மின் தமிழ் குழுமத்தில் உள்ள தமிழ்ச் சான்றோர்க்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்!
எனது நோக்கம் தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்துவது கிடையாது! ஆனால் தமிழர்களாகிய நீங்கள் வந்தேமாதரம் பாடலுக்க எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்களை எதிர்த்து பேசியுள்ளீர்கள், சாதாரணமாக மனிதர்களை எதிர்த்திருந்தால் பரவாயில்லை மாறாக எங்கள் இறைவன் அல்லாஹ், இறைவேதம், இஸ்லாமிய பண்பாட்டை வம்புக்கு இழுத்து பேசியுள்ளீர்கள். இதில் வேத பிரகாஷ் அவர்களின் போக்கும், ஜடாயு அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான் நான் வாக்குவாதத்தில் ஈடுபட முனைப்பு காட்டியது! உங்களுடைய இந்த 2 சகோதரர்களும் பவ்யமாக நடந்துக்கொண்டு முஸ்லிம்களை எதிர்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்குமா? உங்கள் உள்ளங்களில் சிந்தித்துப் பாருங்கள்!
முஸ்லிமாகிய நான் வேண்டுமென்றே இந்துக்களை வம்புக்கு இழுத்தேனா? என்னுடைய தீன் எனும் இஸ்லாமிய மார்க்கத்தை உங்கள் தமிழ் சகோதரர்கள் தரக்குறைவாக பேசியதால்தான் சற்று பதில் கொடுத்திருந்தேன். எனது பதில் உங்களை புண்படுத்தி யிருக்கும் என்ன செய்வது வேறு வழி இல்லையே! காரணம் வாதி, பிரதிவாதி ஆகிய இருவரும் தம் தரப்பு வாதங்களை முன் நிறுத்த வேண்டிய கட்டாயம்தானே! எனவேதான் இவ்வாறு நான் நடந்துக்கொண்டேன்! எனினும் உங்கள் தமிழ் சகோதரர்கள் மீண்டும் மீண்டும் வரம்பு மீறிக்கொண்டு வருகின்றனர் எனவே தமிழர் பண்பாட்டை வளர்க்க ஆசையுடன் இருக்கும் நீவீர் உங்கள் சகோதரர்களுக்கு அறிவுரை கூறுங்கள் இப்போது அவர்களுக்கு இது முக்கிய தேவையாகிறது.
வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பதற்கு ஆதாரம்
வந்தே மாதரம் பாடலுக்க முஸ்லிம்களாகிய நாம் எதிர்ப்பது எதன் அடிப்படையில் என்று புரிந்துக்கொள்ளுங்கள்! நாம் வணக்கு வது அல்லாஹ் ஒருவனைத் தான் அவனைத் தவிர யாரை வணங்கக்கூடாது என்று தடை உள்ளது! எனவே பாரத மாதாவை வணங்குவது போன்ற பாடல் எங்களுக்கும் எங்கள் இஸ்லாமிய கொள்கைக்கும் மாற்றமானதாகும்! எனவே நாம் எதிர்க்கிறோம்.
தமிழ் செய்யுள்களைப் புரட்டிப் பார்த்தால் நக்கீரர் உங்கள் தெய்வம் சிவபெருமானின் பாடலில் குற்றம் இருந்தது கண்டு நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றால் அவரு டைய பாணியில்தான் நாம் வந்தே மாதரம் பாடலில் பொருள் குற்றம் உள்ளதால் புலவர் நக்கீரன் பாணியில் இந்த பாடலை எதிர்க்கிறோம்.
இந்தியாவில் 1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் உங்கள் கண்முன்னே உள்ளன ஆனால் ஒரு திராவிடர்கள் ஒரு தேசிய மொழியான இந்தி யையே எதிர்த்து குரள் கொடுக்கம் போது முஸ்லிம்களாகிய நாம் வந்தே மாதரம் என்ற இந்தி பாடலை எதிர்க்க ஏன் உரிமை யில்லை! என்ன சகோதரர்களே உங்களுக்கு ஒரு நியாயம்! ஊருக்கு ஒரு நியாயமா?
எங்களுக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளனவே! அதன் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலை எதிர்க்கிறோம்!
