சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்கள் கேட்ட கேள்வி?
நான் ஒரு தீராத குழப்பத்தில் இருகிறேன்! தர்கா போவது சரியா தவறா.. ? கப்ரு கட்டிடமாக எழுப்ப வேண்டாம் என்று முகம்மது[SAW] சொல்லி இருக்கிறார் ..அனால் தர்கா செல்ல கூடாது என்று ஹதீஸ் இருகிறதா.. இல்லை குரான் வசனங்கள் இருகிறதா..? என்னுடைய நண்பர்களிடம் பேசும்போது. அவுலியாக்கள் தான் குரான்-ஐ நம்மிடை கொண்டு வந்து சேர்த்தார்கள் நமக்கு குரான்-ஐ பற்றி விலக மலிதார்கள் என்று கூறுகிறார்கள் இந்த காரணதுகாகதன் தர்கா செல்கிறோம் என்று கூறுகிறார்கள். எனவே தர்காஹ் போவது இது சரியா தவறா?
தர்கா போவது சரியா தவறா.. ? (பதில்)
அன்புச் சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும்
”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு
(தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)
இந்த கட்டுரை மிக நீளமானதாக இருக்கும் காரணம் தர்காஹ் பற்றிய விளக்கம் சில வரிகளில் அளித்துவிட்டால் அதன் ஆழம் அறிந்துக்கொள்ள முடியாது எனவேதான் சற்று நீண்ட அளவில் கட்டுரையாக வரைந்துள்ளேன்!. எனவே அல்லாஹ்வுக்காக சற்று பொறுத்துக்கொள்வீர்களாக! நீங்களும் இக்கட்டுரையை படித்து மக்களிடம் எத்திவைத்து நல்அமல்கள் பெற்றுக்கொள்ள சற்று சிந்தித்துப் படியுங்கள்! (அல்லாஹ் நம் அனைவர் மீதும் ரஹ்மத் செய்வானாக!)
சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்களது கேளவி
கப்ர் கட்டிடமாக எழுப்ப வேண்டாம் என்று முகம்மது[SAW] சொல்லி இருக்கிறார் .. அனால் தர்கா செல்ல கூடாது என்று ஹதீஸ் இருகிறதா.. இல்லை குரான் வசனங்கள் இருகிறதா..
சகோதரரே தாங்கள் தர்காஹ் செல்லக்கூடாது என்று நபிமொழி உள்ளதா என்று கேட்டுள்ளீர்கள் ஆனால் அல்லாஹ்வோ கப்ருகளை மசூதிகளாக ஆக்குபவர்களையே சபிக்கின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதோ இதற்கான ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
கப்ருகளை மசூதிகளாக ஆக்கக்கூடாது – நபிகள் நாயகம் (ஸல்)
யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)
கப்ருகள் உள்ள இடங்களில் கட்டிடம் கூட கட்டக்கூடாது என்றார்கள் நபிகளார் (ஸல்)
கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி.
அன்புச் சகோதரரே! தாங்கள் தர்காஹ் செல்ல கூடாதா? என்று கேட்டுள்ளீர்கள் ஆனால் நபிகளாரோ கப்ருகளையே தரைமட்டமாக்க உத்தரவிட்டுள்ளார்கள் அப்படியிருக்க தர்காஹ் கட்டிடம் எம்மாத்திரம். நாம் இதிலிருந்தே கப்ருகளையோ அல்லது கப்ருகளில் கட்டப்பட்டுள்ள தர்ஹாக்களுக்கோ செல்லக்கூடாது என்பதற்கு ஆணித்தரமான ஆதாரம் காண்கிறோம். அதோ அந்த ஹதீஸ் தங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.
உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.
என் அருமைச் சகோதரரே தாங்கள் கீழ்கண்ட கேள்வியையும் கேட்டுள்ளீர்கள்-
என்னுடைய நண்பர்களிடம் பேசும்போது…அவுலியாக்கள் தான் குரான்-ஐ நம்மிடை கொண்டு வந்து சேர்த்தார்கள்..நமக்கு குரான்-ஐ பற்றி விலகமலிதார்கள் என்று கூறுகிறார்கள். இந்த காரணதுகாகதன் தர்கா செல்கிறோம் என்று கூறுகிறார்கள்.
