கேள்வி
ஒரு ஏகத்துவ சகோதரனை நோக்கி புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று ஈனத்தனமாக திட்டி வசைபாடுவதும் அதை இணையதளங்களில் விளம்பரப் படுத்தவதும் மார்க்கத்தில் கூடுமா?
பதில்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் ஏகத்துவம் என்றழைக் கப்படும் ஓரிரைக்கொள்கையின் வீரியம் அனைவரும் அறிந்ததே! பட்டி தொட்டி எல்லாம் பரவிக்கிடந்த தர்காஹ் வழிபாடுகளை ஒருவழியாக ஒழித்துக்கட்ட அனைத்து சகோதரர்களும் பாடுபட்டார்கள் முடிவு இன்று பணக்காரர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் இணைவைப்பதால் சுவனம் செல்ல இயலாது என்பதை உணர்ந்துவருகிறார்கள். மார்க்கம் என்பதை அறியாமல் இணைவைப்புகளில் தட்டுத்தடுமாறி ஏமாந்து போன அப்பாவி முஸ்லிம்கள் தற்போதுதான் ஓரளவு தெளிவு பெற்றும் வருகிறார்கள். ஏன் மாற்றுமதத்தினரும் இஸ்லாத்தை புரிந்து ஆங்காங்கே முஸ்லிம்களாகி மார்க்கத்திற்குள் விரைந்து வருகிறார்கள்! அல்ஹம்துலில்லாஹ்!
இப்படிப்பட்ட அருமையான காலகட்டங்களில் மார்க்கத்தை மென்மேலும் வீரியப்படுத்தி தமிழகத்தை இணைவைப்பு களிலிருந்து முற்றிலும் தடுத்து தூய்மைப்படுத்த கடமைப் பட்டுள்ள ஏகத்துவவாதிகளாகிய நாம் நம்முடைய மார்க்கப்பபணிகளில் மும்முரம் காட்டாமல் சுய இலாபத்திற்காக ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் வசைபாடியும் அதை தங்களது இணையதளங்களில் விளம்பரப்படுத்தியும் அதன் மூலம் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் அதன் உச்சகட்டமாக ஒரு சகோதரர் அவர் தனது தரப்பபு வாதங்களை நியாயப்படுத்துகிறார் ஆனால் அந்த சகோதரரின் நியாயமான கோரிக்கைகளை அலசிப்பாத்து உண்மையை உணரவோ அல்லது அந்த சகோதரரின் கோரிக்கைகள் தவறானதாக இருந்தால் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் விளக்கிக்காட்டவோ முற்படாமல் அந்த சகோதரரின் பெயரை முன்மொழிந்து புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று ஈனத்தனமாக தங்களது இணையதளங்களில் அவதூறு வதந்திகளை பதித்து வருகிறார்கள் இது நியாயமா? மார்க்கத்தில் பிறரைப்பற்றி கேலி கிண்டல் செய்து அவதூறு பரப்புவது கூடுமா?
யார் சமூகத்தில் மானக்கேடான விஷயங்களைப் பரப்புவதில் ஈடுபடுகிறாரோ அவரும் அந்தச் செயலை செய்தவரைப் போன்ற பாவியாவார். அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள் ”மானக்கேடானதைப் பேசுபவனும் அதைப் பரப்புபவனும் பாவத்தில் சமமாவார்கள்.” (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.” (முஸ்னத் அஹ்மத்)
நபி (ஸல்) அவர்கள் ”நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கெளரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்.” ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
சில இணைதளவாதிகள் தங்கள் இணையதளங்களில் ஒருசிலரது பெயர்களை முன்மொழிந்து அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மார்க்கத்ததை எத்திவைக்கும் தவ்ஹீத் சகோதரர்களில் ஒரு தனி இடம் பிடித்து மார்க்கப்பணியாற்றும் பி.ஜே போன்ற சகோதரரது பெயரை முன்மொழிந்து அவருக்கு புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று வகை வகையாக வசைபாடி அதனை தங்கள் இணைதளங்களில் பரப்பியும் வருகிறார்களே இவர்கள் திருந்தமாட்டார்களா?
இஸ்லாமிய கல்வி புகட்டுகிறோம் என்று கூறிக்கொண்டும் தங்கள் இணைய தளத்திற்கு தலைப்பையும் வைத்துக்கொண்டு மார்க்கத்திற்கு முரணாக திட்டும் சமுதாயத்தை வளர்க்கிறார்களே இதுதான் இஸ்லாமிய கல்வியை போதிக்கும் முறையா?
சரி இணையதளங்களில் அவதூறு வதந்தி பரப்பளாமா?
சாதாரணமாக வாய்வார்த்தையாக ஒரு பொய் கூறினாலேயே அதை நமது இடப்புறமும். வலப்புறமும் உள்ள வானவர்கள் எடுத்தெழுதிவிடுகிறார்கள் இதோ எடுத்தெழுதும் வானவர்கள் பற்றி திருமறை
வலப்புறமும் இடப்புறமும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது , அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (50: 17,18)
ஆனால் சகோதரர்களின் கண்ணியத்தின் மீது கை வைத்து அவதூறாக புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது, அவன் புரோகிதன் என்றெல்லாம் திட்டி வசைபாடி அதன்மூலம் அற்ப சுகத்தை அனுபவிக்கும் இந்த ஏகத்துவத்தின் போர்வையில் இருக்கும் இந்த இணையதளவாதிள் தங்களது கைகளாலேயே தங்களுடைய திட்டும் வார்த்தைகளை எழுதி அவைகளை இணையத்தில் பதித்து தங்களுக்கு தாங்களே சாட்சிகளாக இருக்கிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள் ”அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே ! எனவே உங்களில் ஒவ்வொருவரும் தன் பொறுப்பில் உள்ளோர் குறித்து கேள்வி கேட்கப்படுவீர்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவுது)
عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
“தான் கேள்விப்படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான் என்பதற்கு அதுவே போதிய சான்றாகும் ஸஹீஹு முஸ்லிம்
இனியாவது மார்க்க கல்வி இணையதளவாதிகள் தங்கள் குறைகளை சீர்திருத்திக்கொண்டு மக்களுக்கும் தங்கள் இணையதள நேயர்களுக்கும் ஒழுங்காக மார்க்க கல்வி போதிக்கட்டும் இதோ இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் கீழ்கண்ட நபிமொழிக்கு கீழ்பட்டு நடப்பார்களா?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்.’ (மிஷ்காத்) அறிவிப்பாளர் : ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)
மறுமொழியொன்றை இடுங்கள்