எதிர்ப்புக் குரள் கொடுக்க வேண்டாம் என்றால் எங்களுக்கு இந்தியாவில் வாழ்வுரிமை இல்லையா? நாம் இந்தியாவில் வழ்வதற்கு தகுதியற்றவர்களா? அப்படியானால் பாராளு மன்றத்தில் ஒரு சட்டம் இயற்றி இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்ற முனைப்பு காட்டுங்கள் உங்கள் தெய்வங்களுக்கு இது பிடித்தமாக இருந்தால் உங்களுக்கு உதவுவார்கள்!
இந்தியாவின் அடிப்படை உரிமைகள்
இந்தியாவின் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது,
ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.
தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகு பாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்ட வர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.
இந்த அடிப்படை உரிமைகள் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து, அதன் வழித் தோன்றலாக இங்கும் பயன்படுத்தப்படுகின்றது.
ஆறு அடிப்படை உரிமைகளாவன
- சம உரிமை
- சுதந்திர உரிமை
- சுரண்டலை எதிர்க்கும் உரிமை
- சமய சார்பு உரிமை
- கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
- அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை
இந்திய தேசிய கொடி
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1921ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன.
மத சுதந்திரம்
அரசியல் சட்டத்தின் 25,26,27,28 பிரிவுகள் மத சுதந்திரம் குறித்தவை. அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்கள் மத சுதந்திரம் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர்.
இந்திய சட்டம்
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்
- இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்
- குற்றவியல் சட்டம்
- ஒப்பந்தச் சட்டம்
- தொழிலாளர்ச் சட்டம்
- பொல்லாங்கு குற்றவியல் சட்டம் (டோர்ட் லா)
- குடும்பச் சட்டம்
- இந்துச் சட்டம்
- இசுலாமியச் சட்டம்
- கிருத்துவச் சட்டம்
- பொதுச் சட்டம்
- தேசியச் சட்டம்
- அமலாக்கச் சட்டம்
இத்துடன் உங்கள் குழுமத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன்! எனக்குப் பின்னால் நீங்கள் இஸ்லாத்தை இகழ்வீர்கள் என்பது தெரிந்த விஷயமே ஆனால் எல்லா விஷயங்களும் அல்லாஹ் கண்காணித்து மறுமையில் பதில் தருவான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இதோ திருக்குர்ஆன் வசனங்கள் படியுங்கள்!
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (திருக்குர்ஆன் 50:17)
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). (திருக்குர்ஆன் 9:35)
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (திருக்குர்ஆன் 9:32)
குறிப்பு
மின் தமிழ் குழும மட்டருத்துனர் தமிழர்கள் பேசுவதில் தவறு இல்லை என்ற வகையில் என்னிடம் வாதாடி அவர்களின் வாதத்திற்கு தக்க பதில் கொடுத்த என்னுடைய வாதம் தவறு என்றும் எனக்கு உகந்த குழுமம் மின்தமிழ் குழுமம் இல்லை என்றும் கூறி என்னை மட்டறுக்க நேரிடும் என்றும் என எச்சரித்தார்!
உண்மையைச் சொன்னால் எச்சரிக்கையா? நானே விலகுகிறேன் என்று எண்ணி விலக நேரிட்டது! (மின்தமிழ் மட்டறுத்துனர் என்னுடன் கூகுல் சாட்டிங் செய்து நான் விலகும் முன் தனிப்பட்ட முறையில் தவறாக நடந்த தம் குழும உறுப்பினர்களைக் கண்டு மனம் வெந்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்)
குறிப்பு
நான் முஸ்லிம்தான்! இந்தியன்தான் ஆனாலும் என் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் உரிமையை பரிக்க முயற்சிக்கும் மாற்று மதத்தினருடன் அமைதியான முறையில் எதிர்ப்பு குரள் கொடுப்பது ஒரு முஸ்லிம் மற்றும் இந்தியன் என்ற அடிப்படையில் உரிமை உள்ளது. என்னைப் பற்றி அவதூறாக பேசக்கூடியவர்களுக்கு இது எடுத்துக்காட்டாக இருக்க இதை முன் மொழிந்துள்ளேன்! அவதூறு பேசி முஸ்லிம் சகோதரர்கள் உணர்ந்துக் கொள்ளட்டும்!
இப்படிக்கு
அன்புடன் – சிராஜ் அப்துல்லாஹ்
மறுமொழியொன்றை இடுங்கள்