

  • சினிமா, ஆடல் பாடல் கஜல் கச்சேரி கூத்தாட்டங்கள் என்று கேவலமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தோம்.

 

  • பல இலட்சம் செலவு செய்து திருமணம் செய்து வரதட்சனை, சீர்வரிசை வாங்கியிருந்தோம்

 

இப்படிப்பட்ட குருடர்களாகவும் பாவிகளாகவும் இருந்த நம் மீது அல்லாஹ் சுப்ஹானவதாலா கருணைகாட்டினான். நமக்கு ஏகத்துவத்தை விளக்கிக்காட்டினான்! நன்மை தீமைகளை பிறித்தறிவிக்கும் அருள்மறை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றும் ஏகத்துவவாதிகளாக மாற்றினான். இன்றைக்கு நாம் சத்தியம் எது அசத்தியம் எது என்பதை தெளிவாக அறிந்து வைத்துள்ளோம் இப்போது நம்மிடம் இணைவைப்பு எனும் கொடுமை கிடையாது! ஆனால் இன்று ஏகத்துவவாதிகளாகிய நாம் ஏகத்துவம் என்ற அழகான கொள்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்! இந்த நிலையை தவிர்க்கவே இந்த அறிவுரைகள்!

 

உதாரணமாக சேலம் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற ஏகத்துவ அமைப்பின்  சகோதரர்கள் சேலம் பகுதியில் மலிந்து கிடக்கும் ஷிர்க், பித்அத்தை விளக்கிக்கூறி அவர்களை நேர்வழிக்கு அழைப்பு விடுக்க எண்ணி மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்காக விளம்பர நோட்டிஸ்களை அச்சிட்டு  சுவர்களில் ஒட்டினால் அதே ஊரில் உள்ள மற்றொரு முஸ்லிம் அமைப்பு அந்த மார்க்க விளக்க பொதுக்கூட சுவர்விளம்பரங்கள் மீது தங்கள் சுவர் விளம்பரங்களை ஒட்டி தாவா பணி பற்றிய தகவல்கள் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேராத வண்ணம் தடுக்கின்றனர். இவ்வாறு செய்யலாமா? இதைவிட அந்த விளம்பரங்களுக்கு அருகாமையில் விளம்பரம் ஒட்டலாமே! மக்கள் எந்த கூட்டத்திற்கு செல்ல நினைக் கின்றார்களோ அங்கு செல்லலாமே ஏன் இப்படிப்பட்ட அநாகரீக செயல்களை செய்கிறார்கள்!

 

அன்புச் சகோதரர்களே இப்படிப்பட்ட கேவலமான செயலை செய்த அந்த நபர்களையோ, அவர்களின் அமைப்பையோ பற்றி இங்கு சுட்டிக்காட்டலாம் ஆனால் அவ்வாறு செய்வதால் அவர்கள் அசிங்கப்பட்டு நிற்பார்கள் மேலும் குற்றம் செய்தவன் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்க எண்ணியே பெயரை குறிப்பிடாமல் நிறுத்தியுள்ளேன்! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள் இதன் அடிப்படையில் குற்றம் செய்த அந்த நெஞ்சங்கள் குறுகுறுக்கட்டும் என்று எண்ணி மறைமுகமாக எச்சரிக்கிறேன்!  இனிமேலும் இப்படிப்பட்ட பாவச் செயல்களை செய்யாதீர்கள்! அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்!

 

சகோதரர்களே! நம்மை யாரும் பார்க்கவில்லை பாவமான காரியத்தை செய்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள் மாறாக அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் நிறுத்துங்கள்! கேவலமான இந்த இழிச் செயல்களை செய்து மஹ்சர் பெருவெளியில் அல்லாஹ்விடம் சிறுமைபட்டு உங்கள் கண்ணியத்தை இழந்துவிடாதீர்கள் என்று உங்களை மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்!

 

ஒவ்வொருவரின் வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எழுதும் இரு வானவர்கள் மனிதனிடம் இல்லாமல் எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை. (காஃப்:-50 : 17, 18)

 

இந்த அருள்மறை வசனத்தை அறியாதவர் அறிந்துக்கொள்ளட்டும் இனிமேலாவது தாவாவை முறிக்கும் பாவத்திலிருந்து மீண்டு வாருங்கள் ஏகத்துவத்தை எத்திவைக்கும் அழகான பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்! தாவா பணியை அல்லாஹ் வகுத்துள்ளான் அவன் ஆணைப்படி ஒவ்வொரு ஜமாஅத்தும் அந்த பணியை செய்துக்கொண்டுள்ளது எனவே இப்படிப்பட் அருமையான பணிகளை தடுக்காதீர்கள் மீறி தடுத்தால் அது தாவா பணியை தடுத்த குற்றம் மட்டுமல்லாமல் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்த்த குற்றம் உங்கள் மீது ஏற்பட்டுவிடும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்!

 

இதோ இந்த பாக்கியம் உங்களுக்கு வேண்டாமா?

நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில்அழகிய குணமுள்ளவர்கள் எனக்கு மிக நேசமானவர்களிலும், மறுமைநாளில் எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருப்பவர்களிலும் அடங்குவர். உங்களில் எனக்கு மிக வெறுப்பானவர்களும், மறுமைநாளில் என்னை விட்டும் தூரத்திலிருப்பவர்களும் உங்களில் அதிகமாக பேசுபவர்களும் தங்களின் பேச்சால் மக்களிடம் பெருமையடிப்பவர்களும், வாய்பிளந்திருப்பவர்களும் ஆவார்கள். அல்லாஹ்வின் தூதரே! வாய் பிளந்தோர் என்றால் யார்? என்று நபித்தோழர்கள் கேட்ட போது பெருமையடிப்பவர்கள் என நபிகளார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுஹிப்பான், தப்ரானி)

 

பாவங்களிலிருந்து ஈடேற்றம் பெற அழகிய வழி

அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் பெறுவது எவ்வாறு என்று கேட்டேன். அதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் நாவை தீங்கை விட்டும் தடுத்துக்கொள்! உன் வீடு விஸ்தீரணமாக இருக்கட்டும். உன் பிழைகளுக்காக அழுவீராக! எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரழி) ஆதாரம்: திர்மிதி)

 

 எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும் அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இது  இஸ்லாத்தையும்  தாஃவா பணியையும் விரும்பக்கூடிய எங்கள் பகுதி மக்களின் சார்பான எச்சரிக்கையாகும்! காரணம் அந்த அளவுக்கு சேலத்தில் ஷிர்க், மவ்லூது, கத்தம் பாத்திஹா மலிந்து உள்ளது!

தயவு செய்து எங்கள் பகுதி மக்களுக்கு நேர்வழியை கொடுக்க முயற்சி செய்யுங்கள் உங்களால்  முடியவில்லையெனில் நேர்வழியை எத்திவைக்கும் சகோதரர்களை தடுக்காமலாவது இருக்கவும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்!

தவறு செய்த சகோதரர்கள் திருந்துங்கள்! 

இதற்கும் மேல் இந்த இழிச் செயலை எந்த அமைப்பாவது செய்தால் அவர்களின் முகங்களை வெட்ட வெளிச்சமாக பிரசுரிப்பேன்! (இன்ஷா அல்லாஹ்)

அல்லாஹ்வுக்கு பயந்துக் கொள்ளுங்கள்!

இத்தகுல்லாஹ்

Read Full Post »

%d bloggers like this: