தமிழ் குழுமத்தில் உறுப்பினராக உள்ள இந்து சகோதரர் ஜடாயு அவர்களின் வந்ததே மாதரம் பாடலுக்கான முஸ்லிம்கள் மீதான இந்துக்களின் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும்! அந்த குழுமத்தில் ஒருவனாக இருந்த முஸ்லிம் என்ற தரப்பில் என்னுடைய பதில்களும் கீழே தொகுக்கப்ப ட்டுள்ளன. இது விளம்பரத்திற்கு அல்ல மாறாக தமிழர்கள் இந்த அளவுக்கு ஈனத்தனமாக நடந்துக் கொள்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவே! வந்தே மாதரம் பாடலுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை மாறாக அந்த பாடலை வைத்து சாட்டப்பட்ட விமர்சனங்களுக்கே இந்த பதில்கள்!
கூகுல் விவாதம் நடைபெற்றது! தமிழ் குழுமத்தில்
நாள் – நவம்பர் 10, 2009
கேள்வி! சிகப்பு நிரத்தில் உள்ளது!
இதற்கு முன்பு 2006ம் வருடம், வந்தே மாதரம் பாடலில் நூற்றாண்டு விழாவின் போது இதே தேசதுரோக நச்சுப் பாம்புகள் பாடலை எதிர்த்தன.. இப்போது அது ஃபட்வாவாகவும் ஆகி விட்டது. அப்போது, இந்தப் பாடலின் மூலம் என்ன, எதிர்ப்பு எப்படி உருவாயிற்று ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணி குறித்து எனது விரிவான கட்டுரை ஒன்று திண்ணை இதழில் வந்தது.. இங்கே படிக்கலாம் – வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும் http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115735972528194365.html இதில் ஒரு பகுதி கீழே. இந்த இஸ்லாமியக் குருட்டு வெறியை லாகிக்கலாக extrapolate செய்தால் அது எங்கெங்கெல்லாம் இட்டுச் செல்லும் என்று பாருங்கள்..
எதிர்ப்பு வாதத்தின் விபரீத பரிமாணங்கள்:தேசியப் பாடலின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். மண்டையை உடைத்துக்கொண்டு தேடினாலும், இதில் இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று புரியவில்லை. முகமது நபி தேவதூதர் இல்லை என்றும், அல்லா கடவுள் இல்லை என்றும் ஏதாவது இருக்கிறதா? “மாதரம்” (தாயே) என்ற சொல் தான் இருக்கிறதே தவிர கடவுள், தெய்வம் என்று எந்தச் சொற்களும் கூட இல்லை. இது ஒரு சமய சார்புடைய பாடல் என்று கருதுவதற்கு முகாந்திரமே இல்லை.
அப்படியானால், “தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? இஸ்லாம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றல்லவா பாரதப் பண்பாடு கூறி வருகிறது? ஒருவேளை, பெண்மையையும், இயற்கையையும் போற்றுவது இஸ்லாமிற்கு எதிரானதா? “அல்லா” என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும் ஆண் கடவுள் மற்றும் தெய்வீகம் பற்றிய ஒரு குறுகிய அராபியக் கருத்து மட்டுமே (சமய அடிப்படையில் மட்டுமல்ல, எந்த அடிப்படையிலும்) போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரியதா? இது ஒரு காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான நிலைப்பாடு அல்லவா? கொஞ்சம் சிந்தியுங்கள் – “இஸ்லாமுக்கு எதிரானது” என்று இமாம்கள் கூறும் இந்த சொத்தை வாதத்தை வைத்து வந்தே மாதரம் பாட மறுப்பவர்களை அங்கீகரித்தால்எதையெல்லாம் அங்கீகரிக்க வேண்டும்?
1) வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” – திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு உடனே அதை ஏற்றுக்கொண்டு “ஆமாம், ஆமாம், முஸ்லீம்கள் பாட வேண்டாம்” என்று சொல்லி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்த வேண்டாமா? நாகூர் ரூமி உடனே இதற்கு வக்காலத்து வாங்கி பல அரபு மேற்கோள்களுடன் ஒரு புத்தகம் எழுத வேண்டாமா?
2) தமிழ் மறை என்று நாம் எல்லாரும் ஏற்றுக்கொண்ட திருக்குறள்? “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது இஸ்லாமிற்கு எதிரானது, அதை மாற்றி “அலிஃப் முதல எழுத்தெல்லாம் அல்லாஹு முதற்றே உலகு” என்று மாற்றித் தான் படிப்போம் என்றாலும் மற்ற குறள்களை என்ன செய்வது? “தீதின்றி வாழும் திரு”, “செய்யவள்”, “தாமரையினாள்” – லட்சுமியைப் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது? இஸ்லாமுக்கு எதிரான இந்த நூலை முஸ்லீம்கள் படிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்தலாமா – கூடவே கூடாது! திருக்குறளே இல்லாத தமிழ்ப்பாட நூல்களில் சிலம்பும், கம்பராமாயணமும், திருமுறைகளும் எதற்கு? தூக்கு இவை எல்லாவற்றையும் !
3) தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!
4) இப்படி, இந்த இமாம்கள் கூறும் “இஸ்லாமுக்கு எதிரான” விஷயங்களுக்கு ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி பாராளுமன்றத்தில் பேசும் அர்ஜின் சிங், இந்த தேசத் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கி திண்ணையில் கட்டுரை எழுதிய கற்பக விநாயகம் – இந்தக் காஃபிர்கள் உயிரோடு இருப்பதே இஸ்லாமுக்கு எதிரானது அல்லவா? அர்ஜுன் சிங்கும், க.வி.யும் ஜிகாதிகளின் கையால் மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜஹன்னும் (இஸ்லாமிய நரகம்) போகத் தயார் தானா? இதெல்லாம் விபரீதமான கற்பனை போலத் தோன்றலாம். வந்தே மாதரத்தை எதிர்க்கும் இமாம்களிடம் போய் இதில் வரும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் – பதில்கள் எப்படி வருகின்றன என்று. பாரதப் பண்பாடு என்பதே இஸ்லாமுக்கு எதிரானது என்ற முடிவில் தான் அது வந்து நிற்கும். ஏழாம் நூற்றாண்டு அராபியப் பாலைவனத்தின் கற்பனைகளுக்கு எட்டாத எந்த விஷயத்தையும் “இஸ்லாமுக்கு எதிரானது” என்ற ஒற்றை வாதத்தின் மூலம் அவர்கள் நிராகரிப்பார்கள் (ஆனால் அதி நவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள், எறி குண்டுகள், ராக்கெட்டுகள் எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானவை அல்ல – அவையெல்லாம் ஜிகாதில் துணை புரிவதற்காக அல்லாவால் அனுப்பப் பட்டவை!!)
இதோ வந்தே மாதரம் பாடலுக்கு தாங்கள் முற்படுத்திய குற்றச்சாட்டுக்களும் ஒரு முஸ்லிம் என்ற தரப்பில எனது பதில்களும்!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
பேரண்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்கள் திரு. ஜடாயு மற்றும் திரு. நரசைய்யா அவர்களுக்கு!
தலைப்பு- மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
என்ன அண்ணே இப்படி பேசுகிறீர்கள்! கொஞ்சம் வார்த்தைகளில் கண்ணியம் காட்டியிருக்கக்கூடாதா? ஒரு நாட்டின் பிரஜையாகிய தாங்கள் மற்றொரு பிரஜையாகிய என்னைப் போன்ற இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசுவதுதான் தேசத் தந்தை காந்தியடிகள், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் போன்றோர் காட்டித்தந்த வழிமுறையா? எங்கே அண்ணே உங்கள் வார்த்தைகள் எங்கே அண்ணே நம்முடைய தேசத்திற்காக தியாகம் செய்த மாமேதைகள்! இந்த தமிழ் குழுமத்தில் இஸ்லாமி யர்களும் பங்கு பெறுகின்றனர் என்பதை மறந்து விட்டீர்களோ!
1) தேசதுரோக நச்சுப் பாம்புகள் (முஸ்லி்ம்கள்!!!)
ஆமாம் அய்யா! தேச விடுதலைக்காக தன் இன்னுயிரை நீத்தவர்களில் கொடிகாத்த குமரன் மட்டும்தான் உங்களுக்குத் தெரியும் ஆனால் இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு தங்கள் வாழ்க்கையை அற்பணித்து செத்து மடிந்தார்கள் என்பது உங்க ளுக்கு தெரியுமா?
‘பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்’ என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான் அவரை நயவஞ்சகமாக கொண்றது ஒரு ஆங்கில குரங்குகள் பின்னர் திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய் களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806-ஆம் ண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக் கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டை யிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.
சகோதரரே ஜான்சி ராணி லட்சுமிபாய் மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தெரியும் ஆனால் இஸ்லாமிய குடும்ப பெண்கள் பற்றி தெரியுமா இதோ இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்புவின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்
ஜாலியன் வாலாபாக் அதாவது இன்றைய தடா, பொடா சட்டத் திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக்களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டி ருக்கின்றன.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975) அவர்களின் கருத்துப்படி இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.
பேரண்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்கள் திரு. ஜடாயு மற்றும் திரு. நரசைய்யா அவர்களே
முஸ்லிம்கள் நாமெல்லாம் உங்கள் பார்வையில் தேச துரோக நச்சுப் பாம்புகள் தானே. அதனால் தானே இன்று சிறுபாண்மை யினருக்கு 3.5% சதவீத குறைந்த இட ஒதுக்கீடு அதனால் எங்கள் குழந்தைகளும் சகோதரர்களும் பஞ்சர் கடைகளை வைத்து பிழைப்பு நடத்துகி ன்றனர் நீங்களோ பதவிகளில் அமர்ந்து மக்களின் வரிப்பணத்தை சுரண்டுகிறீர்கள்!
2) இஸ்லாமியக் குருட்டு வெறி, இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று புரியவில்லை, சமய சார்புடைய பாடல் (ஜடாயு அவர்களின் கேள்வி)
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் முதல் கடமை அப்படியிருக்க அதை விட்டுவிட்டு பாரதமாதாவை வணங்கும் விதமாக பாடல் இருந்தால் அதை ஏற்று எங்கள் இஸ்லாத்தை விட்டுவிட சொல்கிறீரா? அப்படி யானால் சகோதரரே நீங்கள் இங்கு இந்துத்துவாவை எங்கள் மீது சாட்டுகிறீரா? அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் அவனே அதற்கு தகுதியானவன் இரு குருட்டு வெறி என்று சொல்வதில் தவறு கிடையாது. அல்லாஹ் இவ்வாறுதான் எங்களுக்கு கட்டளையிடுகிறான் படியுங்கள்
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர் களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (திருக்குர்ஆன் 25:73)
3) தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? பெண்மையையும், இயற்கையையும் போற்றுவது இஸ்லா மிற்கு எதிரானதா? (ஜடாயு கேள்வி)
இஸ்லாம் பெண்மை பற்றி இவ்வாறு கூறுகிறது!
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவருக்கு உதவிகள் செய் வீராக” என்றனர். இப்னு உமர்(ரலி) : திர்மிதீ.
இஸ்லாம் தாயை பற்றி இவ்வாறு கூறுகிறது!
“அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தந்தை” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) : புகாரி, முஸ்லிம்
இஸ்லாம் பெற்றோர்களுக்கு பரிவுகாட்டும் மார்க்கம்!
“அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி (ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன். “முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள். அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம், திர்மிதீ
பெற்ற தாயை அரவணைக்க இஸ்லாம் போதிக்கிறது!
“நபி(ஸல்) காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடி வந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார், வரைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்” அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள் என்றனர். அஸ்மா பின் அபீபக்கர்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.
4) “அல்லா” என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும் ஆண் கடவுள் (ஜடாயு கேள்வி)
அல்லாஹ் ஆண் கடவுள் என்று எங்கேயாவது கூறியிருக் கிறானா? அல்லது படித்திருக் கிறீரா? ஏன் தேவையில்லாம்ல் உளருகிறீர்! நீங்கள் மனிதர்களாக இருப்பதால் இறைவனும் மனிதனாக இருப்பான் என்பது உங்கள் ஐதீகம் இதனால்தான் உங்களை விட சக்திவாய்நதவன் கடவுள் எனறு எண்ணி 10 கைகளை கொடுக்கிறீர்கள். நீங்கள் சிவனையும், பார்வதியையும், அர்த்தனாரீஸ்வரனையும் வணங்குவீர்கள் இதை பற்றி விமர்சனம் செய்யலாம் ஆனால் எனக்கு என் மார்க்கம் தடை விதிக்கிறது. இதோ அல்லாஹ்வின் கண்ணி யமான அறிவுரை
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் – பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (திருக்குர்ஆன் 6-108)
5) இது ஒரு காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான நிலைப்பாடு அல்லவா? (ஜடாயு கேள்வி)
ஆம், இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் இஸ்லாத்தின் மீது உறுதியாக இருக்கிறோம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அந்த செயல் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம் இதை காட்டுமிராண்டித்தனம் என்றால் இந்துக்களாகிய நீங்கள் தெய்வ வழிபாடு என்று கூறி குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்து பிறகு உயிருடன் எடுத்துவிடுகிறீர்களே அது என்ன?
6) வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும் (ஜடாயு கேள்வி)
ஆம் ஏன் பொருந்தாது! சிவனுடைய பாடலில் தவறு இருப்பது கண்டு நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றுதானே தமிழ்க்கவிஞர்கள் அருமை நக்கீரர் பாடுகிறார்கள் அவ்வாறு இருக்க பாடலில் குறை இருந்தால் உங்கள் வழிமுறையைத் தானே நாம் பின்பற்றுகிறோம்.
7) தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? (ஜடாயு கேள்வி)
உங்கள் யோசனைக்கு நன்றி! இதை முடிந்தவரை தமிழ் முஸ்லிம்களிடம் எடுத்துச் சென்று ஃபத்வா கொடுக்க முயற்சிக்கிறேன்.
8) நாகூர் ரூமி உடனே இதற்கு வக்காலத்து வாங்கி பல அரபு மேற்கோள்களுடன் ஒரு புத்தகம் எழுத வேண்டாமா? (ஜடாயு கேள்வி)
அட! நாகூர் ரூமி எதற்கு நானே இருக்கிறேன்! என்னால் கூட உங்களுக்கு விளக்கம் அளிக்க முடியுமே! இஸ்லாத்தில் 1000 பேர் அல்ல கோடானு கோடி மக்கள் தவறை விளக்கிக்க்காட்ட உள்ளனர் ஒருவரை மட்டும் ஏன் நம்புகிறீர்.
9) தமிழ் மறை என்று நாம் எல்லாரும் ஏற்றுக்கொண்ட திருக்குறள்? (ஜடாயு கேள்வி)
சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே! திருக்குரள் தமிழ் மறைதான் திருக்குர்ஆன் தான் உலகப் பொதுமறை இதில் என்ன சந்தேகம். இதை நான் கூறவில்லை அல்லாஹ்தான் தன் திருமறையில் கூறுகிறான் சற்று அந்த வசனத்தை படிக்கிறீரா?
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக் கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. (10:37)
10) தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. (ஜடயு கேள்வி)
சகோதரரே! தேசியக் கொடியில் சக்கரம் இருப்பது நம் நாட்டில் உள்ள மாநிலங்களைக் குறித்துதானே தவிர வேறொன்றுமில்லை. தேசியக் கொடியில் விலங்கினங்கள் இல்லை இது நமது தேசத் தலைவர்களின் அழகிய நடைமுறை! சத்யமேவ ஜயதே என்பது என்ன வாய்மையே வெல்லும் என்பதே! ஆம் உண்மைதான் எப்போதும் வெல்லும் இது சமஸ்கிருத்தில் இருந்தால் என்ன அரபியில் இருந்தால் என்ன பொதுவான வார்த்தைதானே! சிவனே வெல்லும் அல்லது பார்வதியே வெல்லும் என்று இருந்தால்தானே சர்ச்சை உருவாகும்.
11) அர்ஜுன் சிங்கும், க.வி.யும் ஜிகாதிகளின் கையால் மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜஹன்னும் (இஸ்லாமிய நரகம்) போகத் தயார் தானா? (ஜடாயு கேள்வி)
சுவர்கம் நரகம் ஆகியவற்றை தீர்மாணிக்கும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது நீங்கள் அதை கூற தகுதியற்றவர்.
12) வந்தே மாதரத்தை எதிர்க்கும் இமாம்களிடம் போய் இதில் வரும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் – பதில்கள் எப்படி வருகின்றன (ஜடாயு கேள்வி)
இமாம்களை ஏன் கேட்கிறீர்கள் என்னிடம் கேளுங்கள் நானே போதும். ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம் என்பார்கள் தமிழல் நான் ஒரு சோறாக இருக்கிறேன் என்னிடமே பதம் பார்க்கவும்!
13) ஆனால் அதி நவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள், எறி குண்டுகள், ராக்கெட்டுகள் எல்லாம் இஸ்லாமிற்கு எதிரா னவை அல்ல – அவையெல்லாம் ஜிகாதில் துணை புரிவதற் காக அல்லாவால் அனுப்பப் பட்டவை! (ஜடாயு கேள்வி)
ஆம் சகோதரர்களே! நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த முஸ்லிம்களின் பாபர் மசூதியை இடித்தற்கு உங்கள் தெய்வம் ராமன்தான் படையை அனுப்பினாரா? அல்லது கிருத்தவ தேவாலயத்தை தீயிட்டு கொழுத்த வடநாடுகளில் உங்கள் தெய்வம் தான் தீ மூட்டித் தந்தாரா? அல்லது கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் அப்பாவி சாமியார்களை சொந்த மாநில முதலமைச்சரே கொண்றுவிட அவருக்கு உங்கள் தெய்வமாகிய அனுமான் தான் தன் வாலில் மண்ணென்னை பிடித்து ஊற்றி இலங்கையை எறித்தது போல் எறித்துவிட்டு அப்பாவி முஸ்லிம் பெண்களை மாணபங்கம் செய்தாரா? உங்களுக்குத்தான் வாய் உள்ளதோ!
ஜிஹாத் பற்றி விளக்கம் தேவையெனில் அதற்கும் ஒரு கட்டுரையை வரைகிறேன்
அதற்கு முன் கீழ்கண்டவைகளை படியுங்கள்!
ஜிஹாது என்பது இரண்டு வகைப்படும்
ஒன்று சொந்த நாட்டுக்காக சொந்த நாட்டு மக்களின் உடமைகளை காக்க எதிரிநாட்டினரின் மீது படையெடுப்பது ஜிஹாது எனப்படும் அதாவது இந்தியா (பாகிஸ்தான் மற்றும் சீனா) மீது படையெடுப்பதற்கு சமமாகும். மற்றொன்று தீன் கல்வி அதாவது திருமறை மற்றும் நபிவழியை மக்களுக்கு போதித்து ஒரு ஆசிரியராக இருப்பதும் ஜிஹாது எனப்படும் மற்றொன்று விளக்கம் கூற வேண்டுமானால் கீழே உள்ள நபிமொழியை படியுங்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் போரில் பங்கெடுக்க விரும்புகிறேன். (அது பற்றி) உங்கள் ஆலோசனையைக் கேட்க வந்துள்ளேன்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவரைப் பற்றிக் கொள், ஏனெனில் சுவர்க்கம் அவரது காலடியில் உள்ளது” என்று கூறினார்கள். முஆவியா பின் ஜாஹிமா(ரலி) : நஸயீ, அஹ்மத், ஹாகிம்.
அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:- “எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ் விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
”யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும்” (முஸ்லிம், திர்மிதீ)
உங்கள் வார்த்தை பிரயோகத்தால் தமிழ்பண்பாட்டை கப்பலேற்றிவிடாதீர்கள், இங்கு பெரிய தமிழ் சான்றோர்கள் உள்ளனர் அவர்களை தமிழராகிய உங்களால் தலைகுனிவு வரக்கூடாது என்பதே என் பேரவா? இதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்த நில்லடா! இந்தியன் என்று சொல்லடா இதயத்தை இந்தியர்களுக்கு என்று சொல்லடா? இந்திய உணர்வுடன் இந்த கட்டுரை வரையப் பட்டுள்ளது எனக்கும் பேச உரிமை உள்ளது! வந்தே மாதரம் என்ற பாடலை எதிர்க்க நாட்டு குடிமகன் என்ற அந்தஸ்து உள்ளது அது போதும் எங்கள் உரிமையை கூற. தயவு செய்து எங்கள் மார்க்கத்தை இழிவாக பேசாதீர்கள் எங்கள் உரிமைகளை பரிக்காதீர்கள்!
குறிப்பு
நாங்கள் தேசத் துரோக நச்சுப்பாம்பு என்ற பட்டம் பெற்றது ஒரு தமிழனால் என்று மரணிக்கும் வரை கூறுவோம்! அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான்! அல்ஹம்துலில்லாஹ்!
சகோதரர் நரசய்யா அவர்கள் இஸ்லாமியர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தவறு என்று உணர்ந்து தம் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்டு விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது! ஆனால் ஜடாயு இதுவரை மன்னிப்பு கோரவில்லை அவரை அல்லாஹ் பார்த்துக்கொள்ளட்டும்!
பதி்ல் கொடுத்தது – சிராஜ் அப்துல்லாஹ்
This page has the following sub pages.
Alhamdulillah!!! Really A great Answer Brother.