பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
அன்புச் சகோதரர்களே!
முதல் முறையாக தனிப்பட்ட மனிதருடைய பெயரை முன்மொழிந்து பதில் பதிக்கிறேன் எந்தவொரு தனிப்பட்ட நபரின் அனுமதியுமின்றி அவரது பெயரால் பதில் கொடுப்பது என்னைப் பொருத்தவறையில் தவறுதான் எனினும் இன்று சில முட்டாள் முல்லாக்கள் மார்க்கத்தை கேளிக்குறியதாக ஆக்கி மார்க்க அறிஞரான சாகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா? என்று பாட்டிமன்றம் நடத்துகிறார்களாம் எனவேதான் சமூகத்தில் இதுபோன்ற கேடுகெட்ட செயல்கள் தொடரக்கூடாது என்று கருதி அந்த தனிப்பட்ட சகோதரர் என்னுடைய செயலை மன்னிப்பார் என்று கருதிக்கொண்டு அவருடைய பெயரை முன்மொழிந்து கருத்து பதிக்கிறேன்! என்னில் தவறு இருப்பின் அனைவரும் மன்னிக்கவும்! அல்லாஹ் கிருபை செய்வானாக!
இங்கு சகோதரர் பி.ஜே அவர்களின் பெயர் அடிபடுவதால் அந்த பெயரை வைத்தே பதில் கூறுகிறேன் இதை வைத்துக்கொண்டு அண்ணன் பி.ஜேவுக்கு வக்காளத்து வாங்குகிறாயா? என்று உங்களில் கேள்வி எழுப்பினால் எழுப்புங்கள் நான் கீழ்கண்ட நபிமொழிக்கு கட்டுப்பட்டு அல்லாஹ் என்னை கைவிடமாட்டான், மஹ்ஷரில் கைவிடக்கூடாது என்று உணர்வின் அடிப்படையில் பதிலளிக்கிறேன் ஏனெனில் நான் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிக்க விரும்புகிறேன்! நீங்களும் இதுபோன்று வாழ விரும்பினால் வாருங்கள்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2442)
பி.ஜே என்ன அல்லாஹ்வா? இதன் பதில் இறுதியில் இருக்கும் தயவு செய்து அறைகுறையாக படித்துவிட்டு என்னை திட்டாதீர்கள்! முழுவதுமாக படிக்கவும்!
இஸ்லாத்தில் சிறந்தது எது?
இஸ்லாம் என்பதே சிறந்ததுதான் அதிலும் சிறந்த செயல் என்ன என்று கேட்டால் ஸலாம் என்ற முகமன்தான். நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் இஸ்லாதை பற்றி வினவுகிறார் அந்த நேரத்தில் மாநபி (ஸல்) அவர்கள் என்ன பதில் அளித்தார்கள் தெரியுமா? இதோ ஆதாரம்
‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)
யாருக்கு ஸலாம் கூறவேண்டும்
நம்மில் பெரும்பாலானோர் யாருக்கு ஸலாம் கூறவேண்டும் என்ற கருத்துவேறுபாடுகளிலேயே காலத்தை கழிக்கிறார்கள் இவர்கள் கீழ்கண்ட அருள்மறைவசனத்தில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தையை உணர்ந்துவிட்டால் அவர்களின் விவாத நேரம் மிச்சமாகும்!
(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:86)
இங்கு அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தை எவராலும் என்று வருகிறது அதாவது ஒரு காஃபிர் கூட உங்களுக்கு ஸலாம் கூறினால் நீங்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறலாம் இதுதான் இங்கு நாம் அறியும் செய்தி எனவே ஒரு காஃபிர் உங்களுக்கு ஸலாம் கூறினால் அதற்கு பதில் அளித்தால் உங்களுக்கு என்ன கேடு வந்துவிடும்! சிந்தித்துப்பாருங்கள் நீங்களாக காஃபிர்களை தேடிச்சென்று ஸலாம் கூறவில்லையே மாறாக காஃபிர்கள் உங்களைத் தேடி வந்து அன்பாக ஸலாம் கூறுகிறார்கள் அவர்களை வாழ்த்தவது கூடாதா?
யாருக்கு ஸலாம் கூறக்கூடாது
ஸலாம் என்ற முகமன் வாழ்த்தை யாருக்கு கூறக்கூடாது என்று நானறிந்தவரை எந்த வரைமுறையும் தென்படவில்லை தென்பட்டால் கூறவும்! ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைப்படி பார்த்தால் சிலருக்கு வேண்டுமானால் ஸலாம் கூறுவதை தவிர்க்கலாம். யாராவது நமக்கு அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் நேரட்டும்) என்று பாலஸ்தீனத்தில் கலகம் விளைவிக்கும் யூத நாய்ககளின் ஸ்டைலில் முகமன் கூறினால் பதிலுக்கு மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த நபியின் ஸ்டைலில் வ அலைக்க என்று கூறலாம்!
இதன் மூலம் நாம் அறிவது ஸலாம் என்ற வார்த்தையை மழித்துவிட்டு அஸ்ஸாமு அலைக்க என்று கூறுபவனுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதே! ஆதாரம் இதோ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ‘அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்’ என்றார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் (அதற்கு பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள்’ என்றார்கள். (புகாரி 6926)
யாருக்காவது ஸலாம் கூறுவதை புறக்கணித்தால் என்ன நிகழும்
வேண்டுமென்றே ஸலாத்தை புறக்கணித்தால் அவன் வேண்டுமென்றே நபிவழியை புறக்கணிக்கிறான் அவ்வாறு புறக்கணிப்பவன் அல்லாஹ்வை இகழ்கிறான் ஏனெனில் அல்லாஹ்தான் ஸலாம் என்ற முகமனை கற்றுத்தந்தவன்!
ஒருவேளை சகோதரர் பி.ஜே அல்லது ஜமாலி ஆகிய இருவரோ? அல்லது இருவரில் ஒருவரோ ஒரு சபையில் அமர்ந்திருந்தால் இந்த இருவருக்குமோ? அல்லது இருவரில் ஒருவருக்கோ எந்த மடையனாவது திட்டம்போட்டு ஸலாம் கூறவில்லை அல்லது ஸலாமுக்கு பதில் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நிலையில் அந்த மடையர்கள் கீழ்கண்ட நபிவழியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்
நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244
ஒருவேளை சகோதரர் பி.ஜே அல்லது ஜமாலி ஆகிய இருவருமோ? அல்லது இருவரில் ஒருவரோ ஒரு சாலையோரம் நடந்து சென்றாலோ? அல்லது சாலையோரம் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தாலோ இந்த இருவருக்குமோ? அல்லது இருவரில் ஒருவருக்கோ எந்த மடையனாவது திட்டம்போட்டு ஸலாம் கூறவில்லை அல்லது ஸலாமுக்கு பதில் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நிலையில் அந்த மடையர்கள் கீழ்கண்ட நபிவழியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231
ஒருவேளை ஸலாம் கூற மறுக்கும் மடையர்கள் தங்கள் வாதத்தில் நிலைத்திருந்தால் அவர்கள் கீழ்கண்ட நபிமொழியை மறுப்பது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் சிறந்ததை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்!
‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)
சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
அன்புச்சகோதர, சகோதரிகளே நாம் ஒருவருக்கு ஸலாம் கூறக்கூடாது என்று தீர்மானம் எடுத்தால் அந்த ஒருவரை நாம் அல்லாஹ்வாக கருதுகிறோம் என்றுதான் பொருள்படுகிறது. குழப்பமாக உள்ளதா? இதோ கீழ்கண்ட நபிமொழியை பாருங்கள்!
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது ‘அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக’ என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான். எனினும் ‘காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறுங்கள். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 835)
இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத சில உலமாக்கள் பிஜேவுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா என்று பாட்டிமன்றம் நடத்துகிறார்களாமே அவர்கள் சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ்வாக ஆக்கிவிட சதித்திட்டம் போடுகிறார்களா? மூட முல்லாக்களே இதுதான் உங்கள் தேடுதலா? இப்படிப்படட விவாதங்களின் மூலம் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்குமா? ஒரு தஃவா சகோதரரை குறிப்பிட்டு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா? என்று விவாதம் நடத்தும் நீங்கள் எல்லாம் உலமாக்கள் ஆலிம்கள் அல்ல மாறாக அறிவிழிகள்!
