பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஆண்டவனின் மகிமையால் உங்கள் அனைவருக்கும் சாந்தியும், அன்பும், சந்தோஷமும் நிலவுவதாக!
சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்கள் அறிவுரைகளுக்கு தக்க அறிவுரைகள் பகவத்கீதையிலிருந்தும் ஏன் திருக்குர்ஆனிலிருந்தும் கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா?
1. “எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை” என்கிறது ஒரு தெய்வம்! (வேத பிரகாஷ் கேள்வி)
சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே தாங்கள் இங்கு சுட்டிக் காட்டும் வாக்கியம் இந்துமத்திலும் உள்ளது. அதாவது உங்கள் கிருஷ்ண பரமாத்மா மனிதர்களை நோக்கி தன்னையே கடவுள் என்றும் தன்னிடமே சரண் புக வேண்டும் என்றும் கூறுகிறார். அப்படியானால் அவர் தன்னை மட்டுமே கடவுள் என்றுதானே கூறுகிறார்.
பகவத் கீதையில் கிருஷ்ணன் தன்னை ‘பரமேஸ்வரன்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்; அதாவது, அவருடைய பக்தர்கள் அவரை “தேவாதிதேவன்’ கடவுளர்க்கெல்லாம் கடவுள் என்று நம்புகின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் – ‘நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடை யோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)
இதையே பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான் அதை மறுக்கிறீரா?
எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக் கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)
இந்துக்களின் வேதங்களின் அடிப்படையில் பார்த்தால் மனிதன் செய்யும் பாவங்களை விடுவிப்பவர்தானே கடவுளாக முடியும். சரி சற்று யோசியுங்கள் நீங்கள் 10 பாவங்களை செய்கிறீர்கள் அந்த 10 பாவங்களையும் 1 கடவுள் மன்னிப்பாரா அல்லது 10 கடவுள்களும் ஒவ்வொரு பாவங்களை மன்னிப்பார்களா?
உங்களுடைய ஒரு பாவம் கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை எனில் அவர் மன்னிக்கமாட்டார் அப்படியென்றால் மற்ற 9 பாவங்களை முறையே ஈஸ்வரன், விநாயகர், முருகன் மன்னிக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம் இப்படிப்பட்ட நிலையில் கிருஷ்ணனுக்கு என்ன மரியாதை இருக்கிறது.
சரி, சிவன் ஒரு பாவத்தை மன்னிக்கவில்லை உடனே பார்வதி யிடம் தாங்கள் செல்கிறீர்கள் அவரும் மன்னிக்கவில்லை உடனே அர்த்தநாரீஸ்வரனிடம் செல்கிறீர்கள் அந்த இருவரும் சிவன் மற்றும் பார்வதியின் பாதி அங்கமே அப்போ சிவனும் பார்வதியும் தனித்தனியாக இருக்கும் போது மன்னிக்கமாட்டேன் என்று கூறிய வாக்கை அர்த்தநாரீஸ்வரராக இருக்கும்போது மன்னிப்பார்களா? தங்கள் வாக்கை மாற்றிக்கொள்வார்களா? வாக்கு மாற்றுவது இறைவனின் இயல்பா! எனவேதான் இஸ்லாம் ஒரு கடவுள்தான் உள்ளது மற்றொரு கடவுள் இல்லை என்று கூறுகிறது. மேலும் அல்லாஹ் என்ற சொல் அரபுச் சொல் லாகும் அதற்கு தமிழ் விளக்கம் கொடுப்பதாக இருந்தால் அது ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும் தான் அர்த்தம்.
2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்? (வேத பிரகாஷ் கேள்வி)
ஒரு தெய்வம் தான் உலகத்தில் உள்ளது பல தெய்வம் இருந்தால் தெய்வீகம் எப்படி வரும் அப்படியானால் பல தெய்வங்கள் ஒன்றோடொன்று கருத்து வேறுபாடு கொண்டு சண்டையில் நிற்கும் இதற்கு ஆதாரம் தங்களிடமே உள்ளதே அதாவது மாம்பழ கதைதான்” (ஈஸ்வரன், பார்வதி, விநாயகர், முருகன் தகராறுகள்)
3. அதுமட்டுமா? “என்னைத் தவிர மேலேயோ, கீழேயோ…………….இல்லை……..”, என்றெல்லாம் ஒரு தெய்வம்சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது. (வேத பிரகாஷ் கேள்வி)
சகோ. வேதபிரகாஷ் கிருஷ்ணனின் வாக்கை பாருங்கள் ‘நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்’ – (கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ், சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கள், மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான், மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலி போய், வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து , போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன், ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே, ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155
சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இந்த திருச்சிற்றம்பலப் பாடலுக்கு விளக்கமென்ன?
