உண்மையில் நீங்கள் ஏகத்துவவாதியா? அல்லது ஏகத்துவத்தின் போர்வையில் இருக்கும் மனிதரா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
என் அன்புச் சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாம் பிறந்த உடனேயே இஸ்லாம் மற்றும் அதன் முதல் முக்கிய கொள்கையான ஏகத்துவம் என்பதை அறியாமல் எத்தனையோ இணை வைப்புகளில் மூழ்கியிருந்திருப்போம் ஆனால் அல்லாஹ் நம்மீது கருணை காட்டியிருப்பான் அதன் அடிப்படையில் தற்போது நாம் மார்க்கம் என்றால் என்ன? திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை உள்ளடக்கிய ஹதீஸ்கள் என்றால் என்ன என்பதை அறிந்திருப்போம்.
சரி! நாம் இணைவைப்புகளிலிருந்து விடுபட்டு ஏகத்துவத்திற்குள் நுழைந்திருப்போம் ஆனால் உள்ளத்தில் எதற்காக ஏகத்துவத்தை ஏற்றோம் என்ற எண்ணம் எழுந்திருக்குமே? அதற்காக ஒரு மாபெரும் யுத்தமே நம் அனைவருடைய உள்ளத்தில் அடிக்கடி நடந்திருக்குமே அதற்கு விடையைத் தேடி திருமறையை புரட்டியிருப்போம், ஆங்காகங்கே நபிமொழிகளை கேட்டிருப்போம் முடிவில் சுவனம் செல்ல வேண்டும் என்ற பதில் மட்டும்தான் நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இதை கேட்டவுடன் நமது உள்ளம் அமைதியாடைந்திருக்கும் பிறகுதான் ஏகத்துவம (தவ்ஹீது) என்பதில் வீரியமிக்கவர்களாக நாம் அனைவரும் மாறியிருப்போம்! ஆனால் ஏகத்துவத்தை ஏற்ற நாம் ஏகத்துவத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் அதன் ஒரு அங்குலத் அளவையாவது கடைபிடிக்கிறோமா? அல்லது அதன் போர்வையில் அமர்ந்திருக்கிறோமா? அலசிப் பார்ப்போமா?
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (அல்-குர்ஆன்:2-4)
ஆம சகோதரர்களே! நாம் ஏகத்துவவாதிகள் என்று நெஞ்சில் மார்தட்டிக் கொண்டு அல்லாஹ்வைத்தவிர யாரையும் எதையும் வணங்க மாட்டோம் நபிமார்களுக்கு கட்டுப்படுவோம் என்று கூறிக் கொள்வோம் ஆனால் அதே சமயம் நம்மைவிட சிறந்த முறையில் மார்க்கத்தை எத்திவைத்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கும் ஒருசில சகோதரர்களை நோக்கி அராஜகமான முறையிலும் கண்ணியக்குறைவான முறையிலும் நம்மில் பல ஏகத்துவ சகோதரர்கள் விமர்சனம் செய்வார்கள் உண்மையில் ஒருவரை தரக்குறைவாக திட்டுவதற்கு (அல்லது) சாதாரணமாகவாவது திட்டுவதற்கு மார்க்கத்தில் உரிமை உள்ளதா?
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (திருக்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.” (முஸ்னத் அஹ்மத்)
ஒரு ஏகத்துவவாதி அல்லாஹ்வுக்க கட்டுப்பட வேண்டும் பிறகு நபிகளாருக்கு கட்டுப்படவேண்டும் ஆனால் நீங்களோ இருவருக்கும் கட்டுப்படாமல் வரம்புமீறி சகோதரர் பி.ஜே போன்ற எத்தனை எத்தனை சகோதரர்களை வசைபாடுகிறீர்கள் சிந்தித்துப்பாருங்கள் உங்கள் உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு என்று பயம் உள்ளதா? நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறீர்களா? நீங்கள் ஏகத்துவவாதிகளா? இவைகைள அறிந்துக்கொள்ள நீங்களே ஒரு சுயபரிசோதனையை செய்துப் பாருங்கள்.
ஒரு முஸ்லிம் சகோதரன் தவறு செய்தால் எப்படி அணுகுவது?
பொதுவாக யாராவது ஒரு முஸ்லிம் சகோதரர் மார்க்கதிற்கு முரணாக பேசுவதாகவே வைத்துக் கொள்வோம் அவருடைய கருத்து தவறு என்று நமக்கு தெரிந்தால் அதற்கான தகுந்த ஆதாரங்களை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் திரட்டி மார்க்கத்திற்கு முரணாக பேசக்கூடிய சகோதரருக்கு கண்ணியமான முறையில் இது இவ்வாறு உள்ளது உங்கள் சொல் மார்க்கத்திற்கு முரணாக உள்ளது எனவே தவிர்த்திடுங்கள் மறுமையில் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று அறிவுறுத்துவது முறையா? அல்லது அந்த சகோதரனுக்கு திருந்தும் வாய்ப்பு கொடுக்காமல் அவனை நோக்கி சரமாரியாக கேடுகெட்டவன், முட்டாள், மடையன், புரோகிதன் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது முறையா?