ஆலிம்கள் என்பவர்கள் நபியின் வாரிசுகள் என்று கேள்விப்பட்ட துண்டு எந்த நபியாவது இந்த கேடுகெட்ட செயலை செய்தாரா? அப்படியெனில் இந்த மூட ஆலிம்கள் தங்களை நபியின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு நபிமார்களை கேவலப்படுத்து கிறார்களா? இப்படித்தான் நாமும் கேள்வி எழுப்புவோம்! எனவே இந்த சம்பவத்தின் மூலம் எந்த ஆலிம், உலமாக்கள் சகோதரர் பி.ஜேவுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கூறுகிறானோ அந்த ஆலிம் ஆலிமே அல்ல அந்த தகுதியை அவன் இழந்துவிட்டான் அவன் அல்லாஹ்வின் பார்வையில் பொதிசுமக்கும் கழுதைதான் ஆதாரம் இதோ
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் – அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்அன் 62:5)
இந்த வசனம் தவ்ராத்திற்கு மட்டுமல்ல குர்ஆனுக்கும் தான் ஏனெனில் தவ்ராத்தும் குர்ஆனும் அல்லாஹ்வுடைய வேதம் தானே! இந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் இந்த மூட முல்லாக்களை பொதி சுமக்கும் கழுதைகள் என்று ஃபத்வா கொடுக்க முன்வரவேண்டும்!
சகோதர, சகோதரிகளே இறுதி வேண்டுகோள்
எந்த தனிமனிதனுக்காவது, மார்க்க அறிஞருக்காவது, முஸ்லிமாக பிறந்து, முஸ்லிமாக வாழ்ந்து வரும் மனிதனுக்காவது ஸலாம் கூறமாட்டேன் என்று எவராவது உறுதிமொழி எடுத்திருந்தால் உடனே அந்த உறுதிமொழியை கழிவுகள் நிறைந்த குப்பையில் தூக்கி போட்டுவிட்டு கீழ்கண்ட நபிமொழி்க்கு தலைசாய்க்கவும்!
நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது, ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு ”உங்களிடையே ஸலாமை பரப்புங்கள் என்றார்கள். (நூல் முஸ்லிம் 81)
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்ற அடிப்படையில் பி.ஜே என்ற இந்த முஸ்லிம் சகோதரருக்கு நேர்ந்த துன்பத்தை, இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிர்த்து குரள் எழுப்பக்கூடிய முஸ்லிம் சகோதரன் உங்களில் யார்? நீங்கள் மஹ்ஷரில் நீதிமான்களுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும் அப்படிப்பட்ட அந்த அர்ஷின் நிழலில் நீங்கள் நிற்க தகுதியானவராக மாற விரும்பினால் வேற்றுமைகளை மறந்து நீதி செலுத்துங்கள்!
அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
அல்ஹம்துலில்லாஹ்!




















































இந்த மார்க்கம் தெரியாத மலட்டு முல்லாக்கள் ஏடுகளை சுமக்கும் கழுதைகளாகத்தான் இருக்கிறார்கள். பெயருக்கு மட்டுமே இவர்கள் ஆலிம்கள். இவர்களை பற்றி பேசினால் நம்முடைய நேரமே வீணாகிறது.
ஸலாம்! இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடும் முட்டாள் மவ்லவிகள், ஆலிம்களை நாம் ஆலிம், மவ்லவி என்று அழைக்கலாமா? அதற்கு அவர்கள் தகுதிபடைத்தவர்களா? இதுபோன்ற கேடுகெட்டவர்களின் கைகள் ஓங்காமல் இருக்கவும் நம் சந்ததியினரும் இப்படிப்பட்ட சிக்கல்களில் சிக்கி சீரழியாமல் இருக்கவும் மார்க்கத்தை குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் உணர்ந்துள்ள உண்மையான ஆலிம்கள் மற்றும் மவ்லவிகள் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! முடிவு கற்றறிந்த கல்வியாளர்களிடம் உள்ளது!
