தமிழர்கள் முன் இஸ்லாம் எத்திவைக்கப்பட்டுள்ளது! இந்த செய்தி சுய விளம்பரத்திற்கு அல்ல! மாறாக மார்க்கத்தை அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களாகிய நாம் மாற்றுமதத் தவர்களிடம் அதை எடுத்துச் சொல்கிறோமா என்று வம்புக்கு கேள்வி எழுப்புகின்றனர் ஆம் அந்த முஸ்லிம் சகோதரரின் கேள்வியை பாருங்கள்
சிராஜ் நீங்கள் உங்கள் கடமையை , சூரா 16 : 125 படி செய்து உள்ளீர்களா ?? இல்லை எனில் , இறைவன் முன் சரியான பதிலை இப்போதே தயார் செய்யுங்கள்
ஆம் நான் அவ்வாறு மார்க்கத்தைப் பற்றிய அறிவை ஓரளவு என் பங்கிற்கும் எத்திவைத்துள்ளேன் என்று ஆதாரத்துடன் சகோதரருக்கு உணர்த்தவெ இந்த பதில் பதிக்கிறேன். (இதை படித்துவிட்டு விளம்பரம் என்று சொல்லி தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள்!)
குழும பெயர் – மின்தமிழ் குழுமம்
செய்தி எத்திவைக்கப்பட்ட தினம் – ஆக்டோபர் 8, 2009
குறிப்பு
கீழ்கண்ட செய்தி முழுவதும் என்னுடையது அல்ல மாறாக பெரும் பங்கு கீழ்கண்ட பிளாக்ஸ்பாட்-ல் கண்டது அதை சற்று மெருகூட்டி மாற்றுமதத்தவர்கள் முன் சமர்பிக் கப்பட்டது அல்லாஹ் நன்கறிவான் நன்றி
http://tamilmuslim.blogspot.com/2006/08/blog-post_25.html/
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பின் தமிழ் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்!
நான் இங்கு வாதாட வந்ததாகவும் என்னடைய கருத்துக்களை தங்கள் தளத்தில் திணிப்பதாகவும் எண்ணவேண்டாம் மாறாக இன்றைய காலகட்டத்தில் நாம் முஸ்லிம்கள் தீமையை இவ்வாறு எதிர்த்துக் குரள் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்கான ஒரு சான்றாக இந்த கட்டுரையை முன் வைக்கிறேன்!
இது போன்ற கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தவர்களுக்கும் பயனளிக்கும் என்ற அழகிய எண்ணத்தில் உருவாக்கியுள்ளேன். இது போன்ற கருத்துக்கள் தங்கள் தளத்தில் போஸ்டிங் செய்வது தவறாக இருந்தால் எனக்கு அறிவுறுத்துங்கள் நான் இது போன்ற ஆக்கங்களை தங்கள் குழுமத்தில் பதிப்பதை நிறுத்திக் கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். நானும் இஸ்லாத்தை படித்த ஆலிம்களும் (மார்க்க அறிஞர்கள்) இவ்வாறுதான் நம் முஸ்லிம் சகோதரர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டு வருகிறோம்! கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள் மனிதனாகப் பிறந்தவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழவே படைக்கப்பட்டுள்ளான் ஆனால் மனிதன் தன்னை படைத்த இறைவனை மறந்து தான்தோன்றித்தனமாக சில செயல்களில் ஈடுபட்டு அதனால் பிறருக்கு இடையுறுகளை ஏற்படுத்துகிறான். இவ்வாறு இடையுறு ஏற்படுத்தும் மனிதனுக்கு எதிராக ஒரு சிலர் கையில் ஆயுதம் ஏந்தி தாங்கள்தான் உலகைக் காக்கும் மைந்தர்கள் என்று எண்ணிக் கொள்கின்றனர். அவ்வாறு உருவாகும் ஒருசிலரின் செய்கைகளால் ஒட்டுமொத்த சமுதாயமே கலங்கப்படுகிறது. ஒரு இந்துவினால் இறை இல்லம் இடிக்கப்படுகிறது அதற்காக அவனைச் சார்ந்த இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு கிருத்தவன் போர் தொடுக்கிறான் அவனால் அவனைச் சார்ந்த கிருத்தவ மக்கள் பாதிக்கப் படுகின்றனர் ஒரு முஸ்லிம் ஒருவனுடைய தலையைத் துண்டிக்கிறான் அவனால் அவனைச் சார்ந்த இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் ஏன் இந்த அவல நிலை இதுதான் நாகரீகமா?
