மார்க்கத்தை மாற்றுமத்தினரிடம் எத்திவைத்தீர்களா? என்று என்னை நோக்கி கேட்ட என் அன்பு முஸ்லிம் சகோதரர்களே! நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கீழே பதிக்கிறேன். உமறுப்புலவர் பற்றிய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில சகோதரர் வஹ்ஹாபி அவர்களின் உமறுப்புலவர் கட்டுரையை தமிழ் குழுமத்தில் முன்வைத்தேன் அதை ஏற்க தயங்கிய தமிழர்கள் என் மீது இவ்வாறு வினா எழுப்பினார்கள் அந்த வினாக்களுக்கு விடைகளும் விடைகளுக்கு வேண்டுமென்றே கேட்கப்பட்ட கேள்விகளும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்!
இங்கு இஸ்லாத்தைப் பற்றி எத்திவைக்கப்பட்டும் கேள்விகளாகவே வந்து கொட்டுகின்றன! புரியாத சமுதாயத்தை எவ்வாறு புரியவைப்பது?
இதோ மாற்றுமத விதண்டாவாத கேள்விக்கணைகள்
மாதம் – அக்டோபர், 2009
பென்னேஸ்வரன்
தோழர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே
நீங்கள் யாரை நல்லவர் யாரை கெட்டவர் என்று சொல்வீர்கள் என்று புரிபட மாட்டேன் என்கிறது. அதனால் ஒருவித பயத்துடன் அமைதி காக்கிறேன். மற்றவர்கள் எப்படி என்று தெரியாது. நாங்கள் பாடப்புத்தகங்களில் மட்டுமே உமறுப்புலவர் பப்றிப் படித்து இருக்கிறோம். (நாங்கள் என்ன? நான்). அந்தக் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் எங்களுக்கு மார்க் வாங்கி் கொடுத்த புலவர் அவர். காளமேகப் புலவர் போல, சேக்கிழார் போல. அவரைப் பற்றிய வேறு கோணத்தில் போட்டு கிழித்து எடுக்கிறீர்கள். அதனால் சற்றுப் பயமாக இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சொல்வதை பவ்யத்துடன் கேட்டுக கொண்டு இருக்கிறோம். அதனால் நீங்கள் மனவருத்தப் படவேண்டாம். உங்கள் வகுப்பறையைத் தொடருங்கள்.
******************
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
இறைவனின் திருப்பெயரால்,
என் இனிய சகோதர, சகோதரிகளே – ஸலாம்!
நான் உங்களை சீண்டுவதாக எண்ணவேண்டாம்! நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான் முஸ்லிம் புலவர் தப்புத்தப்பாக இலக்கணம் கொடுத்து அந்த இலக்கணத்தில் இஸ்லாத்தை நுழைத்துள்ளார்.
எங்கள் இஸ்லாம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரையும் கண்ணியப்படத்த கூறுகிறது. மேலும் பெண்களை மோகப் பொருளாக பார்க்காமல் கட்டிக்கொண்ட பெண்ணைத்தவிர மற்ற பெண்களை தாயகவும், சகோதரியாகவும் பாவிக்க அறிவுறுத்துகிறது.
இந்துமதமும், கிருத்தவ மதமும் இவ்வாறுதான் சட்டம் வகுக்கிறது அப்படியிருக்க உமறுப்புலவர் இஸ்லாத்தை இவ்வாறு தவறாக சித்தறித்துள்ளாரே இதை தமிழர்கள் பாடநூல்களில் இடம்பெறச் செய்யலாமா?
உமறுப்புலவர் ஏதோ இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியது போன்று இன்றைக்கு அந்த ஈனத்தனமான இலக்கண பாடலை தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இடம் பெறச் செய்வது தகுமா?
நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதே உமறுப் புலவர் தமிழ் பெண்களை இவ்வாறு சித்தரித்து பாடியிருந்தல் நீங்கள் இந்த உமறுப்புலவரின் பாடல்களை தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இடம்பெறச் செய்து கண்ணியப்படுத்துவீர்களா?
நாம் முஸ்லிம்கள் இந்த உமறுப்புலவரின் செயலால் வெட்கப்படுகிறோம்.
அதன் வெளிப்பாடே இந்த சர்ச்சை! இந்த சர்ச்சையால் நாம் கூறுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! இஸ்லாத்தை அறிந்துக் கொள்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள்! திருக்குர்ஆன் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை படித்துப் பாருங்கள்!
******************
அண்ணாமலை சுகுமாரம்
நண்பர் ஜனப் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே,
உமறு புலவரைப் பற்றிய இத்தகைய விமரிசனங்களை நான் முன்பே பார்த்திருக்கிறேன் .அவர் கம்பரைப் பின்பற்றி நபியின் திருமண நிகழ்வுகளை பாடிவிட்டார் என பல விமரிசனங்கள் உள்ளது. ஆனால் உமறு புலவர் எழுதிய காலத்தில் இந்தக் காவியத்தை இஸ்லாமிய மக்கள் ஏற்றுக்கொண்டதால் தானே அது தாக்குப் பிடித்து இதுவரை நிலைத்து இருக்கிறது. இன்னமும் பாட புத்தகத்திலும் இடம் பெற்று வருகிறது. நீங்கள் சொல்ல நினைப்பது என்ன ? உமறு புலவர் எழுதிய சீறா புராணத்தை இஸ்லாமியர்கள் படிக்கக் கூடாது என்பதா ? அல்லது அதை தமிழர் யாரும் படிக்கக் கூடாது என்பதா? முரண்பாடுகள் இப்போது கண்டுபிடித்து விமரிசிக்கப்பட்டாலும் ,அது நம் முதுசொம் சொத்து அல்லவா ? நாகூர் மற்றைய தர்காக்களில் நடைபெறும் சந்தன கூடு திருவிழாக்கள், வழிபாடுகளை எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அதே போல் இதையும் சிறிது பொறுத்துக்கொண்டால் என்ன நண்பரே ? தங்கள் உணர்வுகளை பகிர்த்து கொள்ளுங்கள் ,ஆனால் குற்றம் சாட்டுதல் போல் வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்
******************
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
இறைவனின் திருப்பெயரால்
சகோதரர் அண்ணாமலை சுகுமாரன் அவர்களே
நான் இங்கு இஸ்லாத்தை பரப்புகிறேன் என்று எண்ண வேண்டாம் தாங்கள் பதில் கொடுத்த வாசகம் இதோ கீழே உள்ளது தவறு என்பதை உணர்த்தவே பதில் கொடுத்துள்ளேன்.
சகோதரர் அண்ணாமலை சுகுமாரன் கூறியது
நாகூர் மற்றைய தர்காக்களில் நடைபெறும் சந்தன கூடு திருவிழாக்கள்.வழிபாடுகளை எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல் இதையும் சிறிது பொறுத்துக் கொண்டால் என்ன நண்பரே ?
இதற்கான பதில்
சகோதரரே தாங்கள் இவ்வாறுதான் இஸ்லாத்தை அறிந்துள்ளீர்கள் ஆனால் அது தவறான புரிதலாகும் உண்மையை கூறப் போனால் நபிகள் நாயகம் (ஸல்) எதைக் காட்டிச் சென்றாரோ அதுதான் உண்மையான இஸ்லாம் அது அல்லாத எதுவாகிலும் அது மாற்றுமதத்திலிருந்து காப்பியடித்த கொள்கையே தவிர இஸ்லாமாகாது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை முஸ்லிம்களாகவே படைத்து முஸ்லிம்களாக வாழவைத்துள்ளான். நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை. அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்கு தவ்ஹீத் விஷயத்தை தெளிவாக சந்தேகமற அறிந்து கொவது அவசியமாகிறது. தவ்ஹீத் என்பதை ஏகத்துவம் அல்லது ஓறிரைக் கொள்கை என்று கூறலாம்.
ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.
ஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ”இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும். அல்குர்ஆன் 10:18.