4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது! (வேத பிரகாஷ் கேள்வி)
மனிதன் குலம், கோத்திரமாக வாழந்து வருபவன் அவன் கடவுளை அவ்வாறுதான் எடைபோடுகிறான் எனவேதான் ஒரு தெயவம் என்று கூறாமல் அவனுக்கு அம்மா, அப்பா, பிள்ளை என்று குடும்பத்தை உருவாக்கிவிடுகிறான். விநாயகரை கடவுள் என்கிறீர்கள் சரி அந்த விநாயகருடைய தலையை யுத்த களத்தில் வெட்டி விடுகிறார்கள் ஆனால் சக கடவுள்கள் அவரை காப்பாற்ற முடியவில்லை உடனே சிவன் யானையின் தலையை அணிவித்து அவரை யானைமுகத்தான் என்று கூறுகிறார். இந்த கதையை படிக்கும் போது ஒரு கடவுள் மற்ற கடவுளுக்கு குறித்த நேரத்தில் உதவ இயலவிலலை என்றுதானே வருகிறது. அப்படியானல் கடவுள்களுக்கு பலவீனம் உள்ளதோ? ஆனால் கடவுள் எனப்படுபவருக்கு தீங்கு ஏற்படாது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவேதான் உங்கள் கொள்கையை மறுக்கி றோம்.
5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன் அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான். (வேத பிரகாஷ் கேள்வி)
கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்பட்டார் என்று சட்ட மேதை அம்பேத்கார் கூறுகிறார்.
இது மனித இயல்பு மனிதனை திருத்த முடியாது. ஆனால் ஆதிபராசக்தி என்று கூறுகிறீர்கள் ஆதிபராசக்தி என்பதற்கு அர்த்தமென்ன ஆதி – பரா – சக்தி (அதாவது உலகம் தோன்றி யதற்கு முன் உள்ளது ஆதி எனப்படும் பரா என்பது எல்லாவற்றையும் பெரியது எனப்படும், சக்தி என்பது எதற்கும் இல்லாத ஆற்றல் எனப்படும்) இதற்கு முழுமையாக விளக்கம் தர வேண்டுமானால் உலகம் தோன்றியதற்கு முன் தோன்றி எல்லா வஸ்துக்களையும் விட பெரிய அளவு கொண்டு ஒரு மிகப் பெறும் ஆற்றல் படைத்தவன் என்று பொருள்படும். அதைதான் ஈஸ்வரன், பிதா, அல்லாஹ் என்று ஆதிகாலத்தில் மக்கள் கூறிக் கொண்டு வந்தனர் ஆனால் பிற்காலத்தில் வந்த மனிதர்கள்தான் அந்த ஆதி+பரா+சக்தி-யை முக்கடவுளாக அதாவது 3 கடவுள்களாக பிரித்து 10 கைகளை கொடுத்து ஒரு புராணத் தையும் கொடுத்து அதன் ஒவ்வொரு கைகளிலும் ஆயுதத்தை கொடுத்து அழகு பார்த்தன.
சகோதரர் வேத பிரகாஷ் அவர்களே இந்த மனிதர்களை தாங்கள் என்ன கூற இயலும், அல்லது அந்த ஆதிபராசக்தி தன்னை விக்ரஹமாக வணங்க கூறியதா?
இதோ விக்ரஹ் வணக்கத்தை கூடாது என்று பறைசாற்றும் பைபிள் வசனம்
ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைக ளுக்குக் கண்களிருந்தும் காணாது.
(பைபிள்) சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையு மாயிருக்கிறது. 5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கி றார்கள்.
ஆனால் பாவம் கிருத்தவ நண்பர்கள் இயேசு நாதர், மரியாள், மற்றும் சிலுவைகளை விக்ரஹங்களாக வழிபடுகின்றனர் அந்தோ பரிதாபம்!
6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில் இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது! தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டை தான்! (வேத பிரகாஷ் கேள்வி)
நான் அல்லாஹ்தான் கடவுள் என்கிறேன் அது பெயர் இல்லை மாறாக அது மேலே குறிப்பிட்ட படி தமிழில் ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும் தான் அர்த்தம். மேலும் ரஹ்மான் என்கிறோம் அதற்கு அளவற்ற அருளாளன் என்று பெயர் ரஹீம் என்று கூறுகிறோம் நிகரற்ற அன்புடையோன் என்று பெயர். இன்னும் அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் உள்ளன அதில் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் இறைவனுடைய தன்மைகள்தான் பொருளே தவிர அவை இறைவனின் பெயரல்ல! இதோ அல்லாஹ்வின் பெயர்களின் தன்மைகள் கொண்ட அஸ்மாவுல் ஹுஸ்னா அட்டாச்மென்டை காணவும்!