சிந்தித்துப்பாருங்கள்!
நீங்கள் பெற்ற பிள்ளை தவறாக நடந்துக்கொள்ளும் போது அவனிடம் பண்பாக பேசி நீ செய்வது தவறு என்பதை எடுத்துக்கூறினால் உங்கள மகன் திருந்த முற்படுவானா? அல்லது தவறாக நடக்கும் உங்கள் மகனை நோக்கி நீ! தருதலை! அயோக்கியன், கேடுகெட்டவன், முட்டாள், முடிச்சவுக்கி என்று திட்டினால் உங்கள் மகன் திருந்துவானா? உங்கள் மகன் தவறு செய்தால் உங்கள் அணுகுமுறை ஒருவிதமாகவும் உங்கள் மார்க்க சகோதரன் ஒரு தவறு செய்தால் உங்கள் அணுகுமுறை வேறுவிதமாகவும் இருக்கிறது! இப்படிப்படட இரட்டை குணங்களை பெற்றவர் ஒரு ஏகத்துவவாதியா? அல்லது பிறர் நம்மை நோக்கி ஏகத்துவவாதி என்று கூறுவதற்காக ஏகத்துவ போர்வையில் அமர்ந்திருக்கும் போலி ஏகத்துவவாதியா?
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதற்கு அவனே சான்று பகர்கின்றான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் இவ்வாறே சான்று பகர்கின்றனர். “(உண்மையில்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை! அவன் வல்லமைமிக்கவன், நுண்ணறிவாளன்! (அல்குர்ஆன்: 3:18)
ஒரு சாதாரண முஸ்லிம் சகோதரனிடமே கண்ணியக்குறைவாக நடக்காதீர்கள் என்று அறிவுறுத்தும் மார்க்கத்தில் நாம் இருக்கிறோம் இதை அறிந்துக்கொண்டும் அலட்சியமாக நடந்துக்கொண்டு மார்க்க அறிவுள்ள அழகான முறையில் தெளிவான விளக்கங்களை கொடுக்கும் சகோதரர் பி.ஜே போன்ற சகோதரர்களை வாய்க்கு வந்தபடி திட்டி, வசைபாடி கிண்டல் அடிக்கிறீர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறீர்களா?
தவறு செய்வது மனித இயல்பு தவறு செய்யாதவன் அல்லாஹ் இதுதானே மனிதனுக்கு இலக்கணம்!
நபிகளார் (ஸல்) அவர்களே தேன் அருந்தமாட்டேன் என்று தன்னிச்சையாக முடிவெடுத்தார், ஒரு குருடர் வந்தார் அவரை நோக்கி கடுகடுத்து விட்டார் உடனே அல்லாஹ் அவரை நோக்கி வாய்க்கு வந்தபடி திட்டி, வசைபாடி கிண்டல் அடித்து திருமறை வசனத்தை இறக்கினானா? அல்லது கண்ணியமான முறையில் அவருக்கு அறிவுரை கூறும்விதமாக திருமறை வசனத்தை இறக்கினான?
ஒருவரையொருவர் வசைபாடும் சகோதரர்களே முதலில் கீழ்கண்ட வசனத்தை படியுங்கள்!
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக்கொள்வதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். இதனால் நீங்கள் செய்த செயல்கள் வீணாகிவிடும்; நீங்கள் அதனை அறியாத நிலையில்! (திருக்குர்ஆன் 49:2)
அல்லாஹ் மூமின்களை நோக்கி நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள் என்று கூறுகிறான் ஆனால் ஏகத்துவவாதிகள் என்று தங்களைத்தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்டு வாழும் நம்மில் பலர் பிறரை திட்டி வசைபாடிக்கொண்டு அல்லாஹ்வின் குரலுக்கு மேல் குரலை உயர்த்தி கண்ணியக்குறைவான முறையில் திட்டுகிறார்களே அவர்கள் உண்மையில் ஏகத்துவவாதிகளா? அல்லது பிறருக்க காட்டவேண்டும் என்பதற்காக ஏகத்துவத்தின் போர்வையில் அமர்ந்திருக்கும் போலியாவாதிகளா?
இனியும் உங்கள் சகோதரர்களை திட்டுவதாக இருந்தால் அறிந்துக்கொள்ளுங்கள் கீழ்கண்டவற்றை அறிந்துக்கொள்ளுங்கள்
-
நீங்கள் அல்லாஹ்வுடைய குரலுக்கு மேல் குரல் உயர்த்துகிறீர்கள்,
-
நபிகளார் (ஸல்) அவர்களுடைய குரலுக்கு மேல் குரல் உயர்த்துகிறீர்கள்!
-
நீங்கள் ஏகத்தவவாதியல்ல மாறாக போலிவாதிததான் என்பதை அறிந்துக்கொண்டு திட்டுங்கள்!
இதுபோன்ற தவறான நடவடிக்கைகளிலில் ஈடுபட்டு மறுமையில் கைசேதப்பட்டு நிற்கும் அவலத்திலிருந்து உங்களை அல்லாஹ் காப்பாற்றி நேர் வழிகாட்டுவானாக அமீன்!
மறுமொழியொன்றை இடுங்கள்