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப் பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களi வணங்கவில்லை”” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 39:3
குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணு கிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்கு மிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:102-104
நன்றாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும் பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம் தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச் சொல்கிறான்.
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம் அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (திருக்குர்ஆன்)
அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும் நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர்களாக அல்லாஹ்விடம் நெருங்கச் செய்வார்கள் என்ற அடிப்படையில் இறந்து போனவர்களை அவ்லியாக்களாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது அவர்களுடைய அடக்கஸ் தலங்களுக்குச் சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத் தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள் என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம் எங்களுக்கு கேட்டுப் பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக முறையிடுங்கள் அல்லது அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது, கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும் கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளமங்கள் இன்னும் ஏராளமான இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால் சென்று மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாகா!
தவ்ஹீது – ஏகத்துவம் (ஒரு இறைவன் என்ற கொள்கை)
தவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்‘ என்று பெயர்.
இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு, அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதி யுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக் கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.
தவ்ஹீதின் வகைகள்: –
தவ்ஹீது மூன்று வகைப்படும். அவைகள்: –
1.தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
3.தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: –
இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவற்கு “தவ்ஹீதுர் ருபூபிய்யத்” என்று பெயர்.அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா: –
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங் கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப் படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ என்று பெயர். அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என உறுதிகொள்வதாகும்.
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்: –
அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.
தவ்ஹீதின் முக்கியத்துவம்: –
மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.
இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப் பானாவும்).
தாங்கள் மேலதிக விளக்கங்களுக்கு தமிழ் இஸ்லாமிய தாவா தளங்களுக்கு செல்லவும்
http://wahhabipage.blogspot.com
https://islamicparadise.wordpress.com/
http://amazingmuslims.wordpress.com
ஆகிய தளங்களை காணுங்கள் தூய இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.
தொலைக்காட்சியில் காண்பதாக இருந்தால் சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் நடத்தப்படும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை இமயம் தொலைக்காட்சியில் காணுங்கள். அது முழுக்க முழுக்க மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாகும்
******************
வினோத் ராஜன்
இப்போது உங்கள் பிரச்சினை என்ன ?
உமறுப்புலவருக்கு இங்கே ஃபத்வா கொடுக்க வேண்டுமா ?
ஏதோ, புலவர் என்ற ரீதில் Poetic Licenseஐ கொஞ்சம் எடுத்துள்ளார் என்று வைத்துகொள்ளுங்களேன். பொறுத்துக் கொள்ளுங்கள். இலக்கியம் தானே,”deviation” இருக்கத்தான் செய்யும். அதற்காக என்ன செய்ய முடியும்.
//இந்த சர்ச்சை! இந்த சர்ச்சையால்//
நீங்களே சர்ச்சையை வேண்டுமென்றே உருவாக்க விரும்புவதாக தெரிகிறது.சீறாப்புராணத்துக்கு பதிலாக குரானை பாடப்புத்தகத்தில் சேர்க்காதவரைக்கும் ஓய மாட்டீர்கள் என்றும் தெரிகிறது. இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
******************
பென்னேஸ்வரன் கிருஷ்ண ராவ்
நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை.
நான் இறக்கும்போது என் மனைவிக்காவது நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறேன். இறைவன் திருவுளம் எப்படி என்று பார்ப்போம். என்ன நடக்கிறது என்று.
அப்படிப் பாரத்தால் குணங்குடியாரையும் தக்கலை பீர் முகமது வாப்பாவையும் அவர்களின் தர்காவில் இருந்து எழுப்பி உடனே தூக்கில் போட்டாக வேண்டும். சுஃபி ஞானிகள் அனைவரையும் மிகவும் கொடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். நம்ம ஆட்களால் முடிந்தால் அதையும் செய்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.
******************
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
மனைவியின் மீது உங்கள் கடமை
‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும்அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாறி Volume:1Book:2, Verse:56)
உங்கள் பெற்றொர் மீது உங்கள் கடமை
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு நன்மைசெய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவறில்ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ)என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக! (உலகப் பொதுமறை திருக்குர்அன் 17:23)
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடையதாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச்சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ”இறைவனே! நீ என்மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!)நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்லஅமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹான வர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)
******************
வினோத் ராஜன்
சிராஜ்.. உங்கள் கருத்துகள் எல்லாம் “அடிப்படைவா…” வேண்டாம் விடுங்கள். பொறுமை, சகிப்புத்தன்மை வேண்டும். அது தான் வாழ்க்கைக்கு முக்கியம். எல்லாமும் மறைநூல்களில் உள்ளது உள்ளபடியே வார்த்தை பிசகாமல் இருக்க முடியாது.அது யதார்த்தமும் இல்லை. உட்கருத்தை மட்டும் எடுத்துக்கொள்வதே முறை.
சிறாப்புராணத்தின் மூலம் தமிழர்களுக்கு நபிகளின் வாழ்க்கை அறிமுகப்படுத்தினார் என்ற ரீதியில், உமறுப்புலவரை கொண்டா டுங்களேன் !
******************
அண்ணாமலை சுகுமாரன்
நண்பர் ஜனப் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே,
//குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணு கிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்கு மிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.//
இது நீங்கள் கூறியது .
இதைத் தெரிந்து தான் நான் நாகூர் முதலிய தர்காக்களைப் பற்றி குறிப்பிட்டேன். அவைகள் இஸ்லாம் நெறிக்கு புறம்பானவை என எனக்கு தெரியும். தர்காக்கள் ,அவைகளில் வழிபாடு பெருவாரி இஸ்லாமியர்களின் வாழ்வில் இணைந்து விட்டது இதை இனி அவர்களிடம் இருந்து பிரிக்கமுடியாது. மதம் எனும் போதே சில பொறுத்துக்கொள்ளும் தன்மை வந்து விடுகிறது . உமறுப் புலவர் எழுதிய சீறா புராணம் ஒன்றும் ஒரு மத வழிபாட்டு நூல் அல்ல அதை அவ்வாறு கூறவே இல்லை .இது நபியின் வரலாற்றை தமிழில் கூறவந்த நூல். வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத புகுந்த கம்பர் அதில் சில மாறுதல்கள் வருணனைகள் தமிழ் நாட்டுக்கு தகுந்த படி மாற்றினார் .அவ்வாறே உமறு புலவர் தமிழ் நாட்டுக்கு தகுந்த படி நபியில் வரலாற்றில் சில வருணனைகளை சேர்த்துவிட்டார் .அப்போது அவற்றிக்கு எதிர்ப்பில்லை .ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இப்போது அதை எதிர்க்கிறார்கள் .நான் இதை முன்பே இணையத்தில் படித்திருக்கிறேன் .
எப்படி இப்போது நாகூர் முதலிய தர்காக்களில் வழி பாடும் ,திருவிழாக்களும் இஸ்லாமிய நியதிக்கு புறம்பனாலும், அதிகமாக அதற்க்கு எதிர்ப்பில்லையோ அவ்வரறே உமறு புலவர் விஷயத்தையும் விட்டுவிடலாமே என்றேன் .அது ஒரு காப்பியம் தானே .மத நூல் இல்லையே. காப்பியத்தில் சிறிது கற்ப்பனைக்கு இடமுண்டு. இஸ்லாம் பற்றி நட்புடன் நல்ல விஷயங்களை கூறுங்கள் .கசப்பை தூண்டும் எந்த விஷயமும் வேண்டாமே .
******************
பெண்ணேஸ்வரன் கிருஷ்ண ராவ்
சுகுமாரன் சார் சொல்வதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.
நான் ஏற்கனவே சொன்னேன் என்று ஞாபகம். ஒருவேளை சொல்லவில்லையோ என்னவோ. இருந்தாலும் இன்னொரு முறை சொன்னால் தவறில்லை என்ற நினைக்கிறேன்.