சகோதரரே இதற்கான பதில்
சகோதரரே சிந்தித்துப்பாருங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் நமக்காக திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் மூலம் வஹியாக பெற்றுக் கொண்டார். பிறகு தனது இறுதி 23 ஆண்டுகால அயராத உழைப்பினாலும் நல்பிரச்சாரத்தினாலும் நம் இனிய மார்க்கமான இஸ்லாத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி முழுமைப்ப டுத்தினார்.
அதே சமயம் இந்த மாநபி கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அந்த குர்ஆனின் (அல்லாஹ்வின் வார்த்தைகள்) படி சாதாரண மனிதனாக! குடும்பத்தலைவனாக! நாட்டின் சக்கரவர்த்தியாக! சமுதாயத் தலைவனாக! சஹாபா பெருமக்களின் உற்ற உயிர்த் தோழனாக! மக்களின் மதிப்புமிக்க கண்ணியமிக்க சகோதரனாக வாழ்ந்து காட்டினார். மேலும் இவர் மரணிக்கும் போது கீழ்க்கண்ட ஒரு அற்புதமான வார்த்தையை நம்மிடம் விட்டுச்சென்றுள்ளார் அதை சற்று செவிதாழ்த்திக் கேளுங்கள் உங்களுக்கு மனதில் உள்ள அனைத்துக் குழப்பங்களும் நீங்கும்! உங்களுக்காகத்தான் என்னவோ நபிகளார் (ஸல்) அவர்கள் தம் வாய்மொழியால் அறிவித்துச் சென்றுள்ளார்கள் அவரை கண்ணியப்படுத்துவது நம் கடமையல்லவா? சரி நபிகள் (ஸல்) சொன்ன அந்த வார்த்தையைக் கேட்போமா!
உன்னதமான நபிமொழி
எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.
கப்ருகள் கட்டப்பட்ட இடங்களில் உட்காருவதற்குக் கூட நபிகளார் (ஸல்) தடை செய்தார்கள்
கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக, “அபீமிர்சத்” என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம், முதல்பாகம்
நபிகள் (ஸல்) சஹாபா பெருமக்களிடம் கேட்ட கேள்வியை பாருங்கள்
நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் நீ அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “அவ்வாறு நான் செய்ய மாட்டேன்” என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். ஆதாரம் : அபூதாவூத் அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத்(ரழி) பக்கம் : 298 பாகம் 1
நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) புலாலா அவர்களை கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,”கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் முதல்பாகம் 312
அருமைச் சகோதர! சகோதரரிகளே தீன்குலத்துப் பெண்களே நபிகள் (ஸல்) அவர்களின் சாபம் உங்களுக்கு வேண்டுமா?
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்.
என் அருமைச் சகோதரரே தாங்கள் கீழ்கண்ட கேள்வியும் கேட்டுள்ளீர்கள்
அவுலியாக்கள் தான் குரான்-ஐ நம்மிடை கொண்டு வந்து சேர்த்தார்கள். .நமக்கு குரான்-ஐ பற்றி விலகமலிதார்கள் என்று கூறுகிறார்கள்.
இதற்கான பதில்
அவ்லியாக்கள் குர்ஆனுக்கு விளக்கமளித்தார்கள் என்று சொல்வது உண்மையானால் அந்த விளக்கம் பெற்ற மக்கள் அனைவரும் ஏகத்துவத்தை விளக்கும் முதல் கலிமாவை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமே! இதோ அந்த ஏகத்துவ கலிமாவை படியுங்கள்
அல்லாஹ்தைதவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவர்கள்
ஆனால் மக்களோ! அல்லாஹ்வைத் தவிர அவ்லியாக்களை வணங்கி மேலும் நபிகளார் (ஸல்) அவர்களை விட அவ்லியாக்களின் தலைவராக கருதப்படும் அப்துல் காதர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக வைத்து 1000 முறை அழைத்தால் அப்துல் காதர் ஜீலானி பதிலளிப் பார்கள் என்று ஏற்றுக்கொண்டது கப்ருகளில் அடங்கியிருக்கும் அவ்லியாக்கள் திருக்குர்ஆனை விளக்கவில்லை மாறாக சூஃபி கொள்கையைத்தான் என்பது தெளிவாகிறது.