இந்துக்களின் வேதங்களில் இறை இல்லங்கள் இடிக்க கட்டளையிடப்பட்டுள்ளதா?
கிருத்தவர்களின் பைபிளில் அப்பாவி மக்களை போர்கள் மூலம் கொலை செய்ய ஆணையிடப்பட்டுள்ளதா?
திருக்குர்ஆனில் அப்பாவி மக்களை கடத்தி தலை துண்டிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதா? இல்லையே!
எல்லா வேதங்களிலும் ஒற்றுமையும், சகோதரத்துவத் தையும், அன்பையும்தானே குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் மக்கள் இதை பின்பற்றாமல் வாழ்கின்றனரே!
இதற்கு யார் பொறுப்பு படைத்த இறைவனா? பிறந்த மனிதனா? இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக்கண்டு ஒருசில முஸ்லிம்கள் ஆவேசப்பட்டு விடுகிறார்கள் அவ்வாறு நபிகளார் (ஸல்) ஆவேசப்பட்டார்களா? என்பதற்கான ஒரு பாடமே இன்றைய கட்டுரை! படியுங்கள் உள்ளத்தை உலக சமாதானத்திற்காக பயன்படுத்துங்கள் அப்பாவி மக்களை மிரட்டாதீர்கள்.
மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் – குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னுவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக” (என்றும் கூறினார்) (திருக்குர்ஆன் 7-86)
இனி நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டிய மனித நேயம்
துமாமா (ரலி) அவர்கள் துமாமா அவர்கள் யமாமா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், மதீனாவிலிருந்து வியாபாரம் நிமித்தம், அல்லது சொந்த அலுவல் நிமித்தம் யமாமா வழியாகவும், இன்னும் யமாமாவிலிருந்து சற்று தொலைவில் வேறு வழியாகவும் பயணிக்கக்கூடிய முஸ்லிம்களை கொலை செய்வதும், அவர்களது பொருட்களை சூறையாடுவதுமே அவரது பிரதான பொழுதுபோக்காக இருந்து வந்தது, அந்தளவுக்கு இஸ்லாத்தின் மீது பகையுணர்வு கொண்டவராக இருந்தார். இவர் ஒருநாள் மதீனா வழியாக அல்லது மதீனாவிலிருந்து சற்று தொலைவில் பயணிக்கும் போது முஸ்லிம்களால் காணப்பட்டு மதீனாவுக்குள் பிடித்துக் கொண்டு வரப்படுகிறார் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி பள்ளியருகே கட்டப்பட்டு அண்ணல் அவர்களுக்கு தகவல் அனுப்பப் படுகிறது. கருணையே உருவான காருண்ய நபி (ஸல்) அவர்கள் அவரது அருகில் நெருங்கி வந்து துமாமாவே இப்பொழுது உம்முடைய முடிவு என்ன? என்று கேட்கிறார்கள் அதற்கவர் – நீங்கள் விரும்பினால் என்னை கொலை செய்து விடலாம், காரணம் அதற்கு நான் முற்றிலும் தகுதியானவனே !
அந்தளவுக்கு முஸ்லிம்களை கொலை செய்திருக்கிறேன். – நீங்கள் விரும்பினால் பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு என்னை விட்டு விடலாம் அந்தளவுக்கு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை (வியாபாரப் பொருட்களை) சூறையாடவும் செய்திருக்கிறேன். – நீங்கள் விரும்பினால் என்னை மண்ணித்து விடலாம், அவ்வாறு மண்ணித்து விட்டால் என்னை ஒரு சிறந்த மனிதராகப் பார்க்கலாம்.
முதலாவது கோரிக்கை :
கொலை செய்து விடுவதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் தான் என்பதை அவரே ஏற்றுக் கொள்கிறார் குற்றம் அவர் மூலமே நிரூபிக்கவும் படுகிறது மேலும் தணித்தும் இருக்கிறார் ஒரு பெரும் படையுடன் இருக்க வில்லை கொலைக்குக் கொலை எனும் ரீதியில் அவரை கொலை செய்திருக்கலாம். காரணம் மதீனாவின் ஜனாதிபதியாக அண்ணல் அவர்களே இருக்கிறார்கள் அரசு மூலம் ஆணை பிறப்பித்து அவரை கொலை செய்திருக்கலாம்.
இரண்டாவது கோரிக்கை :
பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு விடுவித்து விடலாம் என்று அவரேக் கூறுகிறார் அந்தளவுக்கு முஸ்லிம் வியாபாரிகளுடைய, முஸ்லிம் வழிப் போக்கர்களுடைய பொருட்களை சூறையாடி உள்ளார் என்பது தெரிய வருகிறது, முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்ததால் ஒருப் பெருந்தொகையை நிர்ணயித்துக் கொண்டு அவரை விடுதலை செய்திருக்கலாம்.
மூன்றாவது கோரிக்கை :
மண்ணித்து விட்டு விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய அவரது கோரிக்கையை புறக்கணித்திருக்கலாம் காரணம் விடுவித்தப் பிறகு சொன்ன மாதிரி சிறந்த ஒரு மனிதனாக வாழ்வாரா ? என்பது உறுதியாக கூற முடியாத விஷயமாகும். ஆனாலும் அவ்வாறான ஒரு கோரிக்கையை இறுதிக் கோரிக்கையாக அவர் வைத்தப்பின் நபிகளார் அதிலிருந்து பின்வாங்க முடியவில்லை காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இறைத் தூதராக வரவில்லை, மாறாக உலகம் முழுவதுலுமுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் இறைத் தூதுராக அதிலும் இறுதித் தூதராக வந்தவர்கள் என்பதால் துமாமா அவர்கள் ஒரு மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் கொலைக்குக் கொலை செய்து விடுவதையோ, பிணைத் தொகையை பெற்றுக் கொள்வதையோ தவிர்த்து விட்டு அவரது மூன்றாவது கோரிக்கையை அண்ணல் அவர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முன்வருகிறார்கள்.
நபியே! நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. திருக்குர்ஆன் அத்தியாயம் 21: வசனம் 107.
காரணம் ஒருவர் இந்த நிமிடத்திலிருந்து நான் நேர்வழியில் வாழ்ந்து கொள்கிறேன் என்றுக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒரு முறை கந்தக் யுத்தத்தில் எதிரி ஒருவர் முஸ்லிம் போர்வீரரின் வாளின் முனைக்கு நெருங்;கி விட்ட பொழுது நான் முஸ்லிமாகிக் கொள்கிறேன் என்றுக் கூறுகிறார் அதைப் பொருட்படுத்தாமல் அவரைக் கொன்று விடுகிறார் இதை அண்ணல் அவர்களிடம் கூறும் பேர்து; அவரை விட்டிருக்கலாமே அவரை ஏன் கொன்றீர்கள்? என்று முஸ்லீம் வீரரின் மீது கொபம் கொள்கிறார்கள் வாளின் முனைக்கு நெருக்கமாக வந்தப்பிறகு அவர் உயிருக்குப் பயந்து கூறுவதாக நினைத்து வெட்டி விட்டேன் என்று பதில் கூற அவரது உள்ளத்தை நீங்கள் பிளந்துப் பார்த்தீர்களா? என்றுக் கூறி அண்ணல் அவர்கள் சஙடகடப் படுகிறார்கள். அதனால் துமாமா அவர்கள் உயிருக்கு பயந்து பொய் சொல்வதாக அண்ணலார் அபிப்பிராயம் கொள்ள வில்லை, அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாக இறைவனால் அனுப்பப் பட்டதால் குற்றம் சாட்டப்பட்டு எதிரியால் குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு கயிறுகளால் பிணைத்துக் கட்டப்பட்டு நிற்கும் ஒருவர் இஸ்லாத்தின் எதிரி மாற்று மதத்தவராக இருந்தும் என்னை மண்ணித்து விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய உறுதி மொழியை ஏற்று அவரது குற்றங்களை மண்ணித்து அவரது கட்டுகளை அவிழ்த்து விட்டு விடும் படி உத்தரவிடுகிறார்கள். அவரது கட்டுகள் அவிழ்த்து விடப்படுகிறது அண்ணல் அவர்களுடைய பெருந்தன்மையையும், அவர்கள் உண்மை யிலேயே அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாக இறைவனால் அனுப்பபட்ட இறைத்தூதர் தான் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட துமாமா அவர்கள் அவ்விடத்தில் உளூ ( உடல் சுத்தம் ) செய்து விட்டு அண்ணல் அவர்களுடைய கரங்களின் மீது தனது கரங்களை வைத்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்று அன்று முதல் முஸ்லிமாகிவிடுகிறார் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தனது குடும்பத்தவர்கள் முழுவதையும் இஸ்லாத்திற்குள் இணைத்து விடுகிறார். அவர் தன்னை மண்ணித்து விடும்படி வைத்த மூன்றாவது கோரிக்கையில் சிறந்த மனிதராக வாழ்வேன் என்று மட்டுமேக் கூறினார் மாறாக அவிழ்த்து விடுங்கள் முஸ்லிமாகி விடுகிறேன் என்றுக் கூறவில்லை. இஸ்லாம் வாளால் பரவியது எனும் நச்சுக் கருத்துக்களை விதைக்கும் மேற்கத்தியர்கள் முதல் இந்தியாவின் பாஷிச சிந்தனை வாதிகள் வரை மேற்கானும் துமாமா (ரலி) அவர்களுடைய வரலாற்றைப் படித்து தெளிவு பெற கடமைப பட்டுள்ளனர் இஸ்லாத்திற்குள் கட்டாயப் படுத்தி எவரையும் உள்ளே நுழைவிப்பதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்கவில்லை .
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) ளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் –அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறி வோனாகவும் இருக்கின்றான். 2:256
மேற்கானும் திருமறை வசனம் மூலம் இஸ்லாத்தை புரிந்து கொண்டு இஸ்லாத்திற்குள் வருவதை மட்டுமே இஸ்லாம் அங்கீகரிக்கிறது, இஸ்லாத்தைப் புரியாமல் வருபவர் இஸ்லாத் திற்குள் வருவதைவிட வெளியில் இருந்து கொள்வதே மேலாகும் அதனால் இஸ்லாம் கட்டயாப்படுத்தி இஸ்லாத்திற்குள் நுழைவிப்பதை ஆணித்தரமாக தடுக்கிறது. ஆகவே துமாமா (ரல்) அவர்கள் சிறந்த ஒரு மனிதராக வாழ்வதாக வாக்களிக் கப்பட்டதை மட்டுமே ஏற்றுக்கொண்டு விடுதலை செய்கிறார்கள். அண்ணல் அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் புரிந்து கொள்ளாமல் இருந்தவரை முஸ்லிம்களை கொன்றொழிப்பதையும் அவர்களது பொருளாதாரத்தை சூறையாடுவதையும் வாடிக்கையாகக் கொண்ட துமாமா (ரலி) அவர்கள் அண்ணல் அவர்களுடைய மண்ணிக்கும் மணப்பான்மையையும், சகிப்புத் தன்மையை நேரில் பார்த்தப் பின் இதற்கு முன்பு தாம் தவறான சிற்தனையில் இருந்ததை உணர்ந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதுடன் தனது குடும்பாத்தாரையம் ஏற்றுக் கொள்ளச் செய்து இறைநம்பிக்கையாளர்களின் வரிசையில் இணைந்து கொண்டு ரலியல்லாஹூ அன்ஹூ என்கிற சங்கைக்குரிய பட்டத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். . . .
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும். 5:119
ஹதீஸ் இடம்பெற்ற நூல்: அபூதாவூத், அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)அவர்கள்
***
சகோதரர்களே! நாம் ஆயுதத்தை ஏந்தக்கூடாது அமைதியைத்தான் விரும்ப வேண்டும் எனவே தவறான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தவறை நோக்கி பயணம் செய்யாதீர்கள். உலகில் வாழும் ஒவ்வொரு படைப்பும் அல்லாஹ் (இறைவன்) படைத்தே ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு உரிமை உள்ளது ஆனால் நாம் அதை பரித்துவிடக்கூடாது. அவ்வாறு நாம் செய்துவிட்டால் அல்லாஹ்வின் அதிகாரத்தை நாம் கையில் எடுத்துக்கொண்டாக ஆகிவிடும்!
அமைதியையே இஸ்லாம் வலியுறுத்துகிறது!
அன்பையே இஸ்லாம் வலியுறுத்துகிறது!
பொறுமையையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இவையே இஸ்லாத்தின் முக்கிய பொக்கிஷங்கள்! குறிப்பு இது போன்ற ஆக்கங்கள் தமிழ் மொழியில் மக்களிடம் சென்று சேர வீரத் தமழர்களாகிய உங்களுக்கு தேவைப்பட்டால் கூறவும் அதிகமதிகமாக இந்த குழுமத்தில் போஸ்டிங் செய்கிறேன் ஆக்கங்களை மக்களிடம் பரப்பி உலக சமாதானத்துக்கு வழிவகை செய்வோம்! இறைவன் நம் அனைவரையும் நல்லருள் புரிவானாக!
எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே! அல்ஹம்துலி்ல்லாஹ்
அன்புடன் (சிராஜ் அப்துல்லாஹ்)
ஆனால் மாற்றுமதத்தினரால் இது போன்ற ஆக்கங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை மாறாக எண்ணிலடங்காத வேதனைகள்தான் பதில்களாக வந்தன!
மறுமொழியொன்றை இடுங்கள்