நன்றி சிராஜ் , மிக சரியான பதிவு ,மக்களை மாக்களக்கும் முல்லாக்களுக்கு எந்த ஹதீஸ்களை பதிலாக தந்தாலும் அவர்கள் திருந்தப்போவதில்லை
அன்பு சகோதரர் சிராஜ் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உங்கள் கட்டுரையை படித்ததும் மனம் மிகவும் சந்தோஷத்தில் உள்ளது தெளிவானவர்களுக்கு தெளிவாக புரியும் படி அற்புதமாக விளக்கம் அளித்துள்ளீர்கள், புரியாதவன் புரியாமலே இருக்கின்றான் என்று சொல்லமுடியாது எல்லாம் தெரிந்து கொண்டுதான் இவ்வாறு ஆலிம் பெருமக்கள் செய்கின்றார்கள் ஆனால் ஏக இறைவன் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் இருக்கின்றான் என்பது தெரிந்தும் நடிக்கின்றார்கள் இதற்க்கு தனி நபர் அன்பு சகோதரர் பி.ஜெ. அவர்கள் மேல் உள்ள கால்புனர்ச்சியே காரணம் உங்களை போன்ற மனித நேயம் உள்ள மனிதர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையாக விளக்கி மடத்தனமாக இருக்கும் மக்களை நல வலி கொண்டு வர தாங்கள் எடுத்து இருக்கும் முயற்சி அருமை….
நாமும் துவா செய்வோமாக இது விசியமாக எனது கேள்விகளுக்கு வசை பாடாமல் கருத்து பதில் அனுப்புங்கள்.
ஏர்வாடி இல் மழை இல்லாமல் இருந்து ஏன் திடலில் தொழவில்லை.
பாக்கர் பற்றி முகவை அப்பாஸ் சொன்ன கட்டுரைல தாங்கள் வெளி இட்ட பகுதியில் பீஜி என்ற மனிதரும் குலைந்து பேச கூடிய பெண் போன் கால் வரும் என்ற வாசகம். பீஜை இதற்க்கு பொறுப்பு ஏற்றால் ஓகே. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 84 / 2010௦படி சகோ பீஜே பொறுப்பை ஏற்க வேண்டும். அப்படி ஏற்றால் உண்மையான தவ்ஹீத் வாதி. இல்லை என்றால் அவர் ஒரு வியாதி தான்.
விவாதம் வெறியான இருக்கிறாரே… அதை திருந்த சொல்லுங்க…
அவரே பல இடங்களில் சலாம் சொல் வதை பற்றி சொல்லி இருக்கிறார்.
முதலில் அவரை கண்ணிய குறைவான வார்த்தைகளை கட்டு படுத்த சொல்லுங்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பாக்கர் ஆரம்பித்த போதே தடுத்து இருக்க வேண்டும், அதை விட்டு விட்டு இவர் ஏன் மார்ச் 2010 பதிய வேண்டும்.
சரி பதிந்து தான் தொலைத்தார்… அதை நமது தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்கள் பெயரில் பதிந்து இருக்க வேண்டும். அவருடைய சொந்த கரர்ந்கள் பெயரிலேயே ஏன் பதிய வேண்டும்.
ஹஜ் தொழுகை ஏன் குலபதிக்கு உள்ளாக்கினார். இது அவருடைய பக்கம் ஆள் இருக்காங்களா இல்லையா என்பதை பற்றிய சுய பரிசோதனை தான். அதை ஒத்துகொள்ள வேண்டும்.
அவரை அடிமட்ட உரிபினர பதிவியையும் புடுங்க வேண்டும். உடனே அவர் ஆரம்பித்த INTJ வழிநடத சொல்லுங்கள்.
A(T)NTJ
பாக்கர் பற்றி முகவை அப்பாஸ் சொன்ன கட்டுரைல தாங்கள் வெளி இட்ட பகுதியில் பீஜி என்ற மனிதரும் குலைந்து பேச கூடிய பெண் போன் கால் வரும் என்ற வாசகம். – andratntj
அன்புச் சகோதரருக்கு என் சுயநினைவுக்கு எட்டியவரை மேற்கண்ட வாசகத்தை நாம் எங்கும் பதிக்கவில்லை (அல்லாஹ்வின் மீது ஆணையாக) நீங்கள் என் மீது குற்றம் சும்ததாதீர்கள்! குழுமங்களில் நிறைய சிராஜ் என்ற நபர்கள் உள்ளனர் எனவே நான் எனது பெயருக்கு பின்னால் அப்துல்லாஹ் (சிராஜ்அப்துல்லாஹ்) என்ற புனைப்பெயரில் கருத்து பதிக்கிறேன்!