மூன்று மாதங்களுக்கு முன்பு என் மனைவியுடன் மும்பை சென்றிருந்தேன். அப்போது ஹாஜி அலி தர்காவுக்கு நானும் மனைவியும் சென்றோம். தர்கா வளாகத்துக்கு உள்ளே பெண்களை அனுமதிப்பது இல்லை. மனைவி வெளியில் இருந்தே வழிபாடு செய்தாள். நான் தர்காவுக்கு உள்ளே வந்து தியானத்தில் அமர்ந்தேன்.
நான் அமைதியான ஒரு சிவன் ஆலயத்தில் அல்லது இராமகிருஷ்ண மடத்தில் அல்லது பாண்டிச்சேரி அன்னை ஆசிரமத்தில் தியானம் செய்தபோது கிடைத்த அதே அதிர்வுகள் (சொல்லப்போனால் இன்னும் அதிகமாக) அன்று எனக்குக் கிடைத்தது. மிகவும் தெய்வீகமான அனுபவம் அன்று கிட்டியது என்று சொல்லலாம்.
டெல்லியில் நிஜாமுத்தீன் அவுலியா தர்காவுக்குப் போகும் போது மனது தழுதழுக்கும். சொல்ல முடியாத ஒரு நிமம்தி மனதை ஆக்கிரமிக்கும். இது பல நேரங்களில் டெல்லியின் சுவாமிநாத சுவாமி கோவில் அல்லது காமாட்சி அம்மன் ஆலயத்தில் பூரணமாக எனக்குக் கிட்டியது இல்லை.
மத ரீதியான உணர்வுகள் என்பவை நம்மை நெறிப்படத்த மட்டுமே என்கிற அளவில் நம்முடைய நம்பிக்கைகளை விசாலப்படுத்திகக் கொண்டால் எதற்கும் எந்த மன உளைச்சலும் இல்லை.
யாரும் யாருக்கும் ஃபத்வா கொடுக்க அவசியமே இருக்காது. அல்லது யாரையும் நரகத்துக்குத் தள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அவரவர் இடங்களில் அவரவர்கள் இருந்து கொண்டு இந்த உலகத்தை வாழ்வதற்கு சுந்தரமான ஸ்தலமாக மாற்றலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
இங்கு நடப்பது எந்தவகையான வாதமும் இல்லை என்றுதான் நினைக்கின்.
******************
தேவு
>> இந்தியாவில் இருந்த பழைய சூபி சமயம் இந்து சமயத்தோடு மிகத் தொடர்புடையது.இன்று அந்த மத நல்லிணக்கம் அதிகம் ஆகிறதா? குறைவுபடுகிறதா? <<
முஹம்மது நபியின் அடக்கம் முடிவதற்குள் அபுவைப் பின்பற்றுவோர் என்றும், அலியைப் பின்பற்றுவோர் என்றும் இஸ்லாம் பிளவுபட்டு விட்டது.ஸூஃபி மூன்றாம் பிரிவு. அதைச் சார்ந்த ‘அவ்லியா’ என்னும் கருத்து முஸ்லிம்கள் ஏற்காத ஒன்று.ஞானத்தால் தெய்வத்தன்மை பெறுவது ஹிந்து மதம் சார்ந்த நம்பிக்கை. அப்பிரிவினருக்கே அங்கீகாரம் இல்லாதபோது இணக்கத்தை எங்கிருந்து எதிர்பார்க்கிறீர்கள்? முதலில் இஸ்லாமிய நாடுகளுக்குள் நல்லிணக்கம் இருந்தால் சரி.
******************
நா. கண்ணன் (தமிழ் குழும நிர்வாகி மற்றும் மட்டறுத்துநர்)
இவ்விழை பற்றிய சில சந்தேகங்கள் என்னுள் உண்டு!
இவ்விழையின் நோக்கம் சீராக இல்லை.