ஆனால் அல்லாஹ்வோ தனது திருமறையில் இவ்வாறுதான் கூறுகிறான்
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்‘ என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2: 186)
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்த வர்களாய் நரகம் புகுவார்கள். (அல்-குர்ஆன் 40: 60)
குறிப்பு
1000 முறை அழைத்தால் அப்துல் காதர் ஜீலானி பதிலளிப்பாரா? அல்லது ஒரு முறை யா! அல்லாஹ் என்று அல்லாஹ்வை உள்ளச்சத்துடன் அழைத்தால் அல்லாஹ் பதிலளிப்பானா?
பாக்தாத்தில் உள்ள காதர் ஜீலானியின் தர்காஹ்வின் மீது அமெரிக்கா குண்டு வீசி சேதப்படுத்தியபோது காதர் ஜீலானியால் தடுக்க முடியவில்லையே! சிந்திததுப்பாருங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
சரி யாராவது ஒருவர் குர்ஆனுக்கு (தப்ஷீர்) மொழிபெயர்ப்பு கொடுத்தால் அவரை நாம் வணங்க வேண்டுமா? சிந்தித்துப்பாருங்கள் அவ்வாறு வணங்க வேண்டு மென்று அல்லாஹ் கூறியிருந்தால் இன்று தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் உள்ள அத்தனை மவ்லவிகளும் அவ்லியாக்களாக ஆகிவிடுவார்களே!
ஏன் சகோதரர் நிஜாமுத்தீன் மன்பயீ, சகோதரர் ஜாகிர் நாயக், சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன், சகோதரர் பிக்தால் உட்பட அனைத்து சகோதரர்களும் அவ்லியாக்கள் என்று எண்ணிவிட முடியுமா? (நான் மிகவும் மதிக்கின்ற என்னுடைய இந்த சகோதரர்களின் பெயர்கள் உதாரணத்துக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது அவர்களை நான் இகழ்ந்து அவதூறாக பேசுவதாக எண்ணிவிட வேண்டாம்).
இவர்களைப் போன்று குர்ஆன் மொழிபெயர்ப்புக்கு அந்த கால கட்டங்களில் வாழந்த சில நல்ல மனிதர்கள் தங்கள் வாழ்க்கயையே அர்ப்பணித்திருந்தால் அவர்கள் மரணித்த பிறகு அவரை பின்பற்றிய தொண்டர்களும், பொதுமக்களும் குர்ஆனுக்கு தப்ஷீர் கொடுத்த நல்லடியார்களை அவ்லியா என்று புகழந்து வணங்க ஆரம்பித்தார்களே ஏன் இந்த நல்ல மனிதர்கள் ”நாங்கள் மரணித்தால் எங்களை அவ்லியாவாக பாவித்தது வணங்குகங்கள் நாங்கள் உங்களுக்கு கைகொடுப்போம் என்று கைப்பட எழுத்திக் கொடுத்துள்ளார்களா? அல்லது சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் திருமறை திருக்குர்ஆனை படித்திருக்கவோ ஏன் கண்களில் கண்டிருக்கவோ வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! சிந்தித்துப்பாருங்கள் திருக்குர்ஆனுக்கு தப்ஷீர் கொடுத்தவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வார்களா?
அல்லாஹ் என்ன கூறுகிறான் கேளுங்கள்
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், மதகுருமார்களையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்களின் தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர்’. (அல்குர்ஆன்-9:31)
நபிகள் (ஸல்) கூறினார்கள்
அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.
சரி தர்காஹ் என்பது என்ன? எதற்காக உருவாக்கப்பட்டது? யார் அறிமுகப்படுத்தியது? (இதோ விளக்கம்)
தர்காஹ் என்பதன் விளக்கம்
தர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.
இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்ப டுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த சூஃபிக்கள் தான் மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க வழிகேடாகும்.
தர்காஹ் முதன்முதலில் எதற்காக கட்டப்பட்டது!
சூஃபியிஷத்தை பாரசீகத்திலிருந்து பரப்ப வந்த சுஃபியிஷத்தைச் சேர்ந்த சில மார்க்க ஞானிகள் (உங்களைப்போன்ற படிப்பறிவுள்ள அறிஞர்கள் இவர்களுக்கு எந்த மறை ஞானமுமில்லை) பாரசீகத்தில் நிலவி வந்த வன்முறைக் கொடுமைகளுக்கு ஆளாகி தங்கள் கொள்கையையும் உயிரையும் இழந்துவிடக்கூடாது என்றும் சூஃபி கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொண்டார்கள்.