நான் கருத்து பதிக்கும் ஈமெயில் முகவரிகள் இவ்வளவுதான்
siraj.salaam@gmail.com, sirajabdullah.india@gmail.com, internationalparadise@gmail.com, siraj_alquran@yahoo.co.in., sirajabdullah@yahoo.com
எனவே இந்த மெயில் முகவரி குறிப்பிட்டு சிராஜ் என்று நான் கூறியிருந்தால் அதற்கான ஆதாரங்களை காட்டிவிட்டு என்மீது குற்றம் சுமத்தலாம்!
குறிப்பு!
எந்த தகவலையோ, கருத்தையோ, பதிலையோ பதிக்க நான் விரும்பினால் அதற்கு ஆதாரம் இருந்தால்தான் பதிப்பேன் இல்லையெனில் ஓரமாக ஒதுங்கிவிடுவேன்! சகோ.பாக்கர், முகவை அப்பாஸ், சகோ.பி.ஜே இவர்களுடைய சொந்த விஷயங்களில் தலையிட நாம் யார்? யார் விபச்சாரம் செய்தார், யார் குலைந்து பேசினார் என்பது பற்றி பேச நமக்கு என்ன உரிமை உள்ளது? அப்படி பேசுவதாக இருந்தால் அதை கண்ணால் கண்டிருக்கவேண்டும், 4 சாட்சிகளை கொண்டு நிறுபிக்க வேண்டும் அது இல்லாத பட்சத்தில் அதைப் பற்றி பேசுவது அப்பட்டமான குற்றமாகும். இதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள்தான் அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும். எனவே அறியாமல் என்மீது குற்றச்சாட்டுகள் பதிக்காதீர்கள் தவறுதலாக இருந்தால் நான் மன்னித்துவிடுவேன்! வேண்டுமென்றே தாங்கள் என்மீது குற்றம் சுமத்தினால் அதற்கு அல்லாஹ் பதில் கூறட்டும் ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடிமை சிராஜ் அப்துல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையாக விளக்கி மடத்தனமாக இருக்கும் மக்களை நல வலி கொண்டு வர தாங்கள் எடுத்து இருக்கும் முயற்சி அருமை….
நாமும் துவா செய்வோமாக
A(T)NTJ
மார்க்கத்துக்கு எதிரான செயல்களை செய்து வருபவர்கள் தங்களை சமுதாயத் தலைவர்களாக முன்னிறுத்த ஆசைப் படும்போது இவரது பிரச்சாரம் அதற்க்கு தடைக்கல்லாக இருப்பதால் தங்களது ஒட்டு மொத்த கோபமும் பீ ஜெ என்ற தனி நபருக்கு எதிராக திரும்புகிறது. அந்த கோபத்தினால் அவர்கள் இவருக்கெதிராக செய்யும் எந்த முயற்சியும் வெற்றி பெறாமல் போவதால் அதுவே நாளடைவில் வெறியாக மாறி இது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். பாவம் அவருக்கெதிராக செய்யும் தங்களது முயற்சிகள் எல்லாம் வீணாகிறதே என்று எந்த அளவு நொந்து போயுள்ளனர் என்று இந்த போஸ்டரையும், அதற்காக செய்யப்படும் பிரயத்தனங்களையும் பார்த்தால் தெரியும். ஒரு தனி மனிதன் அவருக்கெதிராக ஒரு கூட்டம். மார்க்கத்தை திரிக்கிறார். இஸ்லாமியர்களை வழி கெடுக்கிறார் என்ற ஒரே குற்றச்சாட்டு. கடந்த இருபத்தைந்து காலமாக வீழ்த்த முடியவில்லை என்றால் அப்படி வீழ்த்த முடியாத முடியாத அளவுக்கு பீஜே என்பவர் அவ்வளவு பெரிய சக்தியா? என்று அவர்கள் தங்களது காழ்ப்புணர்வையும் வெறுப்பையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு கணம் சிந்தித்தால் அதன் பின்னால் அல்லாஹ்வுடைய உதவி இன்றி சாத்தியமில்லை என்பது விளங்கும். அல்லாஹ்வுடைய உதவி உண்மைக்குத்தானே இருக்கும். ஆனால் இது போன்ற செயல்கள்தான் தவ்ஹீத் வளர்வதற்கு மிகப் பெரிய காரணியாக அமைந்தது என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது. இதுவும் அப்படியே அமையும் இன்ஷா அல்லாஹ். காலம் அதற்க்கு பதில் சொல்லும்.