உமர் ஒரு தமிழன். தமிழ்ப்புலவன். தமிழ் இலக்கிய மாணவன். சங்கம் தொடங்கிய ஒரு நீண்ட மரபை உள்வாங்கிக்கொண்ட ஒரு தமிழனால், ஒரு இந்தியனால் அவ்வாறுதான் காவியம் செய்யமுடியும். அவன் தன்னை ஒரு அரபு நாட்டுக்காரனின் ஒட்டகத்தொழிலாளியாக எண்ணிக்கொண்டு காவியம் செய்யவில்லை. அவருடைய loyalty தமிழ்மண் சார்ந்ததாக உள்ளது. சூஃபி பெருமக்கள் பலரின் நோக்கும் `இந்தியம்` சார்ந்ததாக இருந்திருக்கிறது. நண்பர் தன்னை `வெறும்` இஸ்லாமியன் எனும் அடையாளத்திற்குள் வைத்துக்கொண்டு இங்கு வாதிட வந்தால் மின்தமிழ் அல்ல அதற்கான தளம்.
அவருக்கு இவ்வளவு சொல்லியும் மின்தமிழின் மனவோட்டம் புரியவில்லை. முதுசொம் என்பதன் பொருள் புரியவில்லை.
இவ்விழை சும்மா இருக்கும் சங்கை ஊதுகின்ற வெட்டி வேலை என்றால், அதாவது வெறும் `கவன ஈர்ப்பு` என்றால் அது இங்கு தேவையில்லை. அவர் கவனம் கொள்ள வேண்டிய பணிகள் பற்றி முன்பே சுட்டியுள்ளோம். அவர் இல்லாத பெண்ணிற்குக் கல்யாணம் என்ற ரீதியில் இங்கு இல்லாத ஒரு `பிரச்சனையை` தானாக உருவாக்கிக்க்கொண்டு பிரச்சனையைக் கிளப்பினால், அது மின்தமிழின் உயர் நோக்கங்களை திசை திருப்புவதாக அமையும்.
இவ்விழை கடும் மட்டுறுத்தலுக்கு உள்ளாகும்.
******************
கமலம் தேவி
இதே கருத்தே என்னுடையதும்.
மிந்தமிழ் ஜாதிமத பேதங்களற்ற ஒரு குழு. இங்கு மத அடையாளங்களோடு பேச வருவதே வேதனைக்குரியது, உமறுப்புலவர் பற்றி ஆழமான தகவலகள் என்னால் பட்டியலிட்டு பேசமுடியும்.அருமையான புலவன் இங்கு அது மட்டுமே என்போன்றோரால் கணிக்கப்படுகிறது. வெறும் சர்ச்சைக்கும், கவைக்குதவா கசப்புணர்வுக்குமுள்ளதல்ல மின் தமிழ். மின்தமிழின் ஆக்கங்களும் நோக்கங்களும் அறிந்த பிறகு, அவையில் பேச வந்திருக்கலாம்.
விவாதம் முடிந்தது
முடிவுரை
சகோதரர்களே! இஸ்லாத் எத்திவைப்பதுதான் என் கடமையே தவிர மாற்றுமதத்தினர் வேண்டாத கேள்வி கேட்டு விதண்டாவாதமாக நடந்துக்கொண்டால் நாம் என்ன செய்வது பதில் கொடுத்துக் கொண்டே சென்றால் விவாதம் சண்டைக் களமாக மாறிவிடும் எனவே அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டேன்! உண்மை வந்த பின்னரும் தர்க்கம் செய்தால் என்னால் என்ன செய்ய இயலும் நானும் மனிதன்தானே! கீழ்கண்ட இறை வசனங்களை படியுங்கள் உள்ளம் அமைதியுறும்!
நபிகளாருக்கு அல்லாஹ் இவ்வாறுதான் கூறினான்!
“(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:48)
“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)
“இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் – என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்” (அல்-குர்ஆன் 18:56)
“(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்” (அல்-குர்ஆன் 6:131)
“எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை” (அல்-குர்ஆன் 15:11)
“இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்” (அல்-குர்ஆன் 35:25)
“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 72:23)
மறுமொழியொன்றை இடுங்கள்