அன்றைய காலகட்டங்களில் இந்தியா செல்வச்செழிப்பில் தழைத் தோங்கியிருந்தது எனவே சொந்த தாய்நாட்டை துரந்த சூஃபி அறிஞர்கள் இந்தியாவில் தங்கள் கொள்கைகளை பரப்பி வந்தனர். இவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தங்கள் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஒரு இடத்தில் நிலையாக தங்கவும் (அதாவது ஹெட் ஆபிஸ்) அமைத்தனர்.
இந்த தலைமைச் செயலகத்தில் இந்த சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கும் கஷ்ட நஷ்டங்களையும், நல்ல நிலைமைகளையும் பரிமாறிக் கொள்ளவும் சூஃபிக் கொள்கைகளை வீரியப்படுத்தவுமே பயன்பட்டது எனவேதான் நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் தர்காஹ் கட்டிடங்கள் (கிளை அலுவலகம்) எழுப்பினர் அந்த கட்டிடத்தில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதுவே தர்ஹா கட்டிடம் எனப்படும். இவ்வாறு இந்த கட்டிடங்களில் தங்குவதற்கு பாரசீக மொழியில் கான்காஹ் (khanqah) என்று அழைப்பர்.
பின்னர் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) மரணித்துவிட்டால் அவர்களை கவுரவப் படுத்தும் விதமாக அந்த கட்டிடங் களிலேயே கப்ரு தோண்டி அவரை அவ்லியாவாக பிரகடனப்படுத்திவிடுவார்கள் மேலும் அவர் தெய்வீக பதவியை அடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்வர் இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஏன் அணுவளவும் தொடர்பில்லாத தத்துவமாகவும் தவறான கொள்கையுமாகும் மேலும் இவர்களுடைய இந்த அவ்லியா கொள்கை முற்றிலும் யுத கிருத்தவ கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாகும்! இதற்கு உதாரணம் வேண்டுமானால் கீழே உள்ளதை படியுங்கள்”
கிருத்தவ கொள்கையுடன் தொடர்புடைய சூஃபிக்களின் அவ்லியா கொள்கை
கிருத்தவ மார்க்கத்தை பரப்ப வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த அன்னை தெரஸா அவர்கள் சென்ற 10 ஆண்டகளுக்கு முன்னர் (1997ல்) மரணித்தார் இந்த அம்மையார் செய்த சமுதாய தொண்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் போற்றப்பட்டு வருகிறது.
இதை கண்ட வாடிகன் மத போதகர்கள் மற்றும் மதகுரு போபாண்டவர் இந்த அம்மையாரை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணி இவரை செயின்ட் (தமிழில் சொல்வதாக இருந்தால் புனிதவதி என்றும் அரபியில் சொல்வதாக இருந்தால் அவ்லியா என்றும்) கூறி அவரை கடவுளுக்கு இணையான தர்ஜாவை (பதவியை) அளிக்க முயன்று வருகின்றனர்.
இது ஒன்றே போதும் சூஃபிக்கள் பின்பற்றும் அவ்லியா கொள்கை யுத, கிருத்தவ மார்க்கத்தை தாயகமாக கொண்ட கொள்கை என்பதற்கு. இப்போது புரிகிறதா எவ்வாறு அவ்லியாக்கள் உறுவாகின்றனர் என்று. இந்த மூடப் பழக்கத்தை நாம் பின்பற்றலாமா?
குறிப்பு
அன்னை தெரஸா உயிருடன் இருக்கும்போது என்றைக்காவது தான் மரணித்துவிட்டால் என்னை வணங்குங்கள் நான் உங்களுக்கு அருள்புரிகிறேன் என்று தொலைக்காட்சியிலோ, பத்திரிக்கைகளிலோ பேட்டி கொடுத்துச் சென்றார்களா? இது இந்த அம்மையாருக்கு செய்யும் பச்சை துரோகமல்லவா?
இந்த கிருத்தவ அம்மையாருக்கு இவர்களின் மதபோதகர்ள் செய்யும் கொடுமைகளை நம் கண்கள் முன்னே நன்மை தீமையை அல்லாஹ் படம் போட்டுக்காட்டுகிறானே இது அல்லாஹ்வின் அருள் இல்லையா! இதைக்கண்டும் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா? நாம் சிந்திக்கின் றோமா?