ஹுசைன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ்,
நாம் தெருவை கடந்து செல்லும்போது நாய்கள் தெருமுனையில் நின்று குறைப்பதால் நமக்கு எதுவும் இழுக்கு ஏற்பட பாவதில்லை. அதிகமாக குறைத்தால் கல்லை எடுத்து ரெண்டு காட்டு காட்டிவிட்டு போவோமல்லவா. அதைப் போன்று தான் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களையும் அதில் பேசும் முல்லாக்களையும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் இப்படி கூவுவதால் சகோதரர் பிஜே அவர்கள் தம்முடைய ஆய்வையோ தாவாவையோ நிறுத்த போவதில்லை. அதை இன்னும் வலுவாக வீரியமாக தான் எடுத்துரைப்பார். ஆகையால் இதுகளை நாம் அலட்சியம் செய்து விடுவோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதர, சகோதரிகளுக்கு,
மூத்த இஸ்லாமிய அறிஞர் மற்றும் ஆய்வாளர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஸலாம் சொல்லலாமா வேண்டாமா என்று கூத்தடிக்கும் இந்த வீணர்கள் கூட்டம் தான் பால் அருந்தினால் மகன் ஆவான் இளைஞன் என்னும் பத்வா , மருமகளை மாமானாருக்கு மனைவியாக்கும் பத்வா ,அடுத்தவர்களின் உயிர்களை காக்கும் ரத்த தானம் ஹராம் பத்வா போன்றவற்றை வழங்குகிறவர்கள். எனவே இந்த முட்டாள் முல்லாக்கள் வெளியிடும் கருத்துக்களும் பத்வாக்களும் எம்முடைய தலைமுடிக்கு கூட சமமில்லாதது. தனிப்பட்ட காழ்ப்புணர்வால் இதை ஏற்பாடு செய்திருக்கும் நபர்கள் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். லட்சோப லட்சம் ஏகத்துவ சகோதர்கள் தம்முடைய துவாவில் சகோதரர் பிஜே அவர்களையும் இணைத்து அவர்களின் இம்மை மற்றும் மறுமை வாழ்வு சிறக்க ஏக இறைவனிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் மயிர் பிளக்கும் உங்களைப் (கூட்டத்தை ஏற்பாடு செய்த ) போன்ற முட்டாள்களின் பேச்சை எந்த ஒரு சாமானிய முஸ்லிமும் கண்டுகொள்ளப் போவதில்லை
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரரே, உங்களின் இந்த தொகுப்பில் நான் நிறைய அறியாதவைகளை அறிந்துகொண்டேன். அல்லாஹ் உங்களுக்கும் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக.
ஜசகல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு.
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை கொடுப்பானாக..
வ அலைக்குமுஸ்ஸலாம்!
ஒரு முஸ்லிமுக்கு நேரும் துன்பத்தை மற்றொரு முஸ்லிம் நீ்க்க வேண்டும் இவ்வாறு நபிமொழியில் உள்ளது இங்கு ஜமாஅத் வேற்றுமை பார்க்காமல் முஸ்லிம் என்ற மனித நேயத்தை பார்த்து நாம் நடக்க வேண்டும்! சமுதாயத்தின் தரம் தாழ்ந்து வருகிறது அதை கலைய பாடுபடுவதே ஒவ்வொரு முஸ்லிமின் பணியாக இருக்க வேண்டும்! அல்ஹம்துலில்லாஹ்