சரி, கிருஷ்ணன் என்று கூறுவதற்கு என்ன பொருள், ராமன், சீதை, முருகன், என்பதற்கு என்ன பொருள்
7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, “என் தெய்வம்தான் தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை”, என்று எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்! (வேத பிரகாஷ் கேள்வி)
இங்கே ஆணவம் என்ற பேச்சுக்கு இடமில்லை அய்யா! என் புறத்தில் உள்ள நியாயத்தை பேசுகிறேன் நீங்கள் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசுகிறீர்கள் இதில் என்ன ஆணவம். நான் அல்லாஹ் (இறைவன்) கடவுள் என்கிறேன் அந்த சர்வ சிருஷ்டியைத் தவிர யாரும் சிருஷ்டிக்க முடியாது என்கிறேன் ஆனால் தாங்களோ பல கடவுள்கள் உள்ளன என்கிறீர்கள். நான் ஆணவம் கொள்வதாக இருந்தால் தாங்கள் என்ன கொள்கிறீர்கள் ஆணவமா? அல்லது அடக்கமா? என்னய்யா! உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?
8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள் சண்டைபோடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான். (வேத பிரகாஷ் கேள்வி)
இங்கு வேதபிரகாஷ் மட்டும் வேதனைப் படுகிறான் என்று கூறுகிறீர்கள் உங்களுக்கு மட்டும்தான் உள்ளம் உள்ளதோ எனக்கு இல்லையோ நானும் வேதனைப்படுகிறேன் வேதனைப் படுபவர்களும் வேதனைப்படுகிறார்கள் அதுதான் உண்மை!
9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்: islamindia.wordpress.com தொடருவோம், அலசுவோம், எந்த பிரச்சினையும் இல்லை. (வேத பிரகாஷ் கேள்வி)
என்னிடமும் வளைப்புக்கள் உள்ளன அதையும் சற்று படியுங்கள், தங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனில் தமிழ் படிக்கலாம், தமிழ் தெரியவில்லை எனில் ஆங்கிலம் படிக்கலாம். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறுபாண்மை இஸ்லாமி யர்களின் பங்கையும் படிங்கலாம். ஓரளவு தெளிவும் கிடைக்கும்.
https://islamicparadise.wordpress.com
http://amazingmuslims.wordpress.com/
http://salemexpress.blogspot.com/
10. ஆண்டவனின் கிருபையினால் “கடைசி தினம்” வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே,மரணிக்கும் வரை பிரச்சினை செய்யவேண்டாம். இதற்கும் “தமிழன்” பெயரை இழுக்கவேண்டாம்! (வேத பிரகாஷ் கேள்வி)
இந்த கட்டுரையின் சாரமும் உங்களின் முதல் முக்கிய நோக்கமுமே வம்புக்கு இழுப்பதுதான் அப்படி வம்புக்கு இழுத்துவிட்டு கிளைமேக்சில் (Climax)ல் பிரச்சினை வேண்டாம் என்பது நியாயமாகப்படுகிறதா? அன்புச் சகோதரரே!
சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்களுக்கு அழகிய அறிவுரை உங்கள் பகவத்கீதையிலிருந்தே கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா?
பகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்
எல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்”
அல்குர்ஆன்: 10:31,32
(நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்த்லிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும் உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார்? இன்னும் அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்?” அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்’ எனப் பதில்.கூறுவார்கள் “அப்படியாயின் நீங்கள் (உண்மைக்குப் மாறாக நடப்பதை) தவிர்த்து கொள்ளக் கூடாதா?” என்று கேளும். ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன். இந்த உண்மையை கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன மிஞ்சியிருக்கும்?
பகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்
எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடு விக்கிறேன். துயரப் படாதே.”
திருக்குர்ஆன் 25:70
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களு டைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்
புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது
திருக்குர்ஆன் 6:54
நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்ப வனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
பகவத் கீதையில் கடவுள் தன்மை
பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்
பகவத் கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்
”மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவ துமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.”
இஸ்லாம்
லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்
பொருள்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்!
குறிப்பு
அடுத்த பதிவில் வேதபிரகாஷ் கீழ்கண்டவாறு ஒப்புக்கொண்டார் அதற்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது!
சிவன், ராமன், கிருஷ்ணன் முதலியோர் உத்தமமான மனிதர்கள் (வேத பிரகாஷ்)
சபாஷ்! உங்கள் வாயில் சர்க்கரையை அள்ளிப் போடவேண்டும் உண்மையை இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொண்டீர்களே! உண்மைதான் சிவன், ராமன், கிருஷ்ணன் முதலியோர் மனிதர்களே! இதைத்தான் நாம் கூறுகிறோம்!
பதில் கொடுத்தது – சிராஜ் அப்துல்லாஹ்
குறிப்பு
நீங்கள் படித்த மேலே கண்ட ஆன்லைன் கூகுல் விவாதம் மின்தமிழ் கூகுல் குழுமத்தில நடைபெற்றது அங்கு இஸ்லாத்தை பற்றி விமர்சனங்களுக்கு பதில் பதிக்க தடைவிதிக்கப்பட்டு மேலும் எனக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது மின்தமிழ் குழும மாடரேட்டரின் உத்திரவுக்கு கட்டுப்பட்டு நானும் கண்ணியம் கருதி வெளியேறிவிட்டேன். ஆனால் என்னுடைய இந்த சொந்த தளத்தில் அந்த விவாதத்தினை பதிப்பதற்கு எனக்கு முழு உரிமையும் உள்ளது அதன் அடிப்படையில் இதை இங்கு நான் பதித்துள்ளேன். இந்த விவாதத்தில் என்னுடன் விவாதித்தில் ஈடுபட்ட என்னுடைய கண்ணியமிக்க மாற்று மத சகோதரர் வேதபிரகாஷ் தற்செயலாக இந்த தளத்தில் பதிக்கப்பட்ட மேற்கண்ட விவாதத்தை படித்திருக்கிறார் உடனே இங்கேயும் தன் விமர்சனம் எழுத முற்பட்டார் ஆனால் அதை நான் ஏற்கவில்லை காரணம் இது என் தளம் எனக்கு ஏற்கும் உரிமையும் நிராகரிக்கும் உரிமையும் உள்ளது. மேலும் குழுமத்தைவிட்டு வெளியேறிய பின் மாற்றுமதத்தை சேர்ந்த ஒரு சகோதரர் (வேதபிரகாஷின்) வேண்டாத விதண்டாவாத கேள்விகளுக்காக என்னுடைய இந்த வளைத்தளத்தில் சண்டையிட்டு இஸ்லாத்தை பற்றி ஓரளவு அறிந்துவைத்துள்ள கண்ணியமுள்ள எனது மற்ற மற்ற மாற்றுமத்தவர்களின் மன வருத்தை பெற வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பதில் தவிர்த்துள்ளேன்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது தமிழ் பழமொழி எனவே சகோ. வேதபிரகஸுக்கு பதில் கொடுத்தபின்னரும் அதையே திரும்ப திரும்ப கூறவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! நான் மார்க்கத்தை தெளிவாக எத்திவைத்துவிட்டேன் அதற்கு மின்தமிழ் குழுமத்தில் உள்ள 800 தமிழ் உறுப்பினர்கள் சாட்சிகளாக உள்ளனர், அல்லாஹ்வும் சாட்சியாக உள்ளான்!
இது என்னுடைய தளம் இங்கு என்னை திட்டக்கூடிய வசைபாடக்கூடிய சகோதரர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் மாற்றுமதத்தினராக இருந்தாலும் ஏன் இந்து FRONT போன்ற மதவாதிகளாக இருந்தாலும் அவர்களின் கண்ணியம் காக்கப்படும் ஆனால் இஸ்லாத்தின் பெயருக்கோ, உரிமைக்கோ பங்கம் விளைவிக்க நினைனப்பவர்களுக்கு (இறைவன் நாடினால்) சரியான பதில் கொடுக்கப்படும்! நானாக முன்வந்து பிறரை இகழமாட்டேன் என் மார்க்கத்தை இகழ்ந்தல் அல்லாஹ்வின் மீதாணையாக பதில் அளிக்க தவறமாட்டேன்!
எனது கண்ணியமிக்க மாற்றுமத சகோதரர்களே இந்த தளத்தில் கேள்விகளுக்கு பதில்கள்தான் பதிக்கப்பட்டுள்ளதே தவிர உலகில் உள்ள மதங்கங்களுக்கு கண்ணியக்குறைவாக விமர்சனம் இடம் பெறவில்லை (என்னுடைய மார்க்கத்தை மாற்று மதத்தவர்களால் இழிவுபடுத்தி பேசும்போது அதை எதிர்த்து குரள் கொடுக்கும் விதமாக மாற்றுமததை பற்றி விமர்சனம் கொடுத்ளேனே தவிர வேண்டுமென்றே கண்ணியமுள்ள மாற்றுமதத்தவர்களின் மனக்கசப்பை தூண்டுவதற்காக மாற்றுமதத்தின் மீது விமர்சனம் செய்யவில்லை – நம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்) என்பது அனைவரும் அறிந்துக்கொள்ளுங்கள்.
ஆனால் கண்ணியமுள்ள என் அருமை சகோதரர் தனது இஸ்லாம்-இந்தியா வளைத்தளத்தில் இஸ்லாத்தை வேண்டுமென்றே கண்ணியக்குறைவான விமர்சனங்களை எழுதி வருகிறார் இது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கட்டும்! தமிழர்களாகிய நீங்கள் நடுநிலையாளர்களாக இருந்தால் கண்ணியம் கருதி அவருக்கு அறிவுரை கூறுங்கள்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
மறுமொழியொன்றை இடுங்கள்