சூஃபிக்களினால் தவறான பாதை காட்டப்பட்ட இந்தியர்கள்
பிற்காலத்தில் சூஃபிக்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாற்றுமதத்தவர்கள் (நம் முன்னோர்கள்) சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறுவதுதான் இஸ்லாம் என்று நம்பினார்கள் காரணம் அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியவில்லை! பாவம் என்ன செய்ய முடியும்!
”ரோஜா மலரை வாழ்க்கையில் ஒருமுறை கூட கண்களில் கானாதவர்கள் முன் கல்லிச் செடியை காண்பித்து இதுதான் ரோஜா மலர் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும்”
நாம் யாரை உயிரினிலும் மேலாக மதிக்கிறோமோ அவர்கள் விஷம் கலந்த பாலை நமக்கு கொடுத்தால் என்ன செய்ய முடியும் அப்பாவிகளாக மக்கள் அந்த விஷம் கலந்த பாலை குடித்து சாகத்தானே வேண்டும். இது நம்பிக்கை துரோகமல்லவா?
இதே நம்பிக்கை துரோகத்தைதான் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) அறியாத மக்களிடம் இஸ்லாம் என்று கூறி தங்கள் கெட்ட கொள்கைகளை பரப்பினார்கள் அதன் தாக்கம் இன்றளவும் உள்ளது.
சகோதரரே இப்போது சொல்லுங்கள் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா?
சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறிய மார்க்க விரோத கொள்கையை ஏற்கலாமா?
முடிவுரை
இஸ்லாமிய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது எவ்வாறு?
சஹாபாக்கள் பட்ட இன்னல்கள்
பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை விட்டுவிட வேண்டு மென்பதற்காக பிலால் (ரலி) அவர்களின் எஜமான் உமையா பின்கலஃப், பிலால்(ரலி) அவர்களைச் சங்கிலியால் கட்டி மக்காவிற்கு வெளியே கொண்டு வந்து அனல் பறக்கும் மணலில் படுக்க வைத்து அவர்களின் நெஞ்சில் மிகப் பெரும் பாரங்கல்லை வைத்து அவனும் அவனைச் சாந்தவர்களும் அவர்களைச் சாட்டையால் மாறி மாறி அடித்தனர். பிலால்(ரலி) அவர்கள் ஏகன், ஏகன் என்றே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அபூபக்கர்(ரலி) உமையா விடமிருந்து பிலால்(ரலி) அவர்களை விலைக்கு வாங்கி சுதந்திரமானவர்களாக அல்லாஹ்வின் பாதையில் விடுதலை செய்தார்கள்.
மார்க்கத்தை நிலைநாட்ட மக்களின் ஹிஜரத்
மக்கத்து இறை நிராகரிப்பாளர்களின் கொடுமைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுமார் 70 முஸ்லிம்கள் தத்தம் குடும்பத்தார்களுடன் நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.
மார்க்கத்தை நிலைநாட்ட நபிகள் (ஸல்) அவர்களின் ஹிஜரத்
நபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சுமார் ஐந்து மைல் தூரம் சென்று ஸவ்ர் எனும் குகையில் ஒழிந்து கொண்டனர். குரைஷிகள் எல்லா பாகங்களிலும் நபி (ஸல்) அவர்களைத் தேடுவதற்கு ஆள் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களை உயிருடனோ பிணமாகவோ கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாகத் தரப்படுமென அறிவித்தார்கள். அவர்கள் நபி (ஸல்)அவர்களைத் தேடி குகை வாசலுக்கே வந்துவிட்டார்கள். எந்த அளவுக்கு என் றால் அவர்களில் ஒருவன் கீழே குனிந்து பார்த்துவிட்டால் அவர்கள் இருவரையும் கண்டு கொள்வான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என அபூபக்கர் (ரலி)கடுமையான கவலை கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூ பக்கரே! நாம் இரண்டு பேர்தான் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டீரா? அல்லாஹ் மூன்றாவது ஆளாக இருக்கிறான்! நீங்கள் கவலைப் படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்! எனக் கூறினார்கள். ஆனால் அக்கூட்டத்தினர் அவ்விருவரையும் பார்க்க வில்லை. இருவரும் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்து விட்டு பிறகு மதீனாவை நோக்கி நடந்தனர்.
என் அருமைச் சகோதர சகோதரரிகளே! தாங்கள் மேலே கண்ட அனைத்து வேதனைகளும் விவரித்தால் நம் வாழ்வு போதாது எனவே ஒரு சில வேதனைகளை மட்டும் இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன்!
என் அருமைச் சகோதர சகோதரரிகளே! தாங்கள் மேலே கண்ட துன்பங்களும் துயரங்களும் இஸ்லாத்தை நிலைநாட்டவே பொறுத்துக்கொள்ளப்பட்டன. இறுதியாக அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை பரிபூரணமாக்கி இனி இதுதான் மார்க்கம் என்பதை வரையறுத்துத்தந்தான்! ஆதாரம் வேண்டுமா? பாருங்கள் கீழே உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகளை!
“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல் குர்ஆன் 5:3)
என் அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ் நம்மைப் பார்த்து மஹ்ஷர் நாளில் கீழ்கண்ட கேள்விகள் கேட்டால் உங்களால் பதிலளிக்க முடியுமா?
பிலால் (ரலி) அவர்கள் அனல் பறக்கும் மண்ணில் நெஞ்சில் மிகப் பெரும் பாரங்கல்லை சுமந்தார்களே எதற்காக? சாட்டையால் மாறி மாறி அடி வாங்கினார்களே எதற்காக? அத்தனை இன்னல்களையும் சகித்த பிலால்(ரலி) அவர்கள் ஏகன், ஏகன் என்றே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்களே எதற்காக?
70 முஸ்லிம்கள் தத்தம் குடும்பத்தார்களுடன் நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்களே எதற்காக?
நபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சுமார் ஐந்து மைல் தூரம் சென்று ஸவ்ர் எனும் குகையில் ஒழிந்து கொண்டார்களே எதற்காக?
நம் உத்தம நபி (ஸல்) அவர்கள் போரில் கலந்துக்கொண்டு முகத்தில் வெட்டுக்காயங்கள் வாங்கினார்களே எதற்காக? ஹிஜரத் எதற்காக? பத்ரு, ஹுனைன், உஹதுப் போர்க்களங்கள் எதற்காக? கண்மூடித்தனமாக அவ்லியாக்களின் தர்காஹ் வழிமுறையை பின்பற்றி நரகம் செல்லவா?
இதைப்படிக்கும் உண்மையுள்ள முஸ்லிம்களுக்கு கண்களில் இரத்தக்கண்ணீர் வடிவது போன்று இருக்குமே! நாம் மார்க்கத்தை பரப்புவதில் பின் தங்கியுள்ளோமே! கப்ரின் கேள்விகளுக்காவது உங்களிடம் பதில் உள்ளதா?
எனவே சகோதர! சகோதரரிகளே ஏகத்துவ மார்க்க அறிஞர்களான ஆலிம் பெருமக்கள் மார்க்கத்தை எத்திவைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டும் போதுமா அவர்கள் மட்டும் சுவனம் சென்றால் போதுமா? அரபி படிப்பறிவற்ற நாம் சுவனம் செல்லக்கூடாதா? எனவே நாமும் நம் இல்லங்களிலும் தாவா செய்ய முற்படுவோம் அப்போதுதான் நாமும் மூமின்கள் என்ற அந்தஸ்தை பெற முடியும்! வீடுகளில் தாவா பணியை இந்த ரமலானில் தொடங்குவோமா? சிந்திக்கவேண்டாம் திருக்குர் ஆனையும் ஹதீஸ்களையும் படியுங்கள் (இன்ஷா அல்லாஹ்) நீங்களும் ஒரு மிகச் சிறந்த தாயி தான்! அல்லாஹ் துணை நிற்பான்
“(நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்துக்கு உரிய மற்றொருவரும் இருப்பதாக நீங்கள் சாட்சி கூற முடியுமா? என்று கேளும். அப்படி நான் சாட்சி கூற மாட்டேன் என்று நீரும் கூறும்” (அல்குர்ஆன்: 6:19).
لا اله الا الله محمد رسول الله
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)
assalamu alaikum varahmathullah
masha allah sagodara nalla oru information
Dear brother,
Masha Allah, I am happy to read the articles in your blog. If I prise you, it would not be good for your rewards from Allah (SWT). So, I thank you very much for given such explanation to the brother, and to who ever have chance to open this blog. May Allah bless you & your family with long life. I have subscribed for your newsteller. Can you tell me about you in my email.
yours brother in islam